“”வருமானமே போதவில்லை, அதற்கு வரி வேறா?” என்ற அங்கலாய்ப்பு மத்தியதர வர்க்கத்திடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் கேட்டவண்ணம் இருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்களோ இதையெல்லாம் காதில் வாங்காமல் கருமமே கண்ணாக இருந்து வரி வசூலிப்பைத் தீவிரப்படுத்துகின்றனர்.
மாதச் சம்பளக்காரர்கள், அரசு ஊழியர்களானாலும் தனியார் நிறுவன ஊழியர்களானாலும் அவர்களுடைய அலுவலகத்தாராலேயே பிடிக்கப்பட்டு வரி செலுத்தப்பட்டுவிடுகிறது. அதன் பிறகு அதில் சலுகைக்குரிய இனம் ஏதும் இருந்தால் அதை வருமான வரி செலுத்தியவரே கணக்கு கொடுத்து திரும்பப்பெற வேண்டும். இந்த வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவார்கள் என்று ஆண்டுதோறும் நிதியமைச்சரின் பட்ஜெட்டை ஆவலோடு எதிர்பார்த்து, கடைசியில் இலவுகாத்த கிளியாக ஏமாந்து வேறு போவார்கள் மாதச் சம்பளக்காரர்கள். இவர்கள் மீது நிதியமைச்சருக்குக் கரிசனம் வேண்டும்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வருமான வரி வசூல் அதிகமாகிக் கொண்டே வருகிறது, கிட்டத்தட்ட 3 மடங்காகிவிட்டது என்று தலைமை வருமானவரி ஆணையர் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார்.
அதாவது ஐந்தாண்டுகளுக்கு முன்னால் ரூ.5,336 கோடியாக இருந்த வருமான வரி வசூல் கடந்த ஆண்டு ரூ.17,400 கோடியாக உயர்ந்துவிட்டது. தமிழ் நாட்டில் மட்டும் கடந்த ஆண்டு 3.13 லட்சம் மாதச் சம்பளதாரர்கள் வருமான வரி செலுத்துகிறவர்களாக இருந்து “ரிடர்ன்’ எனப்படும் வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள்.
உள்நாட்டிலேயே
வியாபாரிகள்,
தரகர்கள்,
சொந்தமாகத் தொழில் செய்யும் டாக்டர்கள்,
என்ஜினீயர்கள்,
வக்கீல்கள்,
ஆடிட்டர்கள்,
விமானம், கப்பல் ஆகியவற்றுக்கான டிராவல் ஏஜெண்டுகள்,
லாரி உரிமையாளர்கள்,
சொந்தத் தொழில் செய்பவர்கள்,
வியாபாரிகள்,
சேவைத்துறையில் இருப்பவர்கள்
என்று பலதரப்பட்டவர்களும் வரி செலுத்துகின்றனர். ஆனால் அவர்களுடைய வருவாய்க்கும், செலுத்தும் வரிக்கும் பெரும் இடைவெளி இருப்பது நமக்கே தெரிகிறது, ஆனால் என்ன காரணத்தாலோ அரசும் அதிகாரிகளும் அவர்களையெல்லாம் விட்டுவிடுகிறார்கள்.
இந் நிலையில் சமீபத்தில் கூடிய வருமானவரித்துறை தலைமை ஆணையர்களின் மாநாட்டில் வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்கவும், வரி ஏய்ப்பாளர்களை அடையாளம் காணவும் புதிய உத்திகளை வகுத்திருப்பதாகத் தெரிகிறது. இவை மனப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டால் வரி வருவாய் பலமடங்கு பெருகும், அரசின் செலவுகளுக்கு அதிக நிதியும் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
“”ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு அல்லது அடுக்குமனை வாங்குகிறவர்களின் ஆண்டு வருமானம் ரூ.20 லட்சத்துக்கு மேல் இருந்தால், அவர்களுடைய வருமான வரி கணக்கைத் தீவிரமாக ஆராய வேண்டும், வீட்டை ரூ.30 லட்சத்துக்கு மேல் விற்பவர்கள் கணக்கில் காட்டும் மூலதன ஆதாயத் தொகையைச் சரிபார்க்க வேண்டும், சொத்துகளை விற்ற வகையில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் நஷ்டம் என்று கணக்கு காட்டினாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று ஆணையர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
பங்குச்சந்தைத் தரகர்கள், பலசரக்குத் தரகர்கள் ஆகியோரையும் கண்காணிக்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பங்குச் சந்தையில் 12 மாதங்களுக்குள் மூலதன ஆதாயம் ரூ.25 லட்சம் பெற்றதாக கணக்கு காட்டுகிறவர்களின் வருமான வரி “ரிடர்ன்கள்’ இனி தீவிரமாக ஆராயப்படும்.
விவசாய வருமானத்துக்கு வரி போடுவதில்லை என்ற முடிவை அரசு எடுத்திருந்தாலும், சிலருடைய விவசாயக் கழனிகளிலும், தோட்டங்களிலும் மட்டும் -மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் -”"அமோக மகசூல்” ஆகி, அற்புதமாகப் பணம் கொழிக்கும் “”அபூர்வ பசுமைப் புரட்சி” எப்படி சாத்தியம் என்றும் ஆராய முடிவு செய்திருக்கிறார்கள்.
வருமானத்தைக் கணக்கிடுவது மட்டும் அல்ல, அது முறையாக ஈட்டப்படுகிறதா என்பதையும் வருமானவரித்துறை அறிய வேண்டும். இல்லையென்றால் உரிய துறைகளுக்குத் தெரிவித்து தடுக்க வேண்டும். அப்போதுதான் அதன் கடமை முழுமை பெறும்.
Article:
http://bsubra.wordpress.com/2007/07/26/cheating-the-state-income-tax-black-money-business-folks/
தலைப்பு செய்திகள்
Blog Archive
-
▼
2007
(73)
-
▼
Jul
(26)
- # வாட்டுது வருமான வரி!
- # பன்னாட்டு நிறுவனங்களிடம் கேள்விக்குறியாகும் இந்த...
- # கிரெடிட் கார்டு - கடன் வசூல் என்ற பெயரில் அராஜகமா?
- # மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரி...
- # வணிக நிறுவனங்களின் அறிவுச்சொத்துரிமையும்..., கு...
- # கல்வி முறையில் மாற்றம் தேவை!
- # கிராமங்களில் வங்கிச் சேவை எஸ். கோபாலகிருஷ்ணன்
- # நாட்டின் வளர்ச்சியில் நாளேடுகள்!
- திரைப்பட வரலாறு 708 இளையராஜா இசை அமைக்க மறுத்த ப...
- மரணதண்டனை எதிர்ப்பாளர்களை தூக்கில் இட வேண்டும்
- வீரமணி மாமாவின் பெரியார் புரா பாரீர்
- கலாமின் கனவு இந்தியா ஏழைகளுக்கானதா?
- ஒலி, ஒளி, விளம்பரத் தொல்லை க.ப. அறவாணன
- நீரிழிவு நோயாளிக்கு புதிய வகை அரிசி கண்டுபிடிப்பு
- வானில் ஓர் எல்லைப் பிரச்னை! வி. கிருஷ்ணமூர்த்தி
- ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சர்க்கரை வியாதிக்குத் த...
- மதிப்போ மதிப்பு; பங்கு மதிப்பு!! குப்புசாமி செல்ல...
- உயிர் எரிசக்தி மாயை-ஓர் அபாயம்! ஆர்.எஸ்.நாராயணன்
- ரூபாய் மதிப்பின் ஏற்றமும் விளைவுகளும் எஸ். கோபாலக...
- உளவுத் துறையில் ஊடுருவல் டி.புருஷோத்தமன்
- அமெரிக்க-இந்தியருக்கு “விடுதலை உணர்வு விருது’
- அரசியல்வாதிகளும் அரசியல்கட்சிகளும்! கே.ராமமூர்த்தி
- அமெரிக்கர்களின் சேமிப்பு
- மேலாளர்களிடம் மனதில் உள்ளதை கொட்டலாமா?
- அமெரிக்காவில் நல்ல டாக்டர்களை கண்டு பிடிப்பது எப்படி?
- பணக்காரர்கள் திமிர் பிடித்தவர்களா?
-
▼
Jul
(26)
வணக்கம்
இங்கே இணைய தளங்களில் நான் பார்த்ததை, படித்ததை, கேட்டதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
...............................
செந்தில் குமார்
நாட்டில் நிலவும் வறுமை, வேலையின்மை, பஞ்சம் உள்ளிட்ட பிரசினைகளை தீர்க்கப்போவதாகக்கூறி இன்றைய பிரதமரும், அன்றைய நிதியமைச்சருமான மன்மோகன் சிங்கால் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் உலகமயம்-தனியார்மயம்-தாராளமயம் ஆகிய கொள்கைகள் அறிமுகப்படுத்தப் பட்டன.
நாடாளுமன்றம் – சட்ட மன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு போன்றவிவகாரங்களில் வருடக்கணக்கில் விவாதம் (மட்டுமே) நடத்திவரும் நமது அரசியல்வாதிகள், நாடாளுமன்றத்திலோ, வேறு எந்த அவையிலோ எந்த விதமான விவாதமும் நடத்தாமல் உலக வர்த்த கழகத்தில் இந்தியாவை உறுப்பு நாடாக பதிவு செய்தனர். உண்மையில் மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளும் எம்.பி.க்களுக்கே தெரியாமல், அதிகாரிகளே இதற்கான (டங்கல்) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதற்கான அனுமதியை அளித்தவர் அன்றைய நிதியமைச்சர் மன்மோகன் சிங்.
இந்த கொள்கைகளுக்கு அன்று எதிர்ப்புகளும் இருந்தன. ஆனாலும் இதிலிருந்து விலகினால் பொருளாதார ரீதியாக பேரழிவுகள் ஏற்படும் என்றும், நாட்கள் செல்லச்செல்ல இந்த புதிய பொருளாதார கொள்கைகள் நல்ல பலன்களை கொடுக்கும் என்றும் மன்மோகன் சிங், சிதம்பரம் வகையறாக்கள் சமாதானம் கூறினர்.
இதையடுத்து தமிழகம் உட்பட நாடு முழுவதும் பொருளாதார சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டது. வர்த்தகம் சார்ந்த ஏற்றுமதி-இறக்குமதி, வரிச்சட்டங்கள், வங்கிச்சட்டங்கள் உள்ளிட்ட பல சட்டங்கள் படிப்படியாக மாற்றியமைக்கப்பட்டன. அறிவுச்சொத்துரிமை சட்டங்களில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டன. அறிவுச்சொத்துரிமை சட்டங்களில் உள்ள மக்கள் சார்பு அம்சங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவான அம்சங்கள் அமல்படுத்தப்பட்டன.
இவை இந்தியர்களின் விவசாயம், தொழில், மருத்துவம் உள்ளிட்ட அம்சங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. மருத்துவம் என்பது சேவை என்ற நிலை மாறி தொழிலாக ஆக்கப்பட்டுள்ளது. எந்தத் தொழிலும் கொள்ளை லாபம் ஈட்டுவதையே இலக்காக கொண்ட பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் ஆக்கிரமித்ததால் இந்தியர்களின் நல்வாழ்வே கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையை புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தை பார்க்கலாம்.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நோவார்டிஸ் என்ற பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம், ரத்தப்புற்று நோய்க்கான இமாடினிப் மெஸிலேட் என்ற மருந்தை கிளிவெக் (GLIVEC, GLEEVEC) என்ற வணிகப்பெயரில் தயாரித்து வருகிறது.
இம்மருந்தை தயாரித்து விற்பனை செய்வதற்கான பிரத்யேக சந்தை உரிமை (EXCLUSIVE MARKETING RIGHT)யை காப்புரிமை சட்டம் மூலம் இந்த நிறுவனம் கடந்த 2003-ம் ஆண்டு பெற்றது. ஆனால் இம்மருந்தை வேறு செய்முறைகளில், வேறு பெயர்களில் சில நிறுவனங்கள் தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்தன.
இதை தடை செய்யக்கோரி சென்னை மற்றும் மும்பை ஆகிய உயர்நீதிமன்றங்களில் நோவார்டிஸ் வழக்கு தொடர்ந்தது. அன்று வழக்கறிஞராக பணியாற்றிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், அந்த நிறுவனம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, நோவார்டிஸ் நிறுவனத்தை தவிர வேறு யாரும் அந்த மருந்தை தயாரித்து விற்பனை செய்யக்கூடாது என்ற தடை உத்தரவை பெற்றார். ஆனால் மும்பை உயர்நீதிமன்றம் இதே வழக்கை வேறு கோணத்தில் பார்த்தது. பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைப்பதை தடை செய்யும் பிரத்யேக சந்தை உரிமை, இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானது என்று கூறி மும்பை உயர்நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த இரு தீர்ப்புகளும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில், பிரத்யேக சந்தை உரிமைக்கு அடுத்த கட்டமான காப்புரிமையை இந்த மருந்துக்கு வழங்கவேண்டும் என்று நோவார்டிஸ் நிறுவனம், சென்னையிலுள்ள காப்புரிமை கட்டுபாட்டாளரிடம் மனு செய்தது. ஆனால் இந்தியாவிலுள்ள காப்புரிமை சட்டவிதிகளின்படி இந்த மருந்துக்கு காப்புரிமை வழங்க முடியாது என்று கூறி இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த முடிவை எதிர்த்து நோவார்டிஸ் நிறுவனம் மேல் முறையீடு செய்துள்ளது. இவ்வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. இந்த மேல் முறையீட்டில் அந்த நிறுவனம் வெற்றி பெற்றால் பின் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். தற்போதைய நிலையில் பல நிறுவனங்கள் ரத்தப்புற்று நோய்க்கான இமாடினிப் மெஸிலேட் மருந்தை தயாரித்து விற்பனை செய்வதால் இம்மருந்து சுமார் 50 ரூபாய் விலையில கிடைக்கிறது. ஒரு நோயாளி ஒரு நாளைக்கு நான்கு மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.
நோவார்டிஸ் நிறுவனத்திற்கு காப்புரிமை வழங்கப்பட்டுவிட்டால் மற்ற நிறுவனங்கள் அம்மருந்தை தயாரிக்க முடியாது. அனைத்து ரத்தப்புற்று நோயாளிகளும் மருந்திற்கு அந்த நிறுவனத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். காப்புரிமை பெற்ற மற்ற நாடுகளில் நோவார்டிஸ் நிறுவனம் அம்மருந்திற்கு இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்துள்ளது. அதே விலைக்கு மருந்து வாங்க ஒரு நோயாளிக்கு மாதம் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். இது எத்தனை இந்தியர்களுக்கு சாத்தியம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
நோவார்டிஸ் நிறுவனத்தின் இமாடினிப் மெஸிலேட் மருந்திற்கு காப்புரிமை வழங்கப்பட்டால் அதை பின்பற்றி காப்புரிமை கேட்பதற்கு ஏற்கனவே சுமார் 9,000 மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே மருத்துவம் என்பதே இந்தியர்களுக்கு எட்டாக்கனியாகிவிடும்.
எனவே இந்த வழக்கை நோவார்டிஸ் நிறுவனம் திரும்பப்பெறவேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உட்பட உலகின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இந்திய மக்களைப்பற்றி இந்திய அரசுக்கும், அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்குமே அக்கறை இல்லாதபோது, கொள்ளை லாபமே இலக்காகக் கொண்ட நோவார்டிஸ் நிறுவனம் வழக்கை திரும்ப பெறவேண்டும் என்று எதிர்பார்ப்பது மூடத்தனம்.
---
மேற்கண்ட செய்திகள் அரசின் கொள்கைகளை மட்டுமே நமக்கு உணர்த்தவில்லை. மக்களின் நன்மதிப்பை பெற்ற சில நபர்களின் தன்மைகளையும் உணர்த்துகிறது.
காப்புரிமை சட்டத்தில் ஒரு பொருள் தயாரிக்கும் முறைக்கு மட்டுமே சட்டரீதியான பாதுகாப்பு வழங்கப்பட்டது. பின்னர் வர்த்தகம் சார்ந்த அறிவுச்சொத்துரிமைக்கான ஒப்பந்தத்தில் (Trade Related Intellectual Property RightS Agreement) இந்தியா கையொப்பம் இட்டதை தொடர்ந்து பொருள் செய்யும் முறைக்கு மட்டும் அல்லாமல் மருந்துப் பொருளுக்கே காப்புரிமை வழங்கும் முறை அமலுக்கு வந்தது.
இதன்படிதான் நோவார்டிஸ் நிறுவனம் ரத்தப்புற்று நோய்க்கான மருந்துக்கு காப்புரிமை கோருகிறது. இதற்காக நம் நாட்டின் காப்புரிமை சட்டம் – 1970 ல் திருத்தம் செய்து ஒரு அவசரச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அது கொண்டு வரப்பட்ட நாள்: 2004 டிசம்பர் 26! ஆம். சுனாமி பேரலை தாக்கி உலகின் பல பகுதிகளும் சோகத்தில் மூழ்கியிருந்தது.
இந்தியாவிற்கு ஏற்பட்ட இழப்பிற்கு ஈடு செய்ய உலகின் பல நாடுகள் முன்வந்தன. அந்த நாளில்தான் அன்றைய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், மற்ற வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு மக்கள் விரோதமான/ பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமான அந்த அவசர சட்டத்தில் யாருக்கும் தெரியாமல் சத்தமின்றி கையெழுத்திட்டார். அவரைத்தான் நமது நகைச்சுவை நடிகர்கள் முதல் நாடோடிகள்வரை வானளாவ புகழ்ந்து வருகின்றனர்.
---
அடுத்து இந்த விவகாரத்தில் மிக முக்கிய நபர் டாக்டர் மஷேல்கர் என்பவர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆசிபெற்ற இவர் வேதித்துறை பொறியியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். இவர் பிறந்த உயர் குலம் காரணமாக இந்திய அரசிலும், உலக சுகாதார நிறுவனத்திலும் மிக முக்கிய பதவிகளை வகித்தவர்.
காப்புரிமை சட்ட திருத்த மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் (காலம்கடந்து) நடைபெற்ற விவாதத்தை தொடர்ந்து, அறிவாளிகளின் குலத்தில் பிறந்த டாக்டர் மஷேல்கர் தலைமையில் வல்லுனர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக இருந்தது
என்பதை சொல்லத் தேவையில்லை. எனவே இந்த அறிக்கையின்படி தமது மருந்துகளுக்கு காப்புரிமை வழங்கவேண்டும் என்று நோவார்டிஸ் நிறுவனம் வாதாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இங்கிலாந்திலுள்ள இன்டலக்சுவல் பிராபர்டி இன்ஸ்டிடியூட்-ல் டாக்டர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் ஷாம்நாத் பஷீர் என்ற மாணவரின் கட்டுரையை திருடி அதனையே அறிக்கையாக தயாரித்து டாக்டர் மஷேல்கர் அளித்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. டாக்டர் பட்ட ஆய்வுமாணவர் ஷாம்நாத் பஷீர், நோவார்டிஸ் உள்ளிட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் நிதி உதவியுடன் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அந்த கட்டுரையை எழுதியதாகவும், அதை டாக்டர் மஷேல்கர் வார்த்தைக்கு வார்த்தை திருடி விட்டதாகவும் கூறியுள்ளார். மாணவரின் அறிவைத்திருடி பன்னாட்டு நிறுவனங்களின் அறிவுச்சொத்துரிமையை பாதுகாக்க டாக்டர் மஷேல்கர் மேற்கொண்ட முயற்சி அம்பலமானதை தொடர்ந்து அந்த “வல்லுனர்(!) குழு அறிக்கை” திரும்ப பெறப்பட்டது.
மாணவரின் அறிவுச்சொத்தை “வல்லுனர் மஷேல்கர்” திருடியது உலக அரங்கில் அம்பலமானாலும், அவருக்கு தண்டனையோ கண்டனமோ கிடையாது. அவாளுக்கெல்லாம் தண்டனை கொடுக்க கருட புராணத்திற்கு அதிகாரம் கிடையாது. மனுதர்மம்தான்!
---
இந்த விவகாரத்தில் மத்திய அரசோ, மாநில அரசோ எதுவும் செய்யுமா? என்று எதிர்பார்ப்பவர்கள், இதுபோன்ற விவகாரங்களை இந்தியாவிற்கு கொண்டுவந்தவர்களே உலக வங்கியின் ஏஜென்டுகளான மன்மோகன் சிங், சிதம்பரம் வகையறாதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வேண்டுமானால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி இந்த விவகாரத்தில் ஏதும் செய்யமுடியுமா? என்று வேண்டுமானால் கேட்டுப்பார்க்கலாம்.
---
புதிய பொருளாதாரக்கொள்கை இந்தியர்களின் வாழ்வை மருத்துவத்துறையில் மட்டுமல்ல, விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தலைகீழாக மாற்றி வருகிறது.
இதெல்லாம் இப்போதுதான் தெரியுமா? அப்போதே எச்சரித்திருக்கலாமே என்ற கேள்வி எழலாம். அப்போதும் இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்தன. டங்கல் பரிந்துரைகளை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஏ.தேசாய், சின்னப்ப ரெட்டி, வி.ஆர். கிருஷ்ணய்யர், தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சார் ஆகியோர் பரிசீலித்தனர். பின்னர் அவர்கள் அளித்த அறிக்கை மிக முக்கியமானது.
“சந்தைக்கு இணக்கமான பொருளாதாரம், தாராளமயமாக்கல், உலகப்பொருளாதாரத்துடன் இணைத்தல், பெருமளவு அன்னிய முதலீட்டுடன் கூடிய தனியார் மயமாக்கல் முதலியன இந்திய தொழில்களின் வளர்ச்சி, இந்திய அரசியல் சட்ட விதிகள் 14, 19, 21-ன் கீழான அடிப்படை உரிமைகளுக்கு எதிரானவை ஆகும்.”
