அரேபியாவைப் போல அத்தனை வறண்ட பூமியல்ல சாத்தான்குளம்! தேரிக்காட்டில் நூற்றாண்டுகளாக முருங்கையும், தென்னையும், முந்திரியும் விளைந்து வருகின்றன. பிரச்சினைகளின்றி வாழ்க்கையை நடத்த அரேபியாவின் ஒட்டகங்களைப் போல அவை இன்றுவரை உதவியும் வந்திருக்கின்றன. இருந்தாலும், இன்றைய தேரிக்காட்டு மக்கள் அரேபியாவின் மூதாதைகளைப் போல அத்தனை ஏழைகளல்லர்!
1908 ஆம் ஆண்டு அரேபியாவில் பெட்ரோல் இருப்பது கண்டறியப்பட்டது. சாத்தான் குளத்தைப் போலவே அந்தக் கண்டுபிடிப்பை அம்மக்கள் முதலில் கண்டு கொள்ளவில்லைதான். 1930-களில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பெட்ரோல் கிணறுகளைத் தோண்ட படையெடுத்தபோது மக்கள் சுதாரித்துக் கொண்டார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகப் பொருளாதாரத்தையே தீர்மாணிக்கும் அளவிற்கு அரேபியாவின் பெட்ரோல் வளம் வளர்ந்தது. உலக வல்லரசுகள் இன்றுவரை இந்தப் பகுதியில் உள்ள நாடுகளைத் தம் ஆளுமையின் கீழ் வைத்துக்கொள்ள தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஈராக்கை ஆக்கிரமித்து அந்நாட்டின் மக்களை அமெரிக்க அரசு இன்றளவும் துவம்சம் செய்து வருவது அங்கிருக்கும் பெட்ரோல் வளத்திற்காகத்தான் என்பதை பிறந்த குழந்தையும் அறியும்.
பாலைக் காட்டிலும் வெண்மை நிறம் கொண்டது டைட்டானியம். இந்தத் கனிமத்தை 1791 ஆம் ஆண்டில் மனித இனம் முதன்முதலாக அறிந்து கொண்டது. 1795 ஆம் ஆண்டில் இதற்கு “டைட்டானியம்” என்ற பெயரை அது சூட்டியது. எனினும் அதனை சுத்தமான உலோகமாக மாற்றக் கற்றுக் கொண்டது என்னவோ 1910 ஆம் ஆண்டில்தான்! இல்மனைட் மற்றும் ரூட்டைல் என்ற கனம் கூடிய கனிமங்களில் இருந்து டைட்டானியத்தைப் பிரித்தெடுக்கும் வழிமுறைகள் இதன் பின்னரே கண்டறியப் பட்டன. 1946 ஆம் ஆண்டு வரையிலுமே டைட்டானியத்தை பரிசோதனைக் கூடங்களால் மட்டுமே உருவாக்க முடிந்தது. அந்த வருடத்தில்தான் டைட்டானிய உலோகத்தினை பெரிய அளவில் உருவாக்க முடியும் என்பதைக் “கிரால்” என்பவர் கண்டு பிடித்தார். அவரால் முன்மொழியப்பட்ட அந்த முறை இன்றுவரை கையாளப்பட்டு வருகிறது.
ஆங்கிலேய அரசினருக்குக் கீழிருந்த “இந்திய நிலவியல் துறை”க்குத் தென்னிந்தியாவின் “தேரி”யிலும், கடற்கரைகளில் உள்ள “கருமணலிலும்” இல்மனைட், ரூட்டைல், மோனசைட் போன்ற “கனத்த” கனிமங்கள் இருப்பது தெரிந்து தான் இருந்தது. இருப்பினும் அன்றைய உலக சந்தையில் அவற்றிற்கு மதிப்பில்லை. எனவே இந்தக் கனிமங்களை வெள்ளையர்கள் கொள்ளையடிக்காமல் நம்மிடமே விட்டுச் சென்று விட்டார்கள்.
மற்ற உலோகங்களைக் காட்டிலும் டைட்டானியம் எடை குறைந்தது. அதே நேரத்தில் எஃக்கைக் காட்டிலும் உறுதி மிக்கது. எந்த உலோகத்துடனும் எளிதில் சேரும் சிறந்த தன்மையையும் கொண்டது. இந்தத் தன்மைகள் சோவியத் ஒன்றியத்தின் விஞ்ஞானிகளைக் கவர்ந்திழுத்தன. தம் நீர்மூழ்கிக் கப்பல்களில் இந்த உலோகத்தினை அவர்கள் பெரிதளவில் உபயோகப்படுத்தத் தொடங்கினர். இதுவே டைட்டானியத்தின் புகழை 1950--60-களில் எட்டுத்திக்கும் பரவச் செய்ததது. சோவியத் விஞ்ஞானிகளின் போக்கைக் “கன்னம்” வைத்து அறிந்து கொண்ட அமெரிக்க அரசு துடித்துதான் போனது. இருப்பினும் உடனடியாக சுதாரித்தும் கொண்டது. டைட்டானிய உலோகத்தை “இராணுவ ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த உலோகம்” என்று அறிவித்து, அதனை சேமித்து வைக்கும் பணியில் உடனடியாக ஈடுபடத் தொடங்கியது. தான் உருவாக்கும் போர் விமானங்களில் மிக அதிக அளவில் டைட்டானிய உலோகத்தினை உபயோகிப்பது என்ற முடிவை எடுத்தது.
மேற்கூறிய தன்மைகளே டைட்டானியக் கனிமத்தின் தீராப் புகழுக்குக் காரணம். என்றாலும் கூட, இன்றைய தேதியில் மனித இனத்தை அதன் அப்பழுக்கற்ற வெண்மை நிறமே அதிகம் கவர்ந்திழுத்திருக்கிறது. உலகில் உற்பத்தி செய்யப்படும் டைட்டானியக் கனிமத்தில் 95% இந்த வெண்மை நிறத்திற்காகத்தான் உபயோகப்படுத்தப்படுகிறது என்றால் மிகையில்லை!
டைட்டானியம் கனிமம் இல்லையேல் வெள்ளை பெயிண்ட்,, வெள்ளைக் காகிதம், (அ.இ.அ.தி.மு.க-வால் கண்டுபிடிக்கப்பட்டு பிறகு தமிழ்நாடு அரசியல்வாதிகள் அனைவரையும் தொற்றிக் கொண்ட “அரசியல்வாதி வெள்ளை யூனிபார்ம்” தைக்கத் தேவையான) வெள்ளைத் துணி, வெள்ளை பிளாஸ்டிக், பற்பசை, சலவைப் பவுடர், சூயிங்கம் போன்றவை இல்லை என்று சொல்லும் அளவுக்கு அதன் வெண்மை நம்முடன் இரண்டறக் கலந்து போயிருக்கிறது.
இந்தக் கவர்ச்சியே ரத்தன் டாட்டாவை சாத்தான்குளத் தேரியை நோக்கிப் பாய்ந்தோடி வரச் செய்தது.
குட்டம், நவ்வலடி கடற்கரை மணலிலும், சாத்தான் குனத்தின் தேரிக் காட்டிலும் மேற்கூறிய கனிமங்கள் பெரிதளவில் உள்ளன என்பதை 1980-களில் இருந்து கல்லூரி ஆய்வாளர்கள் பலரால் செய்யப்பட்ட ஆய்வுகள் தெரிவித்தன. 1989 ஆம் ஆண்டில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்தின் திசையன்விளை நகரத்தில் வி.வி.மினரல்ஸ் என்றொரு நிறுவனம் இயங்கத் தொடங்கியது. குட்டம், நவ்வலடிப் பகுதிகளில் கடற்கரைக் கருமணலுக்காக எப்பேற்பட்ட இழி செயலையும் செய்ய அது துணிந்தது.
கடலை அம்மையாக வணங்கும் மீனவ மக்கள் அந்த நிறுவனத்தின் கொடூர லாபப் பசியின் துவம்சத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். அரசியல் செல்வாக்கு வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திடம் இருந்தமையால் ஏழை மீனவர்களால் அநீதியைத் தின்பதைத் தவிர வேறொன்றையும் செய்ய முடியவில்லை. நிறுவனத்தின் அடாவடி ஆட்டம் இன்று ஆண்டொன்றுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் டன் இல்மனைட் கனிமத்தை உற்பத்தி செய்யும் “மதிப்பு மிக்க” நிறுவனமாக அதை “உயர்த்தியிருக்கிறது!”
1998 ஆம் ஆண்டில் இந்தியக் “கனிம மணல்” தொழிலில் உலக முதலாளிகள் எவரும் ஈடுபடலாம் என்று மத்திய அரசு அறிவித்த போதுதான் டாட்டாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. டூ பாண்ட் போன்ற பகாசுர டைட்டானிய வெள்ளை நிறுவனங்கள் வருவதற்கு முன்பு தான் முந்திக் கொள்ள வேண்டும் என்று உடனடியாக நினைத்தார் ரத்தன் டாட்டா. 2000 ஆம் ஆண்டில் தேரி மணலைத் தோண்டுவதற்கான அப்ளிக்கேஷனை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பினார். இருப்பினும் இரண்டு வருடங்களுக்குப் பிறகே அவருக்கு பதில் கிடைத்தது. சாத்தான்குளத்தை சுற்றியுள்ள 19,768 ஏக்கர் (80 சதுர கிலோ மீட்டர்) தேரி நிலத்தில் உள்ள மணலைத் தோண்டுவதற்கும், மணலில் உள்ள கனிமங்களைப் பிரித்தெடுப்பதற்கும், பிரித்தெடுத்த கனிமங்களைக் கூடுதல் மதிப்புள்ள பொருட்களாக மாற்றுவதற்குமான “உத்தேச” உரிமத்திற்கு அவர் விண்ணப்பித்திருந்தார். இருப்பினும் 2002 ஆம் ஆண்டு ஜீன் 27 ஆம் தேதியன்று இதில் சுமார் 25%-ஆன 5000 ஏக்கர் நிலத்திற்கான “உத்தேச உரிமத்தை” வழங்கவே தமிழ்நாடு அரசு முன்வந்திருந்தது. வேறு வழியின்றி இந்த உரிமத்திற்கான ஒப்பந்தத்தில் ரத்தன் கையெழுத்திட்டார்.
கவலை வெகு நேரம் நீடிக்கவில்லை. தேரியின் சிவந்த நிறம் ரத்தனை சிலிர்க்க வைத்தது. மும்பையின் குளிரூட்டப்பட்ட அலுவலகங்களால் கொடுக்க முடியாத பேரானந்தத்தை சாத்தான்குளத்துத் தேரியின் வறண்ட காற்று அவருக்கு அளித்தது. உப்பு முதல் புல்டோசர் வரை முக்கித் திணறி வெள்ளைக்கார ஆட்சியில் இருந்து உற்பத்தி செய்து ஈட்டிய லாபத்தை சில வருடங்களுக்குள்ளேயே இந்தத் தேரியிலிருந்து கறந்துவிட முடியும் என்ற கனவுகள் அவரை ஆக்கிரமிக்கத் தொடங்கின.
சுட்டுவிரல் ஆட்டத்தில் அனைத்தும் நடந்தேறின. இந்திய அணுசக்தித் துறையைத் துவங்கிய டாக்டர்.ஹோமி பாபாவை 1944 ஆம் ஆண்டில் இந்தியப் பிரமுகராக உருவாக்கியதே ரத்தனின் தாத்தா சர்.தோராப்ஜி டாட்டா அவர்களின் அறக்கட்டளைதான் அல்லவா? தேரியைப் பரிசோதிக்கத் தேவையான அணுசக்தித் துறையின் “சான்றிதழ்” கிடைப்பதில் இம்மியும் சிரமமிருக்கவில்லை. காடுகள் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதியும் உடனடியாகக் கிடைத்தது.
தேரியின் வளத்தைப் பரிசோதிக்க உலக நிபுணர்கள் ஓடோடி வந்தார்கள். பின்லாந்து நாட்டின் ஒளட்டோகும்பு, அமெரிக்காவின் பின்காக் -ஆலன்-ஹோல்ட், இந்தியாவின் எல்&டி நிறுவனங்களில் இருந்து வந்த அந்த வெள்ளை நிபுணர்கள் இரவு பகல் பாராது தம் பரிசோதனைகளை நடத்தினர். கிடைக்கும் கனிமங்களை இனம் வாரியாகப் பிரிப்பதற்கும், மதிப்பு கூட்டுவதற்கும் தேவையான திட்டங்களைத் தீட்ட ஆஸ்திரேலிய நாட்டின் ஜிஞீவிமி, இந்தியாவின் தஸ்தூர்கோ நிறுவனங்களை ரத்தன் கேட்டுக் கொண்டார்.
தேரியின் பரிசோதனைக்காக செலவிட்ட 15 கோடி ரூபாய் மன நிறைவை அளிப்பதாக அமைந்தது. நிம்மதியில் பெருமூச்சு விட்டார் ரத்தன்.
ஆடு புலி ஆட்டம்
2006 மார்ச் மாதம் அனைத்து பரிசோதனைகளும், திட்டங்களும் நிறைவடைந்தன. தண்ணீர் மட்டும்தான் பிரச்சினை. நாள் ஒன்றுக்கு சுமார் 546 லட்சம் லிட்டர் நல்ல தண்ணீர் தேவை என்றார்கள் நிபுணர்கள். தாமிரபரணியில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என்பது முந்தைய திட்டம். குடிநீருக்கே மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் மணல் குவாரிக்குத் தண்ணீரைக் கொடுக்க எந்த அரசுதான் முன்வரும்? வேறு வழியின்றி குலசேகரப் பட்டணத்தில் இதற்காக “கடல் நீர் உப்பகற்றி ஆலை” ஒன்றை நிறுவுவது என்று முடிவானது. உப்பகற்றி ஆலையோடு சேர்த்து 30 மெகாவாட் திறனுள்ள மின் நிலையம் ஒன்றையும் அமைத்தால் உப்பகற்றி ஆலைக்கு ஆகும் செலவு குறையும். மேலும் திட்டத்திற்குத் தேவையான மின்சாரத்தையும் குறைந்த விலையில் பெற்றிட முடியும் என்று ஆலோசனை கூறப்பட்டது. இவ்வாலைகளை நிறுவுவதற்காக குலசேகரப் பட்டணத்தில் சுமார் 213 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் 2007 ஜீன் மாதம் பழைய ஒப்பந்தத்தை தமிழக அரசு மீண்டும் புதுப்பித்தது. ஜீன் 28 ஆம் தேதியன்று இந்தப் புதிய ஒப்பந்தத்தில் டாட்டாவும், தமிழக அரசும் கையெழுத்திட்டன. இதன்படி டாட்டாவின் திட்டத்திற்காக முதல் முதலில் கோரப்பட்ட 19,768 ஏக்கர் (80 சதுர கிலோ மீட்டர்) நிலத்தில் (கிட்டத்தட்ட) சரி பாதியான 9828.78 ஏக்கர் தேரிக் காட்டை தமிழக அரசே கையகப் படுத்திக் கொடுக்கும் என்று முடிவானது.
இதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் திட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தன. இவ்வெதிர்ப்பின் காரணம் நிலத்தைக் கையகப்படுத்தும் பணியில் இருந்து தமிழ்நாடு அரசு பின்வாங்கியது. நிலத்தை டாட்டா நிறுவனமே பட்டாதாரர்களிடம் இருந்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறியது. “ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய்தான் கொடுக்க முடியும். வறண்ட தரிசு நிலமான தேரிக்கு இதுவே அதிகம்“, என்றது டாட்டா நிறுவனம். கூடுதல் விலையைக் கொடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. அமைச்சர் ஒருவரின் தலைமையில் பகுதியைப் பாரிவையிட்டு ஆய்வறிக்கை தயார் செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஏக்கருக்கு ஒரு லட்சத்து 16 ஆயிரம் வரை கொடுக்கலாம் என்று அந்தக் குழு பரிந்துரை செய்தது.
திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. அதற்கான பணம் தன்னிடம் இல்லை என்று அந்தக் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்தது தமிழ்நாடு அரசு.
“எப்படிப்பட்ட சூழ்நிலையையும் தாங்கள் சந்திக்கத் தயார். திட்டத்தை விட்டு விலகுவது என்ற பேச்சுக்கு இடமேயில்லை” என்ற அதிரடி அறிக்கையை டாட்டா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது.
டைட்டானிய ஆலை வந்தால் நிலத்தை விற்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கலைஞர் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார். திட்டத்தை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் எல்லாவற்றையும் தேரிக்காட்டை நோக்கி செல்லும் காவடிக் கூட்டம் என்றும் கிண்டலடித்திருக்கிறார். தமிழக அரசும் திட்டத்தின் நன்மைகளை விளக்கி அனைத்துப் பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்திருக்கிறது.
தமிழக அரசுக்கும், கலைஞருக்கும் திட்டம் குறித்து முழுமையாகத் தெரியுமா என்ற சந்தேகத்தை எழுப்பவே அவர்களின் மேற்கூறிய நடவடிக்கைகள் இன்றளவும் உதவியிருக்கின்றன.
திட்டத்தின் உண்மை நிலவரத்தை முதல்வரிடம் விளக்கும் பொறுப்பு டிட்கோ அதிகாரிகளுடையது. அவர்கள் அப்பணியை சரிவரச் செய்யவில்லை போலும். அவர்களின் அரை வேக்காட்டுப் பேச்சை நம்பித்தான் கலைஞர் திட்டம் குறித்துத் தவறான கருத்துக்களை அளித்துக் கொண்டிருக்கிறாரோ?இல்லை ‘‘வேறு’’ எதுவும் காரணமோ? தெரியவில்லை. இப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலையில் திட்டம் குறித்து தெளிவாக விளங்கிக் கொள்வது அவசியமாகிறது.
திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள்
இந்தத் திட்டத்தினால் மூன்று மக்கள் குழுக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். இரண்டுவகை நிலப்பகுதிகளும், அவற்றில் வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பிருக்கிறது.
1. திட்டத்திற்காக நிலத்தை விற்கப் போகும் மக்கள்
2. திட்டத்திற்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் மின் நிலையத்தையும், நல்ல நீரைக் கடல் நீரில் இருந்து பிரித்தெடுக்கும் ஆலையையும் ஏற்றுக் கொள்ளவிருக்கும் குல சேகரப்பட்டணம் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் கிராம மக்களும், மீனவர்களும்
3. திட்டம் வரவிருக்கிற “சாத்தான் குளத் தேரி”யை சுற்றி 20 கிலோ மீட்டர் தூரத்திற்குள் அமைந்துள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள்
4. சாத்தான்குளம் தேரியைச் சுற்றியுள்ள நிலப் பகுதி
5. குலசேகரப்பட்டணத்தை அடுத்துள்ள கடற்கரையும், கடலும், அவற்றில் வாழும் உயிரினங்களும்.
ஆலையில் இருந்து வெளியேறும் இரும்பு குளோரைடு மற்றும் அமிலக் கழிவுகள் சுற்றியுள்ள நிலத்தையும், நிலத்தடி நீரையும் பாழ்படுத்த வாய்ப்பிருக்கிறது. ஆலையில் பிரித்தெடுக்கப்படும் ஜிர்க்கான் கனிமம் கதிரியக்கத் தன்மையைக் கொண்டிருப்பதால் ஆலையை சுற்றி 20 கிலோ மீட்டர் தூரத்திற்குள் வாழும் மக்களுக்கும், உயிரினங்களுக்கும் மரபணு நோய்களும், பல்வேறு வகைப் புற்றுநோய்களும் (கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சியைச் சுற்றி வாழும் மக்களைப் போல) உருவாக வாய்ப்பிருக்கிறது.
குலசேகரப் பட்டணம் மற்றும் அதை அடுத்துள்ள மணப்பாடு போன்ற கிராமங்களில் உள்ள மீனவர்களின் வாவ்வாதாரங்களும் கடல் நீர் உப்பகற்றி ஆலையின் இயக்கத்தாலும், மின் நிலையத்தின் செயல்பாட்டாலும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பிருக்கிறது.
இப்பாதிப்புகள் குறித்து நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது உடனடி அவசியம். இதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக இந்தத் திட்டத்திற்காக டாட்டா நிறுவனம் மேற்கொண்ட அனைத்து ஆய்வறிக்கைகளையும் மக்கள் முன் வைத்து விவாதிக்க வேண்டியது அவசியமாகிறது.
திட்டத்திற்கான “சுற்றுச் சூழல் தாக்கீட்டு அறிக்கை”யையும், “சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்ட அறிக்கை”யையும் புது தில்லியைச் சேர்ந்த “மின்-மெக்” என்ற நிறுவனம் செய்திருப்பதாக திட்ட அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இவ்வறிக்கைகளை உடனடியாக வெளியிட தமிழ்நாடு அரசு ஆவன செய்ய வேண்டும்.
அதுபோல பின்லாந்து நாட்டின் ஒளட்டோகும்பு, அமெரிக்காவின் பின்காக்-ஆலன்-ஹோல்ட், ஆகிய நிறுவனங்களும், ஆஸ்திரேலிய நாட்டின் TZMI, நிறுவனமும் திட்டம் குறித்து முன்வைத்த அனைத்து தொழில்நுட்ப அறிக்கைகளையும் உடனடியாக வெளியிட தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும்.
