Writer Charu Niveditha. 20th September 2009
On Diabetes by Dr. Muthu Chellakumar
N. Chokkan talking to Deenadayalan on AR Rahman's biography
http://www.liveleak.com/view?i=1e4_1246490858
Links are being made between the effects of drinking green tea and the "French Paradox." For years, researchers were puzzled by the fact that, despite consuming a diet rich in fat, the French have a lower incidence of heart disease than Americans. The answer was found to lie in red wine, which contains resveratrol, a polyphenol that limits the negative effects of smoking and a fatty diet. In a 1997 study, researchers from the University of Kansas determined that EGCG is twice as powerful as resveratrol, which may explain why the rate of heart disease among Japanese men is quite low, even though approximately seventy-five percent are smokers.
Posted by kumar at 2:42 AM 0 comments
Green Tea Preparation
For green tea brewing, a lower temperature 65 to 80 degrees Centigrade (150-175 degrees Fahrenheit) is recommended. Steep for about 2-3 minutes. Use 1 teaspoon of tea for every 8-12 ounces of water depending on your taste. If you use the same leaves for a second and/or more serving do it right away. Usually green tea and white tea leaves can be have up to fourth serving. If the leaves sit for more than 2 hours discard them and brew a fresh pot. Low temperature can preserve the green color, flavor, and nutrition of high-end green tea. Put tea leaves into the teapot first; pour in the medium temperature water ( or you can pour 70% of hot water first, and immediately followed by the 30% cold water at room temperature); then, leave the tea pot or tea glass open to air so that the quality preserved. Leave the tea pot open is critical to green tea/white tea preparation. Never boil/cook the green tea leaves!
டி.ஸி.புக்ஸின் 25ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு சுந்தர ராமசாமி எழுதிய கட்டுரையில் இப்பதிப்பகத்தின் தோற்றம் வளர்ச்சி, மற்றும் சமூக பண்பாட்டுத் தளத்தில் இப் பதிப்பகம் ஆற்றியுள்ள பணி குறித்து அறிந்திருக்கிறேன். அப்பதிப் பகத்திலிருந்தே இன்று எனது நாவலும் வெளி வந்திருப்பது கூடுதலான மகிழ்ச்சியைத் தரக்கூடியதாக இருக்கிறது.
இன்று வாசிப்பு என்பதை என்னுடைய அனுபவத்திலிருந்து பார்க்கவும் உங்களோடு பகிர்ந்துகொள்ளவும் எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு மகிழ்ச்சியூட்டக்கூடியதாக இருக்கிறது. என்னளவில், வாசிப்பு வெறும் அனுபவமாக மட்டுமின்றி காலத்தோடும் வாழ்க்கையோடும் இணைந்து ஒன்றாகவே எனக்குள் பதிவாகியிருக்கிறது என்று சொல்ல வேண்டும்.
வாசித்தலை பழக்கம் அல்லது ஆர்வம் அல்லது வேட்கை இப்படித் தான் நாம் புரிந்துகொண்டிருக்கிறோம் என்றாலும் என்னைப் பொறுத்தளவில் அது விடுதலையின் அடையாளம். மனித மனங்களில் நிகழும் பிறழ்வுகள், சிக்கல்கள், வாழ்க்கைமீதான பார்வைகள், குழப்பங்கள், கேள்விகள் இவற்றை அறிந்துகொள்ளவோ அறிந்து தெளியவோ அறிந்து கடந்து செல்லவோ வாசிப்பு உதவுகிறது.
இளமைப் பருவம் பல கனவுகளால் ஆனது. நாளைக்கு ஒன்றாக, அந்தக் கனவுகளுக்குத் தீனி போடக் கூடியதாகவும் வாசிப்பு இருந்திருக்கிறது. கல்லூரியும் பல்கலைக் கழகமும் செய்யாததை, அங்கும்கூட நாம் கற்றுக்கொள்ள இயலாத உலக வாழ்க்கையை மனித மனத்தின் போக்குகளை, புதிர்களை அறிமுகம் செய்யக்கூடியனவாகப் புத்தகங்கள் இருந்திருக்கின்றன.
வாசிப்பு வேறு படைத்தல் வேறு என என்னால் பிரித்துப் பார்க்க இயலவில்லை. வாசிப்பே படைப்பதற்குத் தூண்டுகோலாக இருந்திருக்கிறது. எதெல்லாம் மிகச் சிறந்த படைப்புகள் என உணர்ந்தேனோ, எதெல்லாம் என்னைப் பாதித்ததோ அப்போதெல்லாம் ஏன் நானும் இதைப் போன்றதொரு படைப்பை எழுதக் கூடாதென்கிற கேள்வி தவிர்க்கவியலாமல் எழுந்துகொண்டிருந்தது. சமூகம் உருவாக்கித் தந்த வாழ்க்கையிலிருந்து வெளி யேற வேண்டும் என்கிற வெறியும் நோயுற்ற சமூகத் தின் சலனமற்ற முகத்திரையைக் கிழித்துவிட வேண்டு மென்கிற தவிப்பும் கூடவே இருந்துகொண்டிருந்தது.
