தமிழக அரசு ஓர் அவசரச்சட்டத்தை இயற்றி, கிறித்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தலா 3.5% தனி இட ஒதுக்கீட்டுக்கு வழி வகுத்துள்ளது. இது கல்வியிடங்களுக்கும் மாநில அரசு வேலைகளுக்கும் பொருந்தும்.
தமிழ்நாட்டில் இதுவரை 69% இடங்கள் வெவ்வேறு சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் (BC): 30%
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC): 20%
அட்டவணைப் பிரிவினர் (SC): 18%
பழங்குடியினர் (ST): 1%
மீதமுள்ள 31% இடங்கள் பொதுப்பட்டியல் எனப்படும். இதில் அனைவரும் போட்டியிடலாம்.
இனி, இட ஒதுக்கீடு இப்படி ஆகும்.
கிறித்துவர்கள் (C): 3.5%
முஸ்லிம்கள் (M): 3.5%
ஹிந்து பிற்படுத்தப்பட்டோர் (BC): 23%
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (இதில் சில கிறித்துவ, முஸ்லிம்கள் இருக்கலாம்) (MBC): 20%
அட்டவணைப் பிரிவினர் (SC): 18%
பழங்குடியினர் (ST): 1%
2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள், கிறித்துவர்களின் எண்ணிக்கை, கீழ்க்கண்டவாறு:
தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகை: 62,405,679
முஸ்லிம்கள்: 3,470,647 (5.6%)
கிறித்துவர்கள்: 3,785,060 (6.1%)
இந்த அறிவிப்பை எதிர்பார்த்ததுபோல கிறித்துவ, முஸ்லிம் அமைப்பினர் வரவேற்றுள்ளனர். ஹிந்து முன்னணியின் ராமகோபாலன் நீதிமன்றம் செல்வதாகக் கூறியுள்ளார்.
ஒருவிதத்தில் இந்த இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும், கிறித்துவர்களுக்கு எதிராகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். இட ஒதுக்கீடு இல்லாவிட்டால் பிறபடுத்தப்பட்டோருக்கான 30% இடங்களில் 3.5%க்கும் மேற்பட்ட இடங்களை கிறித்துவர்கள் பெற்றுவந்தனர் என்பது என் யூகம். (தவறாகவும் இருக்கலாம்.)
பாமகவின் ராமதாஸ் 100% இட ஒதுக்கீடு வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதாவது ஒவ்வொரு சாதி/உட்பிரிவுக்கும் அவரவர் மக்கள்தொகைக்கு ஏற்ப இடங்களைப் பிரித்துக் கொடுக்கவேண்டுமாம். ஐயங்கார்கள் என்றால் வடகலைக்கு இத்தனை, தென்கலைக்கு இத்தனை என்றும் செட்டியார்களில் ஒவ்வொரு பிரிவுக்கும் இத்தனை இத்தனை என்றும் போகவேண்டுமா என்று அவர் சொல்லவில்லை.
இட ஒதுக்கீட்டின் அவசியத்தை வலியுறுத்துபவர்கள், இட ஒதுக்கீடு எந்த அளவு வரை செல்லவேண்டும் என்பதை கவனமாக யோசிக்கவேண்டும்.
Article:
http://thoughtsintamil.blogspot.com/2007/09/blog-post_18.html
தலைப்பு செய்திகள்
Blog Archive
-
▼
2007
(73)
-
▼
Oct
(13)
- # விவசாயம் அழிவதற்குக் காரணம் அரசியல்வாதிகள்தான்!
- # பங்குச்சந்தை: பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ்
- # வங்கிகளில் அரசு தலையீடு? எஸ். கோபாலகிருஷ்ணன்
- # இந்தியாவா, சீனாவா?
- # குரு திரைப்பட விமரிசனம் அம்பானி: முதலாளிகளின...
- # இது நியாயமா?
- # தகவல் பெறும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு அளி...
- # நீர்நிலை ஆக்கிரமிப்பில் அரசு கட்டடங்கள் வி. கி...
- # மக்களுக்காகவே நிர்வாகம்! என். விட்டல
- # ரிலையன்ஸ் வேலையை செய்கிறது பார்வர்டு பிளாக
- # தேவை விழிப்புணர்வு!
- # அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகள், ஜனநாயகத்தை ஆட்டம்க...
- # முஸ்லிம், கிறித்துவர்களுக்கு இட ஒதுக்கீடு
-
▼
Oct
(13)
வணக்கம்
இங்கே இணைய தளங்களில் நான் பார்த்ததை, படித்ததை, கேட்டதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
...............................
செந்தில் குமார்
Subscribe to:
Post Comments (Atom)