இவ்வறிக்கைகளின் அடிப்படையில்தான் இப்பகுதி மக்களும், உயிரினங்களும் எதிர்நோக்க வாய்ப்புள்ள பிரச்சினைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். மிக முக்கியமான இவ்வறிக்கைகளை டாட்டா நிறுவனம் இன்றுவரை வெளியிடாதது ஏன்? டாட்டாவின் இந்தக் கயமைத் தனத்தைத் தமிழ்நாடு அரசு தட்டிக் கேட்காமல் இருப்பதை எப்படிப் புரிந்து கொள்ள?
தென்மாவட்ட மக்களுக்கான வேலைவாய்ப்பு என்றும், நாட்டின் வளர்ச்சி என்றும் கூறிக்கொண்டு இத்திட்டம் பற்றி ஒன்றுமே தெரியாமல், அதைத் தவிர்த்து ‘எல்லாம் தெரிந்து’ அறிக்கை விடும் அரசியல் தலைவர்களிலிருந்து திட்டத்திற்கான நிலம் திருநெல்வேலிக்கு தெற்கே இருக்கிறதா?, நாகர்கோவிலுக்குத் தெற்கே இருக்கிறதா? என்பதுகூடத் தெரியாமல் குளிர்பதனம் செய்யப்பட்ட அறைகளில் இருந்து அறிக்கை விடும் அறிவு ஜீவிகள் வரை அனைவரும் யோசிக்க வேண்டும்.
எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையிலும், ஒருவனை அவன் காலம் காலமாக வாழ்ந்த இடத்திலிருந்து அகதியாக அவனை இன்னொரு இடத்துக்கு துரத்துவது கொடுமையானது. ஆனால், அதைச் செய்வதற்கு தற்பொழுது அனைவரும் ஒன்று திரண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் இந்தப் பகுதியை ஏதோ பாலைவனம் போலவும் இவர்கள் அதை மிதமிஞ்சிய வளர்ச்சிப் பகுதியாக மாற்ற டாடாவின் டைட்டானியம் ஆலை உதவும் என்று காரணம் கூறிக் கொண்டிருக்கிறனர்.
திட்டத்தில் இருந்து டாட்டாவிற்குக் கிடைக்கப் போகும் லாபம் மிகப் பெரியது. 2005-06 ஆம் வருடத்தில் டாட்டா குழுமத்தின் ஒட்டுமொத்த வர்த்தகமே 97 ஆயிரம் கோடி ரூபாய்தான். ஆனால் சாத்தான்குளத் தேரியின் டைட்டானியத் திட்டமோ அதைக் காட்டிலும் பன்மடங்கு லாபத்தைக் கொடுக்க வல்லது. ஆனால், அதற்காக தமிழ் மக்கள் கொடுக்கும் விலையோ மிகவும் அதிகம்.
இன்னொரு சிலப்பதிகாரமோ?
“என் தலையின் மீது நீங்கள் துப்பாக்கியையே வைத்தாலும்பயத்தில் தலையை அசைத்துடுவேன் என்று கனவு காணவேண்டாம்” என்று நான் பலமுறை கூறியுள்ளேன்
-ரத்தன் டாட்டா, மேற்கு வங்காளம், சிங்கூர் பிரச்சனையை ஒட்டி கூறியது
“எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சமாட்டோம். டைட்டானியம் ஆலை அமைப்பதில் உறுதியாக இருக்கிறோம்.
-டாடா நிறுவன மேலாளர் முத்துராமன்15.8.07
“யார் என்ன சொன்னாலும் டைட்டானியம் ஆலை அமைப்பதைத் தடுக்க முடியாது. டைட்டானியம் ஆலை அமைவது உறுதி”
-தமிழக அமைச்சர் ஆற்காடு வீரசாமி28.9.07 தினத்தந்தி.
திட்டம் குறித்த தகவல்களை “ஒளித்து” வைத்திருப்பதன் மூலம் 5 லட்சம் கோடி ரூபாய் வருமானத்தைக் கொடுக்கப்போகும் நிலத்தை வெறும் 50 கோடி ரூபாய்க்கு விலை பேசி முடிக்க டாட்டா முயற்சி செய்கிறது. தமிழ்நாடு அரசோ செங்கோலைப் பிடித்து நீதியை வழங்கத் தயங்கிறது.
“கள்வனுக்கே” பரிந்து பேசவும் அது துணிந்திருக்கிறது. தொன்மை வாய்ந்த இந்தத் தமிழ் மண்ணின் மனதில் “இது இன்னொரு கொலைக்களத் காண்டமோ?” என்ற பேரச்சத்தை உருவாக்கியிருக்கிறது.
வாழ்வாதாரத்தை இழந்து துடித்திட்ட கண்ணகியை நினைவுபடுத்துகின்றனர், சாத்தான்குளத் தேரியின் மைந்தர்கள்!
மீண்டும் ஒரு முறை சிலம்பின் அவல முடிவை நாம் சந்தித்துதான் ஆக வேண்டுமா?.
-அசுரன்-மருத்துவர் இரமேஷ்-கு.காமராஜ்
நன்றி:
செப்டம்பர், 2007
இந்த விவகாரம் குறித்து மேலும் தகவலுக்கு பார்க்கவும்:
www.tatatitanium.blogspot.com,
www.tatatitanium.wordpress.com
Article:
http://makkal-sattam.blogspot.com/2007/09/blog-post_27.html
தலைப்பு செய்திகள்
Blog Archive
-
▼
2007
(73)
-
▼
Dec
(13)
- # மண்ணிலிருந்து ‘பிரித்தெடுக்க’ப்படுகிறார்கள் மக்கள்
- # ‘விதை'யின் பிடியில் உலகம் (இனி பேரழிவு ஆயுதங்க...
- # நீதித்துறையின் விடுமுறைக்கால கொண்டாட்டம்...! ...
- # இந்திய அரசியலமைப்புச் சட்டம் - ஒரு மோசடியா?
- # மருத்துவ மாணவர்களின் நாட்டுப்பற்று! கிராமப்புற ...
- # சர்வதேச வட்டி நிறுவனங்களின் முற்றுகையில் தமிழக ...
- # போலி மருத்துவர்களை உருவாக்க முனையும் தஞ்சை தமிழ...
- # முரண்பாடான ஊதிய விகிதத்தில் பணியாற்றும் பட்டதார...
- # வெள்ளையர்களின் நீங்காத நிறவெறி
- # சிபில்(CIBIL) என்ற சிலந்தி வலை!
- # இந்தியாவில் இயங்கும் தனியார் வங்கிகளை கட்டுப்பட...
- # சேவை: வந்தாச்சு…பொம்மை வேன்!
- # தணிக்கை முறையில் தப்புக் கணக்கு!
-
▼
Dec
(13)
வணக்கம்
இங்கே இணைய தளங்களில் நான் பார்த்ததை, படித்ததை, கேட்டதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
...............................
செந்தில் குமார்
மகாராட்டிர மாநிலம் யோவத்மல் மாவட்டத்தின் சீங்காபூர் கிராமத்திலிருந்து கடந்த ஆண்டு, இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு மிகவும் விசித்திரமான ஓர் அழைப்பு அனுப்பப்பட்டது. இவர்கள் இருவரையும் அந்த கிராமத்தில் நடைபெற இருந்த விழாவை தொடங்கி வைக்க வருமாறு, அனைத்து கிராம மக்களும் ஒன்றிணைந்து வேண்டுகோள் விடுத்திருந்தனர். விவசாயம் பொய்த்துப் போன சூழலில், கடன்களைக் கட்ட இயலாமல், தங்கள் பசியைப் போக்க கதியற்று அந்த கிராமத்தினர் அனைவரும் தங்களுடைய சிறுநீரகத்தை விற்க முன்வந்தனர்.
அந்த விழாவை தொடங்கி வைக்கத்தான் அப்துல் கலாம் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக அவர்கள் அழைத்திருந்தனர். அந்த அழைப்பு புது தில்லியை சென்றடைந்த நேரம், அடுத்த ஆண்டு கொண்டாடவிருக்கும் 60ஆவது சுதந்திரநாள் கொண்டாட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பிரதமர் அலுவலகத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது.
மகாராட்டிர மாநிலம் வார்தா மாவட்டத்து டோர்லி கிராமத்தின் மரங்களிலும், ஊர் எல்லையிலும் பரவலாக அறிவிப்புகள் : ‘கிராமம் விற்பனைக்கு உள்ளது’. அடுத்த கிராமமான ஷவானி ரேகிலாப்பூரில் மொத்த கிராமமும் தங்களை கூட்டுத் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை அனுப்பியிருந்தது. பஞ்சாபில் உள்ள மல்சீங்வாலா கிராமத்தினர் வங்கிகளுக்கு அளிக்க வேண்டிய மொத்த தொகை ரூபாய் அய்ந்து கோடி. கந்து வட்டிக்காரர்களுக்கு அளிக்க வேண்டிய ரூபாய் 2.5 கோடி. இதைக் கட்ட முடியாத அந்த பஞ்சாயத்து ஒன்று கூடி, கிராமத்தின் மொத்த 1800 ஏக்கரையும் ஏலம் மூலம் விற்க ஆயத்தமானது.
கர்நாடகாவுக்கு அருகில் உள்ள ஆந்திரத்தின் வழியில் தற்கொலை விகிதத்தில் உயர்வு காணப்படுகிறது. இரு மாநிலங்களும் கணினி மென்பொருள் தொழில் நோக்கி சாய்வு கண்டிருப்பதால், அவற்றின் கண்களுக்கு இந்த சாவுகள் ஒரு பொருட்டே அல்ல. நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 65 சதவிகிதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள்தான் இந்த நூறு கோடி மக்களின் பசியைப் போக்குபவர்கள். பசியைப் போக்கும் நடவடிக்கையில் கடந்த பத்தாண்டுகளில் 1,50,000 விவசாயிகள் பூச்சிக் கொல்லி அருந்தி தங்களை மாய்த்துக் கொண்டனர். இருப்பினும் எந்தப் பாடமும் கற்காத நம் அரசுகள், பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தொண்டாற்றுவதில் அதிதீவிரமாக செயல்படுகின்றன.
1985 இல் கிடைத்த விலையில் பெரிய மாற்றம் எதுவும் விளைபொருட்களுக்கு கிடைத்திடவில்லை. ஆனால், இடு பொருட்களின் விலை 34 மடங்கு உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் அய்ரோப்பாவில் விவசாயிகளுக்கு அந்த அரசுகள் மானியத்தை வழங்கியிருக்கின்றன. ஆனால், அந்த நாடுகளிலிருந்து இந்தியா நோக்கி வரும் பரிந்துரைகள் ‘மானியங்கள் கூடாது' என உத்தரவிடுகின்றன. பசுமைப் புரட்சியின் பெயரால் ரசாயனக் கழிவுகளை கடந்த 40 ஆண்டுகளாக நம் பூமியில் கொட்டி, மொத்த நிலத்தின் வளத்தையும் பாழடித்து விட்டார்கள். நுண்ணுயிர்கள் எல்லாம் அழிந்து, மண் செத்துக் கிடக்கிறது. செத்த மண்ணுடன் உரையாடும் விவசாயியும் சாகிறான்.
1986 இல் ‘பம்பர்ஸ் சட்டத்திருத்தம்' (Bumper’s Amendment) அமெரிக்காவில் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின்படி, உலக அளவில் நடக்கும் விவசாயம் தொடர்புடைய ஆய்வுகளுக்கு, அது வரையிலும் வழங்கப்பட்ட அமெரிக்க நிதியுதவியை நிறுத்த வழிவகுக்கும் சட்டம் அது. விவசாய நூல்களைப் பதிப்பித்தல், மாநாடுகள் நடத்துதல் என ஏராளமான நடவடிக்கைகள் உலகெங்கிலும் பாதி வழியில் திசை அறியாது நின்றன. இவை அமெரிக்க உயிரியல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியைத் தடுத்திடும் என்பது அவர்களது வாதம். இந்த சட்டத்திற்குப் பிறகு, அமெரிக்காவை சேர்ந்த 20 நிறுவனங்கள் மட்டுமே உலகளவில் இத்துறையில் கோலோச்ச வழி செய்தது.
உலகின் மூன்றில் ஒரு பங்கு கச்சா எண்ணெயை தன் வசப்படுத்திய பிறகு, தற்பொழுது அமெரிக்காவின் மொத்த பார்வையும் உணவு சந்தையை நோக்கி திசை திரும்பி உள்ளது. உலகத்தின் பசியைப் போக்க கிளம்பிய புதிய தேவதூதராக காட்சியளிக்கிறார் ஜார்ஜ் புஷ். பசியைப் போக்கும் அருமருந்துடன் அவர் உலகை வலம் வரத் தொடங்கி விட்டார். அவரது கைகளில் மரபீனி மாற்றம்(GENETIC ENGINEERING) செய்யப்பட்ட விதைகள் உள்ளன. இந்த ‘விதை'களில்தான் உலகின் பசியை, வறுமையைப் போக்கும் மந்திரம் பொதிந்துள்ளதாக அவர் கூறுகிறார்.
ஆயுத நிறுவனங்களைத் தொடர்ந்து ஜார்ஜ் புஷ் அலுவலகத்தில் அதிக செல்வாக்கு செலுத்துபவை, உயிரியல் தொழில்நுட்ப நிறுவனங்கள்தான். இந்த நிறுவனங்கள் உலகின் பல நாடுகளில் நுழைய முடியாமல் தவிக்கின்றன. அய்ரோப்பா அடுத்த அய்ந்தாண்டுகளுக்கு தங்கள் திசை பக்கம் வரக் கூடாது என அறிவித்துவிட்டது. இந்த அறிவிப்பால் அமெரிக்க நிறுவனங்கள் கதிகலங்கியுள்ளன. அமெரிக்க அரசின் தொழில் பிரதிநிதி ரோபர்ட் சோலிக், இந்தத் தடை அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்றும், உயிரியல் தொழில்நுட்ப வளர்ச்சியை பாதிக்கிறது என்றும், இறுதியாக அய்ரோப்பாவின் இந்தத் தடை உலகில் பட்டினியை அதிகரிக்கும் என்றும் மிரட்டுகிறார். உலகின் மொத்த விதைகளையும் இந்த நிறுவனங்கள் திருடி தங்கள் வசம் வைத்துள்ளன.
இதில் இந்தியாவிலிருந்து மட்டும் 1,50,000 நிலைத்திணை வகைகள், அமெரிக்க உயிரியல் ஆய்வுக் கூடங்களில் உள்ளன. அமெரிக்க அரசின் விவசாய அமைச்சகமும், உயிரியல் தொழில்நுட்ப வல்லுநர்களும் ஏராளமான இந்தியத் தொண்டு நிறுவனங்களைப் பணியில் அமர்த்தினர். கடந்த அய்ந்தாண்டுகளாக இந்தியா முழுவதிலும் இந்த 1,50,000 செடி வகைகள் குறித்த மரபான அறிவை சேகரித்து வருகிறார்கள். இந்த திட்டங்களுக்காக பல பன்னாட்டு நிறுவனங்கள் கோடிக்கணக்கான தொகையை ஒதுக்கி வருகின்றன. அதில் குறிப்பாக ‘போர்டு' நிறுவனம் விதைகள் பற்றிய தகவல்களை இரு தலைப்புகளில் சேகரித்து வருகிறது.
1. ‘பயோடெக்' சார்ந்த அறிவியல் தகவல்கள்
2. வாய்மொழி வரலாற்றில் இருக்கும் தகவல்களை, நாட்டுப்புறவியல் சார்ந்த ஆய்வுகளின் மூலம் பெறுவது.
எனவே, உங்கள் கிராமங்களை நோக்கி வரும் ஆய்வாளர்களிடம், ‘யாருக்காக இந்த ஆய்வை செய்கிறீர்கள்?' என்ற கேள்வியை முதலில் எழுப்புங்கள். இந்த 1,50,000 நிலைத்திணை வகைகளை அமெரிக்காவிற்கு கள்ளக் கடத்தல் செய்தவர்கள், இந்தியாவின் உயர் பதவிகளில் சொகுசாய் வாழ்ந்து வருகிறார்கள். அடிமைகள் இருக்கும் வரை ஏகாதிபத்தியம் செழித்தோங்கும் என்பதில் அய்யமில்லை.
கலிபோர்னியாவின் சேக்ரமென்டோ டவுன் டவுனில் சூன் 23-25, 2007இல் ஒரு மாநாடு நடைபெற்றது. அமெரிக்க விவசாயத் துறை செயலர் ஆன் வெனேமன் விடுத்த அழைப்பின் பெயரில், 180 நாடுகளை சேர்ந்த விவசாய அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர். மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகள் தரும் நன்மைகள், லாபங்கள் குறித்த விவாதங்கள் இங்கு நடைபெற்றன. உலகின் பட்டினியை, பசியைப் போக்க தவம் செய்து வரும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு நீங்கள் ஒத்துழைக்க மறுத்தால், அரசியல் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.
இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்து வைத்துள்ள மரபீனி மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை ஒட்டுமொத்தமாக எல்லா நாடுகளும் அனுமதிக்கவில்லை. எனவே, ஆத்திரத்தில் அலையும் இந்த நிறுவனங்கள் தற்காலிக இடைவெளிகளை கண்டுபிடித்துள்ளன. பட்டினியால் வாடும் பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு உணவு உதவி அளிக்கப் போவதாகக் கூறி, இந்த விலை போகாத சரக்கை ஏற்றுமதி செய்கிறார்கள். அய்.நா. உலக உணவுக் கழகம், செஞ்சிலுவை சங்கம் என அனைத்து நிறுவனங்களும் இனி தங்கள் திட்டங்களுக்கு, உயிரியல் தொழில் நிறுவனங்களிடமிருந்து தான் கொள்முதல் செய்ய வேண்டும் என கட்டளையிட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் நடைமுறையில் உள்ள மதிய உணவுத் திட்டங்களில் இனி மரபீனி மாற்று உணவுகள்தான் வழங்கப்படும். தன் சொந்த தேசம் உண்ண மறுக்கும் தானியங்களை, மற்றவர்கள் மீது திணிப்பது உலகின் மிகப் பெரிய மனித உரிமை மீறல். அப்படி எந்த தேசமும் இனி இந்த நிறுவனங்களை அனுமதிக்க மறுத்தால் ஈராக், ஆப்கானிஸ்தான் கதிதான். பேரழிவு ஆயுதங்கள் அல்ல; விதைகளே போதுமானவை. இவை போக புதிய மரபீனி மாற்று விளை பொருட்கள் அங்காடியை ‘ராக்பெல்லர் பவுன்டேஷன்' மற்றும் மேடிசன் நிறுவனம் தொடங்கியுள்ளது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இவர்கள் தங்கள் புதிய வியாபாரத்தை தொடங்குவார்கள்.
எய்ட்ஸ் நோயால் ஏராளமான ஆப்பிரிக்க நாடுகளில் கிராமப்புற ஆண்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. விவசாயக் கூலிகளின் பற்றாக்குறையை போக்கும் அந்த நாடுகளை, மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறார்கள். இந்த விதைகளைப் பயன்படுத்தினால் அதிக பூச்சிக் கொல்லி அடிக்க வேண்டியதில்லை, வேலை குறைவு என கதை அளந்து வருகிறார்கள். இவர்களின் இந்த ‘பி.டி.' ரக விதையை பயன்படுத்திதான் விதர்பா, ஆந்திரப் பகுதி விவசாயிகள் பூச்சிக்கொல்லி தெளித்து, தெளித்து இறுதியில் கடன்களை சமாளிக்க முடியாமல் மிச்ச மீதி பூச்சிக்கொல்லியை தாங்களே குடித்து மாண்டனர். மேடிசன் நிறுவனத்தின் அடுத்த இலக்கு இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், தாய்லாந்து மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள். இவர்களின் வேலை புள்ளி விவரங்களைத் தயாரிப்பது, பஞ்சங்களை ஏற்படுத்துவது (யோக்கியன் வரான் சொம்பை எடுத்து உள்ள வை).
அமெரிக்க உயிரியல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தொடர்ந்த அழுத்தம் காரணமாக, இந்தியா தனது கதவுகளை அகலத் திறந்துள்ளது. இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் மரபீனி மாற்று விதைகளை ஆய்வு நோக்கில் பயிரிட அனுமதி அளித்துள்ளனர். எராளமான காய்கறி, எண்ணெய் வித்துக்கள் என உணவு வகை ஆய்வுகள் நடக்கின்றன. ஆனால், இந்த ஆய்வுகள் முறைப்படி நிகழ்த்தப்படுவதில்லை. இந்திய தட்பவெப்ப சூழலுக்கு இவை உகந்ததா? நம் மண்ணில் இவை விளையுமா? என்பது போன்ற நூற்றுக்கணக்கான கேள்விகள் நம்முன் விடையின்றி நிற்கும்போது, நம் விஞ்ஞானிகள் மற்றும் அரசு செயலர்கள் இந்த விதைகளுக்கு நற்சான்றிதழ் வழங்கி வருகின்றனர். இதில் சமீபத்திய வேடிக்கை உயிரியல் தொழில் நுட்பத் துறையின் செயலர், ஜி.எம். உருளைக்கிழங்கில் 40 சதவிகிதம் புரதச்சத்து இருப்பதாக பேட்டியளித்தார். மறு நாள் அது 2.5 சதவிகிதம்தான் என ஆய்வு நிறுவனம் அறிவித்தது. இது போல் இனி எல்லா மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகள் குறித்த கட்டுக் கதைகளும் மடை திறந்த வெள்ளமாய் வரும். குடிமைச் சமூகமே எச்சரிக்கை!