வாசிப்பு உருவாக்கிய அதிர்வுகளும் மிக முக்கியமானவை. நான் எதையெல்லாம் சரியென நம்பியிருந்தேனோ எதெல்லாம் தவறு என மதிப்பீடு வைத்திருந்தேனோ எதெல்லாம் வாழ்க்கை நியதியென பின்பற்றினேனோ அவையெல்லாவற்றையும் குலைத்துவிடும் முயற்சிகளில் சில புத்தகங்கள் இறங்கி என்னை நிலை குலையச் செய்துகொண்டிருந்தன.
எப்படிச் சிறந்த வாசிப்பைப் புத்தகங்களால் தர முடியுமோ எப்படி உன்னதமான இலக்கியங்களை அறியத் தர முடியுமோ அதைக் காட்டிலும் முக்கியமானது புத்தகங்களால் நம் நம்பிக்கைகளைக் குலைக்க முடியுமென்பது, அந்த இளம் பருவத்தில் எனக்கு ஏற்பட்ட மாபெரும் அதிர்ச்சி. வாசிப்பு என் பார்வைகளை மாற்றிக்கொண்டிருந்தது. குறிப்பாக ஒழுக்கம் சார்ந்த கலாச்சாரம் குறித்த பார்வைகள், பெண்கள் வீட்டுப்படி தாண்டக் கூடாது அந்நிய ஆண்களிடம் முகம் காட்டக்கூடாது என்கிற ஓரிடத்திலிருந்து கொண்டு ஓரினச் சேர்க்கையாளர்கள் பாலியல் தொழிலாளிகளின் நியாயங்கள் குறித்தும் என்னால் யோசிக்க முடிந்ததற்கு எனது வாசிப்புதான் காரணமாக இருந்தது.
இத்தகைய சிந்தனை மாற்றங்களோடு வாழ்ந்துகொண்டிருந்த வாழ்க்கையோடு போராடுவதும், முரண்பட்டுக் கசங்குவதும் அத்தனை எளிதாக இல்லை என்பதே உண்மை.
ஒரு கட்டத்தில் காலத்தைக் கடத்துவதற்கான ஒன்றாக இருந்த வாசிப்பு, பிந்தைய நாட்களில் வாழ்வின் ஆதாரமானதாக மாறிப் போயிருந்தது. வாசித்தலின் வழியே வாய்த்த மொழியும் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளக் கிடைத்த சிந்தனையும் சுற்றிலும் நிகழ்கிற வாழ்க்கையைப் பார்க்கும் பார்வைகளை மேலும் கூர்மையாக்கக்கூடியதாக இருந்தது.
வாசிப்பே எழுதுவதற்கான தூண்டுகோலாகவும் இருந்தது. அந்த நாட்களில் தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் பெரும்பாலானவர்களில் கையாளப்படுகிற ஒரு வடிவமாகக் கவிதை இருந்தது, இன்னும் இருந்துகொண்டிருக்கிறது.
மொழியைத் தன்னளவில் புதுப் பிக்கும் ஆற்றல் கொண்டதான கவிதை வடிவம் இயல்பாகக் கைகூடிற்று. புற உலகின் அனுபவங்களையும் நுட்பமான உணர்வுகளையும் என் கவிதைகளுக்குள்ளாகக் கொண்டுவருவது எளிதாகக் கைகூடிற்று.
தமிழில் 80கள்வரை அழகியல் சார்ந்து படைக்கப்பட்டுக்கொண்டிருந்த நவீன கவிதை பிறகு தனிமனித வாழ்வியல், உளவியல், சமூகம் சார்ந்த கவிதைகளாகத் தன் மொழியில் மர்மம் பூணத் துவங்கிற்று. 90களுக்குப் பிறகு எழுத வந்த பெண்களின் எண்ணிக்கையும் மொழியின் வெளிப்பாடும் முக்கியமானது. அத்தகைய தனித்துவமான கவிதைகளைத் துவக்கிவைத்தவையாக என் கவிதைகளே இருந்தன.
புற மற்றும் அக உலகத்தில் தான் வகிக்கும் நிலைகளை உணர்வுபூர்வ மான, வெளிப்படையான மொழியில் பதிவுசெய்யத் தொடங்கினேன். ஆணின் மதிப்பீடுகளாலான, மொழியை மறுத்து பெண் உடலின் அரசியலை கவிதைகளின் கருப் பொருளாக்கினேன். பெண் இருப்பு, ஒடுக்கப்பட்ட அவளது உடல், உணர்வுகள் அனைத்தும் பகிரங்க மாக்கப்பட்ட நிலை உருவாக என் படைப்புகள் வழிவகுத்தன. தொடர்ந்து இப்படிப்பட்ட கவிதைகளின் வழியே நவீன இலக்கிய உலகில் பெண்களின் படைப்புகள் மீதான கவனத்தைத் திருப்ப முடிந்தது.
தமது உடல் சார்ந்த மதிப்பீடுகளைப் பரிசீலித்த தமது உடலைக் கொண்டாடத் தொடங்கிய பெண்களின் படைப்புகள் தமிழ் இலக்கிய உலகின் கவனத்தையும் விமர்சனத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தன. அது உங்களுக்கும் கூடத் தெரியுமென நினைக்கிறேன்.