“இந்திய அரசியல் சட்டம் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கிறது. மாநிலங்களுக்கென சில அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அரசியல் சட்டவிதி 13, 14-ன் கீழ் மத்திய அரசுக்குக் கிடைக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் இந்த கூட்டாட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் எதுவும் இல்லை” என்று அந்த அறிக்கையில் தெள்ளத்தெளிவாக கூறப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங் மத்திய நிதி அமைச்சராகவும், சிதம்பரம் நிதித்துறை இணையமைச்சராகவும் இருந்தபோதுதான் இத்தகைய மாற்றங்கள் தொடங்கின. மாநில சுயாட்சி முழக்கத்துடன் அரசியலுக்கு வந்தவர்கள் துணையுடன்தான் இந்த மாற்றங்கள் முழுவேகத்தில் நடைபெறுகின்றன.
இதற்கு என்ன தீர்வு என்பது தனிநபர்கள் எடுக்கும் முடிவுகளில் இல்லை. இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் எடுக்கும் முடிவுகளும், உங்களின் செயல்பாடுகளும்தான் உங்கள் வாழ்க்கையை, உங்கள் சந்ததிகள் வாழ்க்கையை பாதுகாக்கும்.
-சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)
Article:
http://makkal-sattam.blogspot.com/2007/07/blog-post_25.html
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களிடம் கடன் வசூல் முகவர்கள் பல தவறான செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன.
அதை எதிர்கொள்ள சில குறிப்புகள்...
கிரெடிட் கார்டு மூலமோ அல்லது வேறெந்த வகையிலோ கடன் வாங்குவதும், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத நிலை என்பது கிரிமினல் குற்றம் அல்ல ! (கடனுக்கு விதிக்கப்படும் அநியாய வட்டியும், பலவித கூடுதல் கட்டணங்களுமே, நேர்மையான பலரும் கடனை திரும்ப செலுத்த முடியாமல் போகும் நிலையை ஏற்படுத்துகிறது)
நீங்கள் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் மட்டுமே நீதிமன்ற உத்தரவு இல்லாமல் உங்களை கைது செய்ய முடியும். கட்டத்தவறிய கடனுக்காக எந்த விதமான நீதிமன்ற விசாரணையும் இல்லாமல் உங்களை யாரும் கைது செய்ய முடியாது.
நீதிமன்ற விசாரணைக்கு உங்களுக்கு முறையான அழைப்பு வரும். உங்கள் தரப்பு வாதத்தை எடுத்துக்கூற உங்களுக்கு போதுமான அவகாசம் வழங்கப்படும்.
கடன் வசூல் நடவடிக்கை அனைத்தும் சிவில் சட்ட வழிமுறைகளின்படியே நடைபெற வேண்டும். எனவே காவல்துறையினருக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை.
குண்டர்கள் மூலம் மிரட்டுதல், வீடு மற்றும் தொழில்புரியும் இடங்களில்வாடிக்கையாளரை இழிவு செய்யும் நோக்கில் பேசுதல், நடத்தல் ஆகிய அனைத்தும் சட்டப்படி தவறானவை.
அதிகாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் கடன் வசூல் பணிகளை செய்வது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.
பெண்களின் கண்ணியம் குறையும் வகையில் நடக்கும் வசூல் முகவர்களை (குண்டர்களை) ஜாமீனில் வெளிவரமுடியாத சட்டப்பிரிவுகளின் கீழ் சிறையில் அடைக்க முடியும்.
காவல் நிலையம், கமிஷனர் அலுவலகம், மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு (CCB) ஆகிய இடங்களிலிருந்து போன் பேசுவதாக கூறினால் நம்பாதீர்கள். அவர்களுக்கு வேறு முக்கிய வேலைகள் இருக்கின்றன. அவர்கள் அவ்வாறு உங்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள மாட்டார்கள். (அவ்வாறு செய்தால் அது சட்டப்படி தவறு)
கடன் வசூல் செய்வதற்காக வழக்கறிஞர்கள் யாரும் உங்கள் வீடு தேடி வரமாட்டார்கள். தொலைபேசி மூலமாகவும் பேசமாட்டார்கள். அவ்வாறு கூறுபவர்கள் அனைவரும் பொய் பேசுகின்றனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
கிரெடிட் கார்டு பிரசினைக்காகவோ, அல்லது வேறு எந்த கடன் பிரசினைக்காகவோ உங்களை யாராவது இழிவாக பேசினாலோ, மிரட்டினாலோ, வேறெந்த வகையிலாவது தொந்தரவு செய்தாலோ உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள்.
அந்தப்புகாரில் வசூல் முகவர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளையும் சேருங்கள். வங்கி அதிகாரிகள் நேரில் வராவிட்டாலும், அவர்களின் உத்தரவின்படிதான் வசூல் முகவர்கள் செயல் படுகின்றனர். எனவே வசூல் முகவர்(குண்டர்)களின் செயல்களுக்கு வங்கி அதிகாரிகளும் பொறுப்பாவர்.
காவல் நிலையத்தில் உங்கள் புகாரை பதிவு செய்து விசாரிக்க மறுத்தால், காவல்துறை ஆணையர் போன்ற உயரதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள்.
அப்போதும் புகார் பதிவு செய்யப்படவில்லை என்றால் அப்பகுதியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உங்கள் புகாரை பதிவு செய்யவும், உங்களை தற்காத்துக் கொள்ளவும் முடியும்.
நீங்கள் அரசு அல்லது அரசு சார் துறைகளில் பணியாற்றுபவர் என்றால், அலுவல் நேரத்தில் உங்கள் பணிக்கு இடையூறு விளைவிப்பது சட்டப்படி குற்றம். எனவே உடனடியாக காவல்துறையில் புகார் அளியுங்கள்.
மிரட்டல், அச்சுறுத்தல், அவமானப்படுத்துதல் மூலம் உங்களிடமிருந்து பணம்வசூல் செய்யமுடியாது என்பதை வசூல் முகவர்களுக்கு உணர்த்துங்கள். சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கடன் வசூலுக்கு வரும் குண்டர்களிடம் உறுதிபட தெரிவியுங்கள்.
கடன் வசூல் முகவர்களிடம் எந்த ஆவணங்களிலும் கையெழுத்திட வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு நீங்கள் கையெழுத்திட்டாலும் அது சட்டப்படி செல்லுபடி ஆகாது.
கடன் வசூல் குண்டர்களால் உங்கள் உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து நேரும் காலத்தில், உங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை சட்டப்படி உங்களுக்கு உள்ளது. அதற்காக நீங்கள் (தற்காப்பு) தாக்குதலிலும் ஈடுபடலாம்.
-சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)
(கிரெடிட் கார்டு குறித்த நுகர்வோர் பாதுகாப்பு தகவல்களுக்கு http://www.creditcardwatch.org/ என்ற இணையதளத்தை பார்வையிடவும் )
Article:
http://makkal-sattam.blogspot.com/2007/07/blog-post_3201.html
மான்சான்டோ (Man Santo) என்ற பன்னாட்டு விதை உற்பத்தி நிறுவனம், பெர்சி ஷ்மெய்சர் என்ற கனடா நாட்டு விவசாயி மீது கடந்த 1998ம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்ந்தது. அந்த நிறுவனம் காப்புரிமை பெற்றிருந்த ரவுண்டப் ரெடி கனோலா என்ற மரபணு கொண்ட தானியங்களை விவசாயி பெர்சி ஷ்மெய்சர், சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
தாம் விரும்பி அவ்வாறு செய்யவில்லை என்றும், அருகே உள்ள வயலில் நடவு செய்யப்பட்டிருந்த பயிர்களில் இருந்து காற்று மூலமோ, பூச்சிகள் மூலமோ அந்த மரபணு தமது வயலில் ஊடுருவி இருக்கலாம் என்றும் பெர்சி ஷ்மெய்சர் பதில் அளித்தார்.
மேலும் தமது நிலத்தில் அனுமதி பெறாமல், அத்துமீறி ஊடுருவிய மான்சான்டோ நிறுவனம்தான் குற்றவாளி என்றும், தமது நிலத்தில் உள்ள பயிர்கள் மீது மரபணு தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக அந்த நிறுவனம் தமக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் பதில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கனடா நாட்டின் நவீன காப்புரிமை சட்டங்களின் அடிப்படையில் மான் சான்டோ நிறுவனத்தின் காப்புரிமையை மீறிய விவசாயி பெர்சி ஷ்மெய்சர், அந்த நிறுவனத்திற்கு பலகோடி டாலர் இழப்பீடு வழங்கவேண்டும் என்று கனடா நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மான் சான்டோ நிறுவனம், உலகின் பல நாடுகளிலும், அந்த நாட்டு விவசாயிகளுக்கு எதிரான பலநூறு வழக்குகளை தொடுத்து பல நூறு கோடி டாலர்களை அபராதமாக பெற்றுள்ளது.
மான் சான்டோ (Man Santo), பாயர் (Bayer), டு பாண்ட் (Du Pont) போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் இத்தகைய நடவடிக்கைகள் கனடா போன்ற முன்னேறிய நாடுகளோடு முடிந்து விடுவதில்லை. ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற ஏழை நாடுகளிலும் பரவியுள்ளது.
இந்தியாவில் இயற்கை விவசாயம் மட்டுமே செய்து வரும் விவசாயி ஒருவர், இத்தகைய பிரசினைகள் தம்மை பாதிக்காது என்று அமைதியாக இருந்து விட முடியாது.
கனடா நாட்டு விவசாயி பெர்சி ஷ்மெய்சர்-ஐப்போல நம் நாட்டு இயற்கை விவசாயிகளும் அவர்கள் செய்யாத தவறுக்கு (நிறுவனங்களின் அத்துமீறலுக்கு) தண்டனை அனுபவிக்கும் நிலை உருவாகி வருகிறது.
இந்தியாவின் பிரபல வேளாண்மை விஞ்ஞானி என்று அறியப்படுபவரும், இந்திய அரசின் வேளாண்மை கொள்கை குறித்த முக்கிய ஆலோசகருமான எம். எஸ். சுவாமிநாதன் உட்பட மரபணு மாற்ற தொழில் நுட்பத்தின் ஆதரவாளர்கள் அனைவரும் இந்த விவகாரத்தில் மவுனம் சாதிக்கின்றனர்.
இந்திய சட்டங்கள் அனைத்தும் உலக வங்கியின் கட்டளைக்கேற்ப மாற்றப்படும் இன்றைய சூழலில் நமது விவசாயிகளும் விதைத்திருடர்களாக சித்தரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் படுவார்கள். வணிகம் மற்றும் வரிக்கட்டணம் குறித்த பொது ஒப்பந்தமான காட்(GATT)டின் பரிணாம வளர்ச்சியான உலக வர்த்தக நிறுவன(WTO)த்தின் செயல்பாடுகள் இந்தியாவில் தொடர அனுமதிக்கப்பட்டால், இதுபோன்ற செய்திகளை வெகு விரைவில் நாமும் படிக்க நேரிடும்.
WTO எனப்படும் உலக வர்த்தக நிறுவனத்தில் இந்தியா உறுப்பு நாடானதன் தொடர்ச்சியாக அந்த அமைப்பு ஏற்படுத்தும் அனைத்து ஒப்பந்தங்களையும் கட்டாயமாக ஏற்றாக வேண்டிய அவல நிலையில் இந்தியா உள்ளது. இவ்வாறு உலக வர்த்தக நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அறிவுச் சொத்துரிமை குறித்த TRIPS ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்டதை தொடர்ந்து, அறிவு சொத்துரிமை தொடர்பாக ஏற்கனவே உள்ள சட்டங்களில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் பல புதிய சட்டங்களும் இயற்றப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக இந்தியாவின் விவசாயம், வர்த்தகம், மருத்துவம் உள்ளிட்ட துறைகள் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. இவற்றில் குறிப்பாக வேளாண்மைத்துறை மற்றும் விவசாயிகளின் வாழ்நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் சட்டங்களைப்பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
காப்புரிமை சட்டம் (PATENT ACT)
இந்தியாவின் காப்புரிமை சட்ட வரலாறு 1856ம் ஆண்டில் தொடங்குகிறது. இந்தியாவில் அன்றைய ஆட்சியாளர்களான ஆங்கிலேயர்கள் தங்கள் வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தினர். இந்த சட்டம் 1859, 1872, 1883 ஆண்டுகளில் பல மாற்றங்களை சந்தித்துள்ளது. இந்த மாற்றங்களை உள்ளடக்கிய ஒரு சட்டம் 1911ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதைய காப்புரிமை சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
ஒரு பொருளையோ, அதன் பயன்பாட்டையோ முதன்முறையாக கண்டறியும் ஒருவர், உரிய அதிகார அமைப்புகளிடம் பதிவு செய்து பெறும் உரிமை, காப்புரிமை எனப்படுகிறது. இவ்வாறு காப்புரிமை பெற்ற அப்பொருளை பதிவு செய்தவர் மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய முடியும். அவரைத்தவிர வேறு யாரும் அப்பொருளை 20 ஆண்டுகளுக்கு உற்பத்தி செய்வதை இந்த சட்டம் தடை செய்கிறது.
பழைய சட்டத்தின்படி, விவசாயம் மற்றும் மருத்துவத்துறை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்கு இந்த சட்டத்தின்கீழ் 7 ஆண்டுகள்வரை மட்டுமே காப்புரிமை வழங்கப்பட்டது. மேலும், இந்த சட்டத்தின்கீழ் விவசாயம் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த புதிய பொருட்களை கண்டுபிடிப்பவர்கள், அப்பொருளை தயாரிக்கும் முறையை (மட்டுமே) PROCESS PATENT என்ற பெயரில் காப்புரிமை பதிவு செய்யலாம்.
இவ்வாறு காப்புரிமை பெற்ற ஒரு பொருளை வேறு ஒருவர், அதே முறையில் தயாரிக்க முடியாது. ஆனால், அதே பொருளை வேறு முறைகளில் தயாரித்து விற்பதையோ, பயன்படுத்துவதையோ யாரும் தடுக்க முடியாது. இந்த முறையின் கீழ் விலை உயர்ந்த வெளிநாட்டு மருந்துப்பொருள் ஒன்றை உள்நாட்டு மருந்து தயாரிப்பாளர்கள் வேறு முறைகளில் தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்யும் வாய்ப்பு முன்னர் இருந்தது.
ஆனால், உலக வர்த்தக நிறுவனத்தின் ஒரு பகுதியான TRIPS ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பம் இட்டதைத் தொடர்ந்து தற்போது PROCESS PATENT என்ற பொருள் தயாரிப்பு முறையோடு கூடுதலாக PRODUCT PATENT என்ற பெயரில் பொருளுக்கே காப்புரிமை வழங்கும் முறை அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய முறையின் கீழ் காப்புரிமை பதிவு பெற்ற மருந்து அல்லது விதை போன்ற ஒரு பொருளை காப்புரிமை பெறாத மற்றவர்கள் வேறெந்த முறையிலும் தயாரிப்பது தடை செய்யப்படுகிறது. இதனால் மருந்து அல்லது விதைப்பொருட்களுக்கு காப்புரிமை பெற்றவர்களே விலை நிர்ணயம் செய்யும் உரிமை பெறுகின்றனர்.
மேலும், இயற்கையாக தோன்றும் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு காப்புரிமை வழங்கத் தேவையில்லை என TRIPS ஒப்பந்தம் கூறுகிறது. ஆனாலும் இயற்கையில் அமையாத/ மனித முயற்சிகளால் மேற்கொள்ளப்படும் உயிரியல் சாராத முறை (NON-BIOLOGICAL) மற்றும், நுண்ணுயி்ர் முறை (MICRO-BIOLOGICAL) மூலம் இயற்கை பண்புகள் மாற்றி அமைக்கப்பட்ட தாவரம் உள்ளிட்ட உயிரினங்களுக்கு காப்புரிமை வழங்கவேண்டும் என்று அந்த ஒப்பந்தம் வலியுறுத்துகிறது.
இதன்படி இந்தியாவும் தனது காப்புரிமை சட்டத்தை மாற்றி அமைத்துள்ளது. உயிரியல் அற்ற முறை (NON-BIOLOGICAL) என்பது மறைமுகமாக GENETICALLY MODIFIED ORGANISM எனப்படும் மரபணு மாற்றப்பயிர்களுக்கு காப்புரிமை வழங்கவே உதவுகிறது. மேலும் TRIPS ஒப்பந்தத்தின்படி காப்புரிமை பதிவு செய்யப்பட்ட பயிர்களை 20 வருட காலத்திற்கு வேறு யாரும் உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ இச்சட்டம் தடை விதிக்கிறது. (TRIPS ஒப்பந்தத்திற்கு முன் இது 7 வருடமாக இருந்தது)
இந்தியாவின் காப்புரிமை சட்டத்தின்கீழ் நேரடியாக தாவரம், விதைகள், பயிர்வகைகள், அவை இயற்கையாக விளையும் முறை போன்றவற்றிற்கு காப்புரிமை வழங்குவதில்லை. தாவரத்தின் இயற்கையான போக்கில் அமையாமல், மனித செயல்பாடுகள் மூலம் ஏற்படும் மாற்றங்களை NON-ESSENTIAL BIOLOGICAL PROCESS என்று வகைப்படுத்துகின்றனர். இது போன்ற செய்முறைகளுக்கு காப்புரிமை பெற முடியும். ஆக GMO போன்ற மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு காப்புரிமை பெற உதவுகிறது.
அடுத்தப்படியாக TRIPS ஒப்பந்தம், தாவரங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறையையும் காப்புரிமை பெறத்தக்கதாக கூறியுள்ளது. இதன்படி நமது காப்புரிமை சட்டத்திலும் 2002ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மாற்றத்தின்படி தாவரங்களுக்கான சிகிச்சை முறைகளுக்கும் காப்புரிமை வழங்கப்படுகிறது. இதன் மூலம் தாவரங்களுக்கு மட்டுமல்ல, அவற்றிற்கான மருந்துகள், அதை பயன்படுத்தும் முறை, உபகரணங்கள், இயந்திரங்கள் ஆகிய அனைத்துக்கும் காப்புரிமை பெற முடியும்.
பசுமைப்புரட்சி என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட பல தாவரங்களும் பூச்சிகளை எதிர்கொள்ளும் திறன் அற்றவையாக இருந்தன. எனவே பூச்சிக்கொல்லி மருந்துகள், விவசாயிகளின் கூடுதல் சுமையாக இருந்தன. இதற்கு மாறாக பூச்சிகளை கொல்லும் திறன் பெற்றதாக கூறப்படும் பாக்டீரியம் துரெஞ்ஜெரிஸ் (BACTERIUM THURENGERIUS) என்ற நச்சுப்பொருளை தாவரத்தின் மரபணுவில் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப் பட்டது. Bt என்று பரவலாக அழைக்கப்படும் இந்த முறை பருத்தியில் அறிமுகம் செய்யப்பட்டு தற்போது கத்தரிக்காய், பருத்தி, அரிசி உட்பட பல்வேறு பெயர்களில் இந்த உயிரிதொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. நவீன சட்டங்களின் கீழ் இந்த பயிர்கள் அனைத்தும் காப்புரிமை பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் இந்தியாவில் மான் சான்டோ, பாயர், மஹிகோ உள்ளிட்ட நிறுவனங்களே இத்தகைய காப்புரிமைகளை பதிவு செய்துள்ளன.
இத்தகைய நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இந்திய விவசாயம் சென்றுவிடாமல் கட்டாய உரிமைப்பதிவு (COMPULSORY LICENSING) முறை பாதுகாக்கும் என்று அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. இம்முறை மூலமாக, காப்புரிமை பெறப்பட்ட ஒரு பொருள் போதிய அளவில் மக்களுக்கு கிடைக்காமல் இருக்கும்போதோ, அல்லது அதிக விலைக்கு விற்கப்பட்டாலோ – மக்களின் நலன் கருதி – அதே பொருளை உற்பத்தி செய்யும் உரிமை, வேறு எவருக்கேனும் வழங்கப்படும். இதன் மூலமாக ஒரு பொருள் ஒருவரிடமே இருப்பதை கட்டுப்படுத்த முடியும் என்றும், இதனால் இத்தகைய பயிர்கள் தனியார் சிலரின் ஏகபோக கட்டுப்பாட்டில் செல்வதை தடுக்கமுடியும் என்றும் அரசுத்தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், காப்புரிமை சட்டத்தின்படி காப்புரிமை பெற்ற ஒரு பொருளை தயாரிக்க விரும்பி COMPULSORY LICENSING பெறும் ஒரு நபர், காப்புரிமை பெற்றவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அந்த இழப்பீட்டுத் தொகையை காப்புரிமை பெற்றவரே நிர்ணயம் செய்வார். எனவே அப்பொருளை தயாரித்து விற்பனை செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்குமோ அத்தொகையையே COMPULSORY LICENSING க்கான இழப்பீடாக கேட்பார்கள் என்பதை உண்மை. எனவே இந்த COMPULSORY LICENSING முறை விவசாயிகளுக்கோ, பொதுமக்களுக்கோ பயன்படாது என்பதே உண்மை.
ஒரு பயிர் வகைக்கான காப்புரிமை பதிவு செய்யப்பட்ட உடனே அந்த பொருளுக்கான COMPULSORY LICENSING வழங்கலாம் என்றிருந்த நிலை TRIPS-க்கு பின் மாறியுள்ளது. இதன்படி காப்புரிமை பதிவு செய்து 3 ஆண்டுகள் கழிந்த பின்னரே COMPULSORY LICENSING வழங்கப்படும். இந்த 3 ஆண்டுக்காலத்தில் காப்புரிமை பெற்ற நிறுவனம் வைத்ததுதான் சட்டம். சொல்வதுதான் விலை. இவற்றை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாது.