இந்த ஆய்வுகள் நிகழ்த்தப்பட்ட எல்லா இடங்களிலும் நடந்த முறைகேடுகள் தற்பொழுது வெளிவருகின்றன. இந்த ஆய்வுக்காக குத்தகைக்கு எடுக்கப்பட்ட வயல்களில், அந்த வயலின் உரிமையாளர்களிடம் என்ன ஆய்வு நிகழ்த்தப்படுகிறது என தெரிவிக்கப்படுவதில்லை. அண்டை வயல் உரிமையாளர்களிடம் இந்தத் தகவல்கள் பரிமாறப்படவில்லை. அந்த மாநில அரசுகளிடம் அனுமதி பெறுவதில்லை. மரபீனி தொடர்புடைய இந்த ஆய்வுகளை கண்காணிக்க சுற்றுப்புறச் சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மரபீனி தொழில்நுட்ப அனுமதி குழு உருவாக்கப்பட்டுள்ளது (Genitic Engineering Approoval Committee- GEAC). இக்குழுவின் அனுமதியின்றி எந்த ஆய்வும் நிகழாது. இக்குழுவிற்கு விண்ணப்பிக்கும் முன்பே பஞ்சாயத்துக்களில் அனுமதி பெற வேண்டும். கிராம பஞ்சாயத்துகள் இனி இந்த அதிகாரத்தை செம்மையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கோக்கோகோலா நிறுவனத்தை பிளாச்சிமடாவிலிருந்து விரட்டியடித்ததில் அந்த பஞ்சாயத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் எல்லையோரத்தில் கேரளாவுக்குள் அமைந்துள்ள கிராமம் பிளாச்சிமடா. அங்கு கோக்கோ கோலா ஆலை பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. பிளாச்சிமடா மக்களும் அந்த பஞ்சாயத்தும் விழித்துக் கொண்ட பிறகு, அந்தப் பன்னாட்டு நிறுவனத்தால் ஆலை நடவடிக்கைகளை தொடர இயலவில்லை. இந்திய அளவிலான ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் மற்றும் உலகமயமாக்கல் எதிர்ப்பாளர்கள், முன்னணித் தலைவர்கள் பலரும் பிளாச்சிமடாவுக்கு கடந்த அய்ந்து ஆண்டுகளாக நடந்து வந்த மக்கள் இயக்கத்திற்கு வலு சேர்த்தாலும், பிளாச்சிமடா பஞ்சாயத்து அந்த ஆலையை ரத்து செய்த முடிவுதான் இந்தப் போராட்டத்தின் மிகப் பெரிய பலம். உச்ச நீதிமன்றம்கூட பஞ்சாயத்தின் தீர்மானத்தை மாற்ற முடியாமல் திணறியதைக் காண முடிந்தது. இதுபோலவே கங்கைகொண்டானில் சிவகங்கையிலிருந்து விரட்டப்பட்ட கோக் நிறுவனத்தை நிறுவ முயன்றபோதும், அங்கு பல்வேறு மக்கள் இயக்கங்கள் களமிறங்கிப் போராடினர். இதில் பங்கேற்ற பஞ்சாயத்து தலைவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இனி இத்தகைய ஆய்வுகளுக்காக எந்த பஞ்சாயத்திலும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம் அனுமதி கோரினால், உடனடியாக கிராம அவை கூட்டப்பட வேண்டும். அதில் இந்த விதைகள் குறித்த ஆபத்துகள், தீமைகள் குறித்து விவாதங்கள் நடைபெற வேண்டும். அந்த விதிமுறைகள், எச்சரிக்கைகளைத் தெரிந்து கொண்டு, ஆய்வு நடக்கும் காலங்களில் அண்டைய வயல்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கலாம். மரபீனி மாற்றம் செய்ய நடைபெற்ற பயிற்சிகள் குறித்த வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகக் கூறியுள்ளது. சம்பந்தப்பட்ட விஞ்ஞானிதான் இத்தகு ஆய்வுகளை நிகழ்த்த வேண்டும். இந்த வயலில் இருந்து 200 மீட்டர் தூரத்துக்குள் இதே பயிரின் மரபான ரகம் பயிரிடப்பட்டிருக்கக் கூடாது. எனவே, இந்திய பஞ்சாயத்துகள் விழிப்போடு இருந்தால், நம் எதிர்காலத் தலைமுறையையே சீரழிக்கக் கூடிய நிறுவனங்களை கால் பதிக்க விடாமல் விரட்டியடிக்க முடியும்.
தினமும் 32 கோடி பேர் பசியுடன் படுக்கைக்குச் செல்லும் நாடு இது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 6.5 கோடி டன் உணவு தானியங்கள் உபரி கையிருப்பாக இருந்த தேசமிது. ஒரிசாவின் காலாஹந்தி பகுதி மக்கள் தங்கள் கண் முன்னால் அரசு கிடங்குகளில் அரிசி அழுகி நாற்றமெடுப்பதை காண்கிறார்கள். ஓராண்டில் ஆறு மாதத்திற்கு ஒரு நேரம் மட்டுமே உண்ணுகிறார்கள். 6.5 கோடி டன் உபரி உணவு தானியங்களால் இந்தியாவின் பசியை, பட்டினியைப் போக்க இயலாதபொழுது -மரபீனி மாற்று தானியங்கள் மட்டும் எப்படி உலக மக்களின் பசியைப் போக்கும்?
உயிர்க்கொல்லிகள்
பூமிப்பந்தின் மேல் சில அங்குல அளவே படிந்துள்ள ‘மேல் மண்' (Top Soil) தான் நாகரிகங்கள் தோன்ற அடிப்படையாக இருந்து வந்துள்ளது. இந்த மேல் மண் உருவாக பூமியின் பரிணாமத்தில் பூகோள ரீதியான பல அம்சங்கள் துணை புரிந்துள்ளன. இயற்கையான அரிமானத்தின் அளவை புதிய மண் உருவாவது மிஞ்சும்பொழுதுதான் மேல் மண் உருவாகிறது. இந்த மேல் மண்தான் பூமியில் உள்ள அத்துணை தாவரங்களையும், மரங்களையும் தன் சிசுவாய் வளர்த்தது. இதற்கு கைமாறாக இந்தச் செடிகளும், மரங்களும் மண் அரிமானத்தை தடுத்து உதவுகின்றன. மனித நடவடிக்கைகள், இந்த ஆயிரம் ஆண்டு பந்தத்தை சீர்குலைத்து விட்டன. உலக சாகுபடி நிலத்தில் முக்கால் பங்கு ‘மேல் மண்'ணை இழந்து விட்டது. கண்மூடித்தனமான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் இந்த கதி ஏற்பட மூலகாரணமாகும். உலகத்தை மீண்டும் நுண்ணுயிர்களுடன் கூடிய சத்தானதாக மாற்ற, வட்டார அளவிலான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இவை எதற்கும் அரசு உதவி என்பது கிஞ்சித்தும் இல்லை.
-அ. முத்துக்கிருஷ்ணன்
நன்றி:
செப்டம்பர் 2007
Article:
http://makkal-sattam.blogspot.com/2007/09/blog-post_30.html
அக்டோபர் 15 முதல் 19ம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் மற்ற உரிமையியல் நீதிமன்றங்களுக்கும் தசரா பண்டிகைக்கால விடுமுறை. தசரா பண்டிகைக்கும் நீதித்துறையினருக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? விடுமுறைகள் அறிவிப்பதில் இந்திய நீதிமன்றங்கள் கல்வி நிலையங்களுடன் போட்டியிடுகின்றன என்று துணிந்து கூறலாம்.
தாமதித்து வழங்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம் என்ற வசனம் திரைப்படங்களிலும், மேடை நாடகங்களிலும் பலமுறை உச்சரிக்கப்பட்டாலும் உரியவர்களின் காதுகளில் அந்த வசனம் சரிவர விழுவதில்லை.
இந்தியாவின் உச்ச நீதிமன்றம் உட்பட நாட்டின் அனைத்து நீதிமன்றங்களிலும் பல நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்பதும், அந்த நீதிமன்றங்களில் கோடிக்கணக்கான வழக்குகள் விசாரணைக்காக காத்திருப்பதும் அனைவரும் அறிந்த செய்தியே.
இந்த நிலையில் நாட்டின் முக்கிய நீதிமன்றங்களின் செயல்பாடு மிகுந்த அச்சத்தை அளிப்பதாகவே உள்ளது. உதாரணமாக, 2007ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை 49 நாட்கள்; தசரா பண்டிகை விடுமுறை 8 நாட்கள்; தீபாவளி பண்டிகை விடுமுறை 8 நாட்கள்; கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை 16 நாட்கள்; இதோடு வார விடுமுறைகளயும் சேர்த்தால் சுமார் 137 நாட்கள் விடுமுறை. அதாவது சுமார் நான்கரை மாதங்கள் இந்தியாவின் உச்சநீதி மன்றம் இழுத்து மூடப்படுகிறது.
தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை 37 நாட்கள். தீபாவளி பண்டிகை விடுமுறை 9 நாட்கள். கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை 11 நாட்கள். இதோடு வார விடுமுறைகளயும் சேர்த்தால் சுமார் 145 நாட்கள் (5மாதங்கள்) விடுமுறை. அதாவது சென்னை உயர்நீதிமன்றம், இந்த ஆண்டின்12 மாதங்களில் சுமார் ஏழு மாதங்களும் 10 நாட்களும் மட்டுமே பணியாற்றுகிறது.
பல்வேறு காரணங்களுக்காக வழக்கறிஞர்கள் மேற்கொள்ளும் நீதிமன்ற புறக்கணிப்புகள் தனிக்கணக்கு.
வாரம் முழுவதும் பணியாற்றும் பணியாளர்களுக்கு வார இறுதி நாளன்று ஓய்வு தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் மதம் சார்ந்த பண்டிகைகளுக்காக வாரக்கணக்கிலும், கோடை விடுமுறை என்ற பெயரில் மாதக்கணக்கிலும் நீதிமன்றங்களுக்கு விடுமுறை விடும் அரசை மக்கள் நல அரசாகவும் கருத முடியாது.
.
மக்களின் அடிப்படை மனித உரிமைகளை பறிக்கும் அனைத்து அமைப்புகளும் எந்த விடுமுறையுமின்றி, எந்நேரமும் பணியாற்றி வருகையில், மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டிய நீதித்துறை, நீண்ட விடுமுறைகளை அனுமதிப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலே!
மதசார்பற்ற அரசின் நீதித்துறை, மதம் சார்ந்த மக்களின் வழிபாட்டு உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். ஆனால் அதற்கு மற்றவர்களின் உரிமைகளை விலையாக கொடுக்கும் நிலை இருக்கக்கூடாது. எனவே பண்டிகைக் கால நீண்ட விடுமுறைகள் குறித்த மறுபரிசீலனை அவசியம்.
கோடை விடுமுறை என்பதே, இந்தியா சுதந்திரம் பெற்றதை அங்கீகரிக்காத போக்காக படுகிறது. ஏனெனில் கோடை விடுமுறை ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பித்த நடைமுறை. இந்தியா அடிமை தேசமாக இருந்தபோது, இந்தியர்களுக்கான நீதி என்பது அடிமை-இந்தியர்கள் மீது காட்டப்படும் கருணையாக இருந்தது. குளிர் தேசமான இங்கிலாந்தில் பிறந்து, வளர்ந்த ஆங்கிலேய நீதிபதிகளுக்கு இந்தியாவின் கோடை வெப்பம் ஒத்துவராததால் அவர்கள் சொந்த நாடான இங்கிலாந்து செல்வதற்காக நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. மின்விசிறிகூட இல்லாத அந்த காலத்தில் ஆங்கிலேயர்கள் கோடையில் விடுமுறை அனுபவித்ததை புரிந்து கொள்ள முடிகிறது.
.
ஆனால், இந்தியாவிலேயே பிறந்து, இந்நாட்டின் வெப்பத்திலேயே வளர்ந்து, குளிர்பதனம் (Air Condition) செய்யப்பட்ட நீதிமன்றங்களில் அமர்ந்து நீதிபரிபாலனம் செய்யும் தற்கால நீதியரசர்(!)களுக்கு கோடை விடுமுறை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. குளிர்பதன வசதி செய்யப்படாத பல விசாரணை மற்றும் கீழ்நிலை நீதிமன்றங்கள் கோடை காலத்திலும் பணியாற்றுகின்றன என்பது குறிப்பிட வேண்டிய முக்கிய செய்தி.
நம் நாட்டில் கற்றுத்தேர்ந்த வழக்கறிஞர்களுக்கோ, நீதியியல் அறிஞர்களுக்கோ பஞ்சமில்லை. ஆனால் அவர்கள் செயல்படுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. சமூகத்தின் உயர்நிலையில் உள்ள ஆதிக்க சக்திகளே நீதித்துறையையும் ஆக்கிரமித்துள்ளதால், சாமானிய மக்களின் பிரசினைகள், நாட்டின் உச்சத்தில் உள்ள தலைவர்களை சென்றடைவதில்லை.
.
மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்குதான் நீதிமன்றங்கள் இயங்குகின்றன என்பது உண்மையானால் அவை காலை, மாலை என இரு அமர்வுகளாக (ஷிப்ட் முறையில்) கூடுதல் நீதிபதிகள் மற்றும் பணியாளர்களுடன் இயங்கவேண்டும். வழக்குகளை தீர்ப்பதற்கான கால அவகாசம் நிர்ணயிக்கப்பட வேண்டும். வழக்குகளை உரிய காலத்தில் தீர்க்காத நிலையில். அதனால் வழக்கு தொடுக்கும் பொதுமக்கள் அடையும் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மக்கள் எந்த நாளிலும், எந்த நேரத்திலும் நீதிமன்றத்தை அணுகி, நீதிபெற முடியும் என்ற நிலை வந்தால்தான் நாட்டில் 'சட்டத்தின் ஆட்சி' நடப்பதாக பொருள் கொள்ள முடியும்.
கோடை விடுமுறை உள்ளிட்ட அசாதாரண விடுப்புகளை கோரும் நீதித்துறை அதிகாரிகளுக்கு சம்பளம் இல்லாத விடுப்பு அளிக்கலாம். மூத்த வழக்கறிஞர்கள் பலரும் இது போன்ற நீண்ட விடுமுறைகள் தேவை என்றே கருத்து தெரிவிக்கக்கூடும். மூளை உழைப்பாளிகளான தங்களுக்கு இது போன்ற கட்டாய விடுமுறைகள் மட்டுமே ஓய்வு அளிப்பதாக அவர்கள் கூறக்கூடும்.
.
ஆனால் அடுத்த தலைமுறை வழக்கறிஞர்கள் உருவாவதை விரும்பாத, பேராசை படைத்த மூத்த வழக்கறிஞர்கள் மட்டுமே இத்தகைய வாதத்தை முன்வைப்பார்கள் என்பதை அனைவரும் அறிவர். உண்மையாகவே மக்களுக்கு பாடுபடும் எந்த ஒரு வழக்கறிஞரும் எந்த நேரத்திலும் மக்களுக்கு உதவி செய்ய தயாராகவே இருப்பர் என்பதை கூறத்தேவையில்லை.
-சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)
.
பின்குறிப்பு: இந்த பதிவிற்கு மறுமொழி எழுதுவதால் நீதிமன்ற அவதூறு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே உங்கள் கருத்துகளை தைரியமாக பதிவு செய்யலாம்.
Article:
http://makkal-sattam.blogspot.com/2007/10/blog-post_18.html
அம்பேத்கார் தலைமையிலான இந்திய அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக்குழு அதன் பணியை முடித்து நாடாளுமன்றத்திடம் சட்ட வரைவை ஒப்படைத்த நாள் நவம்பர் 26, 1949.
இந்த நாள் ஆண்டுதோறும் இந்தியாவிற்கான சட்ட நாளாக நினைவுகூறப்படுகிறது.
அம்பேத்கார் தலைமையிலான குழு எழுதிய இந்திய அரசியல் சட்டத்தை பலரும் புகழ்ந்து கொண்டிருந்த நிலையில், "இந்திய அரசியலமைப்புச் சட்டம்" என்பது மாற்றப்பட கூடாத வேதப்புத்தகம் அல்ல. குடி மக்களின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றத்திற்குரியதே என்பதை உணர்த்தி, தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடுக்கு வழிவகுக்கும் வகையில் இந்திய அரசியல் சட்டத்தில் முதல் சட்டதிருத்தத்திற்கும் வழி வகுத்தவர் தோழர் பெரியார்.
பெரியாரின் தோழரான திருச்சி வே. ஆனைமுத்து அவர்கள், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் - ஒரு மோசடி” என்ற தலைப்பில் ஒரு புத்தகமே எழுதி வெளியிட்டார். அந்த புத்தகத்தில் அவர் எழுப்பியுள்ள பல விவகாரங்களுக்கு இன்னும் பதில் அளிக்க முடியாத நிலையே உள்ளது.
இதைத்தொடர்ந்து இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் மக்களுக்கு தேவையான வகையில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் மிகக்குறைவே. ஆட்சியில் இருப்பவர்களின் வசதிக்கும். அதிகாரத்தை ஒரிடத்தில் குவிப்பதற்குமே இந்திய அரசியலமைப்பு சட்டம் பலமுறை திருத்தப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகளின் நடுவே, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய அம்சங்களாக அம்பேத்கார் முன்வைத்த பல கொள்கைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. அந்த கொள்கைகளுக்கு எதிரான திசையிலேயே அனைத்து அரசு அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.
குறிப்பாக, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பகுதி-4, அரசு கொள்கைகளுக்கு வழிகாட்டும் கோட்பாடுகள் (DIRECTIVE PRINCIPLES TO STATE POLICY) என்ற பிரிவின்கீழ் பல முக்கிய அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. அவையாவன...
38. மக்களின் நலமேம்பாட்டிற்காக அரசு சமூக ஒழுங்கைப் பாதுகாத்தல்:
(1) பொதுமக்களின் நலன் மற்றும் சமூக மேம்பாட்டிற்காகவும் பாதுகாப்பிற்காகவும், அரசு, நீதி, சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் விவகாரங்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும். தேசிய வாழ்வில் உள்ள எல்லா அமைப்புகளிலும் அவற்றைத்தெளிவு படுத்த வேண்டும்.
(2) அரசு, பொருளாதார ஏற்றதாழ்வுகள் மற்றும் தனிப்பட்டவர்களுக்கிடையில், தனிப்பட்ட குழுக்களுக்கிடையில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல்.
39. சில கொள்கைகளை அரசு பின்பற்றுதல் வேண்டும்:
அரசு குறிப்பாக-
(அ) குடிமக்கள், ஆண்-பெண் பேதமின்றிச் சரிசமமாக வாழ்வதற்குத் தேவையான வசதிகளைப் பெறுவதற்கும்;
(ஆ) உற்பத்தியாகும் பொருள்கள் அனைத்தும் சமுதாயத்தின் பொதுநலன் கருதி அனைவருக்கும் கிடைப்பதற்காக அவற்றின் உரிமை – கட்டுப்பாடு பொதுவாக பகிர்ந்தளிக்கப்படுவதற்கும்;
(இ) செல்வமும், உற்பத்தியும் பொதுத்தீங்கின்றி, தேக்கமடைவதைத் தவிர்க்கும் பொருளாதார அமைப்பை செயல்படுத்துவதற்கும்;
(ஈ) ஆண், பெண் இருபாலாருக்கும் இணையான வேலைக்கு, இணையான ஊதியம் அளிப்பதற்கும்;
(உ) வேலையாட்களின் உடல்நலத்தையும், திறத்தையும், ஆண், பெண், சிறு குழந்தைகள் ஆகியோரை தவறாக பயன்படுத்தாமல் இருப்பதற்கும், மற்றும் குடிமக்களைத் தமது வயதுக்கும் திறனுக்கும் பொருத்தமில்லாத ஒரு வேலைக்குப் பொருளாதார தேவையின் பொருட்டு தள்ளப்படாது தடுப்பதற்கும்;
(ஊ) குழந்தைகள் சுதந்திரமான நிலையில் கண்ணியத்தோடும் நல்வாழ்வுடனும் வளர்வதற்கும், அப்படி வாழ்வதற்கான வசதிகளையும், வாய்ப்புகளையும் அளிப்பதற்கும், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சுரண்டப்படுவதினின்றும் பாதுகாப்பதற்கும், ஒழுக்கம் மற்றும் பொருளாதாரம் காரணமாக நிராதரவாக விடப்படாமல் காப்பதற்கும் தமது கொள்கையை தேர்வு செய்ய வேண்டும்.
40. கிராம ஊராட்சி அமைப்புகள்:
கிராம ஊராட்சிகளை அமைக்கவும், அவை தன்னாட்சி பெற்று செயல்பட தேவையான அதிகாரங்களை வழங்க வேண்டும்.
41. சில தறுவாய்களில் வேலை, கல்வி, பொது உதவிக்கான உரிமை:
வேலை, கல்வி உரிமையின் பொருட்டு, வேலையில்லாதபோது, முதிய வயதினர், நோயுற்றோர், தொழில் புரிய இயலாதோர் மற்றும் தேவையற்ற வறுமையில் வாடுவோர் ஆகியோரை பாதுகாக்கும் வகையில் அரசு கொள்கைகளை வகுக்க வேண்டும்.