கடும் விமர்சனங்கள், சமூக எதிர்ப்புகளுக்கிடையே நாவலுக்கான திட்டமிடலைத் தொடங்கினேன். தேர்வு செய்த களம் என் சமூகமும் அதன் வாழ்க்கை முறையும், குறிப்பாக பெண்களின் உலகம். அதற்கான முன் தயாரிப்புக்கு வைக்கம் முகமது பஷீர், சுந்தர ராமசாமி ஆகியோரது நாவல்களும் உறுதுணையாக இருந்தன. குறிப்பாக அப்படைப்புலகம், மற்றும் சித்தரிப்புகள் அவற்றை வாசித்தலின் வழியே எனக்குக் கிடைத்த அனுபவங்கள் மிக முக்கியமானவை. ஒரு படைப்பாளியாக இன்றைக்கு உருவாவதற்கு சுதந்திரமானதொரு நபராக உணர்வதற்கு, அர்த்தமுள்ளதாக ஒரு வாழ்வை நான் வாழ்வதாகத் திருப்தி கொள்வதற்கு வாசிப்புதான் காரணமாக இருந்திருக்கிறது. நாவலின் கருவை யோசிக்கும்போதே, அது எதிர்காலத்தில் எதிர்கொள்ளப்படும் விதம் குறித்தும் ஒரு தெளிவு இருக்கவே செய்தது.
பஷீரின் நாவல்கள்தாம் எனக்கும் என் கதைக்களனை உருவாக்கித் தந்தது. எதையெல்லாம் எழுத முடியும் எப்படி எழுத முடியும், ஏன் எழுத வேண்டும் என்கிற கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் அவரது படைப்புகள் பதில் தந்தன.
பஷீர் தனது படைப்புகளில் கற்பனை சார்ந்த நிஜத்திற்கும் சுய வாழ்க்கை சார்ந்த நிஜத்திற்குமான இடைவெளியை அழித்துவிடுவார் என்று சுந்தர ராமசாமி சொல்வார். இப்படித் தான் என் படைப்புலகம் உருவாக பஷீரின் படைப்புகள் உறுதுணையாக இருந்தன. நான் எதை எழுத வேண்டுமென விரும்புகிறேனோ அதை எழுதுவதற்கான நியாயங்களை உருவாக்கித் தந்தன. அவரது படைப்புகள், ஒரே வித்தியாசம் அவர் ஆண். நாம் எப்போதுமே நமக்கான நியாயங்களை நாமே கற்பனை செய்துகொள்கிறோம். நம் வசதிக்கேற்ப, அது வாழ்க்கைக்கு எப்படி சரிவராதோ, அப்படித்தான் படைப்புகளுக்கும். நாம் உருவாக்கும் கணித முறைகள் போல எனது நாவலுக்குள் நான் கவனித்த என் சமூக நிலைகள் அத்தனையையும் கேள்விக்குட்படுத்தினேன். விமர்சித்தேன். ஒரு படைப்பாளியாக எனது பங்களிப்பு அது. அதற்கான விமர்சனங்களை, எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றாலும் எனக்கு ஒரு மனநிறைவு. நான் என் படைப்பில் சமரசங்களை உருவாக்கிக்கொள்ளவில்லை, ஒரு படைப்பாளிக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் தரக்கூடியது இதுதான்.
வாசிப்பு நம்மை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லக்கூடியதாகவும் மனித மனத்தின் கூறுகளைப் பக்குவப்படுத்தக்கூடியதாகவும் இருக்கிறது.
நாம் எதை எதையோ விடுதலை என மதிப்பீடு செய்கிறோம். அது அவரவரது மனநிலை சார்ந்தது என்றாலும், என்னளவில் வாசித்தல் மட்டுமே விடுதலையின் அடையாளம். கால ஓட்டத்தில் பின்தங்கி விடாதிருக்க வாசிப்புதான் உதவுகிறது. வாசிக்காத ஒருநாள் வாழாத ஒரு நாளாக மனத்தில் கனக்கிறது.
புத்தகங்களும் மனதும் முடிவற்றவையாக நீண்டுகொண்டிருந்தன என்று போர்ஹே எழுதுவார். நமக்கு முன்பாகப் புத்தகங்கள் நீண்டு கொண்டிருக்கின்றன, முடிவேயில்லாதபடி.
2009 ஆகஸ்டு 29இல் கொல்லத்தில் டி.சி. புக்ஸின்
35 ஆண்டு விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை
காலச்சுவடு
மின்சாரத்தைத் தொட்டால் ஷாக் அடிக்கும் என்பது தெரியும். சில வேளை மின்சார வாரியம் வழங்கும் பில்கள் கூட ஷாக் அடிக்கும். மின்சாரத்தை நாம் அதிகமாக உபயோகிக்கும் போது ஒரு மீட்டரில் அது செலவுக்கணக்கில் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் வைத்திருந்தால் இது போன்ற ஷாக் தவிர்க்கலாம். மின்சாரத்தை சிக்கனப்படுத்த சில எளிய வழிகளை கடைபிடித்தாலே போதும்.
முதலாவது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் மின்சாரவாரியம் கட்டணங்களை அளவிடும் முறை. மின்சாரம் அறவே உபயோகிக்காவிட்டாலும் குறைந்த பட்ச கட்டணம் செலுத்தியாக வேண்டும். பயனீட்டு அளவு அதிகரிக்கும் தோறும் ஒரு யூனிட்டுக்கான கட்டணம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே போகும்.
