ரசித்தவை

செந்தில்குமார் | www.senthil.co.nr |

ஆங்கில ப்ளாக் வைத்திருக்கும் நமது மேலை/அமெரிக்க நாட்டு நண்பர்கள் பெரும்பாலானோர் $$ராக சம்பாதிக்கும் போது நமது தமிழ் வலைபதிவர்கள் இதில் சற்று பின் தங்கியே இருக்கின்றனர். ஆதலால் எனக்குத் தெரிந்த இணையம் (website) அல்லது பிளாக் (blog) மூலம் சம்பாதிக்கும் வழிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். நூற்றுக்கணக்கான ad-networks இருந்தாலும், நான் உபயோகப்படுத்தியதும், நம்பகத்தன்மை உள்ளதுமான சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறேன்.

1. கூகுள் ஆட்சென்ஸ்

கூகுளின் இந்த சேவை பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கும். தற்போழுது நீங்கள் இதை உங்கள் தமிழ் பதிவிலும் இணைக்கலாம். இதற்கான வழிமுறைகள்:

அ. முதலில் இங்கேSign up for AdSense. Sign up for AdSense. சுட்டி ஒரு அக்கவுண்ட் கிரியேட் செய்யவும்.
ஆ. பின்னர் Adsense setup > Refferals கிளிக் செய்து தேவையான code’i பெற்றுக் கொள்ளவும்.
இ. இனி நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அந்த code’i உங்கள் பிளாகில் இணைப்பதுதான்.

இப்பொழுது நீங்கள் சேர்த்த கோடிற்கேற்ப கூகுள் தன் விளம்பரங்களை உங்கள் பதிவில் வெளியிடும். இனி என்ன, ஒவ்வொரு கிளிக்கும் உங்களுக்கு $$தான்.

Sign up for AdSense.Sign up for AdSense. இங்கே கிளிக்கி கூகுள் ஆட்சென்ஸ் அக்கவுண்ட் கிரியேட் செய்யவும்.

2. டெக்ஸ்ட் லிங்க் ஆட்ஸ்

என்னுடைய சில இணையதளங்களை இதன் மூலம் விளம்பரப்படுத்தியுள்ளேன். மிக அருமையான user friendly இணையம். இதன் மூலம் உங்கள் பிளாக்/இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்பும் விளம்பரதாரர்களின் லிங்குகளை உங்கள் பிளாக்/இணையத்தில் display செய்யலாம். ஒவ்வொரு லிங்கிற்கான விலையையும் Alexa மற்றும் Google Pagerank மூலம் அவர்களே நிர்ணயம் செய்கின்றனர். Don’t miss it!
அக்கவுண்ட் தொடங்க இங்கே கிளிக்கவும்!

3. ஆட்ஸ் பார் இந்தியன்ஸ்

எங்களுக்கு இந்திய விளம்பரங்கள் தான் வேண்டும் என்பவர்களுக்கு இந்த நிறுவனம் சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. சிறப்பான அல்லது user friendly தள வடிவமைப்பு இல்லாதது இதன் மிகப்பெரிய குறைபாடு. ஆனால் ஒவ்வொரு கிளிக்கிற்கும் கூகிள் ஆட்சென்ஸிற்கு இணையான வருமானம் ஈட்டித்தருகிறது.

உங்கள் அக்கவுண்டை இங்கே கிளிக்கி தொடங்கவும்.

4. இணையம் இல்லாதவர்களும் சம்பாதிக்கலாம்

நீங்கள் browse செய்யும் நேரத்தையும் காசாக மாற்றவேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அக்லோகோ நிறுவனத்தின் view bar ஐ டவுன்லோட் செய்து உங்கள் browser இல் நிறுவிக்கொள்ள வேண்டும். பின்னர் நீங்கள் browse செய்யும் நேரத்தையும் நீங்கள் பரிந்துரை செய்த நண்பர்கள் செய்யும் நேரமும் கணக்கிடப்பட்டு உங்கள் தொகை நிர்ணயம் செய்யப்படும். நான் அறிந்ததிலேயே மிக எளிமையானது இதுதான்.
உங்கள் அக்கவுண்டை இங்கே கிளிக்கி தொடங்கவும்.

முழுநேரக்கல்வியில் படிப்பதற்கு தேவையான வசதியும், வாய்ப்பும் இல்லாதவர்கள் கல்வியை தொடருவதற்கு அஞ்சல் வழிக்கல்வி என்ற முறை அறிமுகப்படுத்தப் பட்டது.

இந்த முறையில் படித்து முன்னேறியவர்கள் ஏராளமானோர் உள்ளனர். தற்போதைய தொழில் நுட்ப யுகத்தில் இணையம் மூலமாகவும் இந்த கல்வி வழங்கப்படுகிறது. நாட்டில் தொலைவழிக்கல்வியை வழங்காத பல்கலைக்கழகமே இல்லை எனலாம்.


மக்களுக்கு கல்விச்சேவை முழுமையாக கிடைக்க வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த முறை, தற்போதைய நிலையில் பல்கலைக்கழகங்களின் பொருளீட்டும் வழியாக மாறிவிட்டது. பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கும் இந்த பல்கலைக்கழகங்களில் அரசுத்துறை பல்கலைக்கழகங்ளும் அடங்கி விடுகின்றன.

இவ்வாறு தொலைதூர கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக மத்திய அரசின் இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவாக தொலைக்கல்வி குழு (DISTANCE EDUCATION COUNCIL) அமைக்கப்பட்டது.

தொலைநிலைக்கல்வியை தரமுள்ளதாக்கும் இந்த திட்டத்தின்கீழ் கல்வித்திட்டங்களுக்கான தரநிர்ணயம் செய்யப்பட்டது. உதாரணமாக தொலைநிலைக்கல்வி மையத்தில் இருக்க வேண்டிய பேராசிரியர்களின் எண்ணிக்கை முதலானவை இந்த திட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வணிக மேலாண்மை(MBA), கணிப்பொறியியல் (MCA) போன்றவற்றில் மேல்நிலை பட்ட வகுப்புகளை மூன்றாண்டுகள் நடத்த வேண்டும் என்றும் அவற்றில் இடை நிலைத்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பது போன்ற திட்டங்களும் வலியுறுத்தப்பட்டன.

ஆனால் எந்த நல்லத்திட்டங்களையும் போல, இந்த திட்டங்களையும் அமல்படுத்தாவிட்டால் என்ன முடிவு என்பதற்கு எந்த விவரமும் இல்லை.

நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், தொலைவழிக்கல்வி வழங்குவதற்குமுன், இந்த தொலைக்கல்வி குழுவிடம் அங்கீகாரம் பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு அங்கீகாரம் பெறாத பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களை எச்சரிக்கும் விதமாக பொது அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.


எனினும், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு சுமார் 2 ஆண்டுகள் ஆகியும் சில பல்கலைக்கழகங்கள் மட்டுமே இந்த தொலைக்கல்விக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகமான சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகமும், சேலம் வினாயகா மிஷன் பல்கலைக்கழகமும் மட்டுமே அவற்றின் அனைத்து தொலைக்கல்வி படிப்புகளுக்கும் இந்தக்குழுவின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் வழங்கும் ஆசிரியத்துறை (B. Ed) பட்டப்படிப்புக்கு மட்டும் தொலைநிலைக்கல்வி குழுவின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

தமிழத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் எதுவும் இந்த தொலைநிலைக்கல்விக்குழுவின் அங்கீகாரத்தை பெறவில்லை. அதேபோல தமிழ்நாட்டில் பட்டங்களை கூவிக்கூவி விற்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களும் இந்த தொலைநிலைக்கல்விக்குழுவின் அங்கீகாரத்தை பெறவில்லை.


இப்போதைய நிலையில் இந்த பல்கலைக்கழகங்கள் வழங்கும் சான்றிதழ்கள் பட்டயங்கள் பட்டங்கள் செல்லுமா? செல்லும் என்றால் தொலைநிலை கல்விக்குழு வெளியிட்ட அறிக்கைக்கு என்ன அர்த்தம்? அந்தப்பட்டங்கள் செல்லாது என்றால் பல்கலைககழகங்களும், அவற்றை கட்டுப்படுத்தும் பல்கலைக்கழக மானியக்குழுவும், அரசும் என்ன செய்யப்போகின்றன?
-மக்கள் சட்டம் குழு
Article:
http://tamilblogs.com/a/redirect.php?pathivu=http://makkal-sattam.blogspot.com/2007/08/blog-post_27.html

1. கியுபா
பல நூறு ஆண்டுகள் பழமை கொண்ட வெப்ப மண்டல தீவு நாடு. 1959 ஆண்டு முதல் சோஷியலிச நாடாக மாறியது. திரு.பிடரல் காஸ்ட்ரோ அவர்களின் தலைமையில் இன்று வரை வெற்றிகரமாகவும் கம்பீரமாகவும் தனது பொருளாதாரத்தை உயர்த்திய நாடு. அமெரிக்காவின் சிஐஏ (CIA) சுமார் 638 முறை அவரை கொலை செய்ய முயன்று தோற்றது சரித்திரம். இயற்கையாக புயல் அதிகம் வரும் நாடு. பல இன மக்கள் வாழும் நாடு. 1991 ஆண்டு சோவியத் யூனியன் பிரிந்த போது சோவியத் யூனியனிலிருந்து
இறக்குமதி செய்த சுமார் 90000 டிராக்டருக்கு தேவையான டீசல்,இரசாயன உரம் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயம் கேள்விக் குறியானது. அவர்களின் முக்கிய ஏற்றுமதியான கரும்பு விவசாயம் பாதிக்கப்பட்டது. அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடையும் சேர்ந்து கொண்டதால் உணவு தட்டுபாடு ஏற்பட்டது. ஆனால் விரைவாக இயற்கை விவசாயத்திற்கு மாறி பின் நகர விவசாயத்தை ஊக்கப்படுத்தி இன்று
[Photo] தன்னிறைவு பெற்று மற்ற தென் அமெரிக்க நாடுகளுக்கு வழிகாட்டியாக உள்ளது. விவசாயத்தில் பழமையும் புதுமையும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கூட்டுறவின் வயது சுமார் 48 ஆண்டுகள்.
2. இஸ்ரேல் 1948 ஆண்டு தோன்றிய நாடு. தோன்றிய நாள் முதல் இன்று வரை அண்டை
நாடுகளுடன் சண்டையிட்டுக் கொண்டே விவசாயத்தில் விந்தை புரியும் நாடு. இயற்கை வளம், நீர் பற்றாக்குறையுள்ள நாடு. இருக்கின்ற வளத்தை சிறப்பாக பயன்படுத்தி குளிர் பிரதேசத்தில் வளரும் "டுலிப்" (Tulip)மலர்களயே ஹாலந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நாடு . சொட்டு நீர் பாசனம்,பசுமை கூடம், மூடாக்கு (sheet mulching) என அதிக உற்பத்தியை தரும்[Photo] தொழில் நுட்பங்கள் இவர்களது சிறப்பு. மற்றொரு சிறப்பு கூட்டுறவு முறையில் உற்பத்தி மற்றும் சந்தை. கிப்புட்ஸ் (Kibbutz),மோஷாவ் (Moshav) என அந்த கூட்டுறவு முறைகளுக்கு பெயர்கள். கிப்புட்ஸ் முறைக்கு வயது சுமார் 90 ஆண்டுகள். (நாடு தோன்றியதிற்கும் கிப்புட்ஸ் முறைக்கும் ஆண்டுகளில் வித்தியாசம் உண்டு.)