42. நியாயமானதும், மனிதத்தன்மையோடு கூடியதுமான தொழில் மற்றும் மகப்பேறு நிவாரணங்களுக்கான வகையங்கள்:
நியாயமானதும் மனிதத்தன்மையோடு கூடியதுமான தொழில் மற்றும் மகப்பேறு நிவாரணங்களைப் பாதுகாப்பதன் பொருட்டு, அரசு வகையங்களை உருவாக்க வேண்டும்.
43. வேலையாட்களுக்கான வாழ்வூதியமும் இன்ன பிறவும்:
வேளாண்மை, தொழிற்சாலை மற்றும் வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வாழ்வூதியம், நாகரிகமான வாழ்க்கைத்தரத்திற்கு உறுதியளிக்கும் வகையிலான தொழில்கள், போதுமான ஓய்வு, சமூக மற்றும் பண்பாட்டுக்கான வாய்ப்பு ஆகியன கிடைப்பதற்கு உரிய முயற்சிகளைத் தகுந்த சட்டத்தின் வாயிலாகவும் அல்லது பொருளாதார அமைப்புகள் மூலமாகவும் அல்லது வேறு ஏதேனும் வகையிலும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
43அ. தொழிற்சாலைகளில் நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கேற்றல்:
தொழிற்சாலைகளை நடத்தும் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் அல்லது நிர்வாகங்களின் நிர்வாகப்பணியில், தொழிலாளர்கள் பங்கு கொள்ளும் வகையில், அரசு தகுந்த சட்டத்தின் மூலம் அல்லது வேறு ஏதேனும்வகையில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
44. குடிமக்களுக்கு ஒரே மாதிரியான உரிமையியல் சட்டம்.
குடிமக்களுக்கு இந்திய நிலவரை முழுவதும் ஒரே மாதிரியான உரிமையியல் சட்டத்திற்கு அரசு முயற்சித்தல் வேண்டும்.
45. ஆறு வயதுக்கு உட்பட்ட இளங்குழந்தைகளைப் பாதுகாப்பதும் கல்வி அளிப்பதும்:
ஆறு வயது நிறைவடைகின்றவரையில் அனைத்து இளங்குழந்தைகளையும் பாதுகாக்கவும் அவர்களுக்குக் கல்வி அளிக்கவும் அரசு முயற்சிக்க வேண்டும்.
46. பட்டியல் மரபினர், பட்டியல் பழங்குடி மரபினர் மற்றும் வேறு பலவீனப்பிரிவினர்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்:
பலவீனப் பிரிவு மக்களிடையே பொருளாதார மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கு அரசு சிறப்பாகக் கவனம் செலுத்த வேண்டும். அதிலும் குறிப்பாகப் பட்டியல் மரபினர் மற்றும் பட்டியல் பழங்குடி மரபினரின் பொருளாதார மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கு அரசு சிறப்பாகக் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானதாகும். மற்றும் அவர்களை சமூக அநீதியினின்றும், அனைத்து வித சுரண்டல்களிலிருந்தும் பாதுகாத்தல் வேண்டும்.
47. ஊட்டச்சத்து, வாழ்க்கைத்தரம், உடல்நல மேம்பாட்டை உயர்த்துவதற்கான அரசின் கடமை:
ஊட்டச்சத்தை மேம்படுத்துவதையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதையும் உடல்நலத்தை உயர்த்துவதையும் அரசு தமது கடமையாக கொள்ளவேண்டும். அதிலும் குறிப்பாக போதையூட்டும் மதுபானங்கள், போதைமருந்துகள் ஆகியன மருந்துக்காக பயன்படுத்துவதைத் தவிர வேறுவிதமாக பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
48. வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புக்கான அமைப்பு:
வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புக்கு நவீன அறிவியல் முறைகளைப் புகுத்துவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக உயர்ரகக் கால்நடைகளைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவற்கும் பசுக்கள், கன்றுகள் மற்ற பால்தரும் விலங்குகள் வறட்சியுள்ள கால்நடைகள் ஆகியவற்றைக் கொல்வதைத் தடுப்பதற்கும் வேண்டிய முயற்சிகளை அரசு எடுத்தல் வேண்டும்.
48அ. சுற்றுச்சூழலை பாதுகாத்தலும், மேம்படுத்தலும் மற்றும் வனங்கள் வனவிலங்குகளை பாதுகாத்தலும்:
நாட்டின் சுற்றுச்சூழலை, அரசு பாதுகாக்கவும், மேம்படுத்தவும் வேண்டும். மற்றும் நாட்டின் வனங்கள், வனவிலங்குகளை பாதுகாத்தல் வேண்டும்.
49. தேசிய முக்கியத்துவமுள்ள நினைவுச்சின்னம், இடங்கள், பொருள்களைப் பாதுகாத்தல்:
தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்று அறிவிக்கப்பட்ட நினைவுச்சின்னம், அல்லது இடம் அல்லது கலைப்பொருட்கள் அல்லது வரலாற்றுச்சின்னங்களைச் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சிதைப்பது, நீக்குவது, முடிவு செய்வது அல்லது ஏற்றுமதி செய்வதினின்று பாதுகாப்பது ஆகியவை அரசின் கடமை.
50. நிர்வாகத்தினின்று நீதித்துறையைத் தனியே பிரித்தல்:
அரசின் பொதுப்பணியிலிருந்து நீதித்துறையைத் தனியாகப் பிரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
....என்பன உள்ளிட்ட மக்கள் நல அம்சங்கள் அரசின் கொள்கைகளுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளாக இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 37, “இந்தப்பகுதியில் காணப்படும் கொள்கைகள் அனைத்தும் நாட்டின் ஆட்சிமுறைக்கு அடிப்படையானவைகள்; இந்த கொள்கைகளின் அடிப்படையில் சட்டங்களை இயற்றுவது அரசின் கடமை” என்று கூறப்பட்டிருந்தாலும், “இந்த அம்சங்களை நீதிமன்றத்தின் மூலம் அமல்படுத்த முடியாது” என்றும் கூறப்பட்டுள்ளது.
அதாவது, இந்த அம்சங்களை நிறைவேற்றுமாறு உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டபோது சுதந்திர இந்தியாவின் வயது இரண்டுதான். அந்த நிலையிலேயே மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் கோரி வழக்குகள் தொடரப்பட்டால் நிர்வாகம் ஸ்தம்பித்துவிடக்கூடும் என்ற நிலையில் இந்த பிரிவு 37 எழுதப்பட்டது. காலப்போக்கில் அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளில் சொல்லப்பட்ட அம்சங்களை உள்ளடக்கிய சட்டங்களை இந்திய ஆட்சியாளர்கள் நிறைவேற்றி விடுவார்கள் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த சட்டப்பிரிவு உருவாக்கப்பட்டது.
ஆனால் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் இந்த அம்சங்கள் நிறைவேற்றப்படவில்லை என்பதோடு இந்த அம்சங்களுக்கு எதிரானதும், மக்கள் விரோத தன்மை கொண்டதுமான பல சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் அரசியல் சட்டத்தின் பிரிவு 37 நீடிப்பது மக்களுக்கு எதிரானது.
இந்தியாவில் உள்ள சட்டங்களில் அரசியலமைப்பு சட்டமே மேலானது; இந்த அரசியலமைப்பு சட்டத்தின் கொள்கைகளுக்கு எதிரான சட்டங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டியதே உச்ச நீதிமன்றம் உள்ளடக்கிய நீதித்துறையின் முதன்மை பணியாகும். ஆனால் இன்றைய நிலையில் உலகமயம்; தனியார்மயம்; தாராளமயம் என்ற அடிப்படையில் இயங்கும் அரசு அமைப்புகள் உலக வர்த்தக கழக நிபந்தனைகளின்படி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கொள்கைகளுக்கு நேரெதிரான பல சட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
புதிய பொருளாதாரக்கொள்கை இந்தியர்களின் வாழ்வை மருத்துவத்துறையில் மட்டுமல்ல, விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தலைகீழாக மாற்றி வருகிறது.
மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி, மருத்துவம், உணவுப்பொருள் உற்பத்தி மற்றும் வினியோகம் உள்ளிட்ட அனைத்தும் தனியார்மயமாக்கப்படுகிறது. மதுபான விற்பனை, மணல் விற்பனை போன்ற தேவையற்ற துறைகளில் அரசு ஈடுபடுகிறது.
தொழிலாளர் நலன் காக்கும் சட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள் அனைத்தும் செயலற்றுப்போகும் வகையில் நடைமுறைகள் மாற்றியமைக்கப்படுகின்றன.
அனைத்துத்துறை பணியாளர்களும் எந்தவிதமான சமூக பாதுகாப்புமின்றி நிராதரவான நிலையில் உள்ளனர். இந்த நிலை காரணமாக முதியவர்கள் மற்றும் நோயாளிகள் வீட்டில் இருந்து விரட்டப்படும் நிலை உருவாகி வருகிறது.
கல்வி தனியார் மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிக விலை கொடுத்தே உயர்கல்வி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எதைச்செய்தாவது பொருள் ஈட்டுவதே பிழைக்கும் வழி என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் மாட்டிக்கொள்ளாமல் தவறு செய்பவன் சாமர்த்தியசாலி என்ற கருத்தாக்கம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
பெரிய தவறுகளை செய்பவர்கள், அரசியல் தலைவர்களாகவும், சிறிய தவறுகளை செய்பவர்கள் குற்றவாளிகளாகவும் மாறும் நிலை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக சமூகத்தில் யாருக்குமே எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாத நிலை நிலவுகிறது.
இதெல்லாம் இப்போதுதான் தெரியுமா? அப்போதே எச்சரித்திருக்கலாமே என்ற கேள்வி எழலாம். அப்போதும் இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்தன.
உலக வர்த்தக கழகத்தின் முன்னோடியான காட் (General Agreement on Trade and Tariff) ஒப்பந்தத்தை வரைந்த டங்கல் என்பவரின் பரிந்துரைகளை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஏ.தேசாய், சின்னப்ப ரெட்டி, வி.ஆர். கிருஷ்ணய்யர், தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சார் ஆகியோர் பரிசீலித்தனர்.
பின்னர் அவர்கள் அளித்த அறிக்கை மிக முக்கியமானது.“சந்தைக்கு இணக்கமான பொருளாதாரம், தாராளமயமாக்கல், உலகப்பொருளாதாரத்துடன் இணைத்தல், பெருமளவு அன்னிய முதலீட்டுடன் கூடிய தனியார் மயமாக்கல் முதலியன இந்திய தொழில்களின் வளர்ச்சி, இந்திய அரசியல் சட்ட விதிகள் 14, 19, 21-ன் கீழான அடிப்படை உரிமைகளுக்கு எதிரானவை ஆகும்.”
“இந்திய அரசியல் சட்டம் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கிறது. மாநிலங்களுக்கென சில அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அரசியல் சட்டவிதி 13, 14-ன் கீழ் மத்திய அரசுக்குக் கிடைக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் இந்த கூட்டாட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் எதுவும் இல்லை” என்று அந்த அறிக்கையில் தெள்ளத்தெளிவாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விமரிசனம் விழ வேண்டியவர்களின் காதுகளில் இன்று வரை விழவில்லை. எனவே மக்கள் எக்கேடு கெட்டாலென்ன? என்ற போக்கிலேயே அனைத்து அரசு அமைப்புகளும் இயங்குகின்றன. மாநில சுயாட்சி குறித்து உரத்து முழங்கிய கட்சித்தலைவர்கள்கூட பில்கேட்ஸூக்கும், அவரது உள்நாட்டு எடுபிடிகளுக்கும் காவடி தூக்கும் அவலநிலை நிலவுகிறது.
இதற்குத்தானா இந்தியா சுதந்திரம் பெற்றது?
அப்படியானால் “இந்திய அரசியல் அமைப்பு சட்டம்” உண்மையிலேயே ஒரு மோசடிதானா?
இந்த கேள்விகளுக்கான பதில் அரசியல்வாதிகளிடமும், ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்களிடமும், சட்டத்துறை சார்ந்தவர்களிடம் மட்டுமே இல்லை.
இந்தியாவில் உருவாகும் அனைத்து சட்டங்களும், பொது மக்களாகிய நாம் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம்தான் நிறைவேற்றப்படுகிறது. எனவே நல்ல சட்டங்களோ, கெட்ட சட்டங்களோ - அவை உருவாவதில் நமது பங்கும் இருக்கிறது.
என்ன செய்யப்போகிறோம்?
-சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)
Article:
http://makkal-sattam.blogspot.com/2007/11/blog-post_25.html
பயிற்சி முடித்த மருத்துவ மாணவர்கள் கிராமப்புறங்களில் ஓராண்டு பணியாற்ற வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணியின் அறிவிப்பு கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.
தங்களுடைய கல்விக்காலத்தை மேலும் ஓர் ஆண்டு நீடிக்கக்கூடாது என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நன்றி: தினமலர், 8 செப்டம்பர் 2007
இந்தப்பிரசினை மருத்து மாணவர்கள், இடதுசாரிகள், தமிழக முதலமைச்சர் மட்டுமே சார்ந்த விவகாரம் அல்ல. கிராமப்புறங்களில் வாழும் கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதார பிரசினை.
விவசாயத்திற்கான மானியங்கள் வெட்டு, மின்வெட்டு, நீர் ஆதார பிரசினைகள், மரபணு தொழில் நுட்பத்தின் படையெடுப்பு, மணல் கொள்ளை போன்ற பலவித பிரசினைகளில் சிக்கியுள்ள விவசாயிகளுக்கு நல்லது செய்ய முடியாவிட்டாலும் அவர்களுக்கு கிடைக்கும் அத்தியாவசிய தேவைகளையும் கிடைக்கவிடாமல் செய்வதில்தான் நம் அரசியல் தலைவர்களுக்கு எத்தனை ஆர்வம்?
பசுமை விகடன் இதழில் வெளிவந்த அந்த விவசாயிகளின் குரலை சற்று கேட்போமா



ச்சும்மா சிரிச்சிட்டு போயிடாதீங்க சித்தப்பு.... சிந்திங்க!
ஓவியம்: ஹரன் (HARAN)
நன்றி:
செப்டம்பர் 25, 2007
மருத்துவ மாணவர்களுக்கு பரிந்து பேசும் இந்த அரசியல் தலைவர்கள், விவசாயிகளின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
i am very impressed by your blog, even though i am not entirely areeing with your view point.
1st...doctors going to villages. my father worked almost all of his medical career as govt doctor,in villages. i went to schools where the class room was some shade under trees.
to a great extent my education was home based.i wanted to do what my father did, but good or bad i didnot get into public service so lost the chance of working in villages.now it is utmost important that medical graduates understand that they are accountable to the patients from whom they learn.however this'going to village law' has already been there, but couldnot be implemented due to our common corruption. my father couldnot even complete terms properly as someone who wanted to do private practice will bribe the local minister and get postings and we will be transferred. this happens even today. so all thsoe doctors who are nto interested in bribing will go to villages unwillingly ,take leave and the system will rot.when apparently there is corruption in getting into madras medical college specifically as a student ,how do you think there is going to be faireness?regarding aptitude, you can assess all that but after graduation in western countries as well the same problem of doctors not going to rural area exists.
if you ask me, first while they are medical students ,they need to learn to respect the poor patients, get their permission to examine, give more rights to patients to agree or refuse to be part of education.
secondly,make medical ethics as a subject should be taught more vigorously.a very good story is sujatha's nagaram. it is so crystal clear to see how docotrs have no clue about the cultural ,economic issues of patients.
three, doctors will go abroad, as life is competitive for them and much more tuff.HOWEVER there is a way of addressing this issue.it is just as govt is thinking of imposing tax on business schools,and iit graduates who leave the country, doctors ,i mean govt students who leave for abroad, should pay after they go to greener pastures.this money can be very well used to address our abyssmall inadequate health funding.
regarding the sidda issue that you have raised in your previous post...
totally agree that quacks should be done with. but did our olden day sidda vaidyars have the qualification that you are talking about. china had a concept called barefoot doctors.these 10th passed people could have very well filled in that role. i am not sure this whole worry about quackery is needed.one of my friends has trained so many +2 passed dalith young people in allopathy based medicine. diagnostics, treatement etc, so that they can be of use to some of our villagers. they are doing good job. they are pretty safe.
the whole issue of money comes because doctors have made medical practice very exclusive.
when i was getting trained there was a famous book which some of us cherished..it is called' where there is no doctor.'i do beleive monopoly has to be addressed.
சர்வதேச வட்டி நிறுவனங்களின் முற்றுகையில் தமிழக மாநகராட்சிகள்
மருத்துவர் ரமேஷ்
‘ஜவஹர்லால் நேரு தேசிய நகரப் புனரமைப்புத் திட்டத்திற்கு' குறைந்தது ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று கூறப்படுகிறது.
இந்தப் பணத்திற்கு எங்கே போவது? என்ற கேள்வி உடனே எழும். இந்தத் திட்டத்தை நடத்த வேண்டும் என்ற ஆலோசனையை முதன் முதலில் மத்திய அரசுக்கு யார் கொடுத்தது என்பதை அறியும் போது திட்டத்திற்குத் தேவையான பணம் எங்கிருந்து யாரால், எதற்காக வரப் போகிறது என்பது புரியத் தொடங்கும்.
இந்திய நகரங்களில் வாழும் மக்களின் அடிப்படை வசதிகளை மாற்றி அமைக்கும் "மெகா' திட்டம் ஒன்றை உருவாக்கினால் தனக்கு சாதகமான அரசியல், பொருளாதார சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ள முடியுமா என்று 1990ம் ஆண்டில் அமெரிக்க அரசு சிந்திக்கத் தொடங்கியது. இந்தப் பணியை நடத்தி முடிப்பதற்காக அதன் ‘கொடை' நிறுவனமான ‘சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனம்' களம் இறக்கி விடப்பட்டது.
1993ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து USAID நிறுவனம் புதுடெல்லியில் உள்ள ‘நகரங்களுக்கான தேசிய ஆய்வு நிறுவனத்துடனும்', (NIUA) வீடுகள் கட்டக் கடன் கொடுக்கும் மத்திய அரசு நிறுவனமான HUDCOவுடனும், நாட்டின் அடிப்படை வசதிகளை மாற்றி அமைப்பதற்காக அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு வட்டிக்குக் கொடுத்து வந்த ஐ.எல்.எஃப்.எஸ் என்ற கந்து வட்டிக் கம்பெனியுடன் சேர்ந்து இதற்கான பல்வேறு செயல்களில் ஈடுபட ஆரம்பித்தது. FIRE(D) என்று இந்தத் திட்டத்திற்கு பெயர் சூட்டப்பட்டது. பொதுத்துறைக்குக் கடன் கொடுக்கும் வட்டி நிறுவனங்களை மாற்றி அமைப்பதும், அவற்றைப் பரந்த அளவில் வளர்த்து விடுவதுமே FIRE(D) என்ற பெயருக்கான் பொருளாகும்.
USAID இன் செயல்பாடுகள் மட்டும் போதாது என்று அமெரிக்க அரசு நினைத்ததோ என்னவோ உலக வங்கியும் இதற்கான பணியில் இறங்கியது. 1980 களின் இறுதியில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள நகரங்களின் அடிப்படை வசதிகளை மாற்றியமைப்பதற்காக உலக வங்கி கடன் கொடுக்கத் தொடங்கியது. தமிழ்நாடு நகர வளர்ச்சிக்கான நிதி (TNUDF)என்பது இதன் பெயராகும். இந்த நிதியை நிர்வகிப்பதற்கு 1996ம் ஆண்டின் போது தமிழ்நாடு அரசையும், ஐ.சி.ஐ.சி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி., ஐ.எல்.எஃப், எஸ் ஆகிய கந்து வட்டிக் கம்பெனிகளையும் உறுப்பினர்களாகக் கொண்டு TNUIFSL என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் 51% பங்குகளை மேற்கூறிய கந்துக் கம்பெனிகளும், 49% பங்குகளை தமிழ்நாடு அரசும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று உலக வங்கி பார்த்துக் கொண்டது. இதன் காரணத்தால் TNUIFSL நிறுவனத்தின் அனைத்து இறுதி முடிவுகளையும் இந்த வட்டிக் கம்பெனிகளே முடிவு செய்யும் நிலை ஏற்பட்டது.
மேற்கூறிய இரண்டு திட்டங்களும் முதலில் சிறிய அளவில், நகரங்களின் குறிப்பான வசதிகளை மாற்றி மைக்கும் திட்டங்களுக்கு வட்டிக்குக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டன. இவ்வாறு ஈடுபட்ட போது தான் இரண்டு முக்கிய பிரச்சினைகள் ஆகியவற்றின் கவனத்திற்கு வந்தன. இது போன்ற திட்டங்களுக்கு வட்டிக்கு விடும் போது வட்டிப் பணத்திலிருந்து கூடுதல் ஆதாயம் பெற வேண்டும் என்றால் அதற்கு சாதகமாகத் திட்டத்தை வளைத்துக் கொடுக்கும் பொறயாளர்களின் துணை அவசியம் என்பது முதல் படிப்பினை, வட்டிக்கு வாங்கும் உள்ளாட்சி நிர்வாகங்களில் இருந்து இந்தக் கந்து வட்டித் திட்டத்தை எதிர்த்துக் குரல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? அரசிடம் கூட்டு வைக்காமல் இதை சாத்தியமாக்க முடியாது என்பதை அவை முதலில் புரிந்து கொண்டன. வட்டிக்கு வாங்கும் உள்ளாட்சித் நிர்வாகங்களுக்கு அரசிடம் இருந்து கூடுதல் இலவசத் திட்டங்களைப் பெற்றுக் கொடுப்பதன் மூலமாக எதிர்ப்பை சமாளிக்க முடியும் என்ற படிப்பினையை அவை அடைந்தன.