எவ்வளவு குறைவாக மின்சாரம் செலவளிக்கிறோமோ அதற்கேற்றபடி ஒரு யூனிட்டுக்கான கட்டணம் குறைவாக இருக்கும். அதற்காக வீட்டில் எல்லா விளக்குகளையும் அணைத்து போட்டுவிட்டு இருளில் இருப்பதால் எங்கேயாவது போய் முட்டிக்கொண்டு ஆஸ்பத்திரி பில் கட்ட வேண்டி வரும். பின் எப்படித்தான் மின்சாரத்தை எப்படி சிக்கனப்படுத்துவது?
சாதாரண குண்டு பல்புகள் எரியும் போது மின்சாரத்தின் பெரும்பகுதி வெப்ப சக்தியாக வீணாக வெளியிடப்படுகிறது. இது புவி வெப்பம்(Global warming) அடையவும் காரணமாகிறது. எனவே இதை ஒழித்துக்கட்டிவிட்டு குழல் விளக்குகள் (Flourescent Tube lights) அல்லது C.F.L (Compact Flourescent lights) விளக்குகள் பயன்படுத்தினால் மின்சாரம் பெருமளவு சிக்கனப் படுத்தலாம்.
குழல் விளக்குகள அதிக வெப்பம் அடைவதில்லை. ஆனால் அவற்றில் பயன் படுத்தப்படும் பாதரச வாயு நச்சுத்தன்மை வாய்ந்தது எனவே ஃபியூஸ் ஆன குழாய் விளக்குகளை உடைக்காமல் அப்புறப்படுத்த வேண்டும். ஒரு சி.எஃப்.எல். பல்பு, வழக்கமான பல்பைக் காட்டிலும் ஐந்து மடங்கு வெளிச்சத்தைத் தருகிறது. நீங்கள் 60 வாட்ஸ் சாதாரண பல்புக்கு பதிலாக 15 வாட்ஸ் சி.எஃப்.எல். பல்புகளை உபயோகித்தால், குறைந்தபட்சம் ஒரு மணிநேரத்திற்கு 45 வாட்ஸ் மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும்.மேலும் மஞ்சள் ஒளிக்கு பதில் வெள்ளை ஒளி தருகிறது. சாதாரண குழாய் விளக்குகளிலும் Ballast எனப்படும் பழைய சோக்குகளில் தாமிரம் அல்லது அலுமினிய கம்பிகள் சுற்றப்பட்டு இருக்கும்.இதிலும் உண்டாகும் மின் தடை (Resistance) காரணம் கொஞ்சம் மின்சக்தி வெப்ப சக்தியாக வீணாகிறது. இந்த சோக்குகளை மாற்றி விட்டு எலெக்ட்ரானிக் சோக்குகள் பயன் படுத்தினால் மின்சாரம் சேமிக்கலாம்.அதோடு இதற்கு ஸ்டார்ட்டர் தேவையில்லை எனவே சுவிட்ச் இட்டதும் எரியும். குறைந்த மின் அழுத்தத்திலும் வேலை செய்யும். 50 Hz துடிப்புள்ள வீட்டு மின்சாரம் எலெக்ட்ரானிக் சோக்கில் அதிக அதிர்வெண்ணுடைய மின் துடிப்ப்பாக மாற்றப்படுவதால் குழல் விளக்கு ஒளியில் FLicker இருக்காது, Eficiency யும் 20%அதிகம்.
கொஞ்சம் வெளிச்சம் குறைவாக போதும் என்ற இடங்களில் Hi Power LED விளக்குகள் உபயோகிக்கலாம். 0.6 watts மின் சக்தி மட்டுமே எடுத்து கொள்ளும் இத்தகைய Power LED (Light Emitting Diodes) யின் ஒளி 25 Watts பல்புக்கு அல்லது 11 Watts CFL விளக்கின் ஒளிக்கு சமம். மின்சாரம் இல்லாத இடங்களிலும் பாட்டரி மற்றும் சூரிய மின்கலன்கள் மூலம் இயக்கலாம். அந்த அளவு மிக குறைந்த மின் சக்தி தான் தேவை. இப்போது குழல் விளக்கிற்கு பதிலாகவும் , கார் முகப்பு விளக்கிலும் கூட LED க்கள் பயன் படுகின்றன. இதற்காகும் குறைந்த செலவை விரைவில் மின்சார சேமிப்பால் ஈட்டிவிடலாம். LED ஒளியில் வெப்பம் ஏற்படாது. இதன் Efficiency 90%. நீங்களே செய்ய LED Lamp Project
சமையல் அறையில் உணவருந்தும் இடங்களில் போதுமான வெளிச்சம் இருக்க வேண்டும். தொலைக் காட்சிப் பெட்டி இருக்கும் அறையில் மெல்லிய வெளிச்சம் போதும். அதுவும் டிவிக்கு பின்புறமிருந்து வர வேண்டும். படுக்கை அறையிலும் மெல்லிய விளக்குகள் போதும்.வீட்டில் விளக்குகள் அமைக்கும் போது சரியான இடங்களில் சரியான வெளிச்சம் தரும் விளக்குகளை அதிக நிழல் விழாமல் சிறப்பாக அமைக்க வேண்டும். கண்ணை உறுத்தும் பிரகாச விளக்குகள் தேவை இல்லை.