TRIPS ஒப்பந்தத்தின் கீழ் காப்புரிமை சட்டம் அடைந்துள்ள மாற்றத்தின் பயனாக GMO போன்ற பயிர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களே அதிக லாபம் பெறமுடியும். இது போன்ற பயி்ர்கள் மலட்டுத்தன்மை மிக்கதாக இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தங்கள் விதைப்பயிர் தேவைக்கு காப்புரிமை பெற்ற நிறுவனங்களையே சார்ந்திருக்கும் அவல நிலை ஏற்படும். மேலும் காப்புரிமை காலகட்டம் முடிந்த பின்னரும் இதுபோன்ற பயிர்கள் பொது உபயோகத்திற்கு மீண்டும் வராமல் தடுப்பதற்கு அந்த காப்புரிமை சட்டத்தின்படியே பல வழிமுறைகள் உள்ளன.
காப்புரிமை பெற்ற ஒரு பொருளை வேறு முறையில் தயாரித்து மலிவு விலையில் அளிக்கும் GENERIC MANUFACTURERS-களுக்கு பழைய காப்புரிமை சட்டம் பாதுகாப்பு அளித்தது. ஆனால் புதிய சட்டதிருத்தங்கள் இந்த விவசாயிகளுக்கு பயிர்வகைகள், உரங்கள், ரசாயன உரங்கள் கிடைப்பதை தடுத்து நிறுத்தக் கூடும்.
இயற்கையில் விளையும் தாவரங்களை, மனித முயற்சி மூலம் குறுக்கீடு செய்து மரபணுவை மாற்றியமைக்கும் தாவரங்கள் அனைத்தும் மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும் நன்மையே செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது. இவை மனிதனின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு தீமைகளும் செய்யலாம். மரபணு மாற்றப்பட்ட உணவுகளை உட்கொண்டவர்களுக்கு தோல் நோய்கள், ஆண்மை-பெண்மை குறைபடுதல் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக செய்திகள் வருகின்றன. இவற்றை வேளாண் வி்ஞ்ஞானிகளும் ஏற்றுக்கொள்கின்றனர்.
எதிர்காலத்தில் இந்த மரபணு மாற்ற பயிர்கள், என்னென்ன தீய விளைவுகளை கொண்டுவரும் என்பதற்கோ, அவற்றை தடுக்க என்ன வழி என்பதற்கோ யாரிடமும் பதில் இல்லை.
இத்தகைய குறைபாடுள்ள உணவுப்பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் மீது உணவுப்பொருட்கள் கலப்பட தடைச்சட்டம், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், குற்றவியல் சட்டம், தீங்கியல் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் மூலம் வழக்கு தொடரவும், பிரசினைக்கு தீர்வு காணவும் வழி இருந்தது. ஆனால் TRIPS ஒப்பந்தம் இந்திய குடிமக்களுக்கான இந்த உரிமைகளை பெருமளவில் குறைக்கின்றது. TRIPS ஒப்பந்தப்படி இத்தகைய பிரசினைகளை ஏற்படுத்தும் தாவரங்களின் பதிவுகளை ரத்து செய்ய மட்டுமே முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோர முடியாது.
காப்புரிமை போன்ற அறிவுச்சொத்துரிமை சட்டங்கள் விதைகளை தனிநபரின் உரிமையாக வாழ்நாள் முழுவதும் வைத்திருக்க வழி காட்டுகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு பின் காப்புரிமை பதிவுபெற்ற எந்த பொருளும், எந்த தடையுமின்றி பொதுமக்கள் உபயோகத்திற்கு வந்துவிட வேண்டும் என்பதை அந்த சட்டத்தின் அடிப்படை விதி. இருப்பினும் புதிதாக திருத்தம் செய்யப்பட்டுள்ள காப்புரிமை சட்டம் சில பின் வழிகளின் மூலம் காப்புரிமை பெற்ற பொருள், ஒரு தனி நபரின் கட்டுப்பாட்டிலேயே தொடர்வதற்கு உதவுகிறது. எந்த ஒரு கண்டுபிடிப்பையும் அதன் தொழில் நுட்பரீதியாக மேம்படுத்தியிருந்தாலோ, அல்லது பொருளாதார முக்கியத்துவம் ஏற்பட்டிருந்தாலோ அந்த கண்டுபிடிப்பிற்கு மீண்டும் காப்புரிமை பெறலாம். எனவே GMO போன்ற மரபணு மாற்றப்பட்ட தாவரப்பொருட்களின் காப்புரிமையை, பன்னாட்டு நிறுவனங்கள் எளிதில் நீடித்துக் கொண்டே போகக்கூடும்.
மரபணு தொழில்நுட்பத்திற்கான அங்கீகரிப்பு குழு
(Genetic Engineering Approval Committee)
மரபணு மாற்றப்பட்ட பயிர்களை கண்காணிக்கவும் அவற்றை முறைப்படுத்தவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரவைக்கு கீழ் இயங்கும் ஒரு அமைப்பே, மரபணு தொழில்நுட்பத்திற்கான அங்கீகரிப்பு குழு(GEAC).
இந்தக்குழு, மரபணு மாற்றப்பட்ட பயிர்களை சோதித்து அனுமதி அளித்தபின்பே அவற்றை சந்தையில் விற்க முடியும். சோதனை முறையாக நான்கு ஆண்டுகள் மரபணு மாற்றப்பட்ட பயிர்வகைகள் பயிரிடப்பட்டு அதன் விளைவுகளை ஆராய்ந்து இக்குழு அவற்றுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இதுபோன்ற சோதனைகளை தனியார் நிலங்களில் மேற்கொள்ளலாம் என்ற நிலை இந்தியாவில் உள்ளது.
ஆனால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பல ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மரபணு மாற்ற சோதனைகளை சாதாரண விவசாய நிலங்களில் சோதனை அடிப்படையில் பயிரிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆய்வுப்பணிக்கென ஒதுக்கப்பட்ட நிலங்களில் மட்டுமே இத்தகைய பரிசோதனைகளை நடத்தமுடியும்.
இந்தியாவிலோ, நில உரிமையாளருக்கும், விவசாயிக்குமகூட தெரியாமல் மரபணு மாற்றப்பயிர்கள் சோதனை அடிப்படையில் பயிரிடப்படுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் சோதனைக்கூட எலி, முயலை வைத்து நடைபெறும் பரிசோதனைகள், இந்தியாவி்ல் மனிதர்களை வைத்து நடைபெறுகின்றன, அதுவும் அரசின் அனுமதியோடு.
மரபணு மாற்றப்பட்ட பயிர்களை முறைப்படுத்துவதில் ஐரோப்பிய யூனியன் பல கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளது. பல ஐரோப்பிய நாடுகளில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை, அவற்றை தயாரிக்கும் நிறுவனத்தின் நிலங்களிலேயே சோதனை செய்யவேண்டும் என்ற முறை பின்பற்றப்படுகிறது. மேலும், மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளை மக்களுக்கு விற்பனை செய்யும்போது மரபணு மாற்றப்பட்டது என்ற முத்திரையை (LABELLING) கட்டாயம் இடவேண்டும் என்று அந்நாட்டு சட்டம் வலியுறுத்துகிறது. இதன்மூலம் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் குறித்த முழுவிபரங்களையும் அறிந்து கொள்ளும் பொதுமக்கள், தங்களுக்குத் தேவையான உணவினை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையை ஐரோப்பிய நாடுகள் வழங்கியுள்ளன. இதுபோன்ற உரிமை இந்தியாவில் வழங்கப்பட வில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.
மரபணு மாற்றப்பட்ட பயிர்களை உலக வர்த்தக நிறுவனம் ஆதரிப்பதால் இவற்றை தடைசெய்வது உறுப்பு நாடுகளுக்கு இயலாத காரியம். மரபணு மாற்றப்பட்ட உணவினால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவு வகைகளுக்கு கடந்த 1999ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. இதை எதிர்த்து அமெரிக்கா, உலக வர்த்தக கழகத்தில் முறையீடு செய்தது. இந்த முறையீட்டை விசாரித்த உலக வர்ததக கழகம், ஐரோப்பாவின் தடை நடவடிக்கைகள் உலக வர்ததக கழக நெறிமுறைகளுக்கு எதிரானது என்று கூறி தடையை நீக்குமாறு உத்தரவிட்டது.
அமெரிக்காவில் உற்பத்தியான மரபணு மாற்றப்பயி்ர்களை தடை செய்ய ஐரோப்பிய நாடுகளாலேயே முடியவில்லை என்றபோது இந்தியா போன்ற ஏழை நாடுகளின் நிலையை சொல்லத் தேவையில்லை.
தாவர வகைகள் பாதுகாப்பு மற்றும் உழவர்களின் உரிமைக்கான சட்டம் (PROTECTION FOR PLANT VARIETIES AND FARMERS RIGHTS ACT) 2001
இச்சட்டத்தின் பெயரிலேயே கூறப்பட்டுள்ளதைப்போல தாவரவகைகளையும், உழவர்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று கூறி இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. தாவரங்களுக்கு அவற்றின் இயல்பான தன்மையில் காப்புரிமை வழங்க முடியாத சூழ்நிலையில் அந்த தாவரங்களை பதிவு செய்வதற்காக கொண்டுவரப்பட்ட இந்த சட்டம், ஏறக்குறைய காப்புரிமை சட்டத்தின் மறு வடிவமாகவே உள்ளது.
இந்த சட்டத்தின் கீழ் ஒரு தாவரத்தை பதிவு செய்ய, அத்தாவரம் முன்பே தெரிந்த எந்த ஒரு தாவரத்தின் குணாதிசயங்களையும் பெற்றிருக்கக் கூடாது. ஒரே ஒரு மாறுபட்ட குணாதிசயத்தை அந்த தாவரம் பெற்றிருந்தாலும் இந்த சட்டத்தின் கீழ் அந்த தாவரத்தை பதிவு செய்ய முடியும்.
முன்பே தெரிந்த ஒரு பயி்ர் வகையின் மூலக்கூறை அறிவியல் வளர்ச்சியின்மூலம் சிறிது மாற்றம் செய்தாலே அதை இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்து அந்த தாவரத்தை தனி உடைமை ஆக்கிக்கொள்ளலாம்.
இந்த சட்டத்தின் கீழ் ஒரு தாவரவகையை பதிவு செய்து கொண்டால் 15 ஆண்டுகாலம் அவரே அதற்கு முழு உரிமை பெறுகிறார். அவற்றின் உற்பத்தி, விற்பனை போன்றவை அந்த உரிமையில் அடங்கும்.
காப்புரிமை சட்டம் போலவே இந்த சட்டத்தின் கீழும் COMPULSORY LICENSING முறை உள்ளது. ஆனால் இந்த சட்டம் விதைகளை வணிக நோக்கில் உற்பத்தி செய்யும் BREEDER எனப்படும் உற்பத்தியாளர்களுக்கே அதிக பாதுகாப்பு அளிக்கிறது. காப்புரிமை சட்டத்தைப்போலவே இந்த சட்டத்திலும் தாவரம் பதிவு செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்கு பிறகே COMPULSORY LICENSING-ல் பதிவு அனுமதிக்கப்படுகிறது. மேலும் PLANT BREEDER விரும்பினால் இந்த சட்டத்தின் கீழ் கூடுதலாக 12 மாத அவகாசம் பெற்றுக்கொள்ளலாம். காப்புரிமை சட்டத்தில் உள்ளது போலவே COMPULSORY LICENSING பெறுபவர் தாவரத்தை பதிவு செய்தவருக்கு அளி்க்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை காப்புரிமை பெற்றவரே நிர்ணயம் செய்வார்.
விதைச்சட்டம் (SEED ACT) 1966
விதைகளை பதிவு செய்வதற்காக 1966ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட விதைச்சட்டம் TRIPS ஒப்பந்தத்திற்கு பின்பு பல மாற்றங்கள் அடைந்து நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக SEED BILL 2004 என்ற பெயரில் காத்திருக்கிறது.
புதிதாக மாற்றம் பெற்றுள்ள இந்த விதைச்சட்டம் விவசாயிகளுக்கு எதிரானபல அம்சங்களை கொண்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் விதைகளை பதிவு செய்தவர் மட்டுமே அந்த விதைகளை விற்பனை செய்ய முடியும். விவசாயிகளுக்கு இச்சட்டம் விதைகளை பாதுகாக்கவும், மறுபயிர் செய்யவும் அவற்றை விற்கவும் அனுமதி அளித்திருந்தாலும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த கட்டுப்பாட்டின்படி விவசாயிகள் தங்கள் விதைகளை வணிகப்பெயரிட்டு விற்க முடியாது. அப்படி விற்கவேண்டும் என்றால் அவர்களும் தங்களுடைய விதைகளை இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கவேண்டும். நாட்டின் பல பகுதிகளிலும் பரிசோதனை அடிப்படையில் பயிரிடப்பட்டு நிரூபிக்கப்பட்ட விதைகளை மட்டுமே இச்சட்டத்தின் கீழ்பதிவு செய்யமுடியும். இந்த நிபந்தனை ஒரு சாதாரண விவசாயிக்கு எந்த விதத்திலும் பயனற்றது என்பதும் மிகப்பெரிய வணிக நிறுவனங்களே இதன்மூலம் பயனடைய முடியும் என்பதையும் விளக்க வேண்டியதில்லை.
மற்ற அறிவுச்சொத்துடைமை சட்டங்களைவிட கொடியதாக விதைச்சட்டம் உள்ளது. ஏனெனில் இச்சட்டத்தின் கீழ் ஒருவர் விதைகளை பதிவு செய்ய அந்த விதையின் மூலக்கரு எங்கிருந்து பெறப்பட்டது என்பதை தெரிவிக்க தேவையில்லை.
இதன்மூலம் நம்முடைய பாரம்பரியமிக்க விதைகள் சில தனியார்களின்உடைமையாக மாறக்கூடும். விவசாயிகளின் பாரம்பரிய விதைகளுக்கு இச்சட்டத்தின் கீழ் வேறு யாரும் பதிவு செய்ய முடியாது என்று கூறப்பட்டிருந்தாலும், ஒரு பயிரின் மூலத்தை தெரிவிக்க தேவையில்லை என்னும் விதியின் மூலம் நம்முடைய பாரம்பரிய விதைகள் பறிபோவதற்கு இச்சட்டம் உதவி செய்கிறது.
மற்ற அறிவுச்சொத்துடைமை சட்டங்களைப்போல விதைச்சட்டம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே உரிமையை அளிப்பதில்லை. இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்த ஒருவர் மீண்டும், மீண்டும் பதிவு செய்து கொண்டு விதைகளை நிரந்தரமாக தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும்.
மேலும் இந்த சட்டம், விதை கண்காணிப்பாளருக்கு ஏற்கனவே இருந்ததைவிட அதிகப்படியான அதிகாரங்களை வழங்குகிறது.
தற்போதைய சட்டத்தின்படி விதை கண்காணிப்பாளர் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி அவர் சந்தேகம் கொள்ளும் எந்த ஒரு இடத்தையும், எந்த நேரத்திலும் சோதனை இடலாம். அங்கு காப்புரிமை மற்றும் விதைச்சட்டங்களின் கீழ் உரிய பதிவு பெறாமல் சேமித்து வைத்துள்ள விதைகளை கைப்பற்றுவதோடு, அவற்றை பாதுகாத்து வைத்துள்ள விவசாயியை கைது செய்யும் அதிகாரமும் படைத்துள்ளார்.
லஞ்சம், ஊழல் இவற்றையே முதன்மைப்பணியாக கொண்டு இயங்கும் இந்திய அதிகார வர்க்கம், பணபலம் படைத்த விதை தயாரிப்பு நிறுவனங்களிடம் சரணடைந்து, விவசாயிகளுக்கு எதிராகவே செயல்படும் என்பதையும் கூறத்தேவையில்லை.
-மு. வெற்றிச்செல்வன்
(vetri@lawyer.com)
Article:
http://makkal-sattam.blogspot.com/2007/07/4-4.html
நாம் பயன்படுத்தும் வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. நமது வாழ்க்கையிலும் அனுபவ பூர்வமாக இதை உணர்ந்திருப்போம். காவல்நிலையம், நீதிமன்றம் போன்ற இடங்களில் தவறான வார்த்தைகளை பயன்படுத்தினால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
ஆனால், நடைமுறையில் உள்ள சாதாரண சொற்களை பயன்படுத்தினால்கூட, அது சட்டத்தின்முன் குற்றச்செயலாக கருதப்படும் நிலை வந்து கொண்டிருக்கிறது.
உதாரணமாக, சர்க்கரை இல்லாத என்பதை 'சுகர்-ப்ரீ' (SUGAR FREE) என்று நாம் கூறுவண்டு. 'சுகர்-ப்ரீ'யாக ஒரு காப்பி கொண்டு வா! என்று இனி நீங்கள் இதுபோல் 'ப்ரீ'யாக பேசமுடியாது. ஏனெனில் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான பால்பொருள் நிறுவனமான'அமுல்' தயாரிக்கும் ஐஸ்கிரீமிற்கு, 'ப்ரோலைஃப் சுகர்-ப்ரீ' (PROLIFE SUGAR FREE) என்ற பெயரில் உள்ள 'சுகர்-ப்ரீ' என்ற சொற்களை பயன்படுத்துவதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது என்ன கலாட்டா? என்று ஆச்சரியப்படாதீர்கள்!
புதிதாக அமல்படுத்தப்படும் அறிவுசார் சொத்துரிமை சட்டங்களின்படிதான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை நோயாளிகளுக்கான செயற்கை இனிப்பான்கள தயாரிக்கும் ஜைடஸ் காடிலா (ZYDUS CADILA) என்ற நிறுவனம், அதன் தயாரிப்புகளை 'சுகர்-ப்ரீ' என்ற பெயரில் விற்பன செய்து வருகிறது. மக்கள் சாதாரணமாக உபயோகிக்கும் சொற்களை வணிகப்பெயராக பயன்படுத்தி வந்த அந்த நிறுவனம், கடந்த 1988ம் ஆண்டு முதல் அந்த சொல்லை தான் பயன்படுத்தி வருவதாகவும், எனவே 'சுகர்-ப்ரீ' என்ற சொற்களை தமது டிரேட் மார்க்-ஆக பதிவு செய்து தரவேண்டும் என்று மனு செய்துள்ளது. இந்த மனு பரிசீலனையில் உள்ளது.
இந்நிலையில், அமுல் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 'ப்ரோலைஃப் சுகர்-ப்ரீ' ஐஸ்கிரீம் கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி சந்தைக்கு வந்தது. இதையடுத்து ஜைடஸ் காடிலா நிறுவனம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவில், 'சுகர்-ப்ரீ' என்ற சொற்களை தாம் கடந்த 1988ம் ஆண்டு முதல் வணிகப்பெயராக பயன்படுத்தி வருவதாகவும், அந்த சொற்களுக்கு டிரேட் மார்க் பதிவு கோரி மனு செய்துள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிலையில் அமுல் நிறுவனத்தின் புதிய தயாரிப்புக்கு 'ப்ரோலைஃப் சுகர்-ப்ரீ' என்று பெயர் வைப்பதால், தமது பொருளின் நற்பெயருக்கு இழப்பு ஏற்படுவதாகவும் இதனை ஈடு செய்ய, அமுல் நிறுவனம் 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. மேலும் அமுல் நிறுவனம், 'சுகர்-ப்ரீ' என்ற பெயரில் எந்த பொருட்களையும் விற்பனை செய்ய நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சிஸ்டானி, அமுல் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜர் ஆகாத நிலையிலேயே வழக்கை விசாரித்து, இந்த மனுவில் கேட்கப்பட்டுள்ளதைப்போல தடை வழங்காவிட்டால் ஜைடஸ் காடிலா நிறுவனத்திற்கு பெரும் இழப்பு ஏற்படும் என்ற வாதத்தில் தாம் திருப்தி அடைவதாக கூறி, அமுல் நிறுவனம் மே 3ம் தேதிவரை 'சுகர்-ப்ரீ' என்ற சொற்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்துள்ளார்.
காப்பிரைட் சட்டம் உட்பட, காப்புரிமை சட்டங்களில் மக்கள் பொதுவாக பயன்படுத்தும் சொற்களையோ, ஒரு பொருளின் இயல்பை குறிக்கும் சொற்களையோ பதிவு செய்யமுடியாது. அப்படிப் பார்த்தால் 'சுகர்-ப்ரீ' என்ற சொல்லும் உலகம் முழுவதும் சாதாரணமாக பயன்படுத்தும் சொல்தான். இந்த சொல்லை அமுல் நிறுவனம் பயன்படுத்தியதால் தமக்கு ஏற்பட்ட இழப்புக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுள்ள ஜைடஸ் காடிலா நிறுவனம், பல ஆண்டுகாலமாக மக்கள் மிகச்சாதாரணமாக பயன்படுத்தி வரும் 'சுகர்-ப்ரீ' என்ற சொற்களை யார்,யாருக்கு எவ்வளவு இழப்பீடு கொடுத்து உரிமையாக்கி கொண்டது என்ற கேள்விக்கு பதில் இல்லை.
இந்த வழக்கின் முடிவு எப்படி வேண்டுமானாலும் ஆகலாம். ஆனால் மாறிவரும் சட்டங்களின் நிலைக்கு இது ஒரு எளிமையான எடுத்துக்காட்டு. இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் நாம் வாழ்வின் பல முனைகளிலும் பாதிக்கப்படுவோம். குறிப்பாக உணவு மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அடிப்பட தேவைகளை ஈடு செய்வது மிகக்கடினம் ஆகிவிடும்.