விஷயத்திற்கு வருவோம் உற்பத்தி மற்றும் சந்தை இரு நாடுகளிலும் கூட்டுறவு முறையில் நடைபெறுவது அவர்களின் வெற்றி. பன்னாட்டு நிறுவனங்களின் லாப வெறி கொண்ட சுரண்டல்கள் அங்கு இல்லை. நம் நாட்டில் கூட்டுறவு என்பது சமுதாய பிரபலங்களின் கையிலிருப்பதால்
சாதனைகள் இல்லை. அதையும் மீறி வந்து சாதனை செய்தது " அமுல்". ஆனால் அந்த கூட்டுறவு சாதனைக்கு காரணமான திரு.குரியன் சென்ற ஆண்டு நீக்கப்பட்டார். சாதனை தொடருமா? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கூட்டுறவிற்கு பெயர் பெற்ற கோவையின் " சிந்தாமணி கூட்டுறவு அங்காடி" இன்று இல்லை என்பது வரலாறு.


உலகமயமாக்கல்,தாராளமயமாக்கல் போன்ற பொருளாதார மாற்றத்தால் வரும் 10-20 ஆண்டுகளில் சிறு,குறு விவசாயம் இருக்காது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.ஒப்பந்த முறை அல்லது கம்பெனி விவசாயம் தான் இருக்கும் என்கிறார்கள் சமுதாய பிரபலங்கள். ஆனால் கூட்டுறவு முறை அதனை முறியடிக்கும் என்பது நிருபிக்கப்பட்ட வரலாற்று
உண்மை. அதற்கு லாப வெறியற்ற சமுதாய வளர்ச்சிக்கு உடன்படும்
மனங்களும், அதையும் மீறினால் தண்டிக்க கடுமையான சட்டமும் தேவை.

கூட்டுறவே நாட்டுயர்வு.

கடந்த இரண்டு வாரங்களாக அடி மேல் அடி வாங்கிய பங்கு சந்தைகளை பார்த்த அமெரிக்க மத்திய வங்கியின் தலைமை அதிகாரி பென் பெர்னாங்க் வெறுத்துப் போய் வங்கிகளுக்கு கொடுக்கும் கடன் வட்டியை (discount rate) 0.5% குறைத்து விட்டார்.

வீட்டு கடன் கொடுக்கும் நிறுவனங்களில் ஒன்றான Countrywide திவாலாக போகிறது என்று வதந்தி பரவி, கலிபோர்னியாவில் அந்த வங்கிகளின் கிளைகளில் பெரிய க்யூவில் மக்கள் நின்றார்கள் – தங்கள் பணத்தை இப்போதே எடுக்காவிட்டால், இனிமேல் எப்போதுமே கிடைக்காது என்ற பயத்தில்.



ஆடி தள்ளுபடிக்காக தி.நகரில் தென்படும் அளவிற்கு கூட்டம் இந்த வங்கியின் கிளைகளில் அலை மோதியது.

Subprime என்பதே “வழக்கமாக வழங்கப்படும் கடனை விட ஒரு படி கீழே” என்று தான் அர்த்தம். இருந்தாலும், அமெரிக்க ரியல் எஸ்டேட் boom இன்னும் பல வருடங்களுக்கு நீடிக்கும் என்று தப்புக்கணக்கு போட்டு, Countrywide போன்ற வங்கிகள் பல பில்லியன் டாலர்களை இழந்து விட்டன.



அமெரிக்காவில் கிரடிட் ரேட்டிங் முறை இருப்பதால், வாடிக்கையாளர்களில் யார் prime, யார் subprime என்று ஓரளவுக்காவது தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் அப்படிப்பட்ட கிரடிட் ரேட்டிங் முறை இல்லை.

இருந்தாலும், இந்தியாவில் பல வங்கிகளும் NBFC லோன் நிறுவனங்களும் லோன்களை அள்ளிக் கொடுக்கின்றன. வீடு விலைகள் கிடுகிடுவென்று உயர்ந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் கடன்களை அள்ளி வழங்குகின்றன.

கடந்த இரண்டு மாதங்களில் சென்னையில் வீட்டு விலை 20% குறைந்திருக்கிறது. இந்திய ரியல் எஸ்டேட் இன்னும் கீழே விழுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடக்கும் போது, தாங்கள் கொடுத்த கடன்கள் திரும்ப வராமல் போனால் இந்திய வங்கிகள் எப்படி சமாளிக்கும்?

அமெரிக்காவில் subprime-ல் கடன் வாங்கிய சில வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டு சாவியை வங்கிகளிடம் கொடுத்து விட்டு ஊரை காலி செய்கிறார்கள். தாங்கள் வாங்கிய விலையை விட வீட்டின் மதிப்பு பல மடங்கு குறைந்து விட்டதால், foreclosure செய்வதை கூட வித்தியாசமாக இப்படி செய்கிறார்கள்!

உலக சந்தைகளில் இந்திய ரியல் எஸ்டேட் சந்தை மட்டும் வித்தியாசமானது என்று பலர் என்னிடம் கூறினர். அமெரிக்காவில் நடப்பது போல இங்கே நடக்காது என்று விவாதம் செய்கின்றனர். அது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை.

எல்லாவற்றையும் தீர்மானிப்பது “Law of supply and demand”. இந்தியாவாக இருந்தாலும் சரி, இலங்கையாக இருந்தாலும் சரி அல்லது அமெரிக்காவாக இருந்தாலும் சரி. அதனால் இந்தியாவில் மட்டும் ரியல் எஸ்டேட் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் மற்ற நாடுகளை விட மாறுபட்டு இருக்கும் என்ற விவாதத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பல ஆயிரம் கோடிகளை கடனாக கொடுத்த வங்கிகளுக்கு, சில ஆயிரம் கோடிகள் திரும்ப வராமல் போனாலே அது மிக பெரிய பிரச்னை.

இந்தியாவில் உள்ள வங்கிகள் அனைத்துமே கடன்களை கொடுப்பதில் தாராள மனதுடன் இருக்கின்றன. பெரும்பாலான வங்கிகளில் திறமை பெற்ற கிரடிட் அனலிஸ்ட்டுகள் உள்ளனர். அவர்கள் கொடுக்கும் எச்சரிக்கையையும் மீறி, பல வங்கிகள் 90% லோன் கொடுக்கின்றன. கேட்பவர்களுக்கெல்லாம் கிரடிட் கார்டுகளை கொடுக்கின்றனர்.

ரியல் எஸ்டேட் மார்க்கெட் சரிந்து தன் கடன் தொகையை விட வீட்டின் மதிப்பு குறைந்து விட்டால், பலர் கடனை அடைக்கப் போவதில்லை. அப்போது இந்திய வங்கிகள் பலவற்றுக்கு Countrywide வங்கியின் தற்போதைய நிலைமை வரலாம்.

வளர்ந்த நாடுகளில் இருப்பது போல “Credit derivatives” முறை நம் நாட்டில் இல்லை. விரைவில் இந்த முறையை அமுல்படுத்த போவதாக இரண்டு மாதங்களுக்கு முன்னால் RBI வங்கி ஒரு draft-ஐ வெளியிட்டது. இதே போல ஒரு draft மூன்று வருடங்களுக்கு முன்னாலும் வெளியிடப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.

Credit derivatives பற்றி விரிவாக அடுத்த பதிவில் பார்க்கலாம். சுருக்கமாக சொல்லப் போனால், கடன் நஷ்டத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வங்கிகளுக்கு இது உதவும். தற்போதைய இந்திய சூழ்நிலைக்கு இது மிக அவசியம். நாம் பங்குகள் வாங்கினால் அதை “Put” ஆப்ஷன்கள் மூலம் பாதுகாப்பது போல வங்கிகளுக்கு credit derivatives ஹெட்ஜாக இருக்கும்.

நீங்கள் இந்திய வங்கிகளின் பங்குகளில் முதலீடு செய்திருந்தால், இந்திய ரியல் எஸ்டேட் மார்க்கெட்டின் மேல் ஒரு கண் வைத்திருங்கள். வங்கிகளின் பங்குகள் சரிவதற்கு முன் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
Article:
http://tamilnithi.blogspot.com/2007/08/blog-post_20.html

கடந்த ஜூன் இரண்டாம் வார துவக்கத்டிலிருந்து வெளிவரத்துவங்கிய நிறுவணங்களீன் முதல் காலாண்டு (Qyt Result) அறிக்கைகள் தந்த நம்பிக்கை,மற்றும் சர்வதேச சந்தைகளில் கானப்பட்ட
உற்சாகம்,காரணமாக 14000 ம் புள்ளிகளிலிருந்த சந்தை விறு விறு எண உயரத்துவங்கி வெகு சுலபமாக 15000 த்தை கடந்து ஆச்சரியம் அளித்தது.அதைவிட ஆச்சரியம் அடுத்த்த சில நாட்களிலேயே 15868.80 என்ற புள்ளிகளை அடைந்தபோது சந்தை ஆய்வாளர்கள் கூட ஆச்சரியபட்டு போணார்கள்.

மீடியாக்களும்,வல்லுணர்களும் சந்தை 16000 த்தை தாண்டும் ,20000 த்தை தொடும் என ஆரூடம் கூறிணார்கள்.

ஆணால் இதே காலகட்டத்தில் கச்சாஎண்ணெய் விலை உயர்வு,பணவீக்கம் அதிகரிப்பு என Negative காரணிகளும் வலுப்பெற்றதை கணக்கில் கொள்ளவில்லை பங்குசந்தை.
(ஆணால் நாம் கடந்த ஜூலை 20ம் தேதி பதிப்பில் "சந்தை நிலவரம்-எச்சரிக்கை அவசியம்" என்ற தலைப்பில்
சந்தை Overbought zone ல் இருப்பதாகவும் எதிர்வரும் நாட்களில் எண்ணெண்ன பாதகசெய்திகள் சந்தையை சீர்குலைக்கும் என பதிப்பித்திருந்தோம்).

ஆகவே சந்தை தணது உச்சபட்ச புள்ளிகளை தொட்டபோது ஏறத்தாழ முண்ணனி நிறுவணங்கள்
அனைத்தும் தனது முதல் காலாண்டு அறிக்கைகளை வெளியிட்டு முடித்திருந்தன.மேற்கொண்டு சந்தையினை ஊக்குவிக்கும் செய்திகள் இல்லை.