வெப்பம் அதிகம் வெளியிடப்படும் அறை விளக்குகளால். குளிரூட்டிகள், குளிர் பதன பெட்டிகளின் மின் செலவு அதிகரிக்கிறது.
வீட்டில் எல்லா இடங்களிலும் ஏசி அவசியமற்றது. அதிலும் ஏசி இருக்கிற அறையின் சுவர்களும் கதவுகளும் உள்ளே இருக்கும் குளிர் காற்று வெளியேறாமல் இருக்கும்படி அமைக்கப்பட வேண்டும். திறந்தே உள்ள இடங்களில் ஏசி பயனற்றது. அதிக நபர் புழங்கும் மூடப்பட்ட அறைகளில் அடைபட்டு கிடக்கும் காற்றில் சுத்தமான பிராண வாயு இருப்பதில்லை.
இந்தியாவில் ஏசி தேவையற்ற ஒன்று வீட்டை சுற்றி நல்ல மரங்களும் சாதாரண மின் விசிறியும் இருந்தாலே போதும் . தண்ணீர் காற்றில் ஆவியாவதால் காற்றை குளிரச்செய்யும் Air Cooler கள் காற்றில் ஈரப்பதம் குறைந்த இடங்களிலேயே நன்றாக வேலை செய்யும். காற்றில் ஈரம் நிறைந்த நம் நாட்டுக்கு சரிப்படாது.
ஏசி குளிர் அளவை சரியான வெப்பநிலையில் வைக்கவும். நடுங்கும் அளவு குளிர வைத்து விட்டு மூன்று போர்வை போர்த்திவிட்டு இருக்கத் தேவையில்லை. நம் உடல் சரியாக இயங்கவே அதற்குரியவெப்பம் தேவை.வெளி வெப்பநிலை அதற்கு கீழே போனால் உடலே தன் சக்தியை வெப்பமாக செலவளித்து உடலை சரியான வெப்பநிலையில் வைக்க முயலும். இதை புரிந்து கொண்டு ஏசியானாலும் மின் விசிறியானாலும் தேவைப்படும் அளவில் வெப்ப கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும்.
மின் விசிறிகளில் உள்ள பழைய மின்தடை ரெகுலேட்டர்களை மாற்றி விட்டு எலெக்ட்ரானிக் ரெகுலேட்டர்கள் உபயோகித்தால் மின்சாரம் சேமிக்கலாம். மின்தடை ரெகுலேட்டர்களில் மின் விசிறி வேகம் குறைவாக வைக்க மின் தடையை பயன் படுத்துகிறோம்.இந்த மின் தடை கொஞ்சம் மின்சாரத்தை வெப்பமாக மாற்றி வீணாக்குகிறது. எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்கள் மூலம் வீட்டு மின்சார அலையின் ஒரு பகுதியை மட்டும் பயன் படுத்தி மின் விசிறி வேகத்தை கட்டுப்படுத்துகிறது. எனவே குறைந்த வேகத்தில் சுழலும் விசிறி குறைவான சக்தியே பயன்படுத்தும்.
படுக்கை அறையில் லைட் மற்றும் ஃபேன் சுவிட்சுக்கள் படுக்கைக்கு அருகே இருப்பது நலம். நடு இரவில் குளிர் அதிகமானால் ஃபேன் வேகத்தை குறைக்கவோ நிறுத்தவோ எளிது.
சிறிய குடும்பமென்றால் ஒரே அறையில் தூங்குவதால் தனித்தனி விசிறி தேவைப்படாது. தினமும் இரவும் பகலும் ஓடும் மின் விசிறிகள் தான் மின்செலவை அதிகப்படுத்துவதில் முதலிடத்திலிருப்பது.
அதிக efficiency உடைய சில உயர்தர மின் விசிறிகள் சக்தி குறைவாக செலவளிக்கும்.
வீடுகள் அமைக்கும் போது நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் வரும்படி ஜன்னல்கள் அமைப்பதால் பகலில் மின்சாரம் பெருமளவு மிச்சப்படுத்தலாம்.
சில வீடுகளில் யாரும் பார்கிறார்களோ இல்லையோ காலை முதல் இரவு வரை டீவி ஓடிக்கொண்டிருக்கும். இதை தவிர்க்க வேண்டும். தொலைகாட்சி பார்க்கவேண்டுமென்றால் அதற்குரிய நேரம் ஒதுக்க வேண்டும். அளவாக வைத்துக்கொள்ள வேண்டும்.குடும்பத்தில் உள்ள எல்லோரும் சேர்ந்திருந்து கொஞ்ச நேரம் பார்க்கலாம். மற்றபடி எந்த வேலைகளையும் பாதிக்காமல் எஃப் எம் ரேடியோ கேட்கலாம்.
மின்சாரத்தை விரயம் செய்து ஊர்முழுக்க மின் விளக்குகளால் அலங்கரித்து காது கிழிய மைக்செட் வைத்து அலறும் பொது விழாக்களையும் வீட்டு விழாக்களையும் ஊக்குவிக்க கூடாது. விழாக்கள் எதுவானாலும் எளிமையாகவும் பயனுள்ளதாகவும் மகிழ்சியை பகிர்ந்து கொள்வதாகவும், சுற்று சூழலக்கு கேடு செய்யாமலும் இருக்க வேண்டும்.