உதாரணமாக, கனடா நாட்டின் விவசாயி பெர்சி ஷ்மேய்சர் என்பவரின் அனுபவத்தை பார்க்கலாம். இயற்கை விவசாயியான அவரது நிலத்தில் உள்நாட்டு பயிர்வகைகளை பயிரிட்டிருந்தார். அருகே உள்ள மற்றொரு விவசாயியோ மான் சான்டோ என்ற புகழ்பெற்ற நிறுவனத்தின் மரபணு மாற்றப்பட்ட பயிர்வகைகளை பயிரிட்டிருந்தார். அந்த நிலத்தில் விளைந்திருந்த பயிர்களில் இருந்த மகரந்த தூள்கள் காற்றின் மூலமாகவும், பூச்சிகளின் மூலமாகவும் பெர்சி ஷ்மேய்சரின் நிலத்தில் பயிரிட்டிருந்த பயிர்களிலும் ஊடுருவி இருந்தது. இயற்கை வேளாண்மை செய்து
வரும் தனது நிலத்தில் மரபணு மாற்றக்கூறுகள் என்ற மாசு படிவது குறித்து கவலை கொண்ட பெர்சி ஷ்மேய்சர், இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்று ஆலோசித்து கொண்டு இருந்தார். அப்போது, அவருக்கு மான் சான்டோ நிறுவனத்தில் இருந்து, அந்த நிறுவனம் காப்புரிமை பதிவு செய்திருந்த மரபணுமாற்றக் கூறுகளை உரிய அனுமதியின்றி பதுக்கி வைத்துள்ளதாக குற்றம் சாட்டி சட்டரீதியான நோட்டிஸ் வந்தது.
தாம் எந்த தவறும் செய்யவில்லை என்றும், மான்சான்டோ நிறுவனம்தான் தன் நிலத்தில் அத்துமீறி, மாற்றப்பட்ட மரபணு கூறுகளை பரப்பி மாசுபடுத்தி
விட்டதாக பெர்சி ஷ்மேய்சர் பதில் அளித்தார். ஆனால் அவரது வாதம் மறுக்கப்பட்டு, அறிவுசார் சொத்துரிமை சட்டங்களின் கீழ் விவசாயி பெர்சி ஷ்மேய்சர் குற்றவாளி என்றும், மான்சான்டோ நிறுவனத்திற்கு அவர் இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. அந்நாட்டு உச்சநீதிமன்ற மேல்முறையீட்டிலும் விவசாயி பெர்சி ஷ்மேய்சர் தவறிழைத்ததாக உறுதி செய்யப்பட்டது. மேலும் விவரங்களுக்கு: http://www.percyschmeiser.com/
பெர்சி ஷ்மேய்சர் மனித குலமேம்பாட்டிற்காக சிறந்த முறையில் செயல்பட்டதற்காக கடந்த 2000ம் ஆண்டில் மகாத்மா காந்தி விருது வாங்கியவர் என்பது கூடுதல் செய்தி...!
உலகமயமாக்கல் காரணமாக, அறிவுசார் சொத்துரிமை சட்டங்கள் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப் படுகின்றன. இந்த சட்டங்கள் முழுமையாக அமல் செய்யப்படும்போது, இந்திய விவசாயிகளுக்கும் 'திருட்டுப்பட்டம்' கிடைக்கும். அதை சட்டமும் அங்கீகரிக்கும். இது விவசாயிகள் மட்டும் சார்ந்த பிரசினை அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதேபோல மருத்துவத்துறையிலும், அறிவு சார் சொத்துரிமை சட்டங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். உதாரணத்திற்கு தமிழகத்தில் நடைபெற்றுவரும் வழக்கு ஒன்றையே பார்க்கலாம்.
ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த 'நோவார்டிஸ்' என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம்ரத்தப்புற்று நோய்க்கான மருந்தை தயாரித்து விற்பனை செய்கிறது. 'இமாடினிப் மெஸிலேட்' என்ற பெயருடய மருந்துப்பொருளை 'க்ளிவெக்' என்ற வணிகப்பெயரில் தயாரித்து அந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அதே மருந்தை வேறு பெயர்களில், வேறு பல நிறுவனங்களும் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.
இந்த நிலையில் 'க்ளிவெக்' என்ற பெயரில் விற்கப்படும் மருந்து பொருளுக்கு காப்புரிமை கேட்டு 'நோவார்டிஸ்' நிறுவனம் மத்திய அரசிடம் மனு செய்தது. அவ்வாறு காப்புரிமை அளிக்கப்பட்டால், 'இமாடினிப் மெஸிலேட்' என்ற மருந்தை வேறு யாரும் எந்த பெயரிலும் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ முடியாது. எனவே அம்மருந்திற்கு அதை தயாரிக்கும் உரிமை பெற்ற நிறுவனம் வைத்ததுதான் விலை.
ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு நாளுக்கு 4 மாத்திரைகள்எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மருந்தின் தற்போதைய விலை சுமார் 50 ரூபாய். காப்புரிமை பதிவு செய்யப்பட்ட நாடுகளில் இம்மருந்தின் விலை சுமார் 1000 ரூபாய். எனவே இந்தியாவில் இந்த மருந்துக்கு காப்புரிமை வழங்கப்பட்டால், ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாயை மருந்துக்கு செலவழிக்க வேண்டும்.
இதுவரை இந்த மருந்துக்கு இந்தியாவில் காப்புரிமை வழங்கப்படவில்ல. நாளை என்ன நடக்கும் என்பது தெரியாது. இந்த மருந்துக்கு காப்புரிமை வழங்கப்பட்டால் அனைத்து மருந்து தயாரிப்பாளர்களும், தங்கள் தயாரிப்புகளுக்கு காப்புரிமை கோருவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அனைத்து மருந்துகளுக்கும் காப்புரிமை கொடுக்கப்பட்டால் மருத்துவம் என்பதே பெரும்பாலான மக்களுக்கு எட்டாக்கனியாகி விடும்.
இவை அனைத்தும் சட்டத்தின் பெயரால் நடபெறுகின்றன! உலகையே குலுக்கிய சுனாமி பேரலை இந்தியாவின் பெரும்பகுதியை சூறையாடிய டிசம்பர் 26, 2004 அன்று ஒட்டு மொத்த இந்தியாவும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது. ஆனால் சோகமயமான அன்றய தினத்தில் காப்புரிமை சட்டதிருத்த மசோதாவில் குடியரசுத்தலைவர் சத்தமின்றி கையொப்பம் இட்டார். அந்த திருத்தம் அனைத்தும் மக்களுக்கு எதிரானதாகவும், பெரும் வணிக நிறுவனங்களுக்கு ஆதரவாகவுமே இருந்தது என்பதை கூறத்தேவையில்லை.
சமூக அநீதிகளிலிருந்து சட்டத்தின் துணை கொண்டு மக்களை காப்பது வழக்கறிஞர்களின் முதன்மை பணி என்பதே பொதுக்கருத்து. ஆனால், உலகமயமாக்கல் மற்றும் அறிவுசார் சொத்துரிமை போன்ற பெயர்களில் அமலுக்கு வரும் இதுபோன்ற மக்கள் விரோத சட்டங்களிலிருந்து மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பதே மக்கள் சார்ந்த வழக்கறிஞர்களின் கவலையாக உள்ளது.
-சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)
Article:
http://makkal-sattam.blogspot.com/2007/07/blog-post_22.html
நம் நாட்டு மாணவர்கள் கல்விப் படிப்பினால் எந்தவிதமான பகுத்தறிவையும் எதையும் ஆராய்ந்து அறியும்படியான தன்மையையும் அடைய முடிவதில்லை. அவர்கள் படிக்கின்ற படிப்பினால் பிற்கால வாழ்க்கையைத் தரித்திரமின்றி நடத்த வேண்டும். அதற்காக, ஏதாவது உத்தியோகத் துறையிலோ, வேறு பணம் சம்பாதிக்கின்ற வழியிலோ பயன்பட வேண்டும் என்பதற்காகவே படிக்கிறார்கள்.
பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைக்கு அறிவு வளர வேண்டும் என்ற காரணத்திற்காகப் பள்ளிக்கு அனுப்புவதில்லை; படித்துப் பட்டம் பெற்று வந்ததும் ஜீவனத்துக்கு வேண்டிய முறையில் எங்காவது உத்தியோகம் கிடைக்குமா என்ற நோக்கத்தோடேயே பெற்றோர்கள் முயற்சிக்கிறார்கள்.
ஆகையால், அவர்கள் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் கூறுகின்ற ஒவ்வொன்றையும் அப்படியே மனப்பாடம் செய்து, அதையே பிறகு அவர்கள் கேட்கும் பொழுது சொல்லுவதாலும், எழுதுவதாலும் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள்.
இந்த முறையில் ஒரு மாணவன் எவ்வித உயர்ந்த பட்டத்தை அடைந்த படிப்பாளி என்று கூறப்பட்டாலும், அவனுக்குப் போதிய பொது அறிவும், உலகியலில் தகுந்த ஞானமும் அடைந்தவனாகக் கருதப்பட மாட்டான். ஆசிரியர் சொல்லுவதைத்தான் கேட்க வேண்டும்; புத்தகத்திலுள்ளதைத்தான் மனப்பாடம் செய்து திரும்பவும் ஒப்புவிக்க வேண்டும் என்பது, நம் நாட்டுக் கல்வி முறை. இக்கல்வி முறையினால் மாணவர்களுக்கு அறிவு புகட்டப்படுவதால் அவர்கள் பிற்காலப் பழக்க வழக்கங்களுக்கும், நல்லொழுக்கத்திற்கும் தகுதியுடையவர்களாக ஆகமாட்டார்கள்.
ஆனால், பலர் பலவிதமாக அறிவு, ஞானம் என்பதைக் கருதுகிறார்கள். பெரும்பாலோர் ஞானம் என்பதும், அறிவு என்பதும் கடவுளைக் காண்கிறதும், மோட்சத்தை அடைவதும்தான் என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணம் குழந்தையிலிருந்தே நம் பிள்ளைகளுக்கு ஊட்டப்பட்டு வருவதால், மேன்மேலும் ஒரு மாணவன் தெளிவற்றவனாகவே ஆக்கப்படுகிறான்.
பொதுவாகவே மாணவன் அதற்கு இடம் கொடுக்காமல் தன்னை இன்னான் என்றுணர்ந்து "நம் பருவம் எதையும் அறிந்து கொள்ளுகின்றதும், தெரியாதவைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுகிறதுமான மாணவப் பருவம்" என்பதை உணர வேண்டும். இவ்வித எண்ணமுள்ள மாணவன்தான் பிற்காலத்தில் எதையும் அறிந்த அறிவாளியாக விளங்க முடியும்.
மேல்நாட்டு மாணவர்கள் எல்லோரும் இவ்வித எண்ணம் கொண்டவர்களாக இருப்பதாலும், அவர்களுக்கு இந்தப்படியே பயிற்சி அளிப்பதாலும்தான் அவர்கள் எதையும் ஆராயும் தன்மையுள்ளவர்களாகவும், மென்மேலும் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு இது ஏன்? எப்படி? எதற்காக? இதனால் என்ன செய்ய முடியும்? என்று இப்படிப் பலவிதமான கேள்விகளுக்குப் பதில் தெரிந்து கொண்டே பார்த்ததால் இன்றைக்கு அவர்கள் அறிவாளிகளாகவும், விஞ்ஞானிகளாகவும் விளங்குகிறார்கள்.
மற்றும் பல பொது விஷயங்களிலும் நம் நாட்டு மக்களைப் போல்
இல்லாது, எவ்விடத்திலும் பிறருடன் நன்முறையில் பழகுகிறார்கள்.
ஆனால், நம் நாட்டு மாணவர்களுக்குப் பொது அறிவைப் புகட்டுவதற்கு வேண்டிய சாதனங்கள் ஒன்றும் இல்லாததாலும், நம் நாட்டுக் கல்வி முறையில் இவை கற்பிக்கப்படாததாலும் அவர்கள் வயதுவந்தவர்களானதும் பொது இடங்களிலும், உலகத்தோடும் நன்முறையில் பழகுவது கிடையாது.
புகைவண்டி நிலையம் சென்றால், எவன் ஒருவன் முதலில் டிக்கட் வாங்குகிறானோ, அவன்தான் சமர்த்தன் என்று புகழப்படுகிறான். புதிய
சினிமா இன்றுதான் முதலில் வெளியிடப்படுகிறது என்றால் அன்றைக்கு படத்திற்கு முதல் டிக்கட் வாங்குகிறவன் அதிபராக்கிரம புத்திசாலி என்று போற்றப்படுகிறான். ஏதாவது ஒரு உண்மையை மறைக்க ஆயிரம் பொய்களைக் கூறித் தப்பித்துக் கொண்டால் அவன் அறிவிற் சிறந்தவன்; அவன் கூறியது பொய்யானாலும் தன் புத்தியின் யூகத்தால், வெகு சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டான் என்றுதான் கூறுவர்.
நன்னடத்தை என்பது என்னவென்று பார்த்தால் ஒரு மனிதனிடம்
நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ, நீங்கள் மகிழ்ச்சியடையவும், திருப்தியடையவும் அவன் என்ன செய்யவேண்டுமோ, அதே முறையில் நீங்களும் பிறரிடம் பழகும் போது அவர்களுக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் உண்டாக்கும்படியான வழியில் நடந்து கொள்வதாகும்.
உங்களிடம் ஒருவர் நடந்து கொள்வதிலிருந்து உங்களுக்குக் கஷ்டத்தையும், மனக்கலக்கத்தையும் அதிருப்தியையும் உண்டாக்குகிற முறைகள் எவை எவையென்று தோன்றுகிறதோ, அவையவைகளை விட்டுவிட வேண்டும். இது ஒரு சுலபமான கருத்து. இதை யாவரும் கைக்கொள்ளுவதால் நல்லறிவும், பொது அறிவும் அடைந்தவர்களாகலாம்.
http://thamilachi.blogspot.com/2007/07/blog-post_2495.html
பாரத ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் உஷா தோராட் அண்மையில் தெரிவித்துள்ள தகவல் ஒன்று கவனிக்கத்தக்கது. இந்தியாவில் இப்போது மொபைல் தொலைபேசி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 30 லட்சம். அதேசமயம், அனைத்து வங்கிகளிலிருந்தும் கடன் வசதி பெறுபவர்களின் எண்ணிக்கை மொபைல் தொலைபேசி வைத்திருப்பவர்களைவிட குறைவு என்பதே அது.
இதை சற்று கூர்ந்து கவனிப்போம்: நூறு கோடி மக்கள் வாழும் இந்தியாவில் வெறும் 9 கோடி பேருக்குத்தான் வங்கிக் கடன் கிடைக்கிறது. இதில் பெரும் தொழில், சிறு தொழில் மற்றும் விவசாயக்கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன், கல்விக்கடன் என எல்லா வகை வங்கிக் கடன்களும் அடங்கும்.
மேலும், 2006ஆம் ஆண்டில் வங்கிகளின் கடன் வசதி பெற்றவர்களில் 93 சதவிகிதத்தினர் தலா ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கும் குறைவான தொகையே கடனாகப் பெற்றுள்ளனர். இது மொத்த வங்கிக் கடன் தொகையில் 18 சதவிகிதமே.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிக் கடன் வசதி ரத்தநாளம் போன்றது என்பார்கள். அந்த வகையில் பெரும் நகரங்கள், சிற்றூர்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களுக்கு பரவலாக இந்தக் கடனுதவி கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில். ஒட்டுமொத்த வங்கிக் கடன் தொகையில் 56 சதவிகிதம் தொகையை மும்பை, தில்லி, சென்னை, கோல்கத்தா, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய 6 மாநகரங்கள் பெற்று விடுகின்றன. மேலும் கவலையளிக்கும் அம்சம் என்னவெனில், கடந்த 5 ஆண்டுகளில் கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் வங்கிகள் வழங்கிய கடனுதவி 10.4 சதவிகிதத்திலிருந்து 8.3 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துவிட்டது என்பதுதான்.
இந்தச் சரிவுக்கு என்ன காரணம் என்றால், கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 2001 டிசம்பரில் 32,496 வங்கிக் கிளைகள் செயல்பட்டன. ஆனால், 2006 டிசம்பரில் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 30,586 ஆக குறைந்துவிட்டன. அதாவது, கடந்த 5 ஆண்டுகளில் 1910 கிளைகள் மூடப்பட்டுள்ளன. பாரத ரிசர்வ் வங்கி 3 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடும் தகவல் அறிக்கை (டிசம்பர் 2006)யில் இந்த விவரங்கள் உள்ளன.
ஒருபக்கம், தேசிய வங்கிகள், பழைய தனியார் வங்கிகள், புதிய தலைமுறை தனியார் வங்கிகள் ஒன்றோடொன்று போட்டிபோட்டுக் கொண்டு பெரும் நகரங்களிலும், வணிக மையங்களிலும் புதிய கிளைகளை அமைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், தேசிய வங்கிகள் வெளிநாடுகளில் அன்றாடம் புதிய கிளைகளை அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. இதுவரை தவிர்த்து வந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் கூட இந்திய வங்கிகள் கிளைகளைத் தொடங்குகின்றன. ஆனால், உள்நாட்டில் கிராமக்கிளைகளை இழுத்து மூடுகின்றன. ஓரிரு பெரிய வங்கிகளில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விசாரித்ததில் கிடைத்த தகவல் இதுதான்: “”லாபம் ஈட்டாத சிறிய கிளைகளை அருகில் உள்ள பெரிய கிளைகளோடு இணைத்து விட்டோம். நாங்கள் ஒன்றும் கிளைகளை மூடவிடவில்லை.” என்றனர். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று ஆராயத் தேவையில்லை. வங்கிகளின் லாபநோக்கம்தான் முக்கியக் காரணம்.
1969-ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதை அடுத்து, கிராமங்களில் கிளைகளைத் தொடங்குவதற்கு முழுமூச்சுடன் களம் இறங்கின. அஞ்சல் அலுவலகம், காவல் நிலையம் இல்லாத கிராமங்களில்கூட வங்கிக்கிளைகள் தொடங்கப்பட்டன. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அந்த நிலை நீடித்தது. அதன் பின்னரே இதில் சுணக்கம் ஏற்பட்டது மட்டுமல்ல; வணிகரீதியில் லாபம் தராத கிளைகள் மூடப்பட்டன.
கிராமங்களில் வாழும் மக்களிடையே சேமிப்புப் பழக்கத்தை உருவாக்குதல், அவர்களிடம் வைப்புத்தொகைகளைத் திரட்டுதல் மற்றும் அவர்களுக்குப் பயிர்க்கடன், கால்நடைக் கடன் போன்ற விவசாயக் கடன் உதவி வழங்குதல், அளவுக்கு அதிகமான வட்டி வசூலிக்கும் தனியார் வட்டிக் கடைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றுதல் ஆகியவையே அந்த காலகட்டத்தில் அரசின் நோக்கமாக இருந்தது.
1991-ல் அறிமுகமான பொருளாதாரச் சீர்திருத்தத்திற்குப்பின்னர், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் வணிக ரீதியில் செயல்பட்டு லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஒரு வங்கியின் செயல்திறனுக்கு அடையாளம் அது ஈட்டும் லாபமே என்று கருதப்பட்டது. இப்புதிய சூழலில், கிராமக்கிளைகள் ஒரு சுமையாகக் கருதப்பட்டன.
நல்லவேளையாக, காலம் தாழ்ந்தேனும், மீண்டும் அரசின் எண்ண ஓட்டம் மாறத் தொடங்கியுள்ளது. பாரதப் பிரதமருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் உயர்மட்டக் குழுவின் தலைவரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான சி. ரங்கராஜன் அண்மையில் வெளியிட்டுள்ள யோசனை நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. கிராமங்களில் மீண்டும் வங்கிக்கிளைகளை பெரிய அளவில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் அவர்.
வங்கிகள் தங்கள் கிளைகளைக் கிராமங்களில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில், கிராமங்களில் புதிய கிளைகளை அமைக்கும் வங்கிகளுக்கே பெரிய நகரங்களில் கிளைகளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற யோசனையைத் தெரிவித்துள்ளார் ரங்கராஜன். பார்க்கப்போனால், இப்படி ஒரு திட்டம் கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்டது. ஆனால், காலப்போக்கில் ரிசர்வ் வங்கியும் அடுத்தடுத்து பொறுப்பேற்ற அரசுகளும் கிராமக்கிளைகளை அமைப்பதில் முனைப்பு காட்டத் தவறிவிட்டன என்பதே உண்மை.
தற்போது, பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது குறித்து பெருமிதம் அடைகிறோம். ஆனால், வேளாண்துறை, தொழில்துறை மற்றும் சேவைத்துறை ஆகிய மூன்று துறைகளிலும் பரவலாக, ஒரே சீராக வளர்ச்சி ஏற்படவில்லை. மாறாக, ஒருபக்கம், தொழில் உற்பத்தித் துறையும், இன்னொருபக்கம், தகவல்தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி, ஹோட்டல் தொழில், சுற்றுலாத் தொழில் உள்ளிட்ட சேவைத் தொழில்கள் அண்மைக்காலமாக அபரிமித வளர்ச்சி கண்டுள்ளன. இதன் பயனாகவே 9 சதவிகித வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது. இதில் வேளாண் துறையின் பங்கு குறைவே. எனவேதான், கிராமப்புறங்களில் வளர்ச்சியின் பலன் தென்படவில்லை. வறுமை ஒழிப்பு கைகூடவில்லை. புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை.