இவைதவிர, வட்டிக்கு வாங்கும் உள்ளாட்சி நிறுவனங்கள் வட்டியை ‘ஒழுங்காக'த் திருப்பிக் கட்டுவார்களா என்பதைத் தெரிந்து கொள்ளாமல் பணத்தை முதலீடு செய்ய முடியுமா? சிரத்தையுடன் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி நிறுவனிங்களே சில சமயம் வட்டியைத் திருப்பிக் கட்டத் தவறி விட்டால், அதை வசூலிக்க என்னென்ன முறைகளைக் கையாள வேண்டும்? என்கிற கேள்விகளையும் அவை சந்தித்தன.
உள்ளாட்சி நிறுவனங்களின் வரவு செலவுகணக்குப் புத்தகத்தை நிர்வகிக்கும் முறையை மாற்றி அமைத்தால் ஒழிய எந்தெந்த உள்ளாட்சி நிறுவனங்களால் வட்டிப் பணத்தைத் திருப்பி அடைக்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாது என்பதை அவை உணர்ந்து கொண்டன. இதன் காரணமாகவே உள்ளாட்சியின் நிதி நிலையைத் தெளிவாகத் தெரிவிக்கும் கணினி மயப்படுத்தும் திட்டத்தை உள்ளாட்சி நிர்வாகங்களைக் கடைப்பிடிக்க வைக்க வேண்டும் என்று அவை முடிவு செய்தன. மாநில அரசுகளின் உதவி கொண்டு இதனை நடைமுறைப்படுத்தவும் தொடங்கியிருக்கின்றன.
மேலும் வட்டிக்கு கொடுக்கப்படும் பணத்திற்கு ஈடாக உள்ளாட்சிகளின் வருவாய் நிதியை ஈடாக எழுதி வாங்கினால் ஒழிய வட்டிப் பணத்திற்கு உத்தரவாதம் இல்லை என்பதை அவை உணர்ந்து கொண்டன. இதன் காரணமாகவே வட்டிக்கு வாங்கும் உள்ளாட்சி நிர்வாகங்கள் தம் வருடாந்திர வருவாயை வட்டி நிறுவனங்களால் பரிந்துரை செய்யப்பட்டும் வங்கிகளில் ஈடாகக் கட்டிய பின்னரே பணத்தையும் எப்போதும் போல உபயோகிக்க வேண்டும் என்றும், வட்டியைக் கட்டத் தவறும் போது ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்டதற் கிணங்க ஈட்டை நிர்வாகித்து வரும் வங்கியனாது உள்ளாட்சி நிர்வாகத்தை கேட்காமலேயே அந்த வருடத்திற்கான வட்டியையும் அசலையும் கழித்து வட்டி நிறுவனத்திற்கு அனுப்பிக் கொள்ளலாம் என்றும் கூறுகின்ற திட்டத்தை அவை உருவாக்கின.
திருப்பூர் நகரத்தின் கூட்டுக் குடிநீர் பாதாள சாக்கடைத் திட்டம், பூனா நகரத்தின் குடிநீர் சாக்கடைத் திட்டம், பெங்களூர் குடிநீர்த் திட்டம், சென்னை மெட்ரோ வாட்டர் திட்டம், ஆலந்தூர் பாதாள சாக்கடைத் திட்டம், நாகபுரி/ விஜயவாடா/ திருப்பூர் நகரங்களின் திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்கள், மதுரை பை பாஸ் ரோடு திட்டம், கூரர் கட்டணப் பாலத் திட்டம், கோவை நகரின் எல் டி ஆத்துப்பாலம், ஆகிய திட்டங்களில் இருந்து USAIDம் உலக வங்கியும், மேற்கூரிய கந்து வட்டி நிறுவனங்களும் தமக்கான ஆரம்பக் கல்வியைக் கற்றுத் தெளிந்தன.
இந்தத் தெளிவின் அடிப்படையில் இயங்கியதால் இந்த நிறுவனங்களின் பண பலமும், மத்திய, மாநில அரசுகளிடம் இருந்த செல்வாக்கும் பல்கிப் பெருகின. சிறிய திட்டங்களில் இருந்து கற்ற பாடங்களை ‘மெகா' திட்டமாக நாடு முழுவதிலும் ஈடுபடுத்துவதற்கான காலம் 2004ம் ஆண்டில் கனிந்தது. இதற்கான திட்டத்தை NIUA உதவியுடன் அவர்கள் தயாரிப்பதில் ஈடுபட்டனர். இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் ஜூலை 2005ம் ஆண்டு அமெரிக்க விஜயமும், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் பிப் 2006ஜுலை மாதத்திய இந்தியப் பயணம் இந்தத் திட்ட தயாரிப்புக்கு மிகப் பெரிய ஊக்கத்தை அளிப்பதாக அமைந்தது. இவ்வாறு தீட்டப்பட்ட திட்டம் 2005 டிசம்பரில் 'ஜவஹர்லால் நேரு நகரப் புனரமைப்புத் திட்டம்' என்ற பெயரில் பிரதமர் அவர்களால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது'.
இத்திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியின் ‘உள் கட்டமைப்பு வசதிக்கு 35000 கோடி ரூபாயும், கோவை மாநகரின் உள் கட்டமைப்பு வசதிக்கு 3186 கோடி ரூபாயும் மதுரை மாநகருக்கு 3000 கோடி ரூபாயும், ஒதுக்கியது. சோழியன் குடுமி சும்மாவா ஆடும்? நாம் கோவை மாநகரை மட்டும் இந்த இதழில் பார்ப்போம்.
இந்தியாவின் மற்ற 62 நகர மக்களைப் போலவே, கோவை நகர திட்டம் குறித்து தெரிந்திருக்கவில்லை. நம் கருத்துகளைக் கேட்காமலேயே நம் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மேற்கூறிய கந்து ந்தே செயல்பட்டு வரும் அமெரிக்க ரோடு போடும் கம்பெனியான "வில்பர் ஸ்மித் அசோசியேட்ஸ்' நிறுவனத்துடன் மாநகராட்சி ஒப்பந்தம் செய்து கொணடது. ஜுலை 2006ல் திட்ட அறிக்கையை அந்த நிறுவனம் மாநகராட்சியிடம் சமர்ப்பித்தது.
நகர மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 3186 கோடி ரூபாய் தேவைப்படும் என்று கூறிய அந்த அறிக்கை. இந்தப் பணத்தில் சுமார் 908 கோடி ரூபாயை மாநகராட்சி திட்டம் பட்சத்தில் (அல்லது அதற்கான உத்தரவாதத்தை அளிக்கும் பட்சத்தில்) ஜவகர் திட்டத்தின் கீழ் மீதியுள்ள 2278 கோடி ரூபாயை மத்திய, மாநில அரசுகள் இலவசமாக வழங்கும் என்று அறிவித்தது. வரவுக்கும், செலவுக்குமே சரியாக இருக்கும் நிதியைக் கொண்டிருக்கின்ற மாநகராட்சியால் 908 கோடி ரூபாயை எப்படித் திரட்ட முடியும்? ஆனால் இந்தப் பணத்தைத் திரட்டாவிட்டால் 2278 கோடி இலவசப் பணம் கிடைக்காது என்ற கிடுக்கிப் பிடி போடப்பட்டது.
இந்த இக்கட்டான பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்ற ஆலோசனையையும் அது வழங்கியது. ‘908 கோடி ரூபாயை மாநகராட்சி ஏன் திரட்ட வேண்டும்? அந்தப் பணத்தை தனியார் நிறுவனங்களை முடக்கச் செய்வது மக்கள் வசதிக்கான திட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பையும் அவர்களிடமே ஒப்படைத்து விடலாமே', என்று ஐடியா கொடுத்தது. ‘இவ்வளவு பணத்தை முடக்கத் தனியார் முன் வருவார்களா? இதில் உத்தரவாதமாக லாபம் கிடைக்கும் என்று நம்பாதவரை அவர்கள் எப்படி இதில் ஈடுபடுவார்கள்? இருக்கும் மிகக் குறைந்த அவகாசத்தில் தனியார் நிறுவனங்களை புரிய வைத்து இதில் ஈடுபடுத்துவது சாத்தியம் தானா' என்ற கேள்விகள் எழுந்த போது அவற்றிற்கும் பதில்கள் தயாராயிருந்தன.
"தனியார் கம்பெனிகளை இதில் ஈடுபடச் செய்யும் பொறுப்பை TNUIFSL நிறுவனத்தை நிர்வாகித்து வரும் "ஐ.எல்.எஃப். எஸ்., ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்,டி.எஃப்.சி' ஆகிய நிறுவனங்களிடம் விட்டு விடுங்கள். அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள்!'
"இது நிச்சயம் நடக்கும்! ஏனென்றால் இந்தத் திட்டங்களை ஏற்று நடத்த முன் வரும் எந்த நிறுவனமும் தன் சொந்தப் பணத்தில் ஒரு ரூபாயைக் கூட இதில் ஈடுபடுத்தத் தேவை இல்லை! ஐ.எல்.எஃப்.எஸ்., ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி ஆகிய நிறுவனங்களை குறைந்த வட்டிக்கு கொடுக்கத் தயாராயிருக்கின்றன. மேலும் திட்டத்திலிருந்து மாநகராட்சி நிர்வாகமானது எதிர்காலத்தில் திமிறி வெளியேறி விடாமல் இருப்பதை உறுதி செய்யும் ‘ஈட்டுப் பத்திரங்களை' மாநகராட்சியிடம் எப்படி எழுதி வாங்க வேண்டும் என்பதிலும் அவர்களுக்கு 10 வருட கால அனுபவம் இருக்கிறது. எனவே தான் அவர்கள் உத்தரவாதம் கொடுத்தால் ஜவகர் திட்டத்தின் மத்திய, மாநில அரசுகளின் இலவசப் பணம் உடனடியாகக் கிடைக்கும்' என்று ஆலோசனை கூறப்பட்டது.
என்ன காரணத்தாலோ 2007 மார்ச் மாதத்தில் தமிழ்நாடு அரசானது தான் கொடுக்க வேண்டிய 20% பங்குப் பணத்தை வழங்கப் போவதில்லை என்று அறிவித்தது. 7 வருடங்களில் திருப்பிக் கொடுக்க வேண்டிய வட்டியில்லாக் கடனாகவே இந்தப் பணத்தை அதன் ‘டுபிட்கோ' நிதி நிறுவனம் அளிக்கும் என்று கூறியது. மத்திய அரசின் ஜவகர் இலவசப் பணத்தைப் பெற வேண்டும் என்றால் ஐ.எல்எப்.எஸ்., ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி நிறுவனங்களை நாடுதைதøத் தவிர வேறு வழியே இல்லை என்ற கட்டாய நிர்ப்பந்தத்திற்கு மாநகராட்சியை தமிழ்நாடு அரசின் இந்த முடியுவு தள்ளியது.
வில்பர் ஸ்மித் நகர மேம்பாட்டு அறிக்கையால் முன் வைக்கப்பட்ட திட்டங்களின் அடிப்படையில் ‘விரிவான திட்ட அறிக்கைகளை' தயாரிக்க 2006ம் வருடத்தின் இறுதியில் மேற்கூறிய வட்டிக் கம்பெனிகள்.
கூறிய ஆலோசனையின் அடிப்படடயில் தனியார் ஆலோசனை கம்பெனிகளுடன் மாநகராட்சி ஒப்பந்தம் செய்து கொணடது. 2007 பிப்ரவரியில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக சமர்ப்பிக்கப்பட்டு வரும் இந்த அறிக்கைகளுக்குத் தொழில்நுட்ப அங்கீகாரத்தை மத்திய நகர்ப்புற அமைச்சகம் அளிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த குறிப்பான திட்டங்களுக்குத் தேவையான மாநகராட்சியின் பங்குப் பணமான30%ற்கு மேற்கூறிய கந்து வட்டிக் கம்பெனிகள் உத்தரவாதம் அளித்திருப்பதால் மத்திய அரசு தன் 50% இலவசப் பணத்தையும், மாநில அரசு தன் 20% வட்டியில்லாக் கடனனுக்கான பணத்தையும் கொடுப்பதாக ஒத்துக் கொண்டுள்ளன.
இன்றைய தேதியில் கோவை நகருக்கான மூன்று திட்டங்கள் மேற்கூறிய கட்டங்களைக் காத்திருக்கின்றன. நகரத்தின் குப்பைகளை ‘அறிவியல்' ரீதியாக அகற்றப் போகும் ‘திட்டக் கழிவு மேலாண்மைத் திட்டமும்' நகரின் 90 குடிசைப் பகுதி மக்களுக்கு "மிகக் குறைந்த' விலையில் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டமும், பில்லூர் இரண்டாம் கட்டத் திட்டமுமே இந்தத் திட்டங்களாகும்.
இவற்றில் முதலில் 97 கோடி ரூபாய்க்கான குப்பை அகற்றும் திட்டத்தில் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளில் பங்கேற்க வருமாறு உலக நிறுவனங்களை அழைக்கும் அறிக்கையை மாநகராட்சியின் சார்பில் ஐ.எல்.எஃப்.எஸ் நிறுவனம் தயாரித்தது.
இவ்வாறாக, ஜவகர் திட்டம் கோவையை சூழத் தொடங்கியிருக்கிறது.
இனி நம் கோவை மாநகரம் சந்திக்கப் போவது சுதந்திரத்தையா? சர்வ நாசத்தையா? ஜூலை 4 அமெரிக்க நாட்டின் சுதந்திர தினம்.
ஆகஸ்டு 6 1945ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்க ராணுவம் வெடிகுண்டை வீசி சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மனிதர்களையும், எண்ணிலடங்கா உயிர்களையும், விநாடிகளில் சாம்பலாக்கி, தற்செயலாகத் தப்பிப் பிழைத்த பிற மக்களுக்கும், பல்வேறு புற்றுநோய்களைக் கொடையாகக் கொடுத்த பேய் நாள் அது.
ஈராக் நாட்டின் மீது பல்லாயிரம் டன் பயங்கர வெடிகுண்டுகளை வீசித் தாக்கிய போர்க்கப்பலில் ஒன்றான யு.எஸ்.எஸ்.நிமிட்ஸ், சென்னைத் துறைமுகத்தில் அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று நங்கூரம் பாய்ச்சி நிற்கிறது. ஈராக்கில் போரிட்டுக் களைத்துப் போன அதன் கூலிப் படையினருக்கு உல்லாசமாக அவர்தம் நாட்டின் சுதந்திர நாளைக் ‘கொண்டாடிட' சென்னை நகரின் நட்சத்திர விடுதிகளில் விலைக்காகத் தம் உடல்களை விற்கத் தயாராயிருக்கும் நம் நாட்டு மகளிர்களைத் தனியார் ஒப்பந்தக்காரக் கம்பெனிகள் ஏற்பாடு செய்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. நிற்க. இதற்கும் கோவை மாநகருக்கும் என்ன சம்பந்தம்?
பணம் மற்றும் அதிகாரத்தைத் தவிர வேறு எதுவும் அவசியம் இல்லை என்று கருதம் அமெரிக்க நாட்டரசின் சுதந்திர தினத்தன்று தான் கோவை மாநகராட்சியானது நகரத்தின் குப்பைகளை அகற்றும் திட்டத்தில் பங்கேற்பதற்காக சர்வதேச அளவில் ‘குப்பைகளை அள்ளி' பெரும் லாபம் சம்பாதித்து வரும் சர்வதேச தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடும் "சர்வதேச அளவில் ஒப்பந்தம் கோரும்' அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
இனி வரும் வருடங்களில் 3186 கோடி ரூபாய்க்கான திட்டங்களை நகரில் சர்வதேச தனியார் நிறுவனங்களைக் கொண்டு நடைமுறைப்படுத்தப் போவதாக இது வரை வெறுமனே வாயாடிக் கொண்டிருந்த மாநகராட்சி நிர்வாகம் இந்தத் திட்டங்களின் முதல் படியான 96.51 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘நகரின் குப்பைகளை அகற்றும்' திட்டத்தை அமெரிக்க நாட்டின் நிமிட்ஸ் அடியாள் கப்பலின் கூரைகள் சென்னையின் ஐந்து நட்சத்திர விடுதிகளில் தாம் ஈராக் நாட்டில் கொள்ளையடித்த டாலர்களை நம் இனப் பெண்களிடம் விட்டெறிந்து மிருக போதையில் ஆடித் திளைத்துக் கொண்டிருக்கும். அந்தப் ‘புனித' வேளை பார்த்துத் தான் வெளியிட்டிருக்கிறது.
இவ்வாறு வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் ஒப்பந்தம் கோரப் போகும் ‘குப்பை' முதலாளிகளின் விண்ணப்பங்களை மாநகராட்சி என்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாம்?
ஆகஸ்டு 6ம் தேதியன்று!
அதாவது ஹிரோஷிமா நகரில் அமெரிக்க அரசு பேயாட்டம் இட்டு இந்தப் பூவுலகிடம் இப்படியும் ஒரு பயங்கரன் இருப்பதாக அறிவித்துக் கொண்ட அதேநாளில்!!
இந்த நாட்களை மாநகராட்சி தற்செயலாகத்தான் தேர்ந்தெடுத்ததா? சர்வதேச அளவிலும், மானுட வரலாற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்த நாட்களை மனதில் வைத்து அதற்கேற்ப மாநகராட்சியின் பணிகளைத் திட்டமிடும் அளவிற்கு மாநகராட்சியி‘ன் அதிகாரிகள் இருப்பார்களா என்ற அப்பாவிக் கேள்வி நம்முள் எழக் கூடும்.
கலைஞர், தளபதி, புரட்சித் தலைவர், அண்ணா, பெரியார் என்றே ஒரு கால் நூற்றாண்டை ஓட்டி விட்ட நம் மாநகராட்சியால் இப்படிப்பட்ட ‘விசித்திரமான' ஒரு முடிவை எடுத்திருக்க முடியுமா என்ன?
‘இதைத் தவிர அதனால் வேறு என்ன செய்திருக்க முடியும்? என்பது தான் இதற்கான பதில். ஏனென்றால் ஜவஹர்லால் நேரு தேசிய நகரப் புனரமைப்புத் திட்டம் என்ற இந்தத் திட்டத்தைப் பொருத்த வரையில் நம் மாநகராட்சியானது சாதாரண மனிதர்களின் நேரடிப் புலன்களுக்குப் புலப்படாத பல்வேறு பயங்கர சக்திகளின்' கைப்பாவையாக இருக்கிறதேயொழிய வேறில்லை என்பது தான் உண்மை.
கோவை மாநகராட்சியை விலங்கிவிட்டு சிறைப்பிடிக்கத் துடிக்கும் சர்வதேச வட்டிக் கும்பல்கள்: ஜூலை 4ம் தேதி மாநகராட்சியில் வெளியிடப்பட்ட குப்பை அள்ளும் ஒப்பந்தித் தேர்விற்கான அறிக்கையை மாநகராட்சிக்காகத் தயாரித்துக் கொடுத்தது யார்? திட்டத்திற்கான சர்வதேச ஒப்பந்தத்தைக் கோருவதற்கான தேதிகளைக் குறித்துக் கொடுத்தது யார்?
புதுடெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு 1987ம் ஆண்டில் இருந்து இறங்கி வரும் IL&FS என்ற வட்டிக் கம்பெனியின் ஒரு அங்கமான Infrastructure Development Corporation Limited என்ற நிறுவனமே இந்த அறிக்கையை மாநகராட்சிக்குத் தயாரித்துக் கொடுத்திருக்கிறது. அறிக்கையின் அனைத்து கருத்துக்களும் அதன் மூளையில் இருந்து உதித்தவையே, சர்வதேச ஒப்பந்தத்திற்கான தேதிகளையும் அதுவே முடிவு செய்திருக்க வேண்டும். பொதுச் சொத்துக்களைத் தனியார் மயமாக்குவதில் தன்னைப் போல் அனுபவம் மிக்க நிறுவனம் இந்தியாவிலேயே இல்லை என்று வெளிப்படையாகவே பெருமிதம் கொள்ளும் நிறுவனம் தான் அது. 1987ம் ஆண்டில் அந்த நிறுவனம் உருவாக்கப்பட்டதற்கான அடிப்படை நோக்கமே அரசு சொத்துக்களைத் தனியார் மயமாக்குவதை ஊக்குவிப்பதற்குத் தான்!
இப்படிப்பட்ட நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அறிக்கை கோவை மாநகரை எங்கு இட்டுச் செல்லும்?