இசை கேட்க விரும்பினால் ஒலிபெருக்கியின் அளவை குறைத்து உங்களுக்கு மட்டும் கேட்கும்படி செய்வதும் மின் சேமிப்பு மட்டுமல்ல சுற்று சூழலுக்கும் நல்லது.
குளிர் பதன பெட்டிக்குள் ஒரு மாதத்திற்கு தேவையான காய்கறிகளை போட்டு அடைதது வைக்க தேவையில்லை. அவ்வப்போது Fresh ஆக வாங்கிப் பயன்படுத்தவும்.
உங்கள் குடும்பத்துக்கு தேவையான சைசில் உள்ள ஃபிரிட்ஜ் வாங்கவும் சிறிய குடும்பத்திற்கு பெரிய ஃபிரிட்ஜ் தேவையில்லை.
தேவையற்ற பொருட்களை ஃபிரிட்ஜுக்குள் திணித்து வைக்காதீர்கள்.
ஃபிரிட்ஜை மின்சாரம் சேமிக்கிறேன் என்று அடிக்கடி அணைத்து போடாதீர்கள். தேவையான அளவு குளிர்ந்ததும் ஃபிரிட்ஜ் தானாகவே ஆஃப் ஆகிவிடும்.தேவையின்றி அடிக்கடி ஃபிரிட்ஜை திறந்து மூடாதீர்கள். உள்ளே இருக்கும் குளிர் வேளியே வெளியேறினால் அதை ஈடுகட்ட ஃபிரிட்ஜ் அதிக நேரம் இயங்கும்.ஃபிரீசருக்குள் ஐஸ் கட்டிகள் நிறைந்திருந்தால் மட்டும் கொஞ்ச நேரம் அணைத்துப் போடவும்.
அவசரம் இல்லையெனில் வாஷிங் மெஷினில் ட்ரையர் பயன் படுத்துவதை தவிர்த்து துணிகளை கொடியில் உலர்த்தலாம்.
அதிகம் கசங்காத நல்ல ரக துணிகள் குறைவாக இஸ்திரி செய்தால் போதும். டீ ஷர்ட்,பனியன்கள் போன்றவை மூலம் இஸ்திரியில் மின் சேமிக்கலாம். அடிக்கடி இஸ்திரி போடுவதை தவிர்த்து மொத்தமாக ஒரே நேரம் இஸ்திரி போடுவது நல்லது.
மின்சார அடுப்பில் சாதாரண நிக்ரோம் கம்பியிலான ஹீட்டிங் எலிமென்ட் உள்ள அடுப்பு, மின்சார குக்கர் அதிக மின் விரயம் செய்யக்கூடியதும் ஆபத்தானதும் கூட. அதற்கு பதிலாக இன்டக்சன் அடுப்பு பயன் படுத்தலாம். இதில் அடுப்பு சூடாவதில்லை. அதில் வைக்கப்பட்ட இரும்பு, ஸ்டீல் பாத்திரம் மட்டுமே சூடாவதால் இதன் Eficiency மற்றும் பாதுகாப்பும் அதிகம். இது மின்சாரத்தை செலவு செய்தாலும் சமையல் Gas ஐ சேமிக்கிறது. மைக்ரோ வேவ் அடுப்பு பாத்திரத்தை கூட சூடாக்காமல் உணவை நேரடியாக சூடாக்குவதால் அதன் efficiency யும் அதிகம் என்றாலும் இந்திய சமையலுக்கு அதன் பயன்பாடு சற்று குறைவே.
வாட்டர் ஹீட்டர் அதிக சக்தி விழுங்கக்கூடியது. தேவையின்றி பயன் படுத்த வேண்டாம்.
சூரிய சக்தியை பயன்படுத்தி, தண்ணீர் சூடாக்கலாம், தண்ணீர் சுத்தீகரிக்கலாம்,சமையல் செய்யலாம்,மின்சாரம் பெறலாம், விளக்குகள் எரிக்கலாம்.
தண்ணீரை சிக்கனமாக செலவளிப்பதன் மூலம் அடிக்கடி நிலத்தடி நீரை டாங்கிற்கு பம்ப் செய்ய வேண்டிவராது மின்சாரம் சிக்கனமாகும்.
காற்றின் உதவியால் இயங்கும் பம்ப் அமைத்து நிலத்தடி நீரை மேலே கொண்டு வரலாம்.
பழைய CRT (Cathode Ray Tube) டைப் டீவி,மானிட்டர் ஆகியவற்றுக்கு விடுதலை கொடுத்து புதிய LCD (Liquid Crystal Display) டைப் டிவி ,மானிடருக்கு மாறுங்கள். மின்சாரத்தை பெருமளவு சேமிக்கலாம். X-Ray போன்ற ஆபத்தான Radiation பிரச்சனைகளும் இல்லை. விலை கொஞ்சம் அதிகமானாலும் இன்னும் புதிய LED(Light emitting DIode) வகை டிவி,மானிட்டர்கள் LCD மானிட்டர்களை விட பல மடங்கு குறைந்த மின்சக்தியில் இயங்க வல்லது.
ஒரு வீட்டில் ஒவ்வொரு அறைக்கும் டிவி தேவையில்லை.குறிப்பாக படுக்கை அறையில் தேவையில்லை.