இதை உணர்ந்துதான், மத்திய அரசு வேளாண் துறையில் ரூ. 25,000 கோடி வேளாண் துறையில் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளது. கிராமப்புற வளர்ச்சிக்கு அரசின் புதிய முதலீடுகள் அவசியம் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதுமட்டும் போதாது. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில், சரியான அளவில் விவசாயக் கடன் தங்குதடையின்றி கிடைக்கச் செய்வதும் அவசியம். அதேபோல், கிராம மக்களிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை உருவாக்குதல், அவர்களது வைப்புத்தொகைகளைத் திரட்டி நியாயமான வட்டி வழங்குதல் போன்ற பணிகளைச் செம்மையாக மேற்கொள்வதற்கு, கிராமங்களில் வங்கிகள் இயங்க வேண்டும்.
கிராமக் கிளைகளில் பணிபுரிய, ஊழியர்களைத் தேர்வு செய்வதிலும் கவனம் தேவை. நகர வாழ்க்கை முறைகளில் ஊறிப்போன ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி கிராமங்களுக்கு அனுப்பினால், உரிய பலன் கிடைக்காது என்பதைக் கடந்தகால அனுபவம் உணர்த்தியுள்ளது. கிராமச்சூழலில் பணிபுரிய, விருப்ப அடிப்படையில் ஊழியர்களைத் தேர்வு செய்தால், அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர்கள் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
வளர்ச்சியின் பலன் கிராமங்களில் வாழும் மக்களுக்கும் விரைவில் வந்து சேரும் என்பதற்கான அறிகுறியாக புதிய வங்கிக் கிளைகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)
Article:
http://bsubra.wordpress.com/2007/07/23/s-gopalakrishnan-banking-services-in-rural-areas/
“பத்திரிகைத் துறையில் சிறந்த சேவைபுரிந்தமைக்காக ராம்நாத் கோயங்கா பெயரிலான விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். விருது பெற்றவர்களுக்குப் பாராட்டுகளையும் விழாவில் பங்கேற்கும் உங்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டு, பத்திரிகைச் சுதந்திரத்துக்குக் கட்டுப்பாடு, பத்திரிகைகளுக்குத் தணிக்கை என்ற நெருக்கடியான காலகட்டத்தில்கூட பத்திரிகைச் சுதந்திரத்துக்காக அஞ்சாமல் பாடுபட்டவர் ராம்நாத் கோயங்கா. சுதந்திரப் போராட்ட வீரர், தொழில் அதிபர், பத்திரிகைச் சுதந்திரத்துக்காக அயராது பாடுபடுபவர் என்று பன்முகச் சிறப்பு பெற்றவர் ராம்நாத் கோயங்கா.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரும் சுதந்திரம் அடைந்த பிறகும் அவர் வெளியிட்ட பத்திரிகைகள் அனைத்துமே அவருடைய நாட்டுப்பற்றுக்கும், அச்சமின்மைக்கும் சான்றாகத் திகழ்கின்றன. 1932-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் அதிபரானார். பிறகு வெவ்வேறு இந்திய மொழிகளிலும் பத்திரிகைகளைத் தொடங்கினார். அவருடைய சீரிய வழிகாட்டுதலில் எல்லா பத்திரிகைகளும் மக்களால் பேசப்படும் அளவுக்குச் சிறப்பாக வெளிவந்தன.
“”பத்திரிகையாளர்கள் தேச வளர்ச்சியின் பங்குதாரர்கள்” என்ற தலைப்பில் இன்று உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன்.
1944-ல் எனக்கு 13 வயது. இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. என்னுடைய அண்ணன் சுதேசமித்திரன், தினமணி ஆகிய நாளிதழ்களுக்கு துணை முகவராக இருந்தார். வேலைக்காக அவர் இலங்கை சென்றதால், ராமேஸ்வரத்தில் இவ்விரு பத்திரிகைகளையும் விநியோகிக்கும் பொறுப்பை நான் ஏற்க நேர்ந்தது. மாணவனாக இருந்த நான், உலகப் போர் குறித்த செய்திகளை ஆர்வமாகப் படித்து வந்தேன். முதலில் தினமணி நாளிதழை வாங்கியதும், ஸ்பிட்ஃபயர் ஃபைட்டர் விமானம், லுஃப்ட்வாஃப் விமானத்துக்கு எதிராக எப்படி சண்டை போட்டது என்பதை ஆர்வமாகப் படிப்பேன். விமானவியலில் எனக்கு ஆர்வத்தை விதைத்ததே தினமணிதான். உலகம் முழுவதுமே மக்களின் ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்கள் அன்றாடம் ஆயிரம் நடக்கலாம். பத்திரிகையாளர்கள் அவற்றை ஊன்றிக் கவனித்து உரிய வகையில் செய்தியாகத் தர வேண்டும்.
1999-ல் டெல் அவிவ் நகருக்குச் சென்றேன். ஹமாஸ் போராளிகள் லெபனான் எல்லையில் ராணுவத்துக்குக் கடும் சேதத்தை ஏற்படுத்திவிட்டனர் என்று தொலைக்காட்சியில் முக்கிய செய்தியை அடிக்கடி ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். அடுத்த நாள் பத்திரிகைகளை வாங்கியபோது, இந்தச் செய்தியை முதல் பக்கத்திலேயே காண முடியவில்லை. ரஷியாவிலிருந்து இஸ்ரேலுக்கு வந்த ஒரு விவசாயி, பாலைவனப் பகுதியில் மூன்று ஆண்டுகளாகத் தங்கி காய்கறி, பழச்சாகுபடியை அமோகமாக மேற்கொண்டு சாதனை படைத்திருப்பது குறித்த செய்திதான் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்தது. மக்களும் அச்செய்தியைத்தான் ஆர்வமாகப் படித்தார்கள். பத்திரிகைத் துறையின் சிறந்த பங்களிப்பு என்றே அச் செய்தியை நானும் கருதுகிறேன்.
எல்லா பத்திரிகைகளிலும் ஆராய்ச்சிப் பிரிவு இருக்க வேண்டும். செய்திகளைத் தர, ஆய்வுசெய்ய, முக்கியமானவற்றை எடுத்துரைக்க இதைப் பயன்படுத்த வேண்டும். கல்வி நிலையங்களில் உள்ள பத்திரிகையியல் ஆய்வுப்பிரிவுடன் இந்தப் பிரிவு இணைக்கப்பட வேண்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அது ஏன், எதனால் ஏற்படுகிறது, அதற்கு நீண்டகால, குறுகியகால தீர்வு என்ன என்று அறிய இது உதவும். மூத்த பத்திரிகையாளர்களும் இளைஞர்களும் இதில் சேர வேண்டும். இதனால் பத்திரிகையின் தரமும் உயரும்.
வெளிநாட்டுப் பத்திரிகைகளில் ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன், அதை ஆய்வுப்பிரிவுக்கு அனுப்புகின்றனர். அயல்பணி ஒப்படைப்பு என்ற அவுட்-சோர்சிங் முறை குறித்து அமெரிக்காவில் கடுமையான ஆட்சேபம் எழுந்தபோது, ஆய்வு செய்து செய்தி தர ஒரு பத்திரிகையாளர் அமெரிக்காவிலிருந்து இங்கே வந்தார். அயல்பணி ஒப்படைப்பு நிறுவனங்கள் பயன்படுத்தும் கருவிகள், சாதனங்களில் 90% அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதை அறிந்து, செய்தியாக அளித்தார். அது அமெரிக்க, ஐரோப்பிய மக்களுக்கு வியப்பை அளித்தது.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறை (ஐ.டி.) எப்படி வளர்ந்திருக்கிறது என்று அறிய “டிஸ்கவரி’ சேனலின், தாமஸ் ஃப்ரீட்மேன் இந்தியாவுக்கு வந்து பெங்களூர் போன்ற ஊர்களில் ஒரு மாதத்துக்கும் மேல் தங்கினார். “”தி வேர்ல்ட் ஈஸ் ஃபிளாட்” (உலகம் தட்டையானது) என்ற புத்தகத்தை எழுதினார். இந்தியாவில் மட்டும் அல்ல, உலகெங்கும் இப் புத்தகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இந்தியப் பத்திரிகையாளர்களும் இப்படி ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்யலாம்.
பத்திரிகைகள் சமுதாயத்துக்குப் பயன் தரும் வகையில் செயலாற்ற முடியும் என்பதற்கு இரண்டு சமீபத்திய உதாரணங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மகாராஷ்டிரத்தில் விதர்பா பகுதிக்கு கடந்த மாதம் சென்றேன். அங்கு விவசாயிகளின் பிரச்னை குறித்து விவசாயிகள், அதிகாரிகள், வேளாண்துறை நிபுணர்கள், பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள் ஆகியோருடன் விவாதித்தேன். இதேபோல பத்திரிகைகளின் ஆய்வுக்குழுவும் நேரடியாகவே அந்தந்த இடங்களுக்குச் சென்று செய்தி சேகரித்தால் பிரச்னையை அடையாளம் காணவும், அரசுக்கு தீர்வுக்குண்டான வழிகளைச் சொல்லவும் உதவியாக இருக்கும்.
கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி மகாராஷ்டிரத்தின் யவத்மால் மாவட்டத்துக்குச் சென்றேன். பீட்டா காட்டன் என்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட புதியவகை பருத்தியைச் சாகுபடி செய்து நஷ்டம் ஏற்பட்டதால் அந்த மாவட்ட விவசாயிகள் மனம் நொந்த நிலையில் இருந்தனர். வறட்சி காரணமாக மகசூல் குறைந்தது; அல்லது சாவியாகிப் போயிருந்தது. தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் தொடர்ந்து கிடைத்துவந்தால்தான் பீட்டா காட்டன் விதைகளால் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற உண்மை அவர்களுக்கு அனுபவம் வாயிலாகத்தான் கிடைத்தது. இதுவே முன்கூட்டி தெரிந்திருந்தால் அவர்களின் நஷ்டத்தைத் தவிர்த்திருக்க முடியும். தரமான விதை, சாகுபடி முறையில் விவசாயிகளுக்கு முறையான பயிற்சி, உரிய நேரத்தில் வங்கிக் கடன், விளைபொருளை உடனே சந்தைப்படுத்த நல்ல வசதி, மழை இல்லாமல் போனால் பாசன நீருக்கு மாற்று ஏற்பாடு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்திருந்தால் பிரச்னை இந்த அளவுக்கு முற்றியிருக்காது.
அடுத்தது பாசனத் தண்ணீர் பற்றியது. வாய்க்கால்களை வெட்டுவது, மடையை மாற்றுவது ஆகிய வேலைகளை யார் வேண்டுமானாலும் செய்யலாம்; ஆறே இல்லாத இடங்களில் தண்ணீரை எப்படிக் கொண்டுவருவது? மழைக்காலத்தில் எந்தெந்த வழிகளில் எல்லாம் நீரைச் சேமிக்கலாம் என்பதை விவசாயிகளுக்குச் சொல்லித்தந்து உடன் இருந்து அமல் செய்தால் வறட்சி காலத்தில் அது கைகொடுத்து உதவும். இவை மட்டும் அல்லாது மாவட்டத்தில் உள்ள ஜவுளி ஆலைகளும் சாகுபடியாளர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டு அவர்களுடைய விளைபொருள்களைக் கொள்முதல் செய்ய வேண்டும். இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்கும் வசதி செய்யப்பட வேண்டும். கந்துவட்டிக்காரர்களிடம் விவசாயிகள் சிக்காமல் இருக்க, எல்லா கிராமங்களுக்கும் வங்கிகளின் சேவை கிடைக்க வேண்டும்.
விவசாயிகள் வேளாண் உற்பத்தித் திறனைப் பெருக்கிக் கொள்ளவும், விளைபொருள்களுக்கு நல்ல விலையைப் பெறவும் ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனம் பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.
பஞ்சாபின் கேரி புத்தார் என்ற இடத்தில் விவசாயிகள், தொழில்துறையினர், ஆய்வு நிலையம், கல்விக்கூடம் ஆகியவற்றின் நெருங்கிய ஒத்துழைப்பால் பருத்திவிதையின் உற்பத்தித்திறன் இருமடங்காகப் பெருகியது. விவசாயிகளுக்கு நிவாரணம் தரும் திட்டங்களை யாருக்குத் தர வேண்டும் என்பதை முதலிலேயே தீர்மானித்து குறிப்பிட்ட காலவரம்புக்குள் அளிக்க வேண்டும். இதற்கு நல்ல நிர்வாக அமைப்பும், திட்ட நிறைவேறலுக்கு இன்னின்னார்தான் பொறுப்பு என்ற நிர்வாக நடைமுறையும் அவசியம். விதர்பாவில் பிரச்னை என்ன, தீர்வு என்ன என்பதை பத்திரிகைகளின் ஆய்வுக்குழுக்கள் கண்டுபிடித்து எழுத முடியும்.
போரிலும், உள்நாட்டுக் கலவரங்களிலும் இறப்பவர்களைவிட சாலை விபத்துகளிலும் பிற நெருக்கடிகளிலும் இறப்பவர் எண்ணிக்கை நாட்டில் மிக அதிகமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு இப்படி இறப்பவர்கள் அல்லது காயம்படுகிறவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை எட்டும் என்று ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த 10 லட்சம் பேரைக் காப்பாற்ற ஒருங்கிணைந்த, உதவித் திட்டம் அவசியம். ஆந்திர மாநிலத்தில் அப்படியொரு திட்டம் அற்புதமாகச் செயல்படுத்தப்படுகிறது. நெருக்கடிகால மேலாண்மை-ஆய்வு என்ற அமைப்பு ஹைதராபாதைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.
சாலை விபத்து, பிரசவ காலத்தில் தாய்க்கும், சேய்க்கும் ஏற்படும் ஆபத்துகள், கிரிமினல் நடவடிக்கைகளால் உயிர்களுக்கு ஏற்படும் ஆபத்து, வீடுகளில், தொழிற்சாலைகளில், அலுவலகங்களில் ஏற்படும் தீ விபத்து, மின்சார விபத்து, ரசாயன விபத்து, நில நடுக்கம், ஆழிப் பேரலை, மிருகங்களால் விபத்து என்று எதுவாக இருந்தாலும் தகவல் கிடைத்த 30 நிமிஷங்களுக்குள் அந்தப் பகுதிக்கு முதலுதவி ஆம்புலன்ஸ்களுடன் சென்று சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்றி, உயர் சிகிச்சைக்குத் தாமதம் இன்றி, அமைப்பின் தகவல் தொடர்பு-வாகன வசதிகளைப் பயன்படுத்தி கொண்டுபோய்ச் சேர்ப்பதுதான் இந்த முறை. இதற்கு முதல்படியே, நெருக்கடி காலத்தில் 108 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு என்ன நெருக்கடி, எந்த இடம் என்ற தகவலைச்சுருக்கமாக, தெளிவாகச் சொன்னால் போதும், மற்றவற்றை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
இந்த அமைப்பு ஏற்பட்ட பிறகு ஆந்திரத்தின் 23 மாவட்டங்களில் 380 ஆம்புலன்ஸ்கள் அவசர உதவி, மீட்புப் பணிகளில் உதவி வருகின்றன. இதுவரையில் 11,500 பேரின் உயிர் உரிய நேரத்தில் உதவிகள் அளித்து காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த சேவை 24 மணி நேரமும் வாரம் முழுவதும் கிடைப்பது இதன் தனிச்சிறப்பு. இச் சேவையைப் பிற மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதில் அரசும், தனியார் நிறுவனங்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும். பத்திரிகையாளர்கள் இதில் முக்கியத் தொடர்பாளர்களாக இருந்து சேவை புரியலாம்.
பத்திரிகை என்பது வாசகர்களுக்குத் தகவல்களையும் கல்வியையும் அளிப்பது. பத்திரிகைகள் நன்கு செயல்பட்டால் தேசம் வலுவடையும். பரபரப்பு செய்திக்கு பத்திரிகைகள் முக்கியத்துவம் தரக்கூடாது. துணிச்சலாக, உண்மையாக, உத்வேகம் ஊட்டுகிற வகையில் செய்திகளைத் தருவதுதான் உண்மையான பத்திரிகையியலாகும். அது தேசத்தின் பொருளாதார, அரசியல் வளர்ச்சிக்கு உதவும். பத்திரிகைகளால் இளைஞர்களின் மனத்தை மாற்ற முடியும் என்பதால், ஆக்கபூர்வமாகச் செயல்படுவது மிகமிக அவசியம்.
100 கோடி இந்தியர்களின் தேவையைக் கருத்தில்கொண்டு, பத்திரிகையியலுக்கான ராம்நாத் கோயங்கா விருதில் மேலும் 2 பிரிவுகளையும் தொடங்க வேண்டும். 1. ஊரக வளர்ச்சிக்கு உதவும் வகையில் செய்தி தருவதற்கும், 2. பஞ்சாயத்து ராஜ் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டதற்கும் என்று 2 விருதுகளை 2007-08 முதல் வழங்க வேண்டும்.
(ராம்நாத் கோயங்கா பெயரிலான பத்திரிகையியல் விருதுகளை வழங்கி தில்லியில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திங்கள்கிழமை ஆற்றிய உரையின் சுருக்கம்)
http://bsubra.wordpress.com/
இளையராஜா:-
“எனக்கொரு கெட்ட குணம். என்னிடம் யாராவது வந்து, “நீங்கள் இசை அமைக்கவில்லை என்றால், இந்தப் படத்தை எடுக்கமாட்டேன், இப்படியே விட்டு விடுவேன்” என்று சொன்னால், கண்டிப்பாக இசை அமைக்க ஒத்துக்கொள்ள மாட்டேன்! காரணம், “இவர்கள் எப்படி படம் எடுக்காமல் இருக்கிறார்கள், பார்ப்போமே!” என்ற எண்ணம்தான்.
இரண்டு மூன்று மாதம் காத்திருப்பார்கள். நான் இறங்கி வரமாட்டேன்.
அப்புறம், வேறு ஒருவரின் இசையில் படம் வெளிவந்து விடும்!
அப்படி வந்ததுதான் கே.பாக்யராஜின் முதல் படம் “ஒரு கை ஓசை” (இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்)
இப்படி, “நீங்கள் இசை அமைக்கவில்லை என்றால் இந்தப் படத்தை நான் எடுக்கப்போவதில்லை” என்று சொல்லி, நான் இசை அமைக்க மாட்டேன் என்று மறுத்து, வேறு ஒருவர் இசை அமைப்பில் படத்தை தயாரித்து வெளியிட்ட இருவர்:- நடிகர் பார்த்திபன் (படம் “புதிய பாதை”); அனந்த் (கே.பாலசந்தரின் உதவியாளர்). படம்: “சிகரம்.”
தீஸ்ரி மஞ்சில்
சாருசித்ரா சீனுவாசன், “தீஸ்ரி மஞ்ஜில்” என்ற இந்திப்படத்தை தமிழில் எடுக்க முடிவு செய்து, கமல் - ஸ்ரீதேவியை ஒப்பந்தம் செய்துவிட்டு என்னிடம் வந்தார். எனக்குப் படத்தைப் போட்டுக்காட்டினார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் நான் கச்சேரி நடத்திய காலத்திலேயே, இந்தப் படத்தின் பாடல்கள் அத்தனையும் மனப்பாடம். ஆர்.டி.பர்மன் அற்புதமாக இசை அமைத்திருந்தார்.
படம் முடிந்ததும், “இந்தப் பாடல்களைப்போல் என்னால் கம்போஸ் செய்ய முடியாது. வேறு யாரையாவது ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டேன்.
சில பாடல்களுக்கு இணை கிடையாது. அதுபோல் இசை அமைக்க முயற்சி செய்யக்கூடாது. ஆர்.டி.பர்மன் இசை அமைத்த அந்தப் படத்தின் பாடல்களும் அந்த வகையைச் சேர்ந்தவை.
டைரக்டர்கள்
சினிமாவுக்கு கதை சொல்வது ஒரு தனி கலை. சிலர், கதையை சொல்லத் தெரியாமல் மூன்று - நான்கு மணி நேரம் சொல்வார்கள். சிலர், கதையைப் பிரமாதமாகச் சொல்லிவிட்டு, உப்புச் சப்பு இல்லாமல் படமாக்குவார்கள்.
என்னிடம், சொல்லியதை சொல்லியவாறே படம் எடுத்த டைரக்டர்கள் இரண்டே பேர்: பாலுமகேந்திரா, மணிரத்னம்.
கதையை மிகவும் சுருக்கமாகச் சொல்லும் இயக்குனர்களில் ஸ்ரீதர் அவர்களும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களும் தனி ரகம். இருவரும் 15 நிமிடங்களுக்குள் கதை சொல்லிவிடுவார்கள்.
காதல் ஓவியம்
பாரதிராஜா அவரது “காதல் ஓவியம்” படத்தின் மீது ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தார்.
நான் மூகாம்பிகையின் தீவிர பக்தன் என்பதால், “படத்தின் நாயகன் அம்பாளின் பக்தன் என்று சொன்னால், இளையராஜா நல்ல டிïன்களை எலலாம் போட்டுத்தருவார்” என்று பாரதியிடம் உதவியாளர்களாக இருந்த மணிவண்ணனும், கலைமணியும் சொல்லியிருப்பார்கள் போலும்.
நான் அப்படத்துக்கு இசை அமைத்தேன். ஒருநாள் மாலை நேரத்தில் ஆரம்பித்த பாடல் `கம்போசிங்’ அன்றே முடிந்துவிட்டது. படத்துக்கான எட்டுப்பாடல்களும் தயாராகிவிட்டன.
படம், பின்னணி இசை சேர்ப்புக்காக வந்தபோது, அந்த படத்தின் மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. பாரதியிடம், “படம் ரிலீஸ் ஆவதற்குள் நாம் இருவரும் குருவாïர் போய் வரலாம்” என்றேன். “சரி” என்றார். வேலை சரியாக இருந்ததால், நகர முடியவில்லை.