IL&FS நிறுவனமானது முதலில் "சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா', யுனியன் டிரஸ்ட் ஆப் இந்தியா' "வீடு கட்டக் கடன் கொடுக்கும் நிதி நிறுவனமான) HDFC ஆகியோரால் தொடங்கப்பட்டது. பின்னர் உலக வங்கி, (19ம் நூற்றாண்டில் சீனாவில் ஆங்கிலேயர்களின் வியாபாரத்தை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டு, இன்று உலகின் மிகப் பெரிய வங்கியாக இருக்கும்) ஹாங்காங், ஷாங்காய் பேங்கிங் கார்ப்பரேஷன் ஜப்பானில் கார்களை வாங்க வட்டிக்கு கொடுக்கும் நிறுவனமாக ஓரிக்ஸ் கார்ப்பரேஷன் (அபுதாபி மன்னருக்கு சொந்தமான, உலகின் முன்னணி வட்டி நிறுவனங்களில் ஒன்றான) அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி, பிரான்ஸ் நாட்டின் ரெடிக் கமர்ஷியல் டி பிரான்ஸ் மற்றும் எல்.ஐ.சி ஆகிய நிறுவனங்களை தன் அங்கத்தினர்களாக ஆக்கிக் கொண்டது.
இன்று இந்த நிறுவனத்தில் எல்.ஐ.சி சுமார் 27% பங்கையும், ஜப்பானின் ஓரிக்ஸ் நிறுவனம் சுமார் 24% பங்கையும், HDFC சுமார் 13% பங்கையும், அபுதாபி நிறுவனம் சுமார் 13%ஐயும், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா சுமார் 9%ஐயும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 7.68% பங்கையும், நிறுவனத்தின் அதிகாரிகள் சுமார் 6.5% பங்கையும் வைத்திருக்கிறார்கள்.
அதாவது இந்த நிறுவனத்தில் தனியாரின் முதலீடு சுமார் 57% ஆகவும், அரசு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் முதலீடு மீதமுள்ள 43% ஆகவும் உள்ளது. தனியாரின் முதலீட்டில் சுமார் 40% அந்நிய நாட்டு நிறுவனங்களின் முதலீடாக இருக்கின்றது.
இந்தத் தனியார் வட்டி நிறுவனங்களே கோவை நகர மேம்பாட்டிற்கான திட்டத்தை தயாரித்துக் கொடுத்தது மட்டுமல்லாமல், இந்தத் திட்டங்கள் அனைத்திலும் தனியார் முதலாளிகளை உள்ளே நுழைப்பது மூலமாக கோவை நகரின் பொது சொத்துக்களையும், இதுவரை மாநகராட்சிக்கு மக்கள் கடடி வந்த வரிப் பணத்தையும், மத்திய அரசு மான்யமாக வழங்க முன் வந்திருக்கும் பணத்தையும் இந்த முதலாளிகளுக்குத் தாரை வார்க்கும் யோசனையையும் கோவை மாநகராட்சிக்கு வழங்கியிருக்கின்றன.
இந்தத் திட்டத்தையும், யோசனைகளையும் எவ்விதக் கேள்வியும் இன்றி கோவை மாநகராட்சி ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் வட்டி மற்றும் லாபம் என்ற வார்த்தைகளைத் தவிர வேறு எதையும் விரும்ப விரும்பாத அற்ப ஜீவிகளின் கைப்பாவையாக மாறி செயலாற்ற எத்தனித்திருப்பது தான் கோவை மக்களின் வரலாற்று சோகம்.
10 லட்சத்துக்கும் கூடுதலான மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவின் 63 நகரங்களை பல்லாயிரம் கோடி ரூபாய் மூலதனம் கொண்டு மாற்றியமைக்கலாம் என்பது நம் அரசின் மூளையில் உதித்த திட்டமே அல்ல.
1993ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் இயங்கத் தொடங்கிய அமெரிக்க அரசின் நிறுவனமான United States Agency for International Development (USAID) - ன் மூளையில் உதித்த திட்டமே அது. Financial Institutions Reform and Expansion – Debt (FIRE-D) என்ற திட்டமே இன்று மத்திய அரசின் மூலமாகவும், மாநில அரசு மூலமாகவும், IL&FS போன்ற வட்டி நிறுவனங்கள் மூலமாகவும் கோவை போன்ற நகரங்களின் மீது' ஜவஹர் நகர மேம்பாட்டுத் திட்டம்' என்ற பெயரில் கோடை இடியாய் இறங்கியிருக்கிறது.
USAID நிறுவனத்தால் வளர்க்கப்பட்டு, இன்று ஜப்பானியரைத் தன் முதலாளியாகக் கொண்டிருக்கும் IL&FS நிறுவனம் இந்தத் திட்டத்தின் சர்வதேச ஒப்பந்தத்திற்கான தேதிகளாக ஜூலை 4யும், ஆகஸ்டு 6ம் ஏன் தேர்வு செய்தன?
பிறவி ஊனம் கொண்ட அமெரிக்கப் பேராசை மனத்தில் இருந்து ‘நேரு மாமா' போர்வையைப் போர்த்திப் புறப்பட்டிருக்கும் இந்த இடியைக் கோவை மக்களாலும், இந்தியாவின் பிற நகர மக்களாலும் தாங்கிட, சமாளித்திட முடியுமா?
அல்லது இம்மக்கள் யாவரும் ஹிரோமேஷிமா நகரில் லட்சக்கணக்கானோர் அமெரிக் அணு குண்டுக்கு விநாடி நேரத்தில் இரையானது போல, பற்றியெரியும் அமெரிக்கக் ‘காய சண்டிகை' வட்டிப் பசிக்கு இரையாகித்தான் போவார்களா ?
ஜவகர் கோவையை விழுங்க வரும் யோஷிஹிகோ மியாசி: ORIX Corporation Lapan
ஐ.எல்.எஃப்.எஸ் கந்துவட்டி நிறுவனத்தில் 23.82% பங்குகளை வைத்திருப்பவவர். இதன் காரணம் தமிழ்நாட்டின் TNUIFSL நிறுவனத்தின் பங்குதாரர் சுமார் 25 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை ஒரிக்ஸ் வைத்திருக்கிறது.
1964ல் இருந்து கார்கள் வாங்குபவர்களுக்குக் கடன் கொடுக்கும் பைனான்ஸ் கம்பெனியை ஜப்பானில் தொடங்கி பின்னர் உலகம் ரியல் எஸ்டேட் பைனான்சில் குதித்தவர். அமெரிக்க அரசின் குருட்டு ஆதரவாளர்.
ஜப்பான் நாட்டின் பொதுத்துறை சொத்துக்களைத் தனியாரிடம் விற்க அந்த நாட்டின் அரசை நிர்ப்பந்திக்கும் கூட்டத்தின் தலைவர். இதனாலேயே ‘ஜப்பான் நாட்டின் முதல் எதிரி’ என்ற நற்பெயரை அந்த நாட்டு மக்களிடம் சம்பாதித்திருப்பவர்.
உலகக் கந்து வட்டி முதலைகள்: சயீத் முபாரக் ரஷீத் அல் ஹஜேரி
Abul Dhabi Invesment Authority (ADIA) ADIA நிறுவனத்தின் தலைவர்.
நிறுவனம் அபுதாபி அரசருக்கு சொந்தமானது. சுமார் 27 லட்சம் கோடி ரூபாயைக் கையாளுகிறது.
கணக்குகள் ரகசியமாகவே கையாளப்படுகின்றன. பெட்ரோலை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை பாதுகாப்பதாக முதலீடு செய்வதற்காக 1977ல் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதிலும் பொதுச் சொத்துக்களை வாங்குவதற்கும், தனியார் நிறுவனங்களை நடத்தவும் கடன் கொடுக்கிறது.
ஐ.எல்.எஃப்.எஸ் நிறுவனத்தில் 12.73% பங்குகளை வைத்திருப்பதால் TNUIFSL நிறுவனத்தின் பங்குதாரராகவும் இருக்கிறது. http://www.keetru.com/vizhippunarvu/aug07/ramesh.php
தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் ஒரே ஆண்டில் சித்தமருத்துவம், "சமையல் கலைக்கல்லூரிகள்" மூலமாக கற்றுத்தர இருப்பதாக வந்த செய்தி நம்மை திகைப்பில் ஆழ்த்தியது.
சித்தமருத்துவம் என்றாலே காட்டுவாசிகளின் மருத்துவமுறை என்று சிலர் கருதி புறக்கணிக்கும் நிலை பரவலாக உள்ளது. வேறு சிலரோ உரிய கல்வித்தகுதி இல்லாத நபர்களிடம் சிகிச்சை பெற்று பணத்தையும், உடல் நலத்தையும் இழக்கும் நிலையும் நிலவுகிறது.
இந்த நிலையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பால் இன்னும் அதிக போலி மருத்துவர்கள் உருவாகிவிடக்கூடும் என்று அஞ்சினோம். எனவே பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பும், ஆரம்பிக்க உள்ள சித்தமருத்துவ பட்டய படிப்பும் சட்டவிரோதம் என்று பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பினோம்.
இந்த கடிதத்திற்கு எந்த பதிலும் வராத நிலையில், அஞ்சல் வழி சித்த மருத்துவ பட்டய படிப்பிற்கு மாணவர்களை சேர்ப்பதற்காக நாளேடுகளிலும், தொலைபேசி குறுந்தகவல் சேவை (SMS) யிலும் விளம்பரங்கள் அதிகரித்தன.
இந்நிலையில் வேறு வழியின்றி, உரிய அனுமதியின்றி தொடங்க உள்ள அஞ்சல் வழி சித்த மருத்துவ பட்டய படிப்பிற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதி மன்றத்தை நாடினோம்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி. தனபாலன், இந்த வழக்கு தொடர்பாக தஞ்சாவூர் தமிழ்பல்கலைக்கழக துணைவேந்தர், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம், இந்திய மருத்துவத்திற்கான மருத்துவக்குழு ஆகிய அமைப்புகளுக்கு இரு வாரங்களுக்குள் பதில் அனுப்புமாறு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
நன்றி: தினகரன், 01-09-2007.
நன்றி: தினமலர், 01-09-2007.
சித்தமருத்துவத்தை நெறிப்படுத்த அமைக்கப்பட்ட தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சில் கடந்த பல வருடங்களாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படாமல், நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படாமல் செயலற்று உள்ளது.
இதன் விளைவாகவே தொலைக்காட்சிகளிலும், செய்தி பத்திரிகைகள், நாளேடுகளிலும் உரிய கல்வித்தகுதி பெறாத பல போலி மருத்துவர்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்து வருகின்றனர். ஊருக்கு உபதேசம் செய்யும் ஊடகங்கள், பத்திரிகை சுதந்திரம் பற்றி உரிமையுடன் பேசும் பத்திரிகை ஆசிரியர்கள், சமூகப்பொறுப்போ - அடிப்படை சட்ட அறிவோ இன்றி இத்தகைய விளம்பரங்களை வெளியிட்டு கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர்.
அவற்றில் சில விளம்பரங்கள், சாமானியரின் சாதாரண அறிவால் கூட ஏற்க முடியாதவை. கீழே உள்ள விளம்பரத்தில் 7 தலைமுறைகளாக வைத்தியம் செய்து வருவதாக ஒரு குடும்பம் ஏழாவது தலைமுறை வைத்தியராக பச்சிளம் பாலகன் ஒருவன் படத்தை வெளியிட்டுள்ளது.
இந்த சிறுவன் வைத்தியம் பார்ப்பது உண்மை என்றால் அது பகுத்தறிவுக்கும், மருத்துவ நெறிமுறைகளுக்கும், சட்டத்திற்கும் எதிரானது.
இந்த சின்ன விஷயத்தைக்கூட ஆராயாமல் ஏறக்குறைய அனைத்து பத்திரிகைகளும் இந்த விளம்பரத்தை வெளியிட்டு வருகின்றன.
கொள்ளை லாபமே குறிக்கோளாக உள்ள இந்த போலி மருத்துவர்களிடமோ, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி அதிபர்/ஆசிரியர்களிடமோ இதை விட வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. மக்களிடம் ஏற்படும் விழிப்புணர்வே இது போன்ற சமூக அவலங்களை அகற்ற உதவும்.
-மக்கள் சட்டம் குழு
Article:
http://makkal-sattam.blogspot.com/2007/09/blog-post.html
இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் முரண்பாடான ஊதிய விகிதத்தில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
1988 முதல் அரசு உதவிபெறும் தனியார் மற்றும் சிறுபான்மை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியர் தகுதியுள்ள பலர், இடைநிலை ஆசிரியருக்கான ஊதிய விகிதத்தில் (அடிப்படை சம்பளம் ரூ. 4500) பணியாற்றி வருகின்றனர். அதே தகுதிகளுடன் 2003 ஜூனில் 6, 7, 8ம் வகுப்புகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள் இன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதத்தில் (ரூ. 5500) பணியாற்றுகின்றனர். இந்த பணியிடங்களில் 1995 98 வரையில் இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட ஆயிரத்து 84 பட்டதாரி ஆசிரியர்கள், குழந்தைகள் மனநலப் பயிற்சி பெறவில்லை என கூறி அவர்களுக்கு ஒருமாத காலம் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இதனால் அவர்கள் பெற்ற அடிப்படை ஊதியமான ரூ. 5375 குறைக்கப்பட்டு ரூ. 4500 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஊதிய தொகையை 2003 ஜூன் முதல் பெற்று வருகின்றனர். 1995க்கு முன்பு அரசின் கொள்கைப்படி இடைநிலை ஆசிரியர்கள் பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது.
ஆனால் 2002ம் ஆண்டு முதல் “இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியர்களைத்தான் நியமிக்க வேண்டும்’ என்ற கொள்கை மாற்றம் ஏற்பட்டது. அதனடிப்படையில் 2003 ஜூன் முதல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதியுள்ள ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் தற்போது பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் (ரூ. 5500) பெற்று வருகின்றனர். இதனால் 1995க்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களும், 1995 முதல் 98 க்கு இடைப்பட்ட காலத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களும் இன்றும் இடைநிலை ஆசிரியர் சம்பளத்தில் பணியாற்றுவது முரண்பாடாக உள்ளது. ஒரே கல்வித் தகுதியுடன், ஒரே பணியை செய்யும் இருவேறு ஆசிரியர்கள் வெவ்வேறு சம்பள விகிதத்தில் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
பணிமூப்பு குறைவாக உள்ளவர், பணிமூப்பு அதிகம் உள்ளவரை விட அதிக சம்பளம் பெறும் நிலை உள்ளது. இந்த முரண்பாடுகளை களைய “ஏற்கனவே பட்டதாரி ஆசிரியர் தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் வகையில், அவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் என பதவி உயர்வு வழங்க வேண்டும். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கூறியதாவது: 6 முதல் 8ம் வகுப்புகளில் ஓய்வு பெறுவோரின் பணியிடங்களில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதன் மூலம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தரம் உயர்த்த 15 ஆண்டுகளுக்கும் கூடுதலாகி விடும். எனவே இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் 3 தரப்பினராக பணியாற்றுவோரை பட்டதாரி ஆசிரியர்களாக மாற்றினால்தான் 6 முதல் 10 வரை அனைத்து பணியிடங்களும் ஒரே மாதிரியாக இருக்கும். இல்லையெனில் ஒரே பாடத்தை ஒரு பள்ளியில் இடைநிலை ஆசிரியரும், மற்றொரு பள்ளியில் பட்டதாரி ஆசிரியரும் நடத்துவர். இதனால் மாணவர்கள்தான் பாதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.
குறிச்சொல் ஏதும் இல்லை.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
தொடர்புடைய இடுகைகள் ஏதும் இல்லை.
Article:
http://feeds.feedburner.com/~r/satrumun/~3/201757501/
வெள்ளையர்களின் நீங்காத நிறவெறி
டி.ஜே.எஸ். ஜார்ஜ்
அக்ரஹாரத்தில் கழுதை : டாடா, ஜகு�
எங்கும் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கை வியாபித்து நிற்கிறது என்று நாம் மார்தட்டிப் பேசிக் கொள்கிறோம்.
ஆனால், இத்தகைய காலகட்டத்திலும் “வெள்ளையர்களே அனைத்திலும் உயர்ந்தவர்கள்; வெள்ளையர் அல்லாதோர் கீழேதான்’, என்று மற்றவர்களை மட்டந்தட்டும் நிறவெறிக் கொள்கை சர்வதேச நிதி மற்றும் வர்த்தக அமைப்புகளில் தலைதூக்கி நிற்கிறது.
நிறவெறிக் கொள்கை ஊறிவிட்ட உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம்.
உருக்குத் தொழில் உலகின் மன்னர் என்ற பெருமையாகப் பேசப்படும் வெளிநாடு வாழ் இந்தியரான லட்சுமி மிட்டலும் இந்த நிறவெறிக் கலாசாரத்தால் பாரபட்சமாக நடத்தப்பட்டவர்தான்.
ஐரோப்பாவில் இயங்கும் ஆர்சலர் என்ற நிறுவனத்தின் உரிமையை தனது கட்டுக்குள் கொண்டுவர அவர் முயன்றார். ஆனால் வெள்ளையர் அல்லாத ஒருவரது பணம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் நிராகரித்து விட்டார்.
ஆனால் பிற்பாடு, தான் சொன்ன வார்த்தை தவறானது என்பதை அந்த நிர்வாகியே உணர்ந்து, மாற்றிக் கொண்டார் என்பது வேறு கதை. பின்னர் அந்த நிர்வாகியின் எதிரிலேயே ஆர்சலர் நிறுவனம் ஆர்சலர்-மிட்டல் என்று மாறியதும் வேறு விஷயம்.
இன்னொரு சம்பவம் அமெரிக்காவைச் சேர்ந்த சொகுசு ஹோட்டல் நிறுவனமான ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் தொடர்பானது ஆகும்.
இந்த ஹோட்டலுடன் கூட்டு வைக்க டாடா நிறுவனம் ஆசைப்பட்டது. ஆனால் நிறவெறியில் ஊறிய அதன் தலைமை நிர்வாகம், டாடாவின் ஆசையை நிராகரித்து கேலியும் கிண்டலும் செய்தது.
“சொகுசின் மொத்த உருவகமாகத் திகழும் எமது பிராண்டை உங்களது பிராண்டுடன் சேர்ப்பதால் எங்களது பிராண்டின் நற்பெயர் என்னாவது’ என்று ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி குத்தலாகப் பேசினார்.
இப்படி அவர் பேசியதற்குக் காரணம் கூட்டுவைக்கும் யோசனை வேண்டாம் என்று ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் தரப்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டும் மீண்டும் அதற்காக டாடா நிறுவனம் முயற்சி மேற்கொண்டதே ஆகும். இப்படி டாடா நிறுவனம் செய்தது தம்மை அவமதிப்பு செய்வதாகக் கருதிவிட்டார் ஓரியண்ட் எக்ஸ்பிரஸின் தலைமை நிர்வாகி பால் வொயிட்.
இன்னொரு சம்பவத்தை இனி பார்ப்போம்.
போர்டு லக்சுரி மாடல் கார் உற்பத்தி நிறுவனத்தை வாங்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முயற்சி செய்தது. அதை அறிந்த அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றின் தலைவர் ஒருவர் கடந்த வாரம் பொங்கி எழுந்தார். இதை அமெரிக்க மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்.
இத்தகைய சம்பவங்களை குப்பைகள் என்று ஒதுக்கி, கேலிக்கூத்துகள் என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும். டாடா பிராண்ட் என்றாலே தனி மவுசுதான். இதை உலகமே நன்கு அறியும்.
எத்தனையோ இந்தியர்களை அமெரிக்க மக்கள் கனிவுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரிய நிதி நிறுவனம் சிட்டி குரூப். இதன் தலைவராக விக்ரம் பண்டிட்டை அமெரிக்கர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதுபோல் அமெரிக்காவின் தேசிய உணர்வுக்கு அடையாளமாக திகழும் பெப்சி நிறுவனத்தின் தலைவராக இந்திரா நூயி அமர்ந்துள்ளதையும் அந்நாட்டு மக்கள் ஏற்கத்தானே செய்தனர்.
இவர்களுக்கு முன்பாக கியூலெட்-பக்கார்ட் நிறுவனத்தின் பொது மேலாளாராக ராஜீவ் குப்தா, எடி அண்ட் டி நிறுவனத்தின் தலைவராக அரூண் நேத்ரவலி, மெக்கன்சி நிறுவனத்தின் தலைவராக ரஜத் குப்தா போன்றோர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
ஸ்டான்சார்ட் நிறுவனத்தை ராணா தல்வார் தலைமை ஏற்று நடத்துகிறார்.
மேலும் பென்டியம் சிப்பை உருவாக்கிய வினோத் டாம், ஹாட்மெயிலை நிறுவிய சபீர் பாடியா ஆகியோரும் இந்தியர்கள்தான்.
அறிவாற்றல் என்று வரும்போது வெள்ளையர் அல்லாதோரை விரும்புகிறார்கள் வெள்ளையர்கள். அப்போது, நன்மதிப்பு பற்றிப் பேசுவதில்லை. நிறவெறி என்று வரும்போது அவர்களின் மூர்க்கத்தனம் வெளிப்பட்டு விடுகிறது.
அமெரிக்கத் தூதரகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் கூட தான் யார் என்பதை காட்டிவிடுகிறார்கள். அண்மையில் கேசவன் என்ற விஞ்ஞானி விசாவுக்காக சென்னையில் உள்ள தூதரகத்துக்குச் சென்றிருந்தார். கொளுத்தும் வெயிலில் அவர் ஒரு மணி நேரம் வெளியில் காத்திருக்க நேர்ந்தது.
பின்னர், உள்ளே சென்றதும் 2 மணி நேரம் காத்திருந்தார். “உங்களிடம் ஆலோசனை நடத்த அவசியம் இல்லை. இந்த வினாத்தாள் பட்டியலை நிரப்பித்தாருங்கள்’ என்று மட்டும் அவரிடம் கூறியுள்ளனர்.
மற்றொரு விஞ்ஞானியான கோவர்தன் மேத்தாவுக்கும் கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. தனது ஆராய்ச்சியைப் பற்றி மறைத்துவிட்டதாக காரணம் தெரிவிக்கப்பட்டு அவருக்கு விசா நிராகரிக்கப்பட்டது.
இத்தகைய குளறுபடிகளுக்கு நம்மையேதான் நாம் நொந்து கொள்ளவேண்டும்.
அண்மையில் அமெரிக்காவின் செயல்பாடு பற்றி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூட வேதனையுடன் பேசினார்.
அமெரிக்காவில் கிளைகள் திறக்க இந்தியாவைச் சேர்ந்த வங்கிகள் விரும்பினால் அவை மீது அமெரிக்கா பாரபட்சம் காட்டுகிறதாம்.
இப்படிப் புகார் கூறுவதால் அவர்கள் மசிந்து விடுவார்களா என்ன? இந்தியாவில் தொழில் நடத்த வரும் அவர்களை இங்கும் அங்கும் என அலைகழித்தால் எல்லாம் சரியாகிவிடும். இது நடக்குமா?
இது குழம்பிப்போன உலகம். மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய விரும்புகிறார்களோ அதை நாமும் அவர்களுக்குச் செய்ய வேண்டும். அப்போது மரியாதை தானாகவந்து சேரும்.
கொடுக்கும் வழியிலேயே நாமும் திருப்பிக் கொடுப்போம்.
தமிழில்: ஜி. கணபதி
Article:
http://bsubra.wordpress.com/2007/12/17/orient-express-snubs-tata-says-indian-tag-tacky-is-india-bad-for-jaguar/
கிரெடிட் கார்டு உள்ளிட்ட வங்கிக்கடன் சேவையை பயன்படுத்தும் அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய ஒரு அமைப்பு Credit Information Bureau of India Limited என்ற சிபில் அமைப்பாகும்.
இந்த அமைப்பின் முக்கிய பணி கடன்பெறும் நுகர்வோரின் நேர்மையை அளவிட்டு அதை புள்ளிவிவரமாக வழங்குவதே. இதன்மூலம் ஆபத்து குறைந்த கடன்களை வழங்கமுடியும் என்று வங்கிகள் கருதுகின்றன. அதாவது வாங்கிய கடனை திரும்ப கட்டும் பழக்கம் உடைய நல்ல வாடிக்கையாளர்களை பெறுவதே இந்த அமைப்பின் நோக்கம்.
அனைத்து வாடிக்கையாளர்களின் பெயர், பிறந்த தேதி, அடையாளத்திற்காக வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை – பாஸ்போர்ட் – ஓட்டுனர் உரிமம் – ரேஷன் கார்ட் – பான் கார்டு போன்றவற்றின் எண்களும் இந்த தகவல் கிடங்கில் சேமிக்கப்படுகின்றன. எனவே வாங்கிய கடனை திரும்ப செலுத்தாத வாடிக்கையாளர்கள் இந்த பட்டியலில் சிக்குவது உறுதி. இவ்வாறு சிக்கும் ஒரு வாடிக்கையாளர் பிறகு வேறெந்த வங்கியிலோ, நிதி நிறுவனத்திலோ கடன் பெற முடியாது.
இது உலகத்தின் பல பகுதிகளிலும் பின்பற்றப்படும் ஒரு நடைமுறைதான். அமெரிக்கா போன்ற முன்னேறிய(தாகக் கூறப்படும்) நாடுகளில், கடன் வரலாறு சிறப்பாக உள்ள வாடிக்கையாளர்களுக்கு மிகக்குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்படுகிறது.
நல்ல திட்டம்தானா?
ஒரு வெளிப்படையான பார்வையில் இந்த திட்டம் மிகவும் நல்ல திட்டமாக தோன்றும். ஆனால் இந்தியாவில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் இந்த திட்டத்தின் நோக்கத்தை சிதைப்பவையாக உள்ளன.
கடன் தகவல் மையம் அமைக்கும் திட்டத்தை இந்தியாவில் அமல்படுத்த 1972ம் ஆண்டு முதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், 2000ம் ஆண்டில்தான் சிபில் அமைப்பு முழு வடிவத்திற்கு வந்தது. இந்த சிபில் நிறுவனத்தை முறைப்படுத்தும் நோக்கில் நாடாளுமன்றத்தில் 2004ம் ஆண்டில் விவாதம் நடந்தது.
வாடிக்கையாளர்களின் நலன்களைப்புறக்கணித்து, வங்கிகளின் நலன்களை மட்டுமே பாதுகாக்கும் சட்டமான, கடன் தகவல் நிறுவனங்கள் (ஒழுங்குபடுத்தும்) சட்டம், 2005 (The Credit Information Companies (Regulation) Act, 2005) மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.
அந்த விவாதத்தில் மிகச்சில உறுப்பினர்களே கலந்து கொண்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த ஒரு உறுப்பினரும் இந்த விவாதத்தில் கலந்துகொண்டதாக தெரியவில்லை.
இந்த சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு சுமார் 5 ஆண்டுகள் முன்பாகவே துவங்கப்பட்ட சிபில்(www.cibil.com) நிறுவனத்தில் இன்றைய நிலையில்,
டிரான்ஸ்யூனியன் இன்டர்நேஷனல் இன்க், டன் & பிராட்ஸ்ட்ரீட் தகவல் சேவை என்ற நிறுவனங்களின் தொழில் நுட்ப பங்கேற்புடன், ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் பாங்க், ஐசிஐசிஐ(ICICI), ஹெச்டிஎஃப்சி(HDFC), ஹெச்எஸ்பிசி(HSBC), சிட்டி பாங்க், ஜிஈ(GE) போன்ற தனியார்/வெளிநாட்டு நிறுவனங்களும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பாங்க், பஞ்சாப் நேஷனல் பாங்க், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, சென்டிரல் பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா போன்ற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும், சுந்தரம் ஃபைனான்ஸ் போன்ற வங்கியல்லாத தனியார் நிதி நிறுவனங்களும் பங்கு பெற்றுள்ளன.
நடைமுறை என்ன?
சிபில் அமைப்பில் உள்ள அனைத்து வங்கி மற்றும் வங்கியல்லாத நிதிநிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களைப் பற்றிய தகவல்களை இந்த தகவல் கிடங்கில் சேமிக்கின்றன. ஒரு வாடிக்கையாளர் எந்த ஒரு வங்கியிலோ அல்லது நிதிநிறுவனத்திலோ கடன் வாங்கிவிட்டு உரிய முறையில் திரும்ப செலுத்தாவிட்டால் அந்த விபரமும் சிபில் அமைப்பில் உறுப்பினராக உள்ள வங்கிகளுக்கு வழங்கப்படும்.
கடன் கொடுக்கும் வங்கிகள் வாடிக்கையாளரிடம் பெறும் அனைத்து தகவல்களும், பெயர், பிறந்த தேதி, அடையாளத்திற்காக வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை – பாஸ்போர்ட் – ஓட்டுனர் உரிமம் – ரேஷன் கார்ட் – பான் கார்டு போன்றவற்றின் எண்களும் இந்த தகவல் கிடங்கில் சேமிக்கப்படுகிறது. பின் இந்த வாடிக்கையாளரின் நம்பகத்தன்மையும் ஒரு புள்ளிவிவரமாக பதிவு செய்யப்படுகிறது. ஒரு வாடிக்கையாளர் ஏதோ ஒரு நிறுவனத்தில் கடன் பெற்று திரும்ப செலுத்தாவிட்டால் அவரது பெயர், மோசமான வாடிக்கையாளர் பட்டியலில் வைக்கப்படுகிறது.
எந்த ஒரு நபருக்கும் புதிதாக கடன் வழங்கும் நிறுவனம், கடனுக்கான விண்ணப்பத்தை பெற்றவுடன் அந்த உத்தேச வாடிக்கையாளர் குறித்த தகவலை சிபில் அமைப்புக்கு தெரிவிக்க வேண்டும். அந்த வாடிக்கையாளர் வேறு ஏதேனும் நிறுவனத்தில் கடன் வாங்கி திரும்ப செலுத்தியிராவிட்டால் அவரது பெயர் மோசமான வாடிக்கையாளர் பட்டியலில் இருப்பது தெரியவரும். பிறகு அவர் வங்கிக்கடன் என்பதையே மறந்து விட வேண்டியதுதான்.
நியாயம்தானே! இதிலென்ன தவறு? என்ற கேள்வி எழலாம்.
விசாரணை இன்றியே தண்டனை!
வங்கிகள் நியாயமாக கொள்ளும் நிலையில்தான் இந்த நடவடிக்கையும் நியாயமாக அமையும். ஆனால் இந்தியாவில் இயங்கும் எந்த தனியார்/வெளிநாட்டு வங்கியும் நியாயமாக நடப்பது இல்லை. ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளை இவை பொருட்படுத்துவதே இல்லை.
குறிப்பாக, கடன் பெறும் வாடிக்கையாளரின் திரும்ப செலுத்தும் தன்மையை சோதித்தல், கணக்குகளை வெளிப்படையாக பராமரித்தல், வாடிக்கையாளரின் புகார்களை விசாரிக்க தனி அமைப்பை நிறுவுதல் ஆகிய முக்கிய கோட்பாடுகளை இதுவரை எந்த தனியார்/வெளிநாட்டு வங்கியும் நடைமுறைப்படுத்தியதாக தெரியவில்லை.
இந்த நிலையில் வங்கிக்கும், வாடிக்கையாளருக்கும் ஏற்படும் பிணக்குகளை விசாரிக்கவே ஆள் இல்லாத நிலையில் விசாரணை இன்றியே வாடிக்கையாளர் குற்றவாளியாக தீர்மானிக்கப்படுகிறார். அவரது தரப்பு விளக்கத்தை கேட்க யாரும் இல்லாத நிலையில் வழக்கின் தரப்பினரில் ஒருவரான வங்கியே நீதிபதியாகி தீர்ப்பும் வழங்கி தண்டித்து விடுகிறது.
வழக்கு தரப்பினரே நீதிபதியாகி, மற்றொரு தரப்பினரை விசாரிக்காமலே தீர்ப்பு அளிப்பது என்பது இயற்கை நீதிக்கு எதிரானது.
ஆனால் இந்த சட்ட விரோத செயலை, சட்டம் படித்த நிதியமைச்சர் ப.சிதம்பரம் முதல் அனைத்து அரசு தலைவர்களும் ஆசிர்வதித்து அனுமதிக்கின்றனர்.
ஏட்டு சுரைக்காய்கள்!
அதேபோல, கடன் தகவல் நிறுவனங்கள் (ஒழுங்குபடுத்தும்) சட்டம், 2005 (The Credit Information Companies (Regulation) Act, 2005) கீழும் ஒரு வாடிக்கையாளர், அவரது கடன் நம்பகத்தகவலை(Credit Worthiness) அவர் கடன்கோரும் வங்கிமூலம் பெறமுடியும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் எந்த வங்கியிலும் இதற்கான வசதி இருப்பதாக தெரியவில்லை. சிபில் ஒரு தனியார் அமைப்பு என்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அங்கே செல்லுபடியாகாது.
எனவே வங்கிகள் என்ன அநியாய வட்டி மற்றும் கட்டணங்கள் விதித்தாலும், எதிர் கேள்வி கேட்காமல் கட்டும் வாடிக்கையாளர் நல்ல வாடிக்கையாளராகவும், கேள்வி கேட்பவர்கள் மோசமான வாடிக்கையாளராகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.
ஒரு வாடிக்கையாளரைப்பற்றி தவறான தகவல் கொடுத்தால், பாதிக்கப்படும் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க செய்யும் விதத்திலும், கடன் தகவல் மையங்கள் தவறிழைத்தது உறுதியானால் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் மேற்கூறிய சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் வாடிக்கையாளர்களின் கடன் நம்பகத்தகவலை வங்கிகள் தவிர வேறு யாரும் பெற முடியாத நிலையில் இந்த சட்டம் வெறும் ஏட்டு சுரைக்காய்தான். சமையலுக்கு உதவாது.
கிரெடிட் கார்டு வணிக நெறிமுறைகள் குறித்து ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பதைக்கூட கண்காணிக்காத ரிசர்வ் வங்கி, சிபில் அமைப்பை கட்டுப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கையே.
நுகர்வோர் பாதுகாப்பு கருத்தியல் நிறைந்த வளர்ந்த நாடுகளில் கடன் தகவல் மையங்கள் சிறந்த முறையில் பணியாற்றலாம். ஆனால் நுகர்வோரின் நலனில் மயிரளவுகூட அக்கறை செலுத்தாத வணிக நிறுவனங்களும், அரசு அமைப்புகளும் கோலோச்சும் இந்தியாவில், நுகர்வோர் விழிப்புணர்வு மிகக்குறைந்த அளவே உள்ள இந்தியாவில் - சிபில் போன்ற கடன் தகவல் மையங்கள் மக்களை சுரண்டும் அமைப்புகளாகவே விளங்குகின்றன.
என்ன செய்யப் போகிறோம்?
மூளையை மழுங்கடிக்கும் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கவர்ச்சி அரசியல், பரபரப்பூட்டும் ஊடகங்கள் இவற்றின் ஆதிக்கத்தை தகர்த்து, உணர்வு பூர்வமான அணுகுமுறையை விடுத்து; அறிவுபூர்வமான விமர்சன அணுகுமுறையை மேற்கொள்வதே இந்த சமூக அநீதிகளை – அவலங்களை மாற்றும் வழியாகும்.
Awareness is Better: Action is Best!
-சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)
Article:
http://makkal-sattam.blogspot.com/2007/11/cibil.html
வங்கிகளின் கடன் வசூல் போக்கு குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திடீர் கரிசனம் காட்டியுள்ளது. வாடிக்கையாளர்களிடம் கடன்வசூல் செய்யும்போது சட்டப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று சில தினங்களுக்கு முன் அவ்வங்கி உபதேசம் செய்துள்ளது.
நன்றி: தினமலர் 30-11-07
இந்த உபதேசம் ஊடகங்களிலும் மிக உரத்து விவாதிக்கப்பட்டது. எனினும் இந்த விவகாரம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2006 நவம்பர் மாதம் வெளியிட்ட சுற்றறிக்கை “வங்கிப்பணிகளை அவுட்சோர்ஸிங் செய்வது மற்றும் இடர் மேலாண்மை குறித்த விதிமுறைகள்” (http://www.rbi.org.in/scripts/NotificationUser.aspx?Mode=0&Id=3148), இந்த விவகாரம் குறித்து மிகவிரிவான விதிமுறைகளை வகுத்துள்ளது.
இதேபோல “வங்கிகளின் கிரெடிட் கார்டு செயல்பாடுகள் குறித்த முதன்மை சுற்றறிக்கை” (http://www.rbi.org.in/commonman/Upload/English/Notification/PDFs/78385.pdf) யும் வாடிக்கையாளர்களின் நலன்களை பாதுகாக்கும் பட்டயமாக உள்ளது.
ஆனால் இந்த விதிமுறைகள் முறைப்படி பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணியை மட்டும் ஏனோ இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்ளவில்லை. இந்நிலையில்தான் மேற்கூறப்பட்ட விதிமுறைகளில் கூறப்பட்டுள்ள விவரங்களையே மற்றுமொரு வடிவில் வழங்கியுள்ளது. “வங்கிகளின் கடன்வசூல் முகவர்கள் – வரைவு விதிமுறைகள்” (http://www.rbi.org.in/scripts/NotificationUser.aspx?Id=3961&Mode=0) என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளில்,
1. கடன் வசூல் நடவடிக்கைகளில் உரிய கவனம்,
2. வசூல் முகவர்கள் குறிப்பிட்ட தொலைபேசி எண்களில் இருந்து மட்டுமே பேசவேண்டும்,
3. கடன் வசூல் நடைமுறையில் உள்ள குறைகள் குறித்து புகார் தெரிவிக்க உரிய அமைப்பு ஏற்படுத்த வேண்டும்,
4. கடன் வசூல் முகவர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த வரைவு விதிமுறைகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு விதிமுறைகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை டிசம்பர் மாதத்திற்குள் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள “வங்கிப்பணிகளை அவுட்சோர்ஸிங் செய்வது மற்றும் இடர் மேலாண்மை குறித்த விதிமுறைகள்” மற்றும் “வங்கிகளின் கிரெடிட் கார்டு செயல்பாடுகள் குறித்த முதன்மை சுற்றறிக்கை” ஆகியவற்றை முறைப்படி செயல்படுத்தி இருந்தாலே கிரெடிட் கார்டு செயல்பாடுகளில் பல பிரசினைகளுக்கு தீர்வு கண்டிருக்க முடியும். ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றுகிறது இந்திய ரிசர்வ் வங்கி. பத்திரிகைகளும் இதை புரிந்து கொள்ளாமல் கிரெடிட் கார்டு பிரசினைக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது போல பம்மாத்து செய்கின்றன.
இந்நிலையில் கடந்த 03-12-07 அன்று நாடாளுமன்றத்தில் பேமென்ட் செட்டில்மென்ட் சிஸ்டம் பில் 2007 குறித்த விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், கடன் வசூல் அராஜகத்தில் தனியார் வங்கிகளே பெருமளவில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.
நன்றி: தினத்தந்தி 04-12-07
மேலும் அரசுடைமை வங்கிகள் இத்தகைய நாகரிகமற்ற செயல்களில் ஈடுபட்டால் அந்த வங்கியின் மேலாளர் அடுத்த நாளே வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்றும் வீரவசனம் பேசியுள்ளார். எனவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் வங்கிகள், நிதி அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது உறுதியாகிறது.
மாபெரும் பொருளாதார மேதையான சிதம்பரத்தின் பேச்சு நமக்கு சில கேள்விகளை எழுப்புகிறது.
1. தனியார் வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்குகிறதா? இல்லையா?
2.ஆம் எனில் இந்த வங்கிகளை கட்டு்ப்படுத்த ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? இல்லையெனில் ரிசர்வ் வங்கி என்ற ஒரு அமைப்பு எதற்காக?
3. இந்திய ரிசர்வ் வங்கியை கட்டுப்படுத்தும் பொறுப்பு மத்திய நிதி அமைச்சகத்திற்கு உள்ளதா? இல்லையா?
4. ஆம் எனில் இந்திய வங்கி நுகர்வோர்களை பாதுகாக்க மத்திய நிதிஅமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? இல்லை எனில் மத்திய நிதி அமைச்சகம் என்ற அமைப்பு எதற்காக?
5. மத்திய நிதி அமைச்சகத்தையும், இந்திய ரிசர்வ் வங்கியையும், இந்தியாவில் வணிகம் செய்யும் தனியார் வங்கிகளையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய நிதி அமைச்சருக்கு இருக்கிறதா?
6. ஆம் எனில் மேற்கண்ட விவகாரங்களுக்காக மத்திய நிதி அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? இல்லை எனில் மத்திய நிதி அமைச்சர் என்ற பதவி யாருடைய நலன்களுக்காக செயல்படுகிறது?
-சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)
Article:
http://makkal-sattam.blogspot.com/2007/12/blog-post_04.html
அந்த கிராமத்தின் பள்ளம் மேடான சாலையில் புழுதி பறக்க ஒரு வேன் விரைகிறது. அங்குள்ள ஆரம்பப் பள்ளியின் முன் பிரேக் அடித்து நிற்கிறது.
“”வந்தாச்சு, பொம்மை வேன் வந்தாச்சு” படிக்கும் சின்னஞ்சிறு குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கூச்சலிடுகின்றனர். ஆசிரியராலும் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பொம்மை வேன் வருவதை நேற்றே கேள்விப்பட்டதால் நேற்று இரவு முழுக்க பொம்மை வேன் வருவதாகக் கனவு கண்டு தூக்கம் கெட்ட குழந்தைகள், கண்முன் அது வருவதைப் பார்த்ததும் உற்சாகத்துடன் கத்துகிறார்கள். அவர்கள் முகத்தில் காணப்படும் மகிழ்ச்சியைப் பார்த்து ஆசிரியர்கள் மெüனமாகிவிடுகிறார்கள்.
“வித்யாரம்பம்’ எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் நடமாடும் பொம்மை நூலக வாகனம்தான் அது. இரண்டாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, கல்வியறிவூட்டும் பொம்மைகளை விளையாடக் கொடுத்து அறிவூட்டும் பணியைச் செய்து வருகிறது அந்த நிறுவனம். அந்த நிறுவனத்தின் நிறுவனர் வி.ரங்கநாதனைச் சந்தித்துப் பேசினோம்.
குழந்தைகளுக்குப் பொம்மைகளை விளையாடக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?
சுனாமியின் போது நாகப்பட்டினம் பகுதியில் பல குழந்தைகள் தங்கள் தாய், தந்தையை, அன்புக்குரியவர்களை இழந்துவிட்டார்கள். அந்தத் துயரம் அவர்கள் மனதைவிட்டு அகலவில்லை. குழந்தைகள் பள்ளிக்கு வருவது மிகவும் குறைந்துவிட்டது. எல்லாவற்றையும் பறிகொடுத்த அந்தக் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் படிக்க வைப்பதே மிகுந்த சிரமமாகிவிட்டது. ஸ்கூலுக்குப் போவதற்கே பயந்தார்கள். அந்தக் குழந்தைகளைப் பள்ளிக்கு வரவைப்பதற்காக, அவர்களுடைய மனநிலையை மாற்ற பொம்மைகளை அந்தப் பள்ளிகளுக்கு எடுத்துச் சென்றோம். அங்கு எங்களுக்குக் கிடைத்த வெற்றி, பிற பள்ளிகளுக்கும் பொம்மைகளைக் கொண்டு செல்லும் எண்ணத்தை ஏற்படுத்தியது.
பொம்மைகள் என்றால் விளையாட்டுப் பொம்மைகளா?
விளையாட்டுப் பொம்மைகள்தாம். ஆனால் அதேசமயம் அவற்றின் மூலம் குழந்தைகளின் அறிவை வளர்க்க முடியும். பொம்மைகளை வைத்து கணக்குப் போடக் கற்றுக் கொடுப்பது, அறிவியல் அறிவை வளர்ப்பது போன்றவற்றைச் செய்கிறோம்.
இப்போது கல்வி கற்பிக்கும் முறைகள் மாறிவிட்டன. “விளையாட்டுப் போல கல்வி’ என்பது நகர்ப்புறத்தில் உள்ள வசதியான வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டுமே கிடைக்கிறது. அதைக் குக்கிராமங்களில் உள்ள குழந்தைகள் பெறுவது எப்படி? நாளை இந்தக் குழந்தைகள் படித்துவிட்டு வேலைவாய்ப்பு என்று வரும்போது நகர்ப்புறக் குழந்தைகள்தானே வேலைவாய்ப்பைப் பெற முடியும்? நகர்ப்புறக் குழந்தைகளுக்குச் சமமாக கிராமத்துக் குழந்தைகளையும் படிக்க வைப்பதுதான் எங்கள் நோக்கம்.
ஆண்டுக்கு ஒரு முறை ஒரு கிராமத்துப் பள்ளிக்குப் போய் சில மணி நேரங்கள் பொம்மைகளைக் காட்டுவதால் அவர்கள் அறிவு வளர்ந்துவிடுமா?
எங்களுக்கும் ஆசைதான், எல்லா ஊர்ப் பள்ளிகளிலும் நிரந்தரமாக இப்படிப் பொம்மைகளை வைத்துக் குழந்தைகளின் கல்வியறிவை வளர்க்க வேண்டும் என்று. சுமார் 250 பொம்மைகளை வைத்துக் கல்வி கற்றுக் கொடுக்க 50 ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகளுக்கு எப்படி எங்களால் நிரந்தரமாகப் பொம்மைகளை வழங்க முடியும்?
இப்போது எங்களிடம் மூன்று பொம்மை வேன்கள் உள்ளன. ஒரு வேனில் நான்கு பேர் போவார்கள். குழந்தைகளுக்கு பொம்மைகளை வைத்து விளையாட்டும் அதேநேரத்தில் கல்வியும் கற்றுத் தருகிறோம். பாட்டு, நடனம் போன்றவற்றையும் அரை மணி நேரம் சொல்லிக் கொடுக்கிறோம்.
நாங்கள் ஒரு பள்ளிக்குப் போய் பொம்மைகளைக் காட்டிவந்தபின்னால் அந்தப் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், தலைமையாசிரியர் போன்றவர்கள் பொம்மைகள் எங்கே கிடைக்கும்? என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் சொல்கிறோம். அவர்கள் தங்கள் பள்ளிக்கென்று பொம்மைகளை வாங்குகிறார்கள்.
எங்களுக்குப் பொம்மை வாங்க உதவுவது ரேயுகாய் - Reiyukai என்ற ஜப்பானிய நிறுவனம். அவர்களின் பிரதிநிதிகள் இங்கே நேரில் வந்து எங்களின் செயல்பாடுகளைப் பார்க்கிறார்கள். அதுமட்டுமல்ல, எங்களின் செயல்பாடுகளைக் கேள்விப்பட்ட பிற வெளிநாட்டவரும் எங்களை வந்து பார்க்கிறார்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த ஆன்ட்ரியா என்பவர் கூட அதுபோல இங்கே வந்து பார்த்தார்.
பொம்மைகளைக் குழந்தைகள் உடைத்துவிட்டால் என்ன செய்வீர்கள்?
குழந்தைகள் விளையாடுவதால் பொம்மைகள் உடையும் என்று முன்கூட்டியே குறிப்பிட்ட தொகையை அதற்கென ஒதுக்கித் திட்டம் போட்டிருக்கிறோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததைவிட குறைவான அளவே சேதம் ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகள் என்றால் விளையாடுவார்கள். விளையாடினால் உடைந்து போகும். இதெல்லாம் சகஜம்தானே?
உங்கள் நிறுவனத்தை சுனாமியின் போதுதான் ஆரம்பித்தீர்களா?
இல்லை. நாங்கள் வித்யாரம்பத்தை ஆரம்பித்து 5 வருடங்கள் ஆகின்றன. நான் பல தனியார் நிறுவனங்களில் பல பொறுப்புகள் வகித்து ஓய்வு பெற்றவன். நான் எனது சொந்தக் கிராமத்துக்கு என் குழந்தைகளுடன் போகும்போதெல்லாம் அங்குள்ள குழந்தைகளுக்கும் என் குழந்தைகளுக்கும் அறிவுத்தரத்தில் நிறைய வேறுபாடுகள் இருப்பது எனக்கு உறுத்தலாக இருந்தது. கிராமத்துக் குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அப்போதே தோன்றியது. என் குழந்தைகள் இப்போது வளர்ந்து பெரியவர்களாகிவிட்டார்கள். என்றாலும் என் எண்ணம் அப்படியேதான் இருக்கிறது.
பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் நான் செய்த முதல் காரியம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வட்டக் கோட்டை என்ற கிராமத்துக்குப் போனதுதான்.
அங்குள்ள சிறு குழந்தைகள் கல்வி கற்பதற்காகப் பள்ளிக்குச் செல்வதில்லை. அங்குள்ள சத்துணவுக் கூடத்திற்கு உணவு உண்பதற்காகச் செல்கிறார்கள் என்பதையறிந்து மனம் வேதனைப்பட்டேன். அவர்களுக்கு கல்வி கற்றுத் தர நான் தனிப்பட்ட முறையில் சிறு உதவிகள் செய்தேன். பின்னர் சென்னைக்கு வந்து நண்பர்களுடன் இதைப் பற்றிக் கலந்தாலோசித்ததின் விளைவாக 2002 இல் உருவானதுதான் வித்யாரம்பம் அறக்கட்டளை. எங்களுக்கு முதன் முதலில் ஐந்து லட்சம் ரூபாய்க்கான செக் நன்கொடையாகக் கொடுத்து உதவினார் ஏஇக நிறுவனத்தின் தலைவர் ஷிவ்நாடார். இதை எங்களால் மறக்கவே முடியாது.
வித்யாரம்பம் அறக்கட்டளையின் மூலமாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு “உறுதுணைக் கல்வி’ என்ற பெயரில் கற்றுத் தருகிறோம். 2 - 3 வகுப்புப் படிக்கும் குழந்தைகளுக்குத் தனிப்பயிற்சி. 4 - 5 வது வகுப்புப் படிக்கும் குழந்தைகளுக்குத் தனிப்பயிற்சி என்று எடுக்கிறோம். குழந்தைகளுக்கு பாடப்புத்தகம், சிலேட்டு போன்றவற்றையும் வழங்குகிறோம். எங்களிடம் பயிற்சி பெறும் குழந்தைகள் அவர்கள் படிக்கும் பள்ளியில் மிகத் திறமையானவர்களாக இருக்கிறார்கள்.
என்ன கற்றுக் கொடுக்கிறீர்கள்?
முதலில் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுக்கிறோம். காலணியைக் கழற்றிச் சரியாக வைக்கிறார்களா? புத்தகப் பைகளை ஒரு பக்கமாக அடுக்கி வைக்கிறார்களா? என்பதையெல்லாம் கண்காணித்துக் கற்றுக் கொடுப்போம். வணக்கம், குட்மார்னிங், தேங்க்யூ சொல்லுதல் போன்றவற்றைச் சொல்லிக் கொடுப்போம். பிறகு பொம்மைகளை வைத்து விளையாட்டுக் கற்றுக் கொடுப்போம். மணிகளைக் கோர்க்கச் சொல்லிக் கற்றுக் கொடுப்போம். மணிகளை வைத்து கணக்குப் போடச் சொல்லித் தருவோம். கணிதம் சொல்லித் தரும் எங்கள் முறையே விளையாட்டுடன் தொடர்புடையதாகத்தான் இருக்கும். மிக எளிய கூட்டல், கழித்தலில் ஆரம்பிக்கும் எங்கள் குழந்தைகள், கோடி மதிப்புள்ள எண்களைக் கூடக் கொஞ்சமும் பயமில்லாமல் கூட்டிக் கழித்துவிடுவார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ஒரு வித்யாரம்ப மையத்தில் 20 குழந்தைகள் இருப்பார்கள். ஓர் ஊரில் 30 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் இரண்டு மையங்களை ஏற்படுத்திவிடுவோம். தமிழ்நாட்டில் இப்போது 600 மையங்கள் செயல்படுகின்றன. கிட்டத்தட்ட 50 ஆயிரம் குழந்தைகள் எங்களிடம் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.
இதுதவிர குழந்தைகளுக்கான நூலகங்களையும் நடத்தி வருகிறோம்.
Article:
http://bsubra.wordpress.com/2007/12/12/vidhyarambam-v-renganathan-volunteering-for-the-rural-poor-with-educational-toys/
இரா. செழியன்
இந்தியா கடைப்பிடித்துவரும் நாடாளுமன்ற முறையின் அடிப்படைக் குறிக்கோள் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய பேரவையின் கட்டுப்பாட்டிற்குட்பட்டு அரசு நிர்வாகம் நடைபெற வேண்டும் என்பதுதான்.
குறிப்பாக, அரசு நிர்வாகத்துக்கும் அரசால் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களுக்கும் நாடாளுமன்றம் மானியங்களை வழங்குகிறது. அந்த மானியத் தொகைகளைக் குறிப்பிட்ட திட்டங்களுக்காகச் சரியாக, சிக்கனமாக, திறமையாக, அரசு நிறைவேற்றுகிறதா என்பதை நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்குக் குழு, மதிப்பீட்டுக் குழு, பொதுத்துறை நிறுவனக் குழு போன்ற கண்காணிப்பு அமைப்புகள் மூலம் ஆராய்கின்றன.
இந்தவகையில், பொதுத்தணிக்கை அமைப்பு என்பது அரசின் வரவு, செலவுக் கணக்குகளைத் தணிக்கை செய்து, அதிலுள்ள குறைபாடுகள் அடங்கிய அறிக்கைகளை குடியரசுத் தலைவர் மூலம் நாடாளுமன்ற அவைகளின் முன் வைக்கிறது.
இந்த வகையில் தலைமைத் தணிக்கை அதிகாரியின் பணி நாடாளுமன்றத்திற்கு மிகவும் முக்கியமானது. இது குறித்து அரசியல்நிர்ணய சபையில் அம்பேத்கர் கூறியதாவது: “”இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள மிக முக்கியமான அதிகாரி, தணிக்கைக் குழுத் தலைவர் என்பதுதான் என் கருத்து. இன்னும் கவனித்தால், தலைமை நீதிபதிக்கு இருப்பதைவிட அதிகமான அளவு தணிக்கைக்குழுத் தலைவருக்கு முக்கியத்துவம் இருக்கிறது. நீதி அமைப்பு இருப்பதைப் போன்று தணிக்கை அமைப்பும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.”
தணிக்கை அமைப்பின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றி நீண்ட விவாதம் அரசியல்நிர்ணய சபையில் 1949, மே மாதத்தில் வந்தது. தணிக்கைத் துறையில் திறமையும், நல்ல பயிற்சியும் உள்ளவர்களைத்தான் தணிக்கை அமைப்பின் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் வந்தபொழுது, “”பொதுவாக மாநிலத்தில் கணக்குத் தணிக்கை அதிகாரியாக ( Accountant General) உள்ளவர்களில் தலைசிறந்து விளங்குபவர்களைத்தான் மத்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரியாக நியமிப்போம்” என்று அரசமைப்புச் சட்ட ஆக்கக்குழுவின் சார்பில் டி.டி. கிருஷ்ணமாச்சாரி உறுதிமொழி தந்தார்.
ஆறாண்டு காலம் அல்லது 65 வயதுவரை இவற்றில் எவை முன்னதாக வருகிறதோ அதுவரையில் பணியாற்ற, தலைமைத் தணிக்கைக் குழுத் தலைவர் நியமிக்கப்படுகிறார். அரசியல் நிர்ணயசபையில் தரப்பட்ட உறுதிமொழியின்படி 1948 தொடங்கி 1966 வரை மூன்று கணக்குத் தணிக்கை அதிகாரிகள், வி. நரஹரி ராவ், ஏ.கே. சந்தா, ஏ.கே. ராய் போன்ற இந்திய தணிக்கைப் பிரிவின் உயர் அதிகாரிகள் தணிக்கை அமைப்புத் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள்.
ஆனால், அதன்பிறகு கடந்த 42 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட 7 தணிக்கைத் தலைவர்களில் ஒரே ஒருவர் மட்டும்தான் இந்திய கணக்குத் தணிக்கை ( IAAS - Indian Audit and Accounts Service) பிரிவில் உயர் அதிகாரியாக இருந்தார். மற்ற 6 தடவைகளில் தணிக்கைக் குழுத் தலைவர் பதவி இந்திய ஆட்சிப் பணியாளர் ( IAS - Indian Administrative Service்) பிரிவைச் சேர்ந்தவர்களுக்குத் தரப்பட்டது. இது சரியானதல்ல.
ஓய்வுபெறும் நிலையிலுள்ள இந்திய ஆட்சிப் பணியாளருக்கு கணக்கு - தணிக்கைத் துறைகளில் எத்தகைய பயிற்சியும், திறமையும் இல்லாத நிலைமையில், இந்திய கணக்குத் தணிக்கைக் குழுவின் தலைவராக நியமிக்கப்படுவது நாடாளுமன்ற முறைக்கு மிகவும் முரண்பட்ட ஒன்றாகும்.
உலகில் ஜனநாயக நடைமுறையைப் பின்பற்றும் முக்கியமான நாடுகளில் எவற்றிலும் தணிக்கை அதிகாரியை அரசு தன் விருப்பப்படி நியமித்துவிட முடியாது.
இங்கிலாந்து நாட்டில், மக்கள்சபையின் பொதுக்கணக்குக் குழுவின் ஆலோசனைப்படிதான் தணிக்கை அமைப்பின் தலைவரை நியமிக்கும் தீர்மானத்தை பிரதமர் மக்கள்சபையின் முன் வைப்பார். எவ்வித விவாதமுமின்றி பேரவை அதை ஏற்றுக்கொள்ளும்.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உள்ள பொதுக் கணக்கு - தணிக்கைக் குழுவின் தீர்மானத்தையொட்டி மத்தியத் தணிக்கைக் குழுத் தலைவர் நியமிக்கப்படுகிறார்.
ஜெர்மன் நாட்டின் நாடாளுமன்றத்தில் உள்ள உயர்நிலை தணிக்கை அமைப்பின் ஆலோசனையின் பேரில்தான் தணிக்கைக் குழுவின் தலைவர் - துணைத் தலைவர் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
அமெரிக்காவின் மேல்சபையான செனட்டின் தீர்மானத்தின் மீதுதான் தணிக்கை அமைப்புத் தலைவரை, அந்நாட்டின் அதிபர் நியமிக்க முடியும். அப்படி அதிபர் நியமித்தாலும் தணிக்கைக் குழுத் தலைவரை நீக்கும் அதிகாரம் அவருக்குக் கிடையாது. செனட் சபை நிறைவேற்றுகிற குற்றச்சாட்டுத் தீர்மானப்படிதான் அவரை நீக்க முடியும்.
ஆக, மற்ற நாடுகளில் உள்ள முறையைப் போன்று இந்தியாவிலும் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியை மத்திய அரசு தன்போக்கில் எந்த வகையிலும் நியமிப்பது கூடாது. மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றின் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளடக்கிய பாரபட்சமற்ற ஒரு குழு மூலமாகத்தான் அந்தப் பதவிக்கான தலைவர் நியமிக்கப்பட வேண்டும்.
தலைமைக் கணக்குத் தணிக்கை அமைப்பின் முக்கியத்துவம் பற்றி 1950 ஜூலை 21 ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் பின்வருமாறு கூறினார்: “”இந்தியா ஓர் ஏழைநாடு. இங்குள்ள அரசு மூலம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அளவில் செலவு செய்யப்படுகிற நிலைமையில், ஒவ்வொரு ரூபாயும் எவ்வாறு செலவாகிறது என்பதைக் கவனிக்கும் பொறுப்பு தணிக்கைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி அதிகமாகக் கூறத் தேவையில்லை.”
1954 ஆம் ஆண்டு மத்திய - மாநில அரசுகளின் மொத்த செலவு ரூ. 1,254 கோடி. தற்போதைய நிலவரப்படி, 2005 - 2006-இல் மத்திய - மாநில அரசுகளின் மொத்த செலவின் அளவு ரூ. 15,92,000 கோடி.
அப்போது இருந்ததைவிட 1,270 பங்கு அதிகமான அரசு செலவுகளைத் தற்போது தணிக்கை பார்க்க வேண்டிய பொறுப்பு பொதுத்தணிக்கை அமைப்புக்கு இருக்கிறது. ஆனால், முன்பிருந்த தணிக்கைத் துறையின் திறமையாளர்கள் தற்போது அரசால் தணிக்கைத் தலைவராக நியமிக்கப்படுவதில்லை.
அரசு நிர்வாகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வீணாக்கப்படுகிறது அல்லது ஊழலில் கரைக்கப்படுகிறது என்றால், அவை அங்குள்ள அதிகாரிகளின் நிர்வாகத்தில்தான் நடைபெறுகின்றன.
அப்படிப்பட்ட அதிகாரி ஒருவரை திடீரென்று அவருக்குப் பின்னணியான பயிற்சியும், திறமையும் இல்லாத நிலைமையில், தணிக்கைத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுவிட்டால் அவர் சம்பந்தப்பட்ட அரசின் செலவு ஒழுங்கீனங்களின் மீது அவருடைய தலைமையின்கீழ் வரும் தணிக்கைத்துறையால் எப்படி வெளிப்படுத்தி நடவடிக்கை எடுக்க முடியும்?
தணிக்கை முறைக்குக் கட்டுப்பட்டு அரசு நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதற்குப் பதில், அரசு நிர்வாகத்துக்குக் கட்டுப்பட்டுத் தணிக்கைத்துறை கொண்டு வரப்படுகிறது.
தற்போதைய தணிக்கைத்துறைத் தலைவர் - அவரும் இந்திய ஆட்சிப் பணி ( IAS) அதிகாரியாக இருந்து இந்தப் பதவிக்கு வந்தவர் - அவருடைய பதவிக்காலம் வருகிற 2008 ஜனவரி 6 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
தணிக்கைக்குழுத் தலைவராக ஒருவரை நியமிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் இந்தச் சமயத்திலாவது மக்களாட்சி முறையில் நம்பிக்கையுள்ள நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களும், அவற்றின் கண்காணிப்புக் குழுவினரும், பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் ஒன்றுபட்டு, பயிற்சிபெற்ற திறமையுள்ள, தணிக்கைக் கணக்குத்துறை பிரிவைச் சேர்ந்த ஒருவரை, பாரபட்சமற்ற முறையில் தேர்ந்தெடுப்பதற்கான கட்டாயத்தை ஏற்படுத்த வேண்டும்.
சரியானபடி அரசின் செலவு விவரங்கள் கவனிக்கப்படவில்லை என்றால் தணிக்கை முறை வெற்றி பெறாது.
சரியானபடி தணிக்கை முறை இல்லையென்றால் நாடாளுமன்றக் கண்காணிப்பு வெற்றி பெறாது. இந்த நிலைமை வளர்ந்தால் ஜனநாயக முறையில் மக்களின் பணத்துக்குப் பாதுகாப்புத் தரும் நாடாளுமன்றம் என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
உச்ச நீதிமன்றத்தைவிட முக்கியமான இடத்தை தணிக்கை அமைப்புக்கு அரசமைப்பு ஆசான் அம்பேத்கர் தந்தார். ஆனால் தமது போக்கில் தணிக்கை அமைப்பின் தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத் தொடர்ந்து மத்திய அரசு நியமித்துக்கொண்டே இருந்தால், விரைவில் சட்டப்படிப்பு அறவே இல்லாத ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு பின்வாங்காது.
அதன் பிறகு, நீதிமன்றம், நாடாளுமன்றம், தணிக்கைத்துறை ஆகியவைகளுக்கு உள்ள சுதந்திரமும், தனித்தன்மையும் நீக்கப்பட்டு, எல்லாவற்றுக்கும் ஏகபோக சர்வாதிகாரமாக மத்திய நிர்வாகத்துறை ஆகிவிடும்.
(கட்டுரையாளர்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)
Article:
http://bsubra.wordpress.com/2007/12/13/public-administration-accountant-generals-office-iaas-indian-audit-and-accounts-service/