அறையின் சைசுக்கு ஏற்ற டிவி வாங்கவும். பெரிய ஹாலுக்கு தான் பெரிய டிவி. சின்ன அறைக்கு சின்ன டிவி போதும். சைசுக்கு ஏற்ப மின் செலவு அதிகரிக்கும்.
கணியை தேவைப்படும் போது மட்டும் பயன் படுத்தவும்.
நீண்ட நேரம் கழித்து தான் மீண்டும் உபயோகப்படுத்துவோம் என்றால் டிவி,டிஷ் ரிசீவர்,கம்பியூட்டர்,டி.வீ.டி பிளேயர் போன்றவற்றை Stand-by யில் வைக்காமல் பவர் ஆஃப் செய்து விடவும்.
தேவைப்படும் இடங்களில் தேவைப்படும் நேரம் மட்டும் விளக்குகள், ஃபேன்கள் பயன் படுத்த வேண்டும்.
மின்சாரத்தில் இயங்கும் எந்த பொருளும் அது மின்சாரத்தை சிக்கனமாக பயன் படுத்தக் கூடியது தானா என பார்த்து வாங்க வேண்டும்.
எல்லா பொருட்களிலும் அதன் மின் செலவை Watts அளவில் குறிப்பிட்டிருப்பர்கள். அதை படித்து புரிந்து கொள்ள வேண்டும் ஒரு Watts என்பது ஒரு மணி நேரம் அது செலவளிக்கும் மின்சக்தியின் அளவு. எந்த கருவி எவ்வளவு சக்தி செலவளிக்கும் என இங்கே தெரிந்து கொள்ளலாம்.
ஆதாரம்; http://www.nidur.info/index.php?option=com_content&view=article&catid=41%3A2008-07-26-14-16-23&id=973%3A2009-09-07-12-34-18&Itemid=65
1. காஞ்சனை - புதுமைபித்தன்
2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்- புதுமைபித்தன்
3. செல்லம்மாள் - புதுமைபித்தன்
4. அழியாச்சுடர் -மௌனி
5. பிரபஞ்ச கானம் - மௌனி
6. விடியுமா - கு.ப.ரா
7. கனகாம்பரம் -கு.ப.ரா
8. நட்சத்திர குழந்தைகள் -பி. எஸ். ராமையா
9. ஞானப்பால் - பிச்சமூர்த்தி
10. பஞ்சத்து ஆண்டி - தி.ஜானகிராமன்
11. பாயசம் - தி.ஜானகிராமன்
12. ராஜா வந்திருக்கிறார் - கு. அழகிரிசாமி
13. அன்பளிப்பு - கு. அழகிரிசாமி
14. இருவர் கண்ட ஒரே கனவு ? கு. அழகிரிசாமி
15. கோமதி - கி. ராஜநாராயணன்
16. கன்னிமை - கி.ராஜநாராயணன்
17. கதவு. கி.ராஜநாராயணன்
18. பிரசாதம் -சுந்தர ராமசாமி
19. ரத்னாபாயின் ஆங்கிலம் -சுந்தர ராமசாமி
20. விகாசம் - சுந்தர ராமசாமி
21. பச்சை கனவு -லா.ச.ராமாமிருதம்
22. பாற்கடல் -லா.ச.ராமாமிருதம்
23. ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்
24. புலிக்கலைஞன் -அசோகமித்ரன்
25. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்ரன்
26. பிரயாணம் - அசோகமித்ரன்
27. குருபீடம் - ஜெயகாந்தன்
28. முன்நிலவும் பின்பனியும் - ஜெயகாந்தன்
29. அக்னிபிரவேசம் -ஜெயகாந்தன்
30. தாலியில் பூச்சூடியவர்கள் - பா.ஜெயபிரகாசம்
31. காடன் கண்டது - பிரமீள்
32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் - ஆதவன்
33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்
34. பைத்தியக்கார பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்
35. மகாராஜாவின் ரயில்வண்டி - அ. முத்துலிங்கம்
36. நீர்மை - ந.முத்துசாமி
37. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை
38. காட்டிலே ஒரு மான் -அம்பை
39. எஸ்தர் - வண்ணநிலவன்
40. மிருகம் - வண்ணநிலவன்
41. பலாப்பழம் - வண்ணநிலவன்
42. சாமியார் ஜ?97;ிற்கு போகிறார் - சம்பத்
43. புற்றில் உறையும் பாம்புகள் - ராஜேந்திரசோழன்
44. தனுமை - வண்ணதாசன்
45. நிலை - வண்ணதாசன்
46. நாயனம் - ஆ.மாதவன்
47. நகரம் -சுஜாதா
48. பிலிமோஸ்தவ் -சுஜாதா
49. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி
50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர் - ஜி. நாகராஜன்
51. ஒடிய கால்கள் - ஜி.நாகராஜன்
52. தங்க ஒரு - கிருஷ்ணன் நம்பி
53. மருமகள்வாக்கு - கிருஷ்ணன் நம்பி
54. ரீதி - பூமணி
55. இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்
56. அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்
57. மரி எனும் ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்
58. சோகவனம்- சோ.தர்மன்
59. இறகுகளும் பாறைகளும் -மாலன்
60. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி
61. முங்கில் குருத்து - திலீப்குமார்
62. கடிதம் - திலீப்குமார்
63. மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார இந்திரஜித்
64. சாசனம் - கந்தர்வன்
65. மேபல் -தஞ்சை பிரகாஷ்
66. அரசனின் வருகை - உமா வரதராஜன்
67. நுகம் - எக்பர்ட் சச்சிதானந்தம்
68. முள் - சாரு நிவேதிதா
69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் - சுப்ரபாரதி மணியன்
70. வனம்மாள் -அழகிய பெரியவன்
71. கனவுக்கதை - சார்வாகன்
72. ஆண்மை - எஸ்பொ.