திடீரென்று ஒருநாள் கலைமணியை பாரதி கூப்பிட்டு, “ஏய்யா! படத்திலே ஏதோ ஒன்னு குறையுதே. உனக்குத் தெரியாதா? தெரிந்தா சொல்லு!” என்றார்.
“அது ஒன்றும் இல்லே சார். கதைதான் குறையுது!” என்று கலைமணி கூற, எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். கலைமணியை பாரதி அடிக்கப்போக, அவர் தப்பி ஓடிவிட்டார்.
படம் ரிலீஸ் ஆகியது. ஒரு வாரத்தில், படப்பெட்டிகள் எல்லாம் திரும்பி வந்துவிட்டன.
பாரதி என்னிடம் வந்து, “வா, குருவாïர் போய் வரலாம்” என்றார். “படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பல்லவா போயிருக்க வேண்டும். இப்போது வேண்டாமே!” என்று கூறிவிட்டேன்.
“காதல் ஓவியம்” படம் சரியாகப் போகாததால், பாரதி மனம் சங்கடப்பட்டார். ரசிகர்கள் மீது கோபப்பட்டார்.
“பாரதி! ரசிகர்களை குறை கூறவேண்டாம். அவர்கள் எப்போதும் சரியாகவே இருப்பார்கள்” என்றேன்.
“உனக்குத் தெரியாது. இவர்களுக்கு எது வேணும் என்று எனக்குத் தெரியாதா? இவர்களுக்காக ஒரு மூன்று படி கீழே இறங்கி வந்து ஒரு படம் எடுத்துக் காட்டுகிறேன் பார்!” என்றார்.
அதற்கு நான், “யோசித்துப் பாருங்கள். 16 வயதினிலே படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்த அதே நேரத்தில், அதற்கு இணையாக விட்டலாச்சாரியாவின் “ஜெகன்மோகினி” படம் ஓடியதல்லவா? அதற்காக, பாரதிராஜா, ஜெகன்மோகினி போல படம் எடுக்கவேண்டும் என்று அர்த்தம் இல்லை. உங்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேறு. அதைவிட்டு எங்கும் போகவேண்டாம்” என்றேன்.
ஆனால் பாரதி தன் கருத்தில் உறுதியாக இருந்தார்.
ரசிகர்களுக்காகவே கீழே இறங்கி வந்து அவர் எடுத்த “வாலிபமே வா வா.” படம் ஓடவில்லை.
டைரக்டர் கங்கை அமரன்
“அலைகள் ஓய்வதில்லை” படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆன பாஸ்கர், அடுத்து ஏதாவது படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் என்னிடம் வந்தார். பஞ்சு சாரின் வீட்டில் இருதேன். அப்போது, அங்கே அமர் (கங்கை அமரன்) இருந்ததைப் பார்த்து, “அமர் டைரக்ஷனில் படத்தை எடு. படத்தின் பெயர் கோழி கூவுது’‘ என்றேன். மதுரையில் நாங்கள் நடத்திய நாடகத்தின் பெயர் அது.
நான் சொன்னதை அமர் ஏற்றுக்கொண்டு, ஒரு கதையை உருவாக்கி, பிரபுவை ஹீரோவாகப் போட்டு படம் எடுத்தான். அவன் எனக்குப் போட்டியாக இசை அமைப்பாளராக வந்துவிடக்கூடாது என்பதற்காக டைரக்ட் செய்யச் சொன்னேன் என்று டெலிவிஷன் பேட்டிகளில் அமர் சொல்வது வழக்கம்.
அவன் எனக்குப் போட்டியா, இல்லையா என்பது அவனுக்கே தெரியும்!”
http://bsubra.wordpress.com/
மரணதண்டனைக்கு எதிராக கச்சை கட்டிக்கொண்டு பல (தீவிரவாதிகளின்) மனித உரிமை, மற்றும் இடதுசாரி குழுக்கள் வலம் வருகின்றன. பொது அரங்கில் இவர்கள் வைக்கும் ஒப்பாரியின் டெசிபல்கள் மிக அதிகமாக இருக்கும். மரணதண்டனையை எதிர்க்க இவர்கள் பல்வேறு (விதண்டா) வாதங்களை முன்வைப்பார்கள். அதில் முக்கியமான வாதம் மரணதண்டனையால் குற்றம் குறைவதில்லை என்பதுதான்.
இப்போது அந்த வாதத்துக்கு ஆப்பு விழுந்திருக்கிறது. மரணதண்டனை எதிர்ப்பாளர்கள் சொல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் திருடனுக்கு தேள் கொட்டியதுபோல் திரு திரு என்று முழிக்கிறார்கள்.
அப்படி என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா?
மரனதண்டனையால் குற்றங்கள் குறைகிறதா என்ற கேள்வியை ஆராய்ந்த பல விஞ்ஞான ஆய்வுகள் "மரணதண்டனையால் குற்றங்கள் குறைகிறது" என்று சம்மட்டி அடியாக தெரிவித்துள்ளன. அதுவும் ஒன்றல்ல , இரண்டல்ல மொத்தம் ஆறு வருடங்களாக மேற் கொள்ளப்பட்ட 12 அறிவியல் ஆய்வுகளும் ஒருமுகமாக "மரணதண்டனையால் குற்றங்கள் உறுதியாக குறைகின்றன" என்று தெரிவித்துள்ளன.
அதுவும் எந்த விகிதத்தில் தெரியுமா?
கொலராடோ பல்கலைகழகத்தால் செய்யப்பட்ட ஒரு ஆய்வு "ஒவ்வொரு மரணதண்டனை தீர்ப்பும் ஐந்து கொலைகளை தடுத்து நிறுத்துகிறது. ஒவ்வொரு நிறைவேற்றப்படும் மரணதண்டனையும் மேலும் ஐந்து கொலைகளை தடுத்து நிறுத்துகிறது" என்று உறுதிபட தெரிவிக்கிறது.
இதில் ஒரு நகைமுரண் என்னவென்றால் இந்த ஆய்வை நடத்திய நசி மோகான் எனும் விஞ்ஞானி மரணதண்டனையை தீவிரமாக எதிர்ப்பவர். தனது ஆய்வு முடிவை பற்றி அவர் சொல்வதாவது
"விஞ்ஞானத்தின் முடிவு தீர்க்கமாக வெளிப்பட்டுவிட்டது. மரணதண்டனை கொலைகளை தடுக்கிறது. இந்த ஆய்வு முடிவுகள் பொய்யாக இருக்கவேண்டும் என நான் விரும்பினேன். ஆனால் உண்மை வேறுவிதமாக இருக்கிறது. நான் மரணதண்டனை எதிர்ப்பாளன் தான். ஆனால் ஆய்வு முடிவுகள் மரண தண்டனை கொலைகளை தடுக்கிறது என உறுதியாக காட்டுகிறது. நான் என்ன செய்ய முடியும்? ஆய்வு முடிவுகளை மறைக்கவா முடியும்?"
எம்ராய் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று ஒவ்வொரு மரனதண்டனையும் 18 கொலைகளை தடுக்கிரது என தெரிவிக்கிறது.மற்ற சில ஆய்வுகள் 3, 5, 14 என்ற எண்ணிக்கையை அளிக்கின்றன.
ஹூஸ்டன் பல்கலைகழக ஆய்வின்படி இல்லினாய் மாநிலத்தில் மரணதண்டனை நிறுத்திவைக்கப்பட்டது சுமார் 150 கொலைகளுக்கு தூண்டுகோலாக அமைந்தது என தெரிவிக்கிறது.அந்த தடை மட்டும் இல்லாதிருந்தால் 150 அப்பாவிகளின் உயிர்களை காப்பாற்றி இருக்கலாமாம்.
மரண தண்டனயை விரைவாக நிறைவேற்றுவது மேலும் அதிக உயிர்களை காக்கிறதாம். மரண தண்டனை கைதிக்கு, மரண தண்டனை விதிப்பதை 2.75 வருடங்கள் விரைவுபடுத்தினால் அது மேலும் ஒரு உயிர் பலியாவதை தடுக்கிறதாம்.
2005ல் அமெரிக்காவில் 16000 கொலைகளும் 60 மரனதண்டனைகளும் நிறைவேற்றப்பட்டனவாம்.
ஆக இதன் மூலம் தெரியவருவது
மரணதண்டனையை எதிர்ப்பவர்கள் உண்மையில் மேலும் 18 கொலைகள் நடக்க காரணமாகிறார்கள்.
மரணதண்டனையை ஆதரிக்கும் ஒவ்வொருவரும் உண்மையில் 18 கொலைகளை தடுக்கிறார்கள்.
கொலைகளையும், குற்றங்களையும் தடுக்க மரணதண்டனை வேண்டும். அந்த வழக்கை விரைந்து நடத்தி, அந்த செய்தியை வெளியுலகுக்கு தெரிவிப்பது உண்மையில் மேலும் பல குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கும்.பல அப்பாவிகள் பிழைப்பார்கள்.
மரண தண்டனையை எதிர்க்கும் ஒவ்வொருவரும் 18 மரணங்களுக்கு காரணமாகிறார்.
கொலைகாரனை தூக்கில் போடுகிறோமோ இல்லையோ, 18 அப்பாவிகளின் கொலைகளுக்கு காரணமாக இருக்கும் இவர்களைத்தான் முதலில் தூக்கில் போடவேண்டும்.
நன்றி: அஸோஷியேட்டட் பிரஸ்
Article:
http://holyox.blogspot.com/2007/06/299.html
புரா என்றால் நகர்ப்புற வசதிகளை கிராமப்புறங்களுக்கு கொண்டு செல்வது என்று பொருள்.பாரத குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் இந்தியா 2020 திட்டத்தை அடியொற்றி பிரதமர் மன்மோகன் சிங்கால் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தின்படி இந்தியாவின் மிக ஏழ்மையான 5000 கிராம மண்டலங்களில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டம் புரா.
வழக்கமாக இம்மாதிரி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டால் அதை அரசு ஊழியர்கள் ஸ்வாஹா செய்துவிடுவார்கள் என்பதால் புரா திட்டம் சிறுதொழில் முனைவோரினாலும் மக்களாலும், உள்ளூர் சிறுதொழில் நிறுவனங்களாலும் நிர்வகிக்கப்படுகிறது. இதன்படி தஞ்சை மாவட்டத்தில் 57 பின் தங்கிய கிராமங்களுக்கு உதவி செய்யும் பொறுப்பு பெரியார் மணியம்மை டிரஸ்டுக்கு அளிக்கப்பட்டது.
பெரியார் புரா திட்டம் என தஞ்சையில் அழைக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் தஞ்சையில் மிகவும் பிந்தங்கிய 57 கிராமங்களும் புதுக்கோட்டையில் மிகவும் பின் தங்கிய 8 கிராமங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த கிராமங்கள் அனைத்திலும் உள்ள நிலங்கள் தரிசு நிலங்கள். இதுவரை வெள்ளாமையே செய்யப்படாதவை.(http://www.periyarpura.org/about.html) இந்த கிராமங்கள் அனைத்தும் விவசாயமும், வேலை வாய்ப்பும் அற்ற பகுதிகள். மகக்ள் வறுமைக்கோட்டுக்கு கீழே உழலுகிறவர்கள். சிலர் சொல்வது போல் முப்போகமும் அரிசி விளையும் நிலத்தில் காட்டாமணக்கு பயிரிடப்படுகிறது என சொல்லப்படுவது முழுப்பொய்.
அந்த கிராமங்கள் சிலவற்றின் தொழில்களை பாருங்கள். இதுவா முப்போகம் அரிசி விளையும் பூமி? (Update: பெரியார் புரா ஏற்படுத்திய தொழில்கள் இவையா அல்லது இதற்கு முன்பே அவர்கள் இந்த தொழிலை செய்தார்களா என்பது தெரியவில்லை. தற்போது அவர்கள் செய்யும் தொழில் இது.அந்த கிராமங்கள் முழுக்க வரண்ட ஏழ்மை நிரம்பிய பூமி என்பதை சொல்லியுள்ளனர
அச்சம்பட்டி - தேங்காய் நார் உரிப்பது
பூதலூர் - செங்கல் சுடுவது
கொமாரபுரம் - மூங்கில் வெட்டுவது
பலையபட்டி - மூலிகை வளர்ப்பது
வல்லம் - சாண எரிவாயு
கிராமங்களின் முழு பட்டியலுக்கு இங்கே சொடுக்கவும் http://www.periyarpura.org/villages.html
இந்த முப்போகமும் நெல் விளையும் கிராமங்களின் புகைப்படங்களை பாருங்கள்.
இந்த தரிசு கிராமங்களில் பெரியார் புரா செய்துவரும் பணிகள் http://www.periyarpura.org/connect.html
சாலை வசதியை மேம்படுத்துதல்
சுகாதார வசதியை மேம்படுத்துதல்
மருத்துவ மையங்களை நிறுவி மருத்துவ வசதியை செய்தல்
விவசாய பொருட்கள் பற்றிய தினசரி நிலவரத்தை வழங்குதல்
கைவினைப்பொருட்கள் செய்வது பற்றி பயிற்சி அளித்தல்
சிறுதொழில் பற்றிய அறிவை புகட்டுதல்
இதுதான்யா பெரியார் புராவின் நோக்கம்.
இங்கே சோற்றுக்கே வழியின்றி சாகும் மக்களுக்கு ஏற்றுமதி மூலம் வருமானம் தரும் காட்டாமணக்கு பயிரிட பெரியார் புரா ஆலோசனை சொல்கிறது. உடனே அதற்கு அமெரிக்கனுக்கு வீரமணி மாமா வேலை பார்க்கிறார், உலகவங்கிக்கு கூட்டி கொடுக்கிறார் என பட்டம் கட்டினால் அந்த மக்கள் இருப்பதா சாவதா என நீங்களே சொல்லுங்கள். புல் பூண்டே விளையாத பூமியில் காட்டாமனக்கு போட்டு அதை ஏற்றுமதி செய்தால் தோழர்களுக்கு பொறுப்பதில்லை. அமெரிக்கனுக்கு ஏற்றுமதி ஆகிரதே என கூக்குரல் இடுகின்றனர்.
இந்த தரிசு பூமியில் ரோடும், மின்சாரமும் வரவைத்து மகக்களுக்கு சிறுதொழில், கைத்தொழில் ஆகியவற்றை கற்றுக்கொடுத்து தரிசு நிலத்தில் பயிரிடக்கூடிய பயிர் வகைகளை பயிரிட சொல்லிக்கொடுப்பது பெரியார் புராவின் நோக்கம். புல்லே முளைக்காத பூமியில் காட்டாமணக்கு போட்டு ஏற்றுமதி செய்வது அந்த மகக்ளின் சோற்றுக்குத்தானே தவிர அவர்களை கோடீஸ்வரனாக்க அல்ல. ஆனால் அப்படி செய்தால் அமெரிக்கனுக்கு நாட்டை கூட்டி கொடுப்பதாகுமாம். இந்த மண்ணில் ரோடு போட்டு, மின்சாரம் வரவைத்தால் டூரிசம் அதிகமாகிவிடுமாம். அதன்பின் அங்கே விபச்சாரம் நடக்குமாம். அதனால் வீரமணி , மாமா ஆகிவிடுவாராம்.
தலையை முட்டிக்கொள்ள குட்டிசுவர் ஏதேனும் இருந்தால் காட்டுங்கள். முட்டிக்கொள்கிறேன்.
Article:
http://holyox.blogspot.com/2007/06/307.html
"அப்துல்கலாமின் இந்தியா 2020 ஏதோ அணுகுண்டாலும், ராணுவ பலத்தாலும் அடையப்பட வேண்டிய ஒன்று என்றும் அது ஏழைகளுக்கானது அல்ல என்றும் ஒரு திட்டமிட்ட பொய் பிரச்சாரம் தொடர்ந்து நடத்தப்படுகிறது. முதலில் கலாம் சொன்ன இந்தியா 2020 என்பது என்ன என்பதை பார்ப்போம். http://presidentofindia.nic.in/scripts/republicdetail.jsp?id=5
"2020ம் ஆண்டுக்குள் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் மகக்ளின் எண்ணிக்கை பூஜ்யமாக வேண்டும். எழுதப்படிக்க தெரிந்தோர் எண்ணிக்கை 100% ஆக வேண்டும்.இந்தியாவின் மனிதவள மேம்பாட்டு குறியீடு 127லில் இருந்து 50க்கு உயரவேண்டும்.ஒவ்வொரு இந்தியனும் ஒரு பல்கலைகழக டிகிரி படிப்பது சாத்தியமாக வேண்டும்.ஈ கவர்னன்ஸ் திட்டம் மூலம் அரசாங்கத்தை ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.ஒவ்வொரு கிராமத்துக்கும் இடையறா மின்சார சப்ளை கிடைக்க வேண்டும்.ஒவ்வொரு கிராமத்துக்கும் குடிநீர் கிடைக்க வேண்டும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கழிவறை மற்றும் சுகாதாரம் கிடைக்க செய்திடல் வேண்டும்.பொறுப்பான செயல்திட்டம் மூலம் தொழிற்சாலைகளை நிறுவி நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.இந்தியாவின் மூலை முடுக்குகளில் இருக்கும் ஏழைகளுக்கும் மருத்துவ வசதி மிகக்குறைந்த செலவில் கிடைக்க செய்திடல் வேண்டும்.மேலே சொன்ன மக்கள் நல திட்டங்களை அடைந்தபின் இந்தியா உலக அமைதிக்கும் பாடுபடல் வேண்டும்.
மேலே சொன்ன திட்டங்களை அடைய ஒவ்வொரு இந்தியனும் பாடுபட வேண்டும். இதுவரை அரசு திட்டங்கள் சென்றடையாத ஏழைகளை நாம் சென்று அடைய முயலவேண்டும்.
விவசாயிகளுக்கு நபார்ட் மற்றும் பல வங்கிகள் மூலம் கடன் வழங்கி அவர்களை கடன்சுமையிலிருந்து மீட்க வேண்டும். ஆராய்ச்சியாளர்கள், அறிவாளிகள், பல்கலைகழகங்கள், தொழிற்சாலைகள் ஆகியோர் விவசாயிகளுடன் சேர்ந்து வேலை செய்து உனவு உற்பத்தி, தானியம் பதப்படுத்துதல், விவசாய உற்பத்தி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.இன்சூரன்ஸ் கம்பனிகள் மைக்ரோ கிரெடிட், பயிர் இன்சூரன்ஸ் ஆகியவற்றை விவசாயிகளுக்கு செய்து தரவேண்டும்.
கார்ப்பரேட்டுகள் கிராமப்புற மக்களுக்கு சேவை செய்வதை தமது சமுதாய கடமையாக நினைக்கவேண்டும். தொலைதொடர்பு யுகம் என்று நாம் பெருமைகொள்வது உண்மை எனில் இதுவரை அணுகப்படடாத மக்களை நாம் அணுகவேண்டும்"
இதுதான்யா கலாம் சொல்லும் இந்தியா 2020. இதில் என்னய்யா மேட்டுகுடித்தனமும் இந்துத்வமும் இருக்கிறது? இந்தியாவில் ஏழைகள் இருக்கையில் அணுகுண்டு வெடித்தார் என்று கம்யூனிஸ்டுகள் புகார் சொல்வதை கேட்டால் சிரிப்பாய்தான்யா இருக்கு. ஏதோ அவரே தனது வீட்டு பொடக்காளியில் அணுகுண்டு தயாரித்தார் என்பது போல் தான் தூஷண பிரச்சாரம் நடக்கிறது.
1946ல் ரஷ்யாவில் பட்டினிசாவுகள் நடந்துகொண்டிருந்தபோது ரஷ்யா அணுகுண்டு வெடித்தது. 1962ல் சீனாவில் அணுகுண்டு வெடித்தார்கள். அதன்பின் இந்தியா 1974ல் அணுகுண்டு வெடித்தது.அதன்பின் முழுஅளவில் 1998ல் வெடித்தது.
இந்தியா ஏழைநாடு என்பதற்காக ஆயுதமோ, ராணுவமோ இல்லாமல் இருக்க முடியுமா?இல்லை இந்தியா மேல் படை எடுக்கிறவன் தான் இந்தியா ஏழைநாடு என்பதற்காக அரிவாள், அம்புடன் படை எடுப்பானா? பக்கத்தில் சீனா அணுஆயுதம் முதல் சகல முஸ்தீபுகளுடனும் உட்கார்ந்திருக்கிறது. பக்கத்து பாகிஸ்தான் அணுஆயுதம் வைத்திருக்கிறது. ஆப்கானில் தலிபான் ஜம்மென்று உட்கார்ந்திருக்கிறது. அமெரிக்கா இந்துமாக்கடலில் உலாத்திக்கொண்டிருக்கிறது. இப்படி அவனவன் ஆயுதப்பெருக்கம் செய்துகொண்டு போக நாம் மட்டும் 1946ல் வாங்கிய கைதுப்பாக்கியையும் பயோனெட்டையும் வைத்துக்கொண்டிருக்க வேண்டுமா என்ன?
இந்தியா ராணுவத்துக்கு செலவு செய்வதை குறைக்க வைத்து அதன்பின் பாகிஸ்தானையும் சீனாவையும் நம் மேல் படை எடுக்க விடுவது நல்ல ஐடியாதான். ஆனால் அதை எல்லாம் நம்ப நம்ம ஆளுக இளிச்சவாயன் இல்லையே? என்ன செய்வது? இப்பல்லாம் மக்கள் கொஞ்சம் விவரமாதானே இருக்காங்க.
மற்றபடி கலாம் ஒரு தேசபக்தியுள்ள இந்தியர். தேச பக்தியுள்ள தமிழ்பேசும் முஸ்லிம். அது பலரது கண்களை உறுத்துகிறது போலும்:).