இந்த 14000 to 15850 எழுச்சி வழுவாக (Broad based) இல்லாமல் சில துறை சார்ந்ததாக மட்டுமே இருந்தது.IT,AUTO,FMCG,OIL&Gas நிறுவன பங்குகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிட தக்கது.Bank,Capital goods,Metal,நிறுவண பங்குகளே உயர்விற்கு பெறும் காரணமாயிருந்தது.

அத்தோடு சந்தையில் கடந்த ஒருவருடத்திற்கு முன் முதலீடு செய்த அனைவருமே பெரும்பாலும் நல்ல லாபவிகிதத்தை அடைந்திருந்தது Profit booking க்கிற்கு வழி வகுத்தது.

இதுபோண்ற காரணங்களை ஆராய்ந்தே நாம் கடந்த ஜுலை 20 பதிப்பிலிருந்தே எச்சரிக்கை அவசியம்,புதிய முதலீட்டை தவிருங்கள்,சந்தை உயர்வினை பயன்படுத்தி கையில் உள்ள பங்குகளை விற்று காசாக்குங்கள் என தொடர்ந்து திணமும் வலியுருத்தி வந்தோம்.(பார்க்க AArchive பகுதியில் முந்தைய பதிவுகளை)

இந்த நிலையில் சந்தையை சீர்குலைத்த முக்கிய செய்திகள் வரிசைகட்டி வரத்துவங்கியது.அவற்றில் சந்தை நிலவரத்தையே மாற்றி அமைத்த் முக்கிய செய்திகள்

1.சிமெண்ட் நிறுவணங்களுக்கு MMTC விலை விவகாரம் தொடர்பாக அணுப்பிய நோட்டீஸ்
சிமெண்ட் நிறுவன பங்குகளில் சரிவை ஏற்படுத்தியது.

2.ரூபாய் மதிப்பு மேலும் வழுபெற்றது IT நிறுவன பங்குகளை தொடர்ந்து வீழ்ச்சி காணவைத்தது.

3.RBI காலாண்டு கூட்டத்தில் பண வீக்கத்தை கட்டுபடுத்தும் நோக்கோடு அறிவிக்கபட்ட
CRR விகித உயர்வும்,மற்றும் வங்கிவைப்பு தொகை அதிகரிப்பு பணபுழக்கத்தை
கட்டுபடுத்தியதால் சந்தை நீர்மைதண்மை குறைந்தது.

4.அமெரிக்க சந்தையில் வெடித்து கிளம்பிய SUBPRIME Martgage பிரச்சினை சர்வதேச சந்தையை
சரிவுக்குள்ளாக்கியது.இது இந்திய சந்தை வீழ்ச்சியை மேலும் துரிதபடுத்தியது.

5.அமெரிக்காவுடனான அனுசக்தி ஒப்பந்தம் மத்திய அரசுக்கு அதன் ஆதரவு கட்சிகளிடமிருந்தே
கிளம்பிய எதிர்ப்பு அரசு நிலைதண்மைகுறித்த சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

இதுதான் Sensex 15850 லிருந்து 13800 வரை டைவ் அடித்ததண் பிண்ணனி.பாதக செய்திகள் சந்தை அபார எழுச்சியிலிருக்கும்போதுதாண் வந்து சேரும்.அப்போது சந்தை Normal Trading Zone ல் இருந்தால் வீழ்ச்சி மிதமாக இருக்கும்.அதுவே Overbought Zone ல் இருந்தால் அடி பலமாக இருக்கும்.எனவேதாண் சந்தை Overbought zone ஐ தொடும்போதெல்லாம் எச்சரிக்கை அவசியம் என்பதனை வலியுறுத்துகிறோம்.

சரி இந்த வீழ்ச்சி தொடருமா? அல்லது மீண்டும் எழுச்சிபெறுமா? புதிய முதலீடுகளை மேற்கொள்ள இது சிறந்த தருனமா? எந்த துறை பங்குகளை வாங்குவது? அல்லது மொத்ததில்
சந்தையை விட்டு விலகி இருப்பது உசிதமா என உங்களுள் பல கேள்விகள் எழலாம்.
நண்றி.
Article:
http://tamilblogs.com/a/redirect.php?pathivu=http://kaasumalai.blogspot.com/2007/08/blog-post_18.html

இரவு நேரங்களில் எதை மறந்தாலும் கொசுக்கடி தாங்கவில்லை என்று எல்லோரும் கொசு வர்த்தி கொளுத்த மறப்பதில்லை. தற்காலிகமாக கொசுவிடம் இருந்து நிவாரணம் கிடைத்தாலும் . அதன் பின் விளைவுகளை யாரும் அறியவில்லை. கொசுவர்த்தியில் மறைந்து இருக்கும் பயங்கரம். என்ன?



கொசுவர்த்திகளில் கொசு விரட்டும் காரணிகளாக செயல்படும் வேதிப்பொருட்கள் என்ன ,



*சிந்தெடிக் D அல்லித்ரின்

*ஆக்டோ குளோரோ - டை- ப்ரோபைல் ஈதர் அல்லது s-2

இவை எரியும் போது ஏற்படும் வேதி வினையால் உருவாகி வெளியிடும் வேதிப்பொருள் பை - குளோரோ மெதைல் ஈதர்



இந்த வேதிப்பொருட்களை தொடர்ந்து மூடிய அறையில் இரவு முழுவதும் சுவாசித்தால் நுரையீரல் புற்று நோய் வரும் என ஆராய்ச்சியாளார்கள் தெரிவித்து ,மேற்கொண்ட வேதிப்பொருட்களை கொசுவர்த்தியில் பயன்படுத்த தடை விதிக்க செய்துள்ளார்கள் அமெரிக்கா போன்ற நாடுகளில்.



ஆனால் இந்தியாவில் இப்ப்டி எந்த தடையும் இது வரை கொண்டு வரவில்லை. நாம் தினசரி கொசுவர்த்தி புகையினை இன்பமாக நுகர்ந்து வருகிறோம்!



இந்த வேதிப்பொருட்கள் ஒரு பக்கம் தீங்கு விளைவிக்கிறது என்றால் , கொசுவர்த்தி சுருளின் அளவுக்கு ஏற்ப ஒரே ஒரு கொசுவர்த்தீ எரியும் போது அது வெளியிடும் நுண்ணிய சாம்பல் அளவு 75 முதல் 137 சிகரெட் எரிப்பதனால் வரும் சாம்பலுக்கு சமம் . இந்த சாம்பல் என்பது கீழே கொட்டும் சாம்பல் அல்ல நுண்ணிய காற்றில் மிதக்கும் சாம்பல்(size 2.5 micron). அதனை சுவாசிப்பதனாலும் நுரையீரல் காச நோய் and cancer போல நோய்கள் வரலாம்.



மேலும் கொசு வர்த்தி எரிவதனால் ஃபார்மல் டி ஹைட் என்ற வேதிப்பொருளும் பக்க விளைபொருளாக வரும்.



கொசுவை விரட்ட என்று காசு கொடுத்து கொசு வர்த்தி வாங்க போய் என்னவேல்லாம் இலவசமாக கிடைக்கிறது பாருங்கள்.



அப்படி என்றால் கொசுவிடம் இருந்து தப்பிக்க என்ன தான் வழி.



1)கொசு உற்பத்தி ஆகும் இடங்களிலே அழிப்பது,

2)கொசு உருவாகாமல் சுத்தமாக சுற்று புறத்தினை வைத்துக்கொள்வது.

3)கொசு வலை பயன்படுத்துவது.

செயற்கை கொசுவர்த்தியின் தீமைகளை பார்க்கும் போது அதை விட கொசுக்கடியே மேல் எனத்தோன்றுகிறது.ஆனாலும் கொசு கொடுக்கும் இம்சைக்கு அளவே இல்லை.இயற்கையாக அதை கட்டுப்படுத்த ஏதாவது இருக்கிறதா எனத்தேடியதில் அகப்பட்டது சில இயற்கை வழிகள்.

பல மிக எளிமையான தீங்கற்றவை.

ஒட்டும் கொசுப்பொறி!(sticky mosquito trap):

பெரும்பாலான மளிகை கடைகளில் குழல் விளக்கை தேடி பூச்சிகள் வருகிறது என எண்ணை தடவிய காகிதம் ஒன்றை கட்டி விட்டு இருப்பார்கள், பூச்சிகள் அவற்றில் போய் ஒட்டிக்கொள்ளும். அதே வகை ஒட்டும் பொறி ஒன்றை கொசுக்களுக்கும் பயன்படுத்தலாம். மஞ்சள் வண்ண காகிதம் ஒன்றில் எண்ணைக்கு பதில் எளிதில் காயாத பசை ஏதேனும் ஒன்றை தடவி வீட்டில் கட்டிவிட்டால் போதும். பாதிக்கொசுக்கள் அதில் ஒட்டிக்கொள்ளும்.காரணம் மஞ்சள் வண்ணம் கொசுக்களை கவர்கிறதாம்.

கொசு விளக்கு பொறி!

இதனை பெரும்பாலான உணவு விடுதிகளில் பார்த்து இருப்பீர்கள் , ஒரு மின் விளக்கும் மின்சாரம் பாச்சப்பட்ட கம்பி வலையும் கொண்டது , வெளிச்சத்தால் கவரப்பட்டு வரும் கொசுக்கள் , பூச்சிகளை கொல்லும்!

பெரோமொன் கொசு பொறி!

கொசுக்கள் முட்டை இடும் இடத்தை அடையாளப்படுத ஒரு வகையான பெரோமோன் சுரக்கும் அதே போன்ற பெரோமொன் கொண்டு கொசுக்களை கவர்ந்து அழிக்க வல்ல ஒட்டும் தன்மை கொண்ட பொறிகள் கிடைக்கிறது அவற்றை பயன்படுத்தலாம்.

கொசுவின் இயற்கை எதிரிகள்:

உங்கள் பகுதிகளில் நிறைய தும்பிகள்(dragon fly) இருந்தாலும் கொசுக்கள் வராது , தும்பிகள் கொசுக்கை பிடித்து உண்ணுமாம்.

அதே போல தோட்டத்தில் வவ்வால்கள் brown bats) இருந்தாலும் கொசுக்களை பிடித்து உண்ணுமாம்

நீர் நிலைகளில் கொசு புழுக்களை பிடித்து உண்ணும் மீன்களான டிலாபிய(tilapia), கேம்பூசியா (gambusia affinis), தங்க மீன் வளர்க்க வேண்டும்.

உயிரி்யல் கொல்லி!

பேசில்லஸ் துரிஞ்செனிஸ் இஸ்ரேலியன் (bacillus thuringinsis israeliensis)என்ற நுண்ணுயிர் கொசுவின் லார்வாவை கொல்லும் தண்மை கொண்டது , இதனை குளம் குட்டைகளில் தெளித்தால் போதும் கொசு வளர்ச்சிக்கட்டுப்படுத்தலாம்.