73. நீக்கல்கள் - சாந்தன்
74. மூன்று நகரங்களின் கதை -கலாமோகன்
75. அந்நியர்கள் - சூடாமணி
76. சித்தி - மா. அரங்கநாதன்.
77. புயல் - கோபி கிருஷ்ணன்
78. மதினிமார்கள் கதை - கோணங்கி
79. கறுப்பு ரயில் - கோணங்கி
80. வெயிலோடு போயி - தமிழ்செல்வன்
81. பத்மவியூகம் - ஜெயமோகன்
82. பாடலிபுத்திரம் - ஜெயமோகன்
83. ராஜன் மகள் - பா.வெங்கடேசன்
84. தாவரங்களின் உரையாடல் - எஸ்.ராமகிருஷ்ணன்
85. புலிக்கட்டம் - எஸ்.ராமகிருஷ்ணன்
86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் -வேல.ராமமூர்த்தி
87. ஒரு திருணையின் பூர்வீகம் -சுயம்புலிங்கம்
88. விளிம்பின் காலம் - பாவண்ணன்.
89. காசி - பாதசாரி
90. சிறுமி கொண்டு வந்த மலர் - விமாலதித்த மாமல்லன்
91. மூன்று பெர்நார்கள் - பிரேம் ரமேஷ்
92. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி
93. வேட்டை - யூமா வாசுகி
94. நீர்விளையாட்டு - பெருமாள் முருகன்
95. அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி
96. கண்ணியத்தின் காவலர்கள் - திசேரா
97. ஹார்மோனியம் - செழியன்
98. தம்பி - கௌதம சித்தார்த்தன்
99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா
100. பூனைகள் இல்லாத வீடு - சந்திரா
****

தமிழ் வலையுலகில் தவிர்க்கமுடியாத திரட்டியான தமிழிஷ் இப்போது எங்கேயும் எப்போதும்.
ஆம். உங்கள் அலைபேசியில் இணைய இணைப்பு இருந்தால், அதன் மூலம் கீழ்வரும் சுட்டியை திறந்தால், தமிழிஷ் உங்கள் அலைபேசிக்கு தகுந்தபடி மாற்றப்பட்டு திறக்கும். பிரபல இடுகைகள், தொடரும் இடுகைகள், சூடான செய்திகள் ஆகியவனவற்றை பார்வையிடலாம். உங்கள் பயனர் கணக்கில் நுழைந்து, வாக்களிக்கலாம். புதிய இடுகைகளை இணைக்கலாம்.
தமிழிஷ் அலைபேசி இணைய தள சுட்டி : http://m.tamilish.com
தமிழிஷ் அலைபேசிக்கான ஓபெரா மினி உலாவியை பரிந்துரைக்கிறது.
அலைபேசிக்கான ஓபேரா மினி இணைய உலாவியின் சுட்டி : http://www.opera.com/mini/
ஒபேரா மினி இணைய உலாவியில் தமிழ் எழுத்துருக்கள் தடை இன்றி தெரிய ஒபேரா மினியில் “opera:config” பக்கத்தை திறந்து கொண்டு “Use bitmap fonts for complex scripts menu” என்பதனை enable செய்து கொள்ளுங்கள்.
தமிழிஷின் அலைபேசி வடிவம் எளிதான முறையில் விரைவில் திறக்கும் வண்ணம் வடிவமைக்க பட்டு உள்ளது. வழக்கமான தமிழிஷ் வடிவமைப்பிற்கு திரும்ப “Switch to Standard View” என்பதனை கிளிக் செய்யவும்.
இது குறித்து மேல் விவரங்கள் தேவை எனில் தொடர்புகொள்ளவேண்டிய மின் அஞ்சல் support@tamilish.com
..
தமிழிஷ் பேஸ்புக் http://www.facebook.com/profile.php?id=100000171041009&ref=profile
தமிழிஷ் ஆர்குட் இணைய குழுமம் http://www.orkut.com/Main#Community?cmm=93538350
தமிழிஷ் சூடான செய்திகள் ட்விட்டரில் http://twitter.com/tamilishseithi
அலெக்ஸா தரவரிசை http://www.alexa.com/siteinfo/tamilish.com
தமிழிஷ் கூகிள் சானல் http://labs.google.co.in/smschannels/subscribe/TamilishTamilHotNews
தமிழிஷ் அலைபேசி இணைய தள சுட்டி : http://m.tamilish.com

Found abundantly in India almost through the year, this fruit is a nutritional goldmine. It is considered an exotic tropical treat in most countries. No wonder Christopher Columbus called it ‘the fruit of the angels’.
Having papaya in your breakfast provides the required daily levels of ACE vitamins, giving you antioxidant protection. The hearty dose of folic acid keeps your arteries in good shape. The fibre-rich papaya helps keep your cholesterol levels down. Enzymes like papain and chemopapain in papaya are believed to have anti-inflammatory effects.