கலாமை வேண்டுமானால் பதவியை விட்டு துரத்தி விடலாம். கோடிக்கணக்கான பிஞ்சு நெஞ்சங்கள் மனதில் அவர் ஏற்றிவைத்த தேசபக்தி சுடரை உங்களால் என்ன செய்ய முடியும் என தெரியவில்லை:)
Article:
http://holyox.blogspot.com/2007/06/305.html
அயல் நாட்டிலிருந்து நம் நாட்டுக்கு வருவோருக்கும், அயல்நாடு சென்று திரும்புவோருக்கும் அதிர்ச்சியாகவும் அதிசயமாகவும் முதலில் கண்ணில்படுவதும், காதில் விழுவதும் நம் ஊர் வாகனங்கள் எழுப்பும் பேரிரைச்சல். நம் நாட்டில் சுமார் 5 கோடியே 89 லட்சம் வாகனங்கள் நாளும் சாலையில் ஓடுகின்றன. இவற்றுள் சுமார் 4 கோடியே 15 லட்சம் இருசக்கர வாகனங்களும் 76 லட்சம் கார்களும் 7 லட்சம் பஸ்களும் 30 லட்சம் லாரிகளும் இன்னபிற 61 லட்சம் வாகனங்களும் 33 லட்சம் கிலோமீட்டர் நீளமுள்ள நம் சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன.
நம் வண்டி ஓட்டுநர்கள் வண்டியை எடுத்தவுடன் தம் கையால் பற்றுவது ஒலிப்பான்களைத்தான், சிலர் வைத்த கையை எடுப்பதே இல்லை. சாலைகளில் செல்வோர் அனைவருக்கும் காது கிழிந்துவிடும் அளவிற்கு ஹாரன்களை விடாமல் ஒலித்துக் கொண்டிருப்பார்கள். ஒலி அளவு உலகச் சுகாதார சபை வரையறுத்துள்ள 45 டெசிபலாக க்க்ஷ இருத்தல் வேண்டும் என்ற அளவை நம் நகரங்கள் பலமடங்கு கடந்துவிட்டன. மோட்டார் வாகனங்களைக் கண்டுபிடித்து வடிவமைத்த நாடுகளில் லட்சக்கணக்கில் வாகனங்கள் ஓடினாலும், அவர்கள் ஹாரன்களை ஒலிப்பதே இல்லை. ஒலிப்பது அநாகரிகம் என்பது அவர்கள் கருத்து. வண்டியின் முன்புறமும், பின்புறமும் அமைந்துள்ள வலது, இடது புறச் சிக்னல் விளக்குகளைப் போட்டுவிட்டுத் திரும்புவதையும் முந்திச் செல்வதையும் முறைப்படச் செய்கின்றனர்.
வாகனங்கள் வழி ஒலிமாசை உண்டாக்குவதில் இந்தியா தலைமை இடம் வகிக்கிறது. மனிதர்களின் காதுகளைச் செவிபடச் செய்வதுடன் சாலைகளின் இருமருங்கிலும் உள்ள பறவைகளையும், விலங்குகளையும் தம் இருப்பிடத்தைவிட்டு வாகன இரைச்சல் விரட்டி விடுகிறது. செடிகொடிகள் இயல்பாகத் தழைப்பதைத் தடுக்கிறது. நகர்வன, ஊர்வன, பறப்பன, நடப்பன ஆகிய உயிரினங்களின் இதயத்தை ஒலிமாசு தொடர்ந்து பாதிக்கிறது. குறிப்பாக வாகனங்கள் வெளிப்படுத்தும் கார்பன் - மோனாக்ûஸடு வாழ்நாளைக் குறைத்து நாளடைவில் உயிரையே பறிக்கவல்லது.
ஒலியைப் பெருக்குவதில் வாகனங்களுடன் போட்டி போடுகின்றவை நம் அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுகள். அவர்கள் நடுவீதி மேடைகளின்மேல் முன் உரக்கக் கத்துவதை ஒலிப்பெருக்கிகள் நாலாபுறமும் உச்சஸ்தாயிலில் எடுத்துச் செல்லுகின்றன. நம்மூர்க் கோயில் திருவிழா, பூப்பு, திருமணம், வளைகாப்பு முதலான அனைத்துச் சடங்குகளிலும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளைக் கட்டி, பாடல்களைப் போட்டு, பெருத்த தொல்லையை ஏற்படுத்துகிறார்கள். உறக்கம் போகிறது; அமைதியும் போகிறது. காவல்துறையின் அனுமதி என்பது பெயருக்குத்தான்.
நம் ஜனநாயகத் தேர்தல் முறையின் அண்மைப் பிரசவம் ஆட்டோக்களில் ஒலிபெருக்கிகளைக் கட்டித் தெருவெல்லாம் அலற விடுவது, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் இந்த முறையில்தான் ஜனநாயகத்தைக் காப்பாற்றின; காப்பாற்றுகின்றன. மக்கள் இந்தச் சப்தத்தைக் கேட்டா வோட்டு போடுகிறார்கள்? அவ்வளவு அறிவு குறைந்தவர்களா அவர்கள்? ஒருக்காலும் அல்லர்.
மிகச் சப்தமாகப் பேசுவதும், மேடையில் ஒலிபெருக்கிக்கு முன் முழங்குவதும், அதை மேலும் ஒலிபெருக்கி வைத்து நாலாபுறமும் அமைதியை அழிப்பதும், தேர்வுக்குப் படிக்கின்ற குழந்தைகளைப் பற்றியோ, நோயாளிகளைப் பற்றியோ, முதியவர் பற்றியோ எந்தவித அக்கறையும் இல்லாமல் ஒலிபெருக்கிகளை அலறவிடுவதும், சுதந்திர நாட்டில் நம் உரிமைகள் ஆகிவிட்டன.
அயல்நாட்டு ஐந்தாண்டு பணியின்போது ஆப்பிரிக்கக் கண்டத்து செனகால் நாட்டில் நானும், என் குடும்பத்தினரும் ஒரு வீட்டில் தங்கியிருந்தோம். நான், என் மனைவி, ஏழே வயதான என் மகன். புதிதாக வாங்கி வீட்டில் வைத்திருந்த வானொலியையும், தொலைக்காட்சியையும் நம் ஊரைப்போல மிக உரத்து வைப்பது மகனுடைய வழக்கம். இரண்டுநாள் பார்த்தபிறகு எங்கள் வீட்டுக்குப் பின்வீட்டில் இருந்த ஓர் ஆப்பிரிக்கப் பெண்மணி எங்கள் வீட்டிற்கு வந்தார். வாயில் மணியை அடித்துவிட்டு (என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்) என்று ஃபிரெஞ்ச் மொழியில் சொல்லி, வாயிலில் நின்றவர், “”உங்கள் வீட்டில் வானொலியும், தொலைக்காட்சியும் மிக உச்சஸ்தாயில் அலறுகின்றன. அவற்றை ஒலிகுறைத்து வீட்டில் உள்ளவர் மட்டுமே கேட்கும்படியாக வைத்து ரசிக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு விடைபெற்றுவிட்டார்.
ஆப்பிரிக்க, தென்அமெரிக்கக் கண்டங்களில் உள்ள வளரும், வளரா நாடுகளில் கூடத் தேர்தலின் போது இத்தனைக் கூச்சல் இல்லை. தெரு முழக்கம் இல்லை, தெருக்கூட்டம் இல்லை. ஐரோப்பிய, அமெரிக்க ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஜனநாயக நாடுகளில் ஆர்ப்பாட்டம் எதுவுமின்றித் தேர்தல்கள் நடக்கின்றன. நம் நாட்டில் மட்டும் இந்த அளவு சப்தம் ஏன்? ஆர்ப்பாட்டம் ஏன்? இது மட்டுமா? தீபாவளிக்கு மட்டும் வெடிக்க வேண்டிய பட்டாசுகளை அரசியல்வாதிகளின் பிறந்தநாள்களின்போதும், தேர்தல் வெற்றிகளின்போதும், வெடித்துச் சப்தம் எழுப்புகிறார்கள். இச் சப்தம் மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருமா எரிச்சலை ஊட்டுமா என்பது பற்றிச் சிந்திப்பதே இல்லை.
மிகுந்த சப்தத்தைக் கேட்பதிலும், பொறுத்துப் போவதிலும் ஆர்வமும் இயல்பும் இருத்தலைப் போலக் கண் கூசும் வெளிச்சத்திலும் நமக்கு இயல்புக்கு மீறிய மோகம் இருக்கிறது. சாலைகளிலும் சந்திப்புகளிலும் அரசியல் கூட்டங்களிலும் கண்ணைக் கூசச் செய்யும் விளக்குகளைப் பொருத்துவது நம் பழக்கம். கோயில் திருவிழாக்களிலும் அப்படியே. மின்சாரப் பற்றாக்குறை உள்ள நாட்டில் வெற்று ஆர்ப்பாட்டங்களுக்காக, மின்சக்தியை வீணாக்குவது என்ன நியாயம், என்ன சமூக நீதி?
நம் நகர்ப்புறச் சுவர்களுக்கு உயிர் மட்டும் இருக்குமானால் தலையில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து அழும். அவ்வளவு சுவரொட்டிகள். சுவரொட்டிகளுக்கு மேல் சுவரொட்டிகள். அதுமட்டும்தானா? ஒரு கட்சிப்பிரமுகர் வருகிறார் என்றால் அவர் உருவம் பொறித்த பல கட்அவுட்களும் பல அடி உயரத்தில் வழிநெடுக நிறுத்தப்படுகின்றன. சாலைகளின் இருமருங்கும் தோண்டிக் குழிபறித்து வளைவுகள் அமைக்கப் பெறுகின்றன. இவற்றால் சமூக ஆரோக்கியத்தைக் குலைக்கும், தனிமனித வழிபாடு ஒருவேளை வரலாம். ஆனால் அவ்வழிபாடும் வளருகிற வேகத்தில் மறந்துவிடும். இவற்றால் ஈர்க்கப்பட்டு மக்கள் வோட்டுப் போட்டு விடுவார்களா என்ன? தமக்கோ தொகுதிக்கோ என்னென்ன செய்தார் என்று சீர்தூக்கிப் பார்க்கும் பகுத்தறிவு நம் மக்களிடம் இல்லையா என்ன? விளம்பரம் செய்யத் தொலைக்காட்சிகள் வந்துவிட்டன. வானொலிகள் வந்துவிட்டன. இவற்றைப் பொதுமக்கள் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள். இவற்றை மட்டுமே பயன்படுத்திப் பிரசாரங்களை அரசியல்கட்சிகள் அமைத்துக் கொள்ள வேண்டும். பாதிக்குப்பாதி படிக்காத மக்கள் உடைய நாட்டில் ஆடம்பர வாசகங்களை உடைய சுவரொட்டிகளை ஒட்டுவதால் காசும், காலமும் சுவர்களும்தான் வீணாகின்றன.
காதைப் பிளக்கும் சப்தமும், கண்ணைப் பறிக்கும் வெளிச்சமும், கருத்தைக் குழப்பும் விளம்பரமும், நாம் இன்னும் உரிய பக்குவத்தை அடையவில்லை என்றே காட்டுகின்றன. இவற்றை முற்றுமாக வெறுக்கும் படித்த இளைஞர்கள், பெரியவர்கள், நடுத்தரமக்கள் அறுபது சதவீதத்துக்கு மேலாக இருக்கிறார்கள். மிதமிஞ்சிய சப்தமும், வெளிச்சமும், விளம்பரமும் உரியவர்களைக் கணிசமான மக்களிடமிருந்து அந்நியப்படுத்துகின்றன; அந்நியப்படுத்தும் என்பதே உண்மை!
(கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.)
Article:
http://bsubra.wordpress.com/2007/07/16/advertisements-noise-light-pollutions/
நீரிழிவு என்கிற 'இனிப்பு நோய்' வந்தவர்களும் அரிசி உணவு தாராளமாக உண்ணலாம் என்கிற வகையில் புதிய வகை அரிசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது;
இதுபற்றி இச்செய்தியில்
'சுகர்'வந்துவிட்டாலே, கோதுமை ரொட்டி, கோதுமை தோசைதான் சாப்பாடு என்றாகி விடுகிறது.
தினசரி கோதுமை, கேழ்வரகு உணவு வகைகளையே சாப்பிடுவதால் சலித்துப் போகும் சர்க்கரை நோயாளிகள், ஒரு வேளையாவது அரிசி சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அவர்களுக்கு தற்போது ஒரு "இனிப்பான' செய்தி வந்துள்ளது.
சர்க்கரை அளவு குறைந்த "மூல்கி' அரிசி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த வகை அரிசி, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மட்டுமே விளைவிக்கப்படுகிறது.
விதை நெல்லில் இருக்கும் குளுகோஸ், கார்போஹைட்ரேட்டை நீக்கி, பின்னர் விதைக்கின்றனர். இதனால், சர்க்கரை அளவு குறைந்த நெல் விளைகிறது. இந்த "மூல்கி' அரிசிக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழகம் அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்த அரிசியை கொண்டு பிரியாணி, பிரைடு ரைஸ், புலாவ், தக்காளி சாதம், புளியோதரை, தேங்காய் சாதம், எலுமிச்சம் சாதம் என விதவிதமாக சமைத்து சாப்பிட்டாலும் சர்க்கரை அளவு கூடாமல் சீராக இருக்கிறது.
Article:
http://satrumun.blogspot.com/2007/07/blog-post_8765.html
இந்தியாவின் வான் பாதுகாப்புக்கு முழுப் பொறுப்பு வகிக்கும் பாதுகாப்புத் துறைக்கும், சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கும் இடையே தற்போது எல்லைப் பிரச்னை எழுந்துள்ளது.
இவை இரண்டும் தனித்தனித் துறைகள்தான் என்றாலும் இரண்டுக்கும் களம் (AIRSPACE) ஒன்றுதான். இமயம் முதல் இந்தியப் பெருங்கடல்வரையும், அரபிக்கடல் முதல் வங்காள விரிகுடாவரையும் பெரும்பாலான வான்பகுதி இந்திய விமானப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பகுதிகளில் பறக்கும் விமானங்கள் அனைத்தும் பாதுகாப்புத் துறையின் அனுமதி இல்லாமல் செல்ல முடியாது. இதுதவிர நாட்டில் பல்வேறு பயிற்சித் தளங்கள் உள்பட சுமார் 60 இடங்களில் தரைத் தளங்கள் விமானப்படையின்கீழ் செயல்படுகின்றன.
இந்த விமானத் தளங்கள் உள்ள பகுதியில் சிவில் விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் பல்வேறு பிரச்னைகள் எற்படுகின்றன. உதாரணமாக, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வானில் பெரும் பகுதி, தாம்பரம் விமானப் படைத்தளம் மற்றும் அரக்கோணத்தில் கடற்படையின் விமான தளம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவற்றின் எல்லைகளுக்கு அப்பால் மீதம் உள்ள வான்பகுதியை நம்பியே சென்னை விமான நிலையம் செயல்பட வேண்டிய நிலை உள்ளது. இத்தகைய வான்பகுதி எல்லைப் பிரச்னை காரணமாக சென்னைக்கு கிழக்கே புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டமே கைவிடப்பட்டது.
நாட்டில் தற்போது 13 சர்வதேச விமான நிலையங்கள் உள்பட 126 விமான நிலையங்கள் உள்ளன. நாட்டின் மொத்த வான்பகுதியில் 28 லட்சம் சதுர கடல்மைல் (நாட்டிக்கல் மைல்) மட்டுமே விமானப் போக்குவரத்துத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது தவிர விமான நிலையங்கள் இல்லாத இடங்கள் உள்பட 28 விமானப் படைத் தளங்களில் சிவில் விமானங்களுக்கென தனிப் பகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. பல்வேறு சிறிய விமான நிலையங்கள், பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு இல்லாததால் விரிவாக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டும் தற்போதைய தேவை மற்றும் எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டும் விமானப் போக்குவரத்துக்கான புதிய வரைவுக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கியது.
இதில், பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல வான்பகுதிகளை சிவில் விமானப் போக்குவரத்துக்கு அளிக்க வேண்டும். நாட்டின் வான் பகுதியில் விமானப் படையின் கட்டுப்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில அம்சங்கள் பாதுகாப்புத் துறைக்கும் விமானப் போக்குவரத்துத் துறைக்கும் இடையே வெளிப்படையான மோதலுக்கு வழிவகுத்துள்ளது.
இதுதவிர, விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேல், இந்தத் துறையின் செயலர், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவர் ஆகியோர் தொடர்ந்து வான் பகுதி தொடர்பான பிரச்னையில் பாதுகாப்புத் துறையை வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர். மத்திய அரசின் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களின் இத்தகைய வெளிப்படையான விமர்சனங்கள் பாதுகாப்புத் துறை தரப்பை ஆத்திரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி வரைவு விமானப்போக்குவரத்துக் கொள்கை தொடர்பான ஆட்சேபனைகளைப் பகிரங்கமாகத் தெரிவித்தார். விமானப்போக்குவரத்தில் பல்வேறு நிலைகளில் படிப்படியாகத் தனியார்மயத்தை ஊக்குவித்துவரும் விமானப்போக்குவரத்துத் துறையை நம்பி விதிகளை தளர்த்த முடியாது என்பதே அந்தோனியின் வாதம். பாதுகாப்புத் துறையின் எதிர்ப்பை அடுத்து விமானப் போக்குவரத்துக்கான வரைவுக் கொள்கை இறுதி வடிவம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் இரு முக்கியத் துறைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள இத்தகைய பிரச்னைக்குத் தீர்வுகாண வெளியுறவுத் துறை அமைச்சர் தலைமையில் பல்வேறு துறை அமைச்சர்கள் அடங்கிய உயர் நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. 1999-ல் ஏற்பட்ட கார்கில் சண்டைக்குப் பின்னர் வான்பகுதி மேலாண்மைக்கான ஓர் அதிகார அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டது. இத்திட்டம் முறையாக நிறைவேறாததே தற்போதைய பிரச்னைக்குக் காரணம்.
1995-ல் ரஷிய விமானங்கள் புருலியாவில் ஆயுதங்களைக் கொட்டின, 2001 செப்டம்பர் 11-ல் அமெரிக்காவில் உலக வர்த்தக மையம், ராணுவத் தலைமையகம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்த சிறிய ரக பயணி விமானங்கள் பயன்படுத்தப்பட்டது, அண்மையில் இலங்கையில் விடுதலைப்புலிகள் வான்தாக்குதலைத் தொடங்கி இருப்பது, சில பயங்கரவாத இயக்கங்கள் வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பது ஆகியவை நாட்டின் வான்பாதுகாப்பு தொடர்பான கவலையை அதிகரித்துள்ளன.
இதைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால்தான் நாட்டின் வான்பகுதி எல்லைப் பிரச்னைக்குச் சரியான தீர்வைக் காண முடியும். நாட்டின் பாதுகாப்பா, விமானப் போக்குவரத்து வளர்ச்சியா? என்றால் பாதுகாப்பான விமானப்போக்குவரத்து என்பதே அனைவரின் கருத்தாகும்.
விமானப்படை, விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குநர் அலுவலக அதிகாரிகள் அடங்கிய வான்பகுதி மேலாண்மைக்கான ஒழுங்குமுறை ஆணையத்தை ஏற்படுத்துவதே தற்போதைய பிரச்னைக்குத் தீர்வாக அமையும் என்பதே பல்வேறு தரப்பினரின் கருத்து.
Article:
http://bsubra.wordpress.com/2007/07/09/joint-management-of-airspace-defence-and-the-civil-aviation-ministry/
எனக்கு வயது 59. கடந்த 10 வருடங்களாக நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தினால் துன்பப்படுகின்றேன். சாப்பாட்டுக்கு முன்பாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 330 மி.கி./க்ப் என்ற அளவில் உள்ளது. உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் நெருப்பில் சுட்டது போல் எரிச்சல், உணர்ச்சியற்ற தன்மையுடன் மரத்துப் போய் உள்ளது. ஆண்மைக் குறைவும் மலச்சிக்கலும் உள்ளது. என் உடல் உபாதை மாற ஆயுர்வேத மருத்துவம் கூறவும்.
சர்க்கரை வியாதிக்கான சிகிச்சைமுறை இன்று நவீன ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போல ஆயுர்வேதம் கூறவில்லை. சர்க்கரை வியாதி உள்ளவர் நல்ல பலசாலியாக இருந்தால் கடுகெண்ணெய் அல்லது வேப்பெண்ணெய் அல்லது புங்கெண்ணெய் போன்றவற்றில் ஒன்றை உடலுக்குத் தகுந்தவாறு பருகச் செய்து உடலின் உட்புறத்தில் குடல் மற்றும் ரத்தக் குழாய்களில் நெய்ப்பை உருவாக்கச் செய்வார்கள். நெய்ப்பு ஏற்பட்டுள்ளதை அறிகுறிகள் மூலம் அறிந்ததும் குடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை வாந்தி மற்றும் பேதி மூலம் வெளியேற்றி உடலின் உட்புறச் சுத்தியை ஏற்படுத்துவார்கள். அதன் பிறகு தோஷநிலைகளை நன்கு அறிந்து ஆசனவாய் வழியாக மூலிகைகளைக் கொண்டு காய்ச்சப்பட்ட கஷாயத்தைச் செலுத்தி குடலைச் சுத்தமாக்குவார்கள். இந்த சிகிச்சை முறைகளால் ஏற்படும் உடல் சோர்வை நீக்க வறண்ட பிரதேசத்தைச் சார்ந்த பிராணிகளின் மாமிச சூப்பைப் பருகச் செய்து உடலுக்குத் தேவையான புஷ்டியை ஏற்படுத்துவார்கள்.