தாவரவியல் கொசு விரட்டி!

சிட்ரொனெல்லா புல்(லெமன் கிராஸ்), கேட்னிப், ரோஸ்மாரி , மரிகோல்ட்
mari gold flower
,ஹார்ஸ்மின்ட் ஆகிய தாவரங்களை தோட்டத்தில் வளர்த்தாலும் கொசுக்கள் குறையும்.இவற்றில் இருந்து பெறப்படும் சாறுகளும் கொசு விரட்டப்பயன்படும்.


கொசு விழுங்கும் தாவரம்:

அகஸ்டாச்சா கானா (agastache cana ) பூக்களில் ஒட்டும் தன்மை கொண்ட பிசின் இருக்கும் .இது கொசுக்கள் , பூச்சிகளை கவர்ந்து அப்படியே சுருட்டி விழுங்கிவிடும்.இதனை வீட்டில் வளர்ப்பதன் மூலம் கொசுவைக்கட்டுப்படுத்தலாம்.

கடைசியாக ஒரு சின்ன குறிப்பு,

கொசுக்கள் மனிதனை இருட்டிலும் அடையாளம் பார்த்து கடிப்பது மனிதனின் உடல் வெப்பம் ,மற்றும் நாம் சுவாசிக்கும் போது வெளியிடும் கரியமில வாயு. நம் உடலில் வேறு வாசனை வரும் திரவியங்களை பூசிக்கொண்டாலும் கொசுகடியில் இருந்து தப்பலாம். பூண்டு வாசனை கொசுவிற்கு ஆகாது , நிறைய பூண்டு சாப்பிட்டால் நாற்றம் தாங்காமல் கொசு ஓடிவிடும்!
Article:
http://vovalpaarvai.blogspot.com/2007/08/blog-post_17.html

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு 10 அக்கம், பக்கத்து கிராமங்களுக்கு மத்தியில் ஒரே ஒரு ஊர் பண்ணையார் வீட்டில் மட்டும் இருந்தது அந்த டெலிபோன்பஅழகான பெண்ணின் இடைபோல, கன்னங்கரேல் உருவத்தில், சுமார் 2 கிலோ எடை அளவு கொண்ட அந்த போனில் வளையம், வளையமாக 10 ஓட்டைகள் இருக்கும்.குறிப்பிட்ட எண்ணை விரலால் இடமிருந்து வலமாக சுற்றிவிட்டால் ஸ்பிரிங் போல ரிவர்ஸ்சில் வந்து டிரிங்... டிரிங்... என்று மணியடிக்கும்.

அப்போதெல்லாம் உலகம் முழுவதும் ஒரே ஒரு ரிங்டோன் தான்!இப்போது ஒரே சட்டைப் பையில் விதம் விதமாக 4 செல் போன்களை தாராளமாக வைத்திருக்கிறார்கள்.ஒரு புறம் வேடிக்கை யாகவும் இருக்கிறது. காதில் ëஹெட்போனை வைத்துக் கொண்டு நடுரோட்டில் தனக்குத்தானே பேசிக் கொண்டு போவதை செத்துப் போன நமது தாத்தா - பாட்டி பார்க்க நேர்ந்தால் பாவம், யாரு பெத்த புள்ளையோ இப்படி பைத்தியம்புடிச்சு அலையுது என்பார்கள்.கற்பனைக்கும் எட்டாத இந்த செல்போனை யார் கண்டுபிடித்ததுசிகாகோவைச் சேர்ந்த மார்ட்டின் கூப்பர் என்பவர்தான் இந்த நவீன செல்போனை கண்டுபிடித்தது.

1973-ம் ஆண்டு ஏப்ரல் 3-ந் தேதி உலகின் முதல் செல்போனை கண்டு பிடித்து முதன் முதலாக பேசியதும் இவர்தான். பிரபல மோட்டோரல்லா கம்பெனிதான் முதல் செல்போனை உலகிற்கு காட்டியது.இந்த நிறுவனத்தை சேர்ந்த மார்ட்டின் கூப்பர் முன்னதாக வயர்லெஸ், ஆன்டனா சம்பந்தமான கடை வைத்திருந்தவர் என்பது விசேஷம்.எனினும் இந்த செல்போனுக்கு அடிப் படை ஆதாரத்தை அமைத்துக் கொடுத்தது அமெரிக் காவின் நிï ஜெர்சியை அடுத்து முர்ரேஹில் பகுதியில் உள்ள பெல் லேபாரட்டரிதான்.இவர்கள்தாம் வயர்கள் இல்லாத வாக்கி - டாக்கி ரேடியோவை 1947-ல் கண்டுபிடித்து ராணுவ உபயோகத்திற்காக தந்தார்கள்.

இது அதிக எடைகொண்டதாக இருந்தது. இதனை 1960 வாக்கில் ஓரளவுக்கு நவீனமாக்கினார்கள்.இதைத்தொடர்ந்துதான் 1973-ல் மார்ட்டின் கூப்பர் நவீன உயர்ரக செல்போனை கண்டுபிடித்தது. 1990-ல் உலகம் முழுவதும் செல்போன்கள் முற்றிலும் நவீன யுகத்திற்கு போய்விட்டன.செல்போனை கண்டு பிடித்ததற்காக கடந்த 2003-ல் வார்தான் இன்போசிஸ் பிசினஸ் டிரான்ஸ்பர்மேசன் விருது கிடைத்திருக்கிறது


மார்ட்டின் கூப்பருக்கு!முதல் செல்போனை மோட்டோரல்லா கண்டு பிடித்தாலும் இன்று உலகம் முழுவதும் செல்போன் வியாபாரத்தில் சக்கைப் போடு போடுவது நோக்கியா நிறுவனம் தான்! உலகில் 36 சதவீதம் பேர் இதைத்தான் வைத்திருக்கிறார்கள். இது தவிர எல்.ஜி. மிட், சுபிசி, பேனாசோனிக், சோனி எரிக்சன், சன்யோ, சாம்சங், சைமன்ஸ், தோஷிபா, பிலிப்ஸ் நிறுவனங்களும் போட்டியில் உள்ளன.

இன்றைக்கு உலகம் முழுக்க சுமார் 350 கோடி பேர் செல்போன் வைத்திருக் கிறார்கள். இவர்களில் அதிகம் பேர் செல்போன்கள் வைத்து நம்பர் 1 இடத்தில் இருப்பவர்கள் சீனாக்காரர்கள். இங்கு 50 கோடி பேரிடம் செல் இருக்கிறது.இந்தியாவை பொறுத்த வரையில் கடந்த 2007 ஜுன் மாத கணக்குப்படி பதினெட்டே முக்கால் கோடி பேரிடம் செல்போன் இருக்கிறது. இந்தியாவில் மாதத்திற்கு 73 லட்சம் செல்போன்கள் விற்கின்றன. வருகிற 2010-ம் ஆண்டுக்குள் 50 கோடி செல்போன்கள் விற்பனையாகும் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.

உலகின் பல நாடுகளில் ஜனத்தொகையை விடவும் செல்போன்களின் எண் ணிக்கை அதிகமாக உள்ளது.இதில் லக்சம்பர்க்காரர்கள் 164 சதவீதம் செல்போன் வைத்து உலகின் முதல் இடத்திலும், ஹாங்ஹாங்கினர் 117 சதவீதம் செல்போன் வாங்கி 2-ம் இடத்திலும் இருக்கின்றனர்.வருகிற 2015-ம் ஆண்டு உலகின் 90 சதவீதம் பேரிடம் செல்போன் இருக்குமாம்.

அதிர்ச்சி இங்கிருந்துதான் ஆரம்பமாகிறது. ஒருவேளை இந்த செல்போனே உலகை அழிக்க காத்திருக்கும் சுனாமி எமனாக இருக்கலாம்.எந்த ஒரு அபாயகரமான சூழ்நிலையையும் அது வரும் முன்பே கண்டுபிடித்து உலகுக்கு எச்சரிக்க வேண்டியது விஞ்ஞானிகளின் கடமையாகும்.அந்த வகையில் செல்போன் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வேகமாக வெளியே வர ஆரம்பித்திருக்கின்றன.அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்து நிர்வாக மையம் நடத்திய ஆராய்ச்சியில் செல்போனின் அதீத பயன்பாட்டால் மூளையில் புற்றுநோய் வர வாய்ப்பு இருப்பதாக கண்டுபிடித்தது, எனினும் அறிக்கைக்கு போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இது ஒரு தற்காலிக முடிவு என்று விட்டுவிட்டார்கள்.

செல்போன் என்பது சமீபத்தில் தான் கண்டு பிடிக்கப்பட்டது என்பதால் இதுபற்றிய உண்மைகளை அறிய கால அவகாசம் தேவைப்படும் என்று உலக விஞ்ஞானிகள் அறிவித்த பட்சத்தில் உலக சுகாதார மையமும் முன்னர் அமெரிக்கா கண்டுபிடித்த விஷயத்தில் மூக்கை நுழைத்து ஆம் என்று கூறியிருக்கிறது.

கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து செல்போனை உபயோகித்து வந்த 3 ஆயிரம் பேரை பரிசோதித்து பார்த்தபோது அவர்களில் 40 சதவீதம் பேருக்கு மூளையில் கேன்சர்கட்டிகள் உருவாகி உள்ளது. இவை 2 விதமான புதிய கேன்சர் நோயாக உள்ளன.

பொதுவாக செல்போனில் இருந்து வெளிவரும் ரேடியேசன் என்ற கதிர் வீச்சு மிகக் குறைந்த அளவுதான் என்றாலும் அது மனித உடலின் திசுக்களை ஓரளவு பாதிக்கத்தான் செய்கிறது.செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருப்பவர் களுக்குத்தான் இத்தகைய ஆபத்துபகாதையும் உட்காதையும் மூளையுடன் இணைக்கின்ற ஆக்ïஸ்டிக் நிïரோம்ஸ் என்கிற நரம்பு பாதிப்பும் இவர்களுக்கு ஏற்படுகிறதாம்.

அதிக அளவு செல்போன் உபயோகிப்பவர்களுக்கு மூளைச் செயல்பாடுகள், தூக்கம், விழிப்புணர்வு ஆகியவற்றில் மாற்றம் ஏற்ப டுவதாகவும் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.இதில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விஷயம் உடல் திசுக்கள் முழு வளர்ச்சி அடையாத நிலையில் குழந்தைகளும் செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் கதிர்வீச்சுகள் இவர்களின் திசுக்களை மிக எளிதாகவே பாதித்துவிடும் என்ற நிலையில் இவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போது நீண்ட காலம் செல்போனை பயன்படுத்தியவர்கள் ஆகிறார்கள்.

எனவே அதிக ஆபத்து இவர்களைச் சூழ்ந்தி ருக்கிறது என்கிறார்கள்.இதுபற்றி அயிஸ் செல்சின், லாவரிசாலிஸ் என இரு விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தவண்ணம் இருக்கிறார்கள்.இதுதவிர உளவியல் ரீதியான ஆராய்ச்சி முடிவு களும் தற்போது வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.

செல்போனை அதிகம் பயன்படுத்துபவர்களில் 60 சதவீதம் பேருக்கு கோப குணமும், தலை வலியும், பெருகுவதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.ஒருவேளை செல்போனால் கேன்சர் நோய் உறுதி செய்யப்பட்டால் 2015-ல் உலகில் 90 சதவீதமான மக்களின் கதி என்னவாகும்ப- இப்பவே கண்ணைக்கட்டுதே

எச்சரிக்கை டிப்ஸ்செல்போன் என்பது அடிப்படை தகவல் பரிமாற்றத்திற்காகத்தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அதனை நம்மவர் கள் நீண்ட நேர அரட்டைக் கச்சேரிக்காக பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். பேசுவது காதலியாக இருந் தாலும் கூட ஒருவரிடம் 20 நிமிடங்களுக்கு அதிகமாக பேசாதீர்கள்.நட்புகளை வளர்த்துக் கொண்டு அதிகம் பேரிடம் இடைவெளியின்றி பேசா தீர்கள்.

போதிய ஓய்விற்கு பிறகே அடுத்தவரிடம் பேச வேண்டும்.ஒரே சமயத்தில் பல போன் களில் பேசாதீர்கள். வள, வள பேச்சுக்களை தவிருங்கள். இரவில் செல்போனுக்கும் ஓய்வு கொடுத்துவிடுங்கள்.

maalaimalar.com

இயற்கை விவசாயம் வெகு லாபகரமானதே, அதில் அதிகம் பயன்படும் ஒரு இயற்கை நோய் எதிர்ப்பு, வளர்ச்சி ஊக்கி பஞ்சகவ்யம் .இதனால் உற்பத்தி திறனும் அதிகரிக்கிறது .அதனை தயாரிப்பதை எப்படி என்று பார்ப்போம்!

பஞ்சகவ்யம் என்றால் பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவது.
அவை!
1)சாணம்
2) கோமியம்
3) பால்
4) நெய்
5) தயிர்

இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கபடுவதே பஞ்சகவ்யம் இது ஆயுர் வேத வைத்தியம் , பயிர் வளர்ப்பு இரண்டிலும் பயன்படுகிறது.

மேலும் சில மூலப்பொருட்களை சேர்த்து இதன் திறனை அதிகரித்து இயற்கை விவசாயத்தில் தற்போது பயன்படுத்துகிறார்கள்.

மேம்படுத்தப்பட்ட பஞ்சகவ்யம் செய்யும்முறை:

மூலப்பொருள்:

*4 கிலோ சாண எரிவாயு கலனில் இருந்து பெறப்பட்ட சாணக்கூழ்
*1 கிலோ புதிய சாணம்
*3 லிட்டர் கோமியம்
*2 லிட்டர் பசும்பால்
*2 லிட்டர் பசு தயிர்
*1 லிட்டர் பசு நெய்
*3 லிட்டர் கரும்பு சாறு!
*12 பழுத்த வாழைப்பழம்
*3 லிட்டர் இளநீர்
*2 லிட்டர் தென்னம் கள்

இவை அனைத்தையும் வாய் அகன்ற மண்கலம் , அல்லது சிமெண்ட் தொட்டியில் விட்டு நன்றாக கலக்கவும். கலக்கப்போவது யாரு நாமளாச்சே கலக்கிட மாட்டோம்!

தொட்டியை மூடாமல் இதனை நிழலில் ஒரு வாரம் வைத்து இருக்க வேண்டும், தினசரி காலையும் மாலையும் ஒரு முறை கலக்கி விட வேண்டும்!

ஒரு வாரத்திற்கு பின் 20 லிட்டர் பஞ்சகவ்யம் தயார். இதில் ஒரு லிட்டர் எடுத்து அதனை 100 லிட்டர் தண்ணீரில் கலந்தால் 3 சதவீத அடர்த்தியுள்ள பஞ்ச கவ்யம் கிடைக்கும் அது ஒரு ஏக்கருக்கு தெளிக்க போதும்.

மேலும் விதைகளை நாற்றாங்களில் விதைக்கும் முன் 30 நிமிடம் பஞ்சகவ்ய கரைசலில் ஊரவைத்து விதை நேர்த்தி செய்தால் நாற்றுகள் நன்கு வளரும் நெல்லும் அதிகம் தூர்கட்டும்!

பஞ்ச கவ்யம் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கி, வளர்ச்சி ஊக்கி! இதனை தெளித்தால் மட்டும் போதும் மேற்கொண்டு எந்த பூச்சி மருந்தும் அடிக்க வேண்டாம் வயலுக்கு!


பஞ்ச கவ்யம் தெளித்த பிறகு மேலும் அதிக பலன் கிடைக்க தேங்காய் பால், மோர் கலந்து அதை ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் செர்த்து வயலுக்கு தெளித்தால் கூடுதல் வளர்ச்சி கிடைக்கும்.
Article:
http://vovalpaarvai.blogspot.com/2007/08/blog-post_12.html

1791ஆம் ஆண்டு~இங்கிலாந்தில் வில்லியம் க்ரீகர் எனும் புவி அறிவியல் ஆர்வலர், ஆற்றோரம் படிந்திருந்த மணலில் கறுப்பு நிற மணலை மட்டும் பிரித்து ஆராய்ந்தார். காந்தத்தால் ஓரளவு ஈர்க்கப்பட்ட அந்த கறுப்பு மணலில் இரும்பு ஆக்ûஸடு மட்டுமல்லாமல் வேறொரு உலோக ஆக்ûஸடும் சேர்ந்திருந்தது. அதுவரை அறியப்பட்ட உலோகங்களிலிருந்து அந்த உலோகம் வேறுபட்டிருந்தது - அதுதான் டைட்டானியம். அந்த கறுப்பு மணலின் பெயர் இல்மனைட்.
ஆனால் அதற்கு டைட்டானியம் என்று பெயர் வைத்தவர் மார்ட்டின் க்ளாப்ராத் எனும் ஜெர்மானிய வேதியியல் அறிஞர். 1795-ல் இவர் ரூட்டைல் எனும் மற்றொரு கனிமத்திலிருந்து டைட்டானியம் டை ஆக்ûஸடைப் பிரித்தெடுத்தார். டைட்டன் என்ற சொல்லுக்கு “வலிமையானவன்’ என்னும் பொருள் உண்டு.
டைட்டானியம் ஓர் உலோகத் தனிமம். இயற்கையில் ஆக்ஸிஜனுடன் சேர்ந்து டைட்டானியம் டை ஆக்ûஸடு எனும் சேர்மமாகக் கிடைக்கிறது. பூமியின் மேற்பகுதியில் அதிக அளவில் உள்ள தனிமங்கள் என்று பார்த்தால் டைட்டானியத்திற்கு 9-வது இடம். பெரும்பாலான தீப்பாறைகளிலும் சில வகை உருமாற்றுப் பாறைகளிலும், இப்பாறைகள் சிதைந்து அதன் விளைவாக உருவான படிவுப்பாறைகளிலும் டைட்டானியம் சிறிதளவு உள்ளது.
இந்த உலோகம் அலுமினியத்தைப்போல் இலேசானது. ஆனால் எஃகுவைப்போல் உறுதியானது. அதிக வெப்பம், வேதியியல் அரிமானங்களைத் தாங்கக்கூடியது.
இத்தனை சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்த டைட்டானியம் உலோகத் தனிமத்தை டைட்டானியம் - டை - ஆக்ûஸடு எனும் அதன் சேர்மத்திலிருந்து பிரித்தெடுக்கும் முயற்சி வணிக ரீதியில் வெற்றி பெற்றது 1946}ல் தான். அதன்பிறகும் கூட டைட்டானியத்தின் உபயோகங்கள் முழுமையாக உணரப்படவில்லை.
1950-களிலும் 1960-களிலும் நடந்து கொண்டிருந்த பனிப்போரின்போது அன்றைய சோவியத் யூனியன், டைட்டானியத்தை போர் விமானங்களிலும் மற்றைய போர் தளவாடங்களிலும் பயன்படுத்தத் தொடங்கியது. அதன்பின்னரே டைட்டானியத்தின் போர்க்கால முக்கியத்துவம் முழுமையாக உணரப்பட்டது.
டைட்டானியம் கலந்த எஃகு தற்போது உயர் தொழில்நுட்ப விமானங்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள், விண்வெளி ஓடங்கள், மருத்துவ அறுவை சிகிச்சைக் கருவிகள், மின் சாதனங்கள் மற்றும் பல உயர் தொழில் நுட்ப சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது. அரிமானத்தை எதிர்க்கும் ஆற்றல் உள்ளதால் கடல் நீரைக் குடிநீராக மாற்றப் பயன்படுத்தப்படும் சாதனங்களிலும் இந்த உலோகக் கலவை பயன்படுத்தப்படுகிறது.
டைட்டானியம் டை ஆக்ûஸடு பெரும்பாலும் பெயின்ட் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. வெண்மை நிறத்தில் மாவுபோல் இருக்கும் டைட்டானியம் டை ஆக்ûஸடு நிறமியிலிருந்து தயாரிக்கப்படும் வர்ணப்பூச்சுகள் தரமானவை. சிறந்த ஒளிர்தன்மை, நிறைந்த உழைக்கும் திறம், தூய வெண்மை நிறம், ஒளியை உள்ளே புகவிடா தன்மை இவையெல்லாம் டைட்டானியம் - டை - ஆக்ûஸடு நிறமிக்கு உரித்தானவை.
சாதாரண ஈய வர்ணப் பூச்சுகளிலுள்ள நச்சுத்தன்மை டைட்டானியம் டை ஆக்ûஸடு பூச்சுகளில் இல்லை. இந்த நிறமிகள் ரப்பர் தொழில், பிளாஸ்டிக் தொழில், தோல் மற்றும் துணி உற்பத்தி, அழகு சாதனத் தயாரிப்பு மற்றும் காகித ஆலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் பற்பசைகளிலும் டைட்டானியம் - டை - ஆக்ûஸடு பயன்படுகிறது.
இல்மனைட் எனும் கரிய நிற கனிமம்தான் டைட்டானியம் டை ஆக்ûஸடு எனும் வெள்ளை நிற நிறமியின் மிக முக்கிய தாதுப்பொருள். ரஷியாவின் “இல்மன்’ மலை மற்றும் ஏரிப் பகுதிகளில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்தக் கனிமத்திற்கு “இல்மனைட்’ என்று பெயரிடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் கிடைக்கும் இல்மனைட் கருமணலில் 55 சதவிகிதம் டைட்டானியம் டை ஆக்ûஸடு உள்ளது.
“ரூட்டைல்’ எனும் கனிமத்தில் 92 சதவிகிதம் முதல் 96 சதவிகிதம் வரை டைட்டானியம் டை ஆக்ûஸடு உள்ளது.
பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவாகிய பாறைகள் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் வெப்பத்தில் விரிந்தும் குளிரில் சுருங்கியும் சிறிது சிறிதாகச் சிதைவுறத் தொடங்குகின்றன. இந்தச் சிதைவுறுதலின்போது பாறைகளில் உள்ள கனிமங்கள் உதிர்கின்றன. இவ்வாறு உதிர்ந்த கனிமத்துகள்கள் மழைநீரால் அரிக்கப்பட்டு சிற்றோடைகள் வழியே ஆறுகளை அடைகின்றன. ஆற்று வெள்ளத்தில் அடித்துக் கொண்டு வரப்படும் இக் கனிமங்கள் ஓரளவிற்கு ஆற்றங்கரைகளிலும் ஆற்றுப்படுகைகளிலும் வண்டல்களாகப் படிகின்றன. கணிசமான அளவு கனிமங்கள் கடற்கரையை ஒட்டியுள்ள கடலின் அடிப்பகுதியில் பல மீட்டர்கள் கனத்திற்குப் படிவங்களாகப் படிந்து போகின்றன.
கடற்கரையை ஒட்டியுள்ள கடலின் அடியில் படிந்த இப் படிவங்களில் உள்ள இல்மனைட், ரூட்டைல் போன்றவை அவைகளுடன் சேர்ந்து படிந்துள்ள குவார்ட்ஸ், ஃபெல்ஸ்பார் போன்ற கனிமங்களை விட அடர்த்தி அதிகமானவை. எனவே இவை அடர் கனிமங்கள் என்றே அழைக்கப்படுகின்றன.
கரையோரமுள்ள கடலின் கீழ் படிந்த மணலும், கடற்கரையோரமுள்ள மணலும் அலைகளில் சிக்கி முன்னும் பின்னும் அலைக்கழிக்கப்படும்போது அடர்த்தி மிகுந்த இல்மனைட் மற்றும் ரூட்டைல் போன்ற கனிமங்கள் கரையோரம் படிந்து அளவில் மிகுகின்றன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து இந்நிகழ்ச்சி நடைபெறுவதால் பல லட்சக்கணக்கான டன்கள் அளவிற்கு இக் கனிமங்கள் சேர்ந்து விடுகின்றன.
இதுபோன்று உருவாகும் படிவங்களை புவி அறிவியல் வல்லுநர்கள் ஒதுங்கு படிவங்கள் (ப்ளேசர் டெபாசிட்) என்று அழைக்கிறார்கள். தாய்ப்பாறைகளில் ஒரு சதவிகிதம் அளவிற்கே இருக்கும் இந்த அடர் கனிமங்கள் ஒதுங்கு படிவங்களில் 30 முதல் 35 சதவிகிதம் வரை இருப்பது இயற்கையின் விளையாட்டால் ஏற்பட்ட இனிய விளைவே ஆகும்.
இந்த ஒதுங்கு படிவங்கள் தென்தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் மட்டுமல்லாது, கடற்கரையை ஒட்டியுள்ள தேரி மணற்திட்டுப் பகுதிகளிலும் மிக அதிக அளவில் காணப்படுகின்றன. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் கடற்கரைப் பகுதிகள் இல்மனைட் மற்றும் ரூட்டைல் அடர் கனிமங்கள் கிடைக்கும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. கேரளம், ஆந்திரம், ஒரிசா, கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரக் கடற்கரைப் பகுதிகளிலும் ஒதுங்கு படிவங்கள் உள்ளன.
இந்தப் படிவங்கள் குறித்து பூர்வாங்க ஆய்வுகளை இந்திய புவி அறிவியல் ஆய்வுத்துறையினர் (ஜி.எஸ்.ஐ.) மேற்கொண்டனர். தொடர்ந்து மத்திய அணுக் கனிம ஆய்வு இயக்ககம் விரிவான ஆய்வுப்பணிகளை மேற்கொண்டது. இந்த ஆய்வு இந்தியக் கடற்கரையில் சுமார் 2,400 கி.மீ. நீளத்திற்கு நடத்தப்பட்டது.
தென் தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் சுமார் 9 மீட்டர் ஆழம்வரை இந்தக் கனிமங்கள் உள்ளதாக அணுக் கனிம இயக்கக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடற்கரை மணலில் சுமார் 13 சதவிகிதம் முதல் 35 சதவிகிதம் வரை அடர் கனிமங்கள் உள்ளன. அணுசக்தித் துறையில் பயன்படும் தோரியம் அடங்கியுள்ள மானோசைட், தொழில்துறைகளில் பயன்படும் கார்னெட், சில்லிமினைட் மற்றும் ஜிர்க்கான் கனிம மணல்களும் இப் பகுதிகளில் கிடைக்கின்றன.
தென்தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் சுமார் 9.8 கோடி டன் இல்மனைட்டும் சுமார் 0.5 கோடி டன் ரூட்டைலும் உள்ளதாக அரசு அறிக்கைகள் கூறுகின்றன. இவை இயற்கை அன்னை நமக்கு அளித்துள்ள பெருங்கொடை. அந்த இயற்கை அன்னைக்கு ஊறு விளைவிக்காமல், இயற்கைச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் இந்த அரிய செல்வத்தை அதற்கென வகுக்கப்பட்ட விதிமுறைகளின்படி அளவோடு எடுத்துப் பயன்பெறுவதே அறிவுடைமை ஆகும்.
(கட்டுரையாளர்: புவி அறிவியலாளர்)
Article:
http://bsubra.wordpress.com/2007/08/08/titanium-dioxide-titaniumiv-oxide-or-titania-seashore-wealth/

தமிழகத்தைப் பொருத்தவரை விளையாட்டு அரங்கத்தில் நமது பங்களிப்பு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. அகில இந்திய ரீதியில் கிரிக்கெட், ஹாக்கி, செஸ், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் நமது வீரர்கள் பிரமிக்கத்தக்க சாதனைகளைப் புரிந்துவந்திருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் அரசு தரும் ஊக்கம் என்பதைவிட, நமது இளைஞர்கள் மத்தியில் காணப்படும் ஆர்வம்தான்.
விளையாட்டுத் துறைக்கான தனி ஆணையம் செயல்படுவதுடன், கணிசமான அளவு நிதி ஒதுக்கீடும் மாநில அரசாலும் மத்திய அரசாலும் விளையாட்டுக்காக ஒதுக்கவும் செய்யப்படுகிறது. இத்தனை இருந்தும், கிராமப்புற நிலையிலிருந்து முறையாக விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தொடர்ந்து ஊக்கம் அளித்து அகில இந்திய அளவில் எல்லா விளையாட்டுகளிலும் நமது வீரர்களை முன்னணியில் நிறுத்த இன்னும் ஏன் முடிவதில்லை என்கிற கேள்விக்கு, அரசும் விளையாட்டு சம்பந்தப்பட்ட ஆணையமும்தான் பதில் சொல்ல வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா குமரி மாவட்டத்தில் மத்திய அரசின் விளையாட்டுப் பயிற்சி மையம் அமைக்கும் திட்டம் நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டதாகக் குற்றம்சாட்ட, அதற்கு பதிலளிக்கும் முகமாக, ஒரு கோடி ரூபாய் செலவில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை மையம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைய இருப்பதாகவும், அதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெறவுள்ளதாகவும் அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.
விளையாட்டுத் துறையைப் பற்றிய மிகப்பெரிய குறைபாடு, சர்வதேசத் தரத்திலான விளையாட்டு அரங்கங்களும் பயிற்சிக்கூடங்களும் சென்னையில் மட்டுமே அமைந்திருக்கின்றன என்பதுதான். நெல்லையில் அமைய இருக்கும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை மையம்போல, உலகத் தரம் வாய்ந்த தடகள மைதானங்கள், கிரிக்கெட் மைதானங்கள், கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து மற்றும் ஹாக்கி மைதானங்கள் போன்றவை தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் அமைய வேண்டியது அவசியம்.
விளையாட்டு என்பதே சென்னையை மட்டுமே மையமாகக் கொண்ட விஷயமாகி விட்டது. ஆனால், விளையாட்டு வீரர்களோ, மாவட்டங்களிலிருந்துதான் அதிகமாக உருவாகிறார்கள். பள்ளிக் கல்விக்கும் சுற்றுலாவுக்கும் தரப்படும் முக்கியத்துவம் விளையாட்டுத் துறைக்கும் அளிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. தனியார் கல்வி நிலையங்கள் பல, முறையான விளையாட்டுப் பயிற்சியாளர்களோ, மைதானமோ இல்லாமலே செயல்படுகின்றன என்பது அரசுக்குத் தெரிந்தும், இந்த விஷயத்தில் அரசு கண்மூடி மௌனம் சாதிப்பது ஏன் என்பது தெரியவில்லை.
இளைஞர்கள் மத்தியில், கிரிக்கெட் விளையாட்டிற்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. குக்கிராமம் வரை கிரிக்கெட்டின் பாதிப்பு நன்றாகவே தெரிகிறது. ஆனால், சென்னையைத் தவிர வேறு எந்த நகரிலும் சென்னையில் இருப்பதுபோல கிரிக்கெட் ஸ்டேடியம் இல்லையே, ஏன்?
சென்னையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கட்டுப்பாட்டில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் இருக்கிறது என்பது மட்டுமல்ல, இந்த மைதானம் சர்வதேசத் தரத்திலான மைதானம் என்பதும் உலகறிந்த உண்மை. அப்படி இருக்கும்போது, பழைய மகாபலிபுரம் சாலையில் கருங்குழிப்பள்ளம் கிராமத்தில் இன்னொரு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க 50 ஏக்கர் நிலத்தை 30 ஆண்டுகளுக்கான குத்தகைக்குத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குத் தமிழக அரசு வழங்க ஒப்புதல் அளித்திருப்பது ஏன்?
கோடிக்கணக்கில் பணமிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு அரசு நிலம் அளித்து உதவியதற்குப் பதிலாக, திருச்சி, நெல்லை, மதுரை, கோவை அல்லது சேலத்தில் ஏன் ஒரு நல்ல கிரிக்கெட் மைதானத்தை அரசின் பராமரிப்பில் கட்டக் கூடாது? வேட்டி கட்டிய தமிழக முதல்வரால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குள் நுழைய முடியாது என்பதாவது அவருக்குத் தெரியுமா? தெரிந்துமா இப்படியொரு தவறு நடந்திருக்கிறது?
Article:
http://bsubra.wordpress.com/2007/08/09/ignoring-the-sports-development-opportunity-in-southern-tn-why-only-chennai-why-just-cricket/

ரிசர்வ் வங்கிக்கு உள்ள பல கடமைகளில் தலையாய கடமை, பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதுதான் என்பது அதன் சமீபகால நடவடிக்கைகளைக் கவனிக்கும்போது எளிதில் புலனாகிறது.
நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5%-க்கும் மேல் இருக்கிறது, பணவீக்க விகிதம் 5%-க்கும் குறைவாக இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சமீபகாலத்தில் அதிகரித்து சராசரியாக 40 ரூபாயாக இருக்கிறது. வங்கிகளிடம் டெபாசிட் பணம் அபரிமிதமாக இருக்கிறது. இத்தனை இருந்தும் மக்களிடம் நிம்மதியோ, வாங்கும் சக்தியோ குறிப்பிடும்படி இல்லை.
“”மக்கள்” என்று இங்கே நாம் குறிப்பிடுவது பெரும்பாலானவர்களான நடுத்தர, ஏழை மக்களைத்தான். நடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் சக்திக்கே சவால் விடுவதைப் போல தங்கத்தின் விலையும், நிலத்தின் விலையும் (வீட்டுமனை) உயர்ந்துகொண்டே வருகின்றன. இந்நிலையில் அவர்களுடைய சேமிப்பைப் பாதுகாக்கவும், அதற்கு சுமாரான வருமானத்தையும் தருவது வங்கிகள் தரும் வட்டிவீதம்தான். ஆனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, அந்த வட்டிவீதத்துக்குத்தான் ரிசர்வ் வங்கி குறிவைக்கிறது என்பது வருத்தத்துக்கு உரிய விஷயம்.
உலக அரங்கில், இந்தியப் பொருளாதாரத்தின் வலிமைக்கான காரணங்களாக உள்ள அம்சங்களை ஆராய்ந்த வல்லுநர்கள், வருவாயில் ஒரு பகுதியைப் பிற்காலத்துக்காகச் சேமித்துவைக்க வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவின் ஏழைகளிடம்கூட இருப்பதையும், அதைச் செயல்படுத்துவதையும் சுட்டிக்காட்டி, பாராட்டியுள்ளனர். ரிசர்வ் வங்கி இந்த சேமிப்புப் பழக்கத்தை மேலும் ஊக்குவிக்க முயல வேண்டுமே தவிர, மக்களை விரக்தியின் விளிம்புக்கு விரட்டக் கூடாது.
நஷ்டம் வரக்கூடாது என்று மத்திய அரசே முனைப்புக் காட்டி வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியைக் குறைப்பதும், வங்கிகளில் போடப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டியைக் குறைப்பதும் நல்லதல்ல. அந்த நடவடிக்கைகளை நடுத்தர, ஏழை மக்களின் சேமிப்பு மீதான “”மறைமுக வரி” என்றே கூற வேண்டும்.
வங்கிகளிடம் மிதமிஞ்சி சேர்ந்துவிட்ட டெபாசிட்டுகளால் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உபரிப் பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. அதை உறிஞ்சுவதற்காக, வங்கிகளின் ரொக்கக் கையிருப்பை மேலும் 0.5% அதிகரித்து, 7% ஆக்கியிருக்கிறது. இப்படி ரொக்கக் கையிருப்பு விகிதத்தை உயர்த்திய பிறகும்கூட அதிகபட்சம் 16 ஆயிரம் கோடி ரூபாயைத்தான் புழக்கத்திலிருந்து உறிஞ்ச முடியும். வங்கிகளிடம் உள்ள மொத்த டெபாசிட்டுகளின் மதிப்பு சுமார் ரூ.4,90,000 கோடியாகும்.
வீடுகட்ட கடன் வாங்கியவர்களும், இனி வாங்க நினைப்பவர்களும் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் மனம் தளர்ந்து போய்விட்டார்கள். வீட்டுக் கடனுக்கான வட்டி வீதத்தைக் குறைத்து, வீடமைப்புத் திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய உத்வேகத்தைத் தரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அது பொய்த்துவிட்டது. இனி வீட்டுக் கடனுக்கான வட்டி உயர்ந்தாலும் வியப்பதற்கு ஏதும் இல்லை.
விலைவாசியைக் கட்டுப்படுத்த, பண அச்சடிப்பைக் கட்டுப்படுத்துவது ஒரு வழி என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது. விலைவாசியைக் குறைக்க வேண்டும் என்றால் உற்பத்தியைப் பெருக்குவதும், பொது விநியோக முறையை வலுப்படுத்துவதும்தான் உற்ற வழிகள்.
இடைத்தரகர்கள், ஊகபேர வியாபாரிகள், கள்ளச்சந்தைக்காரர்கள், முன்பேர வர்த்தகர்கள் ஆகியோரை ஒடுக்காவிட்டாலும், எச்சரிக்கும் விதத்திலாவது ஓரிரு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தால் சற்று ஆறுதலாக இருக்கும்.
சிக்கனத்துக்கும் சேமிப்புக்கும் பெயர்பெற்ற இந்தியர்களைக் கடன் சுமையில் ஆழ்த்தவே பன்னாட்டு வங்கிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் 24 மணி நேரமும் தீவிரமாக உழைக்கின்றன. நம் மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும் விதத்தில் ரிசர்வ் வங்கியாவது செயல்படலாம் இல்லையா? இதனால் சில நூறு கோடி ரூபாய்கள் வருமானம் குறைந்தாலும்கூட அதைப் பெரிய இழப்பாக மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கருதலாமா?
Article:
http://bsubra.wordpress.com/2007/08/02/controlling-inflation-avoiding-recession-rbi-stagflation/

ஜி.ஆர்.ரவீந்திரநாத்

“கிராமப் பகுதிகளில் பணியாற்ற டாக்டர்கள் மறுக்கிறார்கள் என்ற காரணத்தைக் கூறி’ எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவுடன் ஓராண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் கட்டாய சேவைசெய்ய வேண்டுமென மத்திய அரசு சட்டம் கொண்டு வரவுள்ளது. இந்தச் சேவையை முடித்த பிறகுதான் மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்துகொண்டு தொழில் செய்ய முடியும். இதற்கேற்ப எம்பிபிஎஸ் படிப்புக் காலத்தை ஐந்தரை ஆண்டுகளில் இருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்தவும் மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்துள்ளது.
இச்சட்டம் இளம் டாக்டர்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதோடு நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பெண்கள் மருத்துவம் பயில்வதைத் தடுத்துவிடும். நமது மருத்துவக் கல்வி, மருத்துவத் துறை, மக்கள் நல்வாழ்வுக் கொள்கை ஆகியவற்றில் உலக வங்கியின் விருப்பங்களுக்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் 70 சதவீத மக்கள் கிராமப்புறங்களிலும் 70 சதவீத மருத்துவர்கள் நகர்ப்புறங்களிலும் இருப்பது வருந்தத்தக்கது. இதற்கு நமது சமூகப் பொருளாதார நிலைமைகளே காரணம். இந்தியாவில்
3,043 சமுதாய மருத்துவ மையங்களும்
22,842 ஆரம்ப சுகாதார மையங்களும்
1, 37, 311 துணை மையங்களும்
உள்ளன என்று 2003-ம் ஆண்டு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் 13.3% மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
சமுதாய மருத்துவமனைகளில்
48.6% அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள்,
47.9% மகப்பேறு மருத்துவர்கள்,
46.1% பொது மருத்துவர்கள்,
56.9% குழந்தை மருத்துவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
கிராமப் புறங்களில்
75% அறுவைச் சிகிச்சை மருத்துவர்களும்
73% மகப்பேறு மருத்துவர்களும்
86% குழந்தை மருத்துவர்களும் பற்றாக்குறையாக உள்ளனர்.
காலிப்பணியிடங்களை நிரப்ப அரசுகள் அக்கறை காட்டாததும் பணி நியமனத் தடை ஆணையும்தான் இந்த நிலைக்குக் காரணம்.
நிரந்தர வேலைவாய்ப்பை வழங்காமல், ஒப்பந்த அடிப்படையில் தாற்காலிகமாக மிகக்குறைந்த தொகுப்பூதியத்தில் மருத்துவர்களை நியமிப்பதால் மருத்துவர்கள் அரசுப்பணிகளில் சேரத் தயங்குகின்றனர்.
கிராமப்புற மருத்துவமனைகளின் வசதிகளை மேம்படுத்தாததும் கிராமப்புறங்களில் மருத்துவர்கள் தங்க குறைந்தபட்ச வசதிகளைக்கூட செய்து கொடுக்காததும் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. பல சமுதாய மருத்துவ மையங்களுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் சொந்தக் கட்டடமே இல்லை. நூற்றுக்கணக்கான மையங்களில் கழிப்பிட வசதியே இல்லை.
கிராமப்புற மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைக்க கட்டாய கிராமப்புற சேவைதான் தீர்வு என்கிறது அரசு. கட்டாய கிராமப்புற சேவை பயனளிக்காது என்பதோடு, மருத்துவர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிடும் என்பதுதான் இளம் மருத்துவர்களின் எதிர்வாதம்.
மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு நாட்டின் மொத்த உற்பத்தியில் வெறும் 0.9% மட்டும் ஒதுக்கப்படுகிறது. உலகிலேயே மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மிகக் குறைவாக நிதிஒதுக்கீடு செய்யும் நாடு இந்தியாதான். மொத்த உற்பத்தியில் 5% ஒதுக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இப்பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், ஊரகப்புற மருத்துவமனைகளுக்கு அதிகநிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மருத்துவம் தனியார் மயம் ஆவதும், பெரிய நிறுவனங்களாவதும் மருத்துவர்களை நகரங்களிலேயே குவியச் செய்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
1980-களில் 57% ஆக இருந்த தனியார் மருத்துவமனைகள் 2000-ல் 73% ஆக உயர்ந்துள்ளது. 1980களில் மக்களின் ஒட்டுமொத்த மருத்துவச் செலவில் அரசின் பங்களிப்பு 22% ஆக இருந்தது. இன்று 16% ஆகக் குறைந்துவிட்டது.
மருத்துவர்களை நிரந்தர ஊழியர்களாகப் நியமித்து கிராமப்புறங்களில் 2 ஆண்டு கட்டாய சேவை செய்த பின்னரே பணிவரன்முறை செய்யப்படும் என்ற நடைமுறையைக் கொண்டு வரவேண்டும். டாக்டர்களுக்கு மிகக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. டாக்டர்களின் ஊதியத்தை கணிசமாக உயர்த்த வேண்டும்.
கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றுவோருக்குக் கூடுதல் சம்பளமும் பதவி உயர்வில் முன்னுரிமையும் இதர சலுகைகளும் வழங்க வேண்டும். முதுநிலை மருத்துவம் பயில நுழைவுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும். மிகவும் பின்தங்கிய மலைப்பகுதிகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கலாம். இத்தகைய மருத்துவமனைகளில் மருத்துவர்களை பணியமர்த்த தனியாகவே சிறப்புப் பணி நியமன முறையைக் கையாளலாம். குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு இடமாறுதல் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் உள்ளூர் மருத்துவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கலாம். ஒழுங்காகப் பணிக்கு வராத மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம்.
ஊழல் முறைகேடுகளை ஒழிக்க அனைத்து மருத்துவமனைகளிலும் பொதுமக்கள் கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். கட்டாய கிராமப்புறச் சேவையில் எம்பிபிஎஸ் முடித்த டாக்டர்களை பணியாற்ற வைப்பதால் மக்களுக்கு பெரிய அளவில் பயனில்லை. அரசின் புள்ளிவிவரப்படியே மகப்பேறு, குழந்தைகள்நல, பொது மற்றும் அறுவைச் சிகிச்சை மருத்துவர்களின் பற்றாக்குறையே கிராமப்புறங்களில் உள்ளது. இதற்கு முதுநிலை படிப்பு படித்த டாக்டர்கள்தான் கிராமப் பகுதிகளுக்கு அதிகம் தேவைப்படுகின்றனர்.
இக்குறைபாட்டைப் போக்க இப்படிப்புக்கான இடங்களை அதிகப்படுத்த வேண்டும். எம்பிபிஎஸ் படித்த டாக்டர்களுக்கு குறிப்பிட்ட துறைகளில் பயிற்சியளித்து அவர்களைப் பயன்படுத்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மற்றும் பட்டயப் படிப்பு படிக்கும் தனியார் மருத்துவர்களை ஓராண்டு காலம் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் முழு ஊதியத்துடன் பணியாற்றச் செய்ய வேண்டும். சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை சரி செய்யப்பட்டதும் இந்தக் கட்டாயச் சேவையைக் கூட ரத்து செய்ய வேண்டும்.
தற்சமயம் ஆண்டுதோறும் இந்தியாவில் 29, 500 டாக்டர்கள் படித்து முடித்து வெளிவருகிறார்கள். இன்னும் 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 40 ஆயிரம் ஆகஉயர்ந்துவிடும். ஒவ்வோராண்டும் இவர்களைக் கட்டாய கிராமப்புறச் சேவையில் தாற்காலிகமாகப் பணியமர்த்தினால் அது 40 ஆயிரம் டாக்டர்களுக்கான பணியிடங்களை நிரந்தரமாக ஒழித்துக் கட்டிவிடும். மேலும் இந்த திட்டத்துக்கான எம்பிபிஎஸ் படிப்பை ஆறரை ஆண்டுகளாக உயர்த்துவது சரியல்ல. ஒரு நபர் எம்பிபிஎஸ் படிப்பைத் தொடங்கி எந்தவிதமான தடங்கலும் இன்றி எம்சிஎச், டிஎம் போன்ற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளைத் தொடர்ச்சியாகப் படித்து முடிக்க குறைந்தபட்சம் 13 ஆண்டுகளாவது அவசியம்.
எம்பிபிஎஸ் படிப்பு காலத்தை ஆறரை ஆண்டுகளாக உயர்த்தினால் அது நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் மருத்துவம் பயிலும் ஆர்வத்தைக் குறைத்துவிடும். திருமணம் போன்ற காரணங்களால் பெற்றோர்கள் பெண்களை மருத்துவ படிப்புக்கு அனுப்பத் தயங்குவர். பணபலம் உள்ள ஆண்கள் மட்டுமே படிக்கும் துறையாக மருத்துவக் கல்வி மாறிவிடும்.
தற்பொழுது பிளஸ்2வில் உயிரியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது. இவ்வாண்டு எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைத்த பலர், பொறியியல் படிப்புக்கு மாறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவர்களின் வேலைவாய்ப்பை, உரிமைகளைப் பாதிக்காத வகையில் கிராமப்புற மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளை நிறைவு செய்ய ஆக்கப்பூர்வமாக அரசு முயலவேண்டும்.
(கட்டுரையாளர், சமூக சமதுத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலர்.)
Article:
http://bsubra.wordpress.com/2007/08/02/compulsory-rural-service-required-for-doctor-graduation-medical-education/

எஸ். சையது இப்ராஹிம்

“நாடு முழுவதும் 90 ஆயிரம் ஆரம்பப் பள்ளிகளில் கரும்பலகையே இல்லை. இவற்றுள் 21 ஆயிரம் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை’ என்ற அதிர்ச்சியூட்டம் புள்ளிவிவரம் அண்மையில் வெளியாகியுள்ளது.
கல்வித் திட்டமிடல், நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழகம் என்ற அமைப்பின் உயர்குழு 35 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 11 லட்சத்து 24 ஆயிரத்து 33 பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு இவ்வாறு அறிவித்தது.
கரும்பலகை இல்லாத பள்ளிகளை அதிகம் கொண்ட மாநிலங்களின் வரிசையில் ராஜஸ்தான் (8848), ஜார்க்கண்ட் (7645), பிகார் (5535) முன்னிலை வகிக்கின்றன.
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் கிராமங்களில் 83 சதவீதம் அரசுப் பள்ளிகள். கட்டடம், கழிப்பறை, விளையாட்டுத் திடல் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் இந்தப் பள்ளிகள் தவிக்கின்றன. சுமார் 1 லட்சம் ஆரம்பப் பள்ளிகள் ஒரே ஒரு வகுப்பறையில் நடந்து வருகின்றன. பல லட்சம் பள்ளிகளுக்கு அந்த வசதியும் கிடைக்காமல், மரத்தடியில் நடைபெற்று வருகின்றன.
பண்டைய காலத்தில் இருந்து கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நாடு இந்தியா. உலகின் மிகவும் தொன்மையான நாளந்தா பல்கலைக்கழகம் இருந்தது இந்தியாவில்தான். இந்தப் பல்கலைக்கழகத்தில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் வந்து கல்வி பயின்றுச் சென்றனர். உலகப் பொதுமறை திருக்குறளில் கல்வியின் சிறப்பை வலியுறுத்தும் தனி அதிகாரமே உள்ளது.
இவற்றையெல்லாம் விட, உலகிலேயே கல்வியைத் தெய்வமாகப் போற்றும் வழக்கம் இருப்பது இந்தியர்களிடம் மட்டுமே. கலைமகள் அல்லது சரஸ்வதி வழிபாடு இதையே காட்டுகிறது.
ஆனால், சுதந்திரம் அடைந்து 60-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில், இந்தியப் பள்ளிகளின் அவலம் குறித்து வெளிவந்துள்ள தகவல்கள் வருத்தம் அளிக்கின்றன. இதுவரை மத்தியில் ஆட்சியில் இருந்தவர்களின் பாராமுகமே இதற்கு காரணம்.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஒவ்வோராண்டும் ஆரம்பப் பள்ளியில் புதிதாகச் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 2006-07-ம் கல்வியாண்டில் நாடு முழுவதும் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி. 2007-08-ம் கல்வியாண்டில் இது ஒரு கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது. இதற்கு ஏற்றார்போல் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
2006-07-ம் ஆண்டு தொடக்கக் கல்விக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 17,133 கோடி. இது 2007-08-ம் ஆண்டில் ரூ. 23,142 கோடியாக உயர்த்தப்பட்டாலும் இந்தத் தொகை போதுமானது இல்லை.
இதன் விளைவு என்ன? பொற்றோர்கள் வேறுவழியின்றி தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளன. சில தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளை விட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? மத்திய பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கு ராணுவத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், கல்விக்கு சொற்பத்தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. நாட்டின் வருங்கால சந்ததியினரைத் தீர்மானிக்கும் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பட்ஜெட்டில் பிற துறைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டாலோ அல்லது புறக்கணிக்கப்பட்டாலோ கடும் ஆட்சேபம் தெரிவிக்கும் கட்சிகள் இந்தப் பிரச்னையில் தலையிட்டு, உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த வேண்டும்.
ஒவ்வோராண்டும், மத்திய பட்ஜெட் தயாரிப்பின்போது தொழிலதிபர்கள், விவசாயிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்களுடன் மத்திய நிதியமைச்சர் ஆலோசனை நடத்துவது வழக்கம். அதேபோல், கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டுக்கு முன் கல்வியாளர்கள், மாணவர் சங்கப் பிரதிநிதிகளின் கருத்துகளையும் மத்திய நிதியமைச்சர் கேட்க வேண்டும்.
நாடு சுதந்திரம் அடைந்த போது, விவசாயம் மற்றும் தொழில்துறைகளை மேம்படுத்தும் நோக்கில் முதல் மற்றும் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டன. அரசின் இந்த முயற்சி பெரும் வெற்றி பெற்றது. இதை உதாரணமாகக் கொண்டு, நாட்டின் கல்வி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கல்விக்காக ஒரு ஐந்தாண்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்கீழ், கல்வி என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ளது. இதனால், மத்திய அரசு பொறுப்பைத் தட்டிக் கழித்து வந்தது. இதைத் தடுக்க கல்வியை மத்திய -மாநில அரசுகளின் பொதுப்பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும். எழுத்துரிமை, பேச்சுரிமை, வாக்குரிமைப் போல் கல்வியையும் அடிப்படை உரிமையாக்க வேண்டும்.
——————————————————————————————————————-
உயர்கல்வியில் குளறுபடி!
தமிழக அரசின் உயர்கல்விக் கொள்கையில் குழப்பம் நிலவுகிறது என்பது உண்மைதான் என்றாலும், இந்த விஷயத்தில் உயர்கல்வி அமைச்சகத்தை மட்டுமே குறைகூற வழியில்லை. உயர்கல்வித் துறை பற்றிய தொலைநோக்குப் பார்வை நமது ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போனதன் விளைவுதான் இந்தக் குளறுபடி.
எண்பதுகளில் அன்றைய அரசு உயர்கல்வியைத் தனியார்மயமாக்குவது என்று தீர்மானித்ததன் பயனைத்தான் இன்றைய இளைஞர் சமுதாயம் அனுபவித்து வருகிறது. அதிக அளவில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்களும் பொறியியல் வல்லுநர்களும் தகவல் தொழில்நுட்பத் துறையினரும் உலக அரங்கில் செயல்படுவதற்குக் காரணமே, அன்றைய அரசு, சுயநிதிக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதித்ததால்தான். தனியார் பொறியியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டமே இல்லை என்கிற அளவுக்கு தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் 9 மட்டுமே; படிப்போர் 3662 பேர்; ஆனால், சுயநிதிக் கல்லூரிகளோ 238. கற்போரோ 70,145 பேர்.
அரசிடம் எந்த மானியமும் பெறாமல், தங்களது சொந்த முயற்சியில் இடங்களை வாங்கி, மத்திய அரசின் கீழ் இயங்கும் அமைப்புகளில் அனுமதியும் பெற்று, வங்கிகளில் கடன் வாங்கி இந்த உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. மாணவர்களிடம் நன்கொடை வசூலித்து அவர்கள் வாங்கிய கடனை அடைக்கவும் செய்கிறார்கள்.
அவரவர