சர்க்கரை நோயால் மிகவும் மெலிந்து எந்நேரமும் உடலில் சோர்வை உணர்பவர்களுக்கு மேற்குறிப்பிட்ட சுத்தி முறைகளால் மேலும் உடல் தளர்வடையும் என்பதால் அதைச் செய்யாமல் அவர்களுக்குச் சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மருந்துகளை மட்டும் கொடுப்பார்கள். அந்த வகையில் -
நெல்லிக்காயை இடித்துப் பிழிந்த ஸ்வரஸம் 2 அவுன்ஸ்(60 மிலி), தேன் 1 அவுன்ஸ், மஞ்சள் பொடி அரை டீ ஸ்பூன் இவற்றை ஒன்றாய்க் கலக்கிக் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது மிக நல்லது. (தேன் நாக்கில் பட்டதும் இனிப்பாகத் தெரிந்தாலும் ஜீரண இறுதியில் அது காரமாக மாறுவதால் சுத்தமான தேன் சர்க்கரையை குறைக்கத்தான் செய்யும்)
உணவில் சம்பா கோதுமையை முக்கிய உணவாக அமைத்து பாகற்காய், கோவைக்காய் போன்றவற்றைப் பொரியலாகவும், புளிக்கு பதில் நெல்லி முள்ளியையும் வறுத்த உப்பையும் சேர்ப்பார்கள். நாள் முழுவதும் இனிப்பே கிடையாதா? என்ற ஏக்கத்தைத் தவிர்க்க சீனாக் கற்கண்டை உபயோகிப்பார்கள். பசு, குதிரை ஆகியவற்றின் சாணத்திலிருந்து எடுத்த பார்லி அல்லது மூங்கில் விதையின் மாவினால் அப்பம், சத்துமாகஞ்சி முதலியவற்றைத் தயாரித்து உண்ணக் கொடுப்பார்கள். சாமை, பயறு, பழைய அரிசி, எள்ளு, கடுகு, நாவல் பழம், கசப்பான கீரைகள், கடுக்காய், நெல்லிக்காய், தானிக்காய் எனப்படும் திரிபலை, தர்ப்பை நீர், தேன்கலந்த நீர் ஆகியவற்றை உணவாக ஏற்றார்கள்.
வறட்சியான பொருள்களால் உடம்பை அழுத்தித் தேய்த்தல், தேகப் பயிற்சி, இரவு கண்விழித்தல் ஆகியவற்றால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க முயற்சி மேற்கொண்டார்கள். எங்கு சென்றாலும் குடை, பாதரட்சை இன்றி நடந்தே செல்லுமாறு சர்க்கரை நோயாளியை வற்புறுத்தினார்கள்.
மேற்குறிப்பிட்ட அத்தனை வகை சிகிச்சையாலும் குறையாத சர்க்கரை வியாதியை வேங்கை, கருங்காலி வைரக் கட்டைக் கஷாயத்தில் மூழ்கி வைத்த 100 பலம் சிலாஜதுவை அதே வைரக் கட்டைக் கஷாயத்துடன் உட்கொண்டு மாமிச சூப்பைச் சாதத்துடன் உண்ணச் செய்தார்கள்.
இதன்மூலம் சர்க்கரை வியாதி மட்டுமல்ல, தைராய்டு, கேன்சர் கட்டிகள், முடிச்சு நோய், உடற்பருமன், குஷ்டம், பவுத்திரம், கிருமி, யானைக்கால் வீக்கம் போன்ற நோய்களையும் நீக்கச் செய்தார்கள்.
நிசோசீராதி தைலத்தை மேலுக்குத் தடவி வருவதால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சல் நீங்கிவிடும்.
சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதன்மூலம் ஆண்மைக் குறைவு உபாதையும் நீங்கும். நெல்லிக்காய்ச் சாறு குடிப்பதால் மலச்சிக்கல் உபாதையும் குறைந்துவிடும்.
இடிந்து கொண்டிருக்கும் ஒரு வீட்டை, கம்புகளால் முட்டுக் கொடுத்து அதைத் தாங்கிப் பிடிக்கச் செய்து வீட்டைக் காப்பதுபோல நடைப்பயிற்சி - உணவுக் கட்டுப்பாடு - மருந்து எனும் கம்புகளால் சர்க்கரை வியாதியால் இடிந்து கொண்டிருக்கும் நம் மனித உடல் மேலும் சரியாது பாதுகாக்கப்படுகிறது.
Article:
http://bsubra.wordpress.com/2007/07/09/ayurvedha-corner-prof-s-swaminathan-natural-medicines-series-how-to-overcome-diabetics/
பங்கு வர்த்தகம் செய்யும் போது அதன் உண்மையான மதிப்பு (value) என்ன என்பதே தெரியாமல் இருப்பது முட்டாள் தனம். இருந்தாலும் நிறையப் பேர் மதிப்பீடு என்னும் கோட்பாட்டையே மறந்து '10 மணிக்கு வாங்கி, 12 மணிக்கு விற்பதை' வழக்கமாகக் கொண்டுள்ளனர். 'ஆன் லைன்' டிரேடிங் என்ற கொடிய கொசுவின் வாயிலாகப் பலரையும் பாதித்திருக்கிறது இந்த நோய்.
ஒரு தொழிலில் ஈடுபடுவதற்கு (முதலிடுவதற்கு) முன், அதிலிருந்து எவ்வளவு இலாபம் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அது பெட்டிக் கடையாக இருந்தாலும் சரி; பெட்ரோல் சுத்திகரிக்கும் ஆலையாக இருந்தாலும் சரி.
A என்றொரு கம்பெனி இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதில் மொத்தம் 1000 பங்குகள் இருக்கின்றன. அந்தக் கம்பெனியின் ஆண்டு லாபம் (செலவு, கடனுக்கான வட்டி மற்றும் அரசாங்கத்திற்குச் செலுத்தும் வரி போக மீதம் கிடைக்கும் தொகை) ரூ10,000. ஆயிரம் பங்குளின் லாபம் பத்தாயிரம் என்றால், ஒரு பங்கு ஈட்டித் தந்த லாபம் எவ்வளவு? பத்து ரூபாய். அதைத் தான் EPS - Earnings per Share- என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.
"நல்ல லாபமா இருக்கே. ஒரு பங்குக்குப் பத்து ரூபாயா!!" என யாரும் வியக்க வேண்டாம். நல்ல லாபமா இல்லையா என்பதை, அதற்கு என்ன விலை கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே சொல்ல முடியும். மேலே குறிப்பிட்ட நிறுவனம் A இன் பங்கு ஒன்று ரூ.850 க்கு வியாபாரமாகி வருகிறது என்றால் அதை நீங்கள் வாங்குவீர்களா? அதாவது ஒரு ஆண்டு கழித்து 10 ரூபாய் கிடைக்க ரூ850 தரச் சம்மதிப்பீர்களா? அப்படியே செய்தாலும் அது 1.18% வருமானத்தைத் தான் ஈட்டித்தரும்.
(10 / 850) X 100 = 1.18%
இதே நிறுவனத்தின் பங்கு ரூ.120 க்கு வியாபாரமாகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போதாவது வாங்குவீர்களா? அப்படி நீங்கள் செய்தால் நீங்கள் இட்டு வைக்கும் 120 ரூபாய் முதலீடு 10 ரூபாயைச் சம்பாதிக்கும்; அதாவது 8.33%. வங்கியில் கிடைக்கும் வட்டியை விட இது அதிகமாக இருந்தால் இந்த விலையில் வாங்குவதைச் சாதகமாகவே கருதலாம்.
இந்த மாதிரியான கணக்குகளைச் சுலபமாக்க நமக்குக் கிடைத்த உபகரணம் தான் PE விகிதம். Price Earning ratio என்பதே அது. Price (விலை) க்கும் Earning (லாபம்) க்கும் உள்ள விகிதமே PE.
PE = Price / Earning அதாவது விலை/லாபம்
ஒரு ஒற்றைப் பங்கின் விலையை, அது ஈட்டித்தரும் லாபத்தால் (EPS) வகுக்கவேண்டும்.
நமது உதாரணத்தின் படி PE = 120/10 = 12
இதை எப்படியெல்லாம் சொல்கிறார்கள் பாருங்கள்.
கம்பெனி A இன் பங்கு PE விகிதம் 12 இல் வியாபாரமாகிறது.
கம்பெனி A இன் விலை அதன் லாபத்தின் 12 மடங்காக உள்ளது.
இப்படியெல்லாம் எங்காவது கேட்கவோ, படிக்கவோ நேர்ந்தால் இனி மேல் குழப்பமடையத் தேவையில்லை.
சரி.. PE விகிதத்தை எங்கனம் நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது? இதுகாறும் நாம் கொண்ட அலசலின் படி, குறைவான PE விகிதம் என்றால் நமக்கு அதிக லாபம் கிடைக்கும் சாத்தியக் கூறு அதிகமாகவும், அதிகமான PE விகிதம் என்றால் நமக்குக் குறைந்த லாபம் கிடைக்கும் சாத்தியக் கூறு அதிகமாகவும் இருப்பதை அறிகிறோம். பங்கு முதலீட்டாளர் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்களில் இது தலையாயது.
ஒரு நிறுவனத்தின் பங்குகளை அதன் PE விகிதத்தின் அடிப்படையில் மட்டுமே எவரும் வாங்குவது இல்லை. நிர்வாகத் திறமை, தொலிழின் வளர்ச்சி வாய்ப்பு, அதன் வசமிருக்கும் அசையும் & அசையாத சொத்துக்களின் மதிப்பு, ஈவுத்தொகை வரலாறு (dividend history) போன்ற பற்பல காரணிகள் கருத்தில் கொள்ளாப்பட்டே முதலீட்டு முடிவுகள் எடுக்கப் படுகின்றன.
என்ன தான் மற்ற அளவுகோள்கள் மூலம் முடிவு எடுப்பது நடைமுறையில் இருந்தாலும், PE விகிதத்தின் அடிப்படையிலான பங்கு மதிப்பீடு பற்றித் தெரியாமல் முதலீடு செய்வதென்பது, மாலைக் கண் வியாதி படைத்த கவுண்டமணி 'சின்னத்தம்பி' படத்தில் இரவில் T.V.S. 50 ஓட்டிச் செல்வதற்குச் சமம்.
வளம் வெறுவோம்.
Article:
http://panguvanigam.blogspot.com/2006/05/blog-post_11.html
உயிர் எரிசக்தி அதாவது தாவரங்கள் மூலம் பெறப்படும் எரிசக்தி, இன்று நிலவும் கச்சா எண்ணெய் எரிபொருள் நெருக்கடிக்குரிய சரியான தீர்வாகவும் பூமி வெப்பமடைதலைத் தணிக்கவல்லது என்றும் ஒரு தவறான எண்ணம் தலைதூக்கியுள்ளது.
புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணமே வல்லரசு நாடுகளின் வரம்பற்ற எரிசக்திப் பயன்பாடு. இதனால்தான் நச்சுப்புகைகளின் பசுமையக விளைவு ஏற்பட்டு ஓசோன் மண்டலம் ஓட்டையாகிறது. வல்லரசுகளான வடக்கு நாடுகளுடன் ஒப்பிடும்போது வளரும் நாடுகளின் எரிசக்திப் பயன்பாடு 10 சதத்திற்கும் குறைவுதான்.
வல்லரசுகள் தங்களின் எரிசக்திப் பயன்பாட்டின் அளவைக் குறைத்துக் கொள்வதற்கு முன்வராமல் இருக்கவே “”தாவர எரிசக்தி- உயிர் எரிசக்தி” என்ற மாயையைத் தோற்றுவித்து சுகம் பெறுகின்றன. வளரும் நாடுகளோ இந்த உயிர் எரிசக்தியை ஏற்றுமதிக்குரிய சந்தைப்பொருளாக மதித்து ஆர்வம் காட்டிவருகின்றன.
உயிர் எரிபொருள் எவை? இன்று அதிகபட்சம் உயிர் எரிசக்தியாக பயோ எத்தனால் பயன்படுகிறது. பின்னர் தாவர எண்ணெய் மூலம் பெறப்படும் பயோ டீசல். உணவுப் பொருள்களான பல்வேறு புஞ்சைத் தானியங்களின் மாவைப் புளிக்கவைத்தும், சர்க்கரைச்சோளம் என்ற பயிரின் தண்டைப் பிழிந்து சாறெடுத்தும் கரும்புச் சாற்றிலிருந்தும் பயோ எத்தனால் எடுக்கப்பட்டு அது பெட்ரோலில் கலந்து பயன்படுத்தப்படுகிறது.
உணவாகப் பயன்படக்கூடிய மக்காச் சோளமும் எத்தனாலாகிறது. சோயா மொச்சை, கடுகு, எண்ணெய்ப்பனை போன்ற எண்ணெய் வித்துப் பயிர்களும் பயோ டீசலுக்குப் பயனாகிறது. பசிபிக் தீவுகளில் தேங்காய் எண்ணெய், ஆப்பிரிக்க நாடுகளில் எண்ணெய் காட்டாமணக்கும் அடக்கம்.
தாவர எண்ணெய்களை எரிபொருளாகப் பயன்படுத்துவது புதிய விஷயமல்ல. ஆமணக்கு எண்ணெயின் பெயரே விளக்கு எண்ணெய்தான். மன்னராட்சிக் காலத்தில் இலுப்பை மர வளர்ப்புக்கு தேவதானம் (கோயில் மானியம்) வழங்கப்பட்டதைச் சோழர்காலத்துச் செப்போடுகள் கூறும்.
தீவட்டி, தெருவிளக்கு, கோயில் தீபம் எல்லாவற்றுக்கும் பயன் தர இலுப்பை மரங்கள் இருந்தன. ஏழைகளுக்கும் பழங்குடிகளுக்கும் வாழ்வளித்தன. இன்றோ இலுப்பை மரமே அரிதாகிவிட்டது.
கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இதற்கு மாற்றாகத் தாவர எண்ணெய்களைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. இதன்மூலம் ஏழை விவசாயிகளுககும் பழங்குடி மக்களுக்கும் வருமானம் கிடைக்கும். ஆனால், இந்த அடிப்படையில் மாற்று எரிசக்தி திட்டம் அணுகப்படவில்லை. கச்சா எண்ணெய் எரிபொருள்களை மிக அதிகமாகப் பயன்படுத்தும் வடக்கு நாடுகள் அற்பவிலை கொடுத்து உயிர் எரிபொருள்களை ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொண்டு தங்களுடைய நுகர்வுத் திட்டத்தில் எந்த மாற்றத்தையும் செய்யத் தயாராக இல்லை. அதேசமயம், ஏழைநாடுகளில் உள்ள பணக்காரர்கள் உலக வர்த்தகத்தில் உயிர் எரிபொருள் அங்காடியில் தங்கள் பங்கை வளர்த்துக்கொள்ளும் போட்டியில் இறங்கிவிட்டனர்.
இந்தப் போட்டா போட்டியின் விளைவுகள் அபாயகரமானவை. ஒரு மாயவலை பின்னப்படுகிறது. “” உயிரி எரிபொருள்கள் சுற்றுச்சூழலின் காவலர்கள்” என்றும் இவை பசுமையக (எழ்ங்ங்ய் ஏர்ன்ள்ங்) விளைவுகளான நச்சுப் புகைகளைக் கணிசமாகக் குறைக்கும்” என்றும் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்த மாற்று உயிர் எரிபொருள் திட்டமே வடக்கு நாடுகளின் சதித்திட்டம் என்பதை ஏழை நாடுகள் எள்ளளவும் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.
இதனால் நிகழப்போகும் அபாயங்கள் எவை?
சர்வதேச உயிர் எரிபொருள் அங்காடியில் பலியாகும் உணவுப் பயிர்களில் முக்கியமானவை மரவள்ளிக்கிழங்கு, சோயா மொச்சை, மக்காச்சோளம், மணிலாப் பயிறு, கரும்பு, எண்ணெய்ப் பனை, ரேப்சீட் என்ற கடுகுவகை போன்றவை. ஆகவே உயிர் எரிபொருள் அங்காடி வலுப்பெற்றால், உணவுப் பயிர்களின் வழங்கல் பாதிப்புறலாம். முன்பு கவனிக்கப்படாமல் இருந்த எண்ணெய் காட்டாமணக்கு, புங்கன் இன்று கவனத்தை ஈர்த்துள்ளன. ஆனால், வேம்பு, இலுப்பை, சால் உரிய கவனம் பெறவில்லை.
உயிர் எரிபொருள் உற்பத்தியில் வல்லரசுகளின் கவனம் திரும்பிவிட்டதால் விவசாய நிலம், தண்ணீர் நெருக்கடி வலுப்பெறும். இப்போது மொத்த விவசாய நிலத்தில் சுமார் 30 சதம் உயிர் எரிபொருள் உற்பத்திக்கு என்று திட்டமிடப்படுகிறது. இந்தியாவில் காட்டாமணக்கு ஜூரம் தலைக்கேறி விட்டது. தமிழ்நாட்டில் வாழை, நெல், பயிரிட்ட இடங்களில் காட்டாமணக்கு நட வங்கி உதவி, மானியம் கிட்டுகிறது. காட்டாமணக்கு புஞ்சைப் பயிர் அல்ல . வாழை, கரும்புக்குப் பாயும் நீரைவிட அதிகம் பாய்ச்சினால்தான் நிறைய விதைகள் கிட்டி நஷ்டத்தைத் தவிர்க்கலாம்.
ஆப்பிரிக்க மக்களுக்கு மக்காச்சோளம் முக்கிய உணவு. அடுத்து மரவள்ளிக்கிழங்கு மாவு. இன்று மக்காச்சோளத்தின் சர்வதேச விலை உயர்ந்துவிட்டது. உயிரி எரிபொருள் பயனுக்கு என்றே ஆப்பிரிக்கச் சோளம் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கு டாலர், யூரோ நோட்டுகளைப்பெற ஏற்றுமதி தொடங்கிவிட்டது. இதனால் உள்ளூரில் மக்காச்சோள விலை உயரும்போது மக்களின் உணவுப் பிரச்னைமட்டுமல்ல; மாடு, கோழிகளின் உணவுப் பிரச்னையும் ஏற்படும். மக்காச்சோளம் மாவு கால்நடைகளின் திட உணவும் கூட. கோழிகளுக்கும் மக்காச்சோளம் பிரதான உணவு.
எண்ணெய்ப்பனை அதிகம் விளையும் மலேசியாவும் இந்தோனேசியாவும் இணைந்து தங்களின் பாமாயில் உற்பத்தியில் 40 சதவீதத்தை பயோடீசலுக்குப் பயன்படுத்த முடிவு செய்துள்ளன. அதாவது, அமெரிக்க- ஐரோப்பிய ஏற்றுமதியால் பாமாயில் விலை உயர்ந்தால் முதல் பாதிப்பு இந்தியாவுக்கே.
ஏற்கெனவே சர்க்கரை விலை உயர்ந்துவருகிறது. உலகிலேயே கரும்புச் சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்தியாவில் சர்க்கரை மலிவாக விறகப்படவில்லை. இந்தியாவுக்கு இணையாக கரும்பு உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் பிரேசிலில் சுமார் 50 சதம் எத்தனால் உற்பத்திக்குச் செல்கிறது. கூடிய விரைவில் இந்தியாவும் பிரேசிலைப் பின்பற்றக்கூடிய வாய்ப்பு உள்ளது. பயோடீசலை விட பயோ பெட்ரோலிய எத்தனாலின் பயன்பாடு நடைமுறை சாத்தியமானது. எத்தனாலுக்குக் கரும்புச்சாறு அல்லது மாவுப்பொருள் புளித்த காடி போதும். இவை உணவு அல்லவா? மொலசஸ் என்ற சர்க்கரைப் பாகுக் கழிவும் கால்நடை உணவுக்குப் பயனாகிறது.
முக்கிய உணவுப்பொருள்களை பயோ பெட்ரோலாக மாற்றும் தொழில் வளர்ந்து வரும் சூழ்நிலையில், வருங்காலத்தில் உணவுப்பஞ்சம் ஏற்படும் என்பதுதானஅ நிதர்சன உண்மை. விளைபொருள் விலைகள் கட்டுப்படியாகாமல் நிலத்தை விற்றுக்கடனை அடைக்கும் விவசாயிகள் ஒரு கட்டத்தில் தொழிலைக் கைவிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். அடிமட்டத்து மக்கள் ரொட்டித்துண்டுக்கு அலையும் பைரவர்களாவார்கள்.
மேலைநாடுகள் விவசாயத்துக்கு மானியம் வழங்க அவரவர் நாட்டு விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்பாற்றுவதுடன், உணவு உற்பத்தியில் தன்னிறைவும் ஏற்றுமதிக்கான உபரி உற்பத்தியும் இருக்கும்படி பார்த்துக்கொள்கின்றன. இந்தியா போன்ற நாடுகள் உணவுப் பற்றாக்குறை நாடுகளாகும்போது அந்த மேலை நாடுகளை எதிர்பார்த்து வாழ வேண்டிய அபாயம் ஏற்படும்.
அடுத்த 50 வருடத்தில் நமது உணவுத்தேவை 75 சதவீதம் உயரும். உணவு உற்பத்தியைப் பாதிக்காத அளவில் உயிர் எரிபொருள் உற்பத்தியை உயர்த்துவதுதான காலத்தின் கட்டாயம். இதை முறையாக திட்டமிட்டு நமது அரசு செய்யத் தவறினால் அடுத்த வேளைச் சோறுக்கு அந்நிய நாட்டுக் கப்பலை எதிர்நோக்கும் அவல நிலைக்குத் தள்ளப்படுவோம்.
Article:
http://bsubra.wordpress.com/2007/06/28/global-warming-alternate-perspectives-due-to-farming-shortage-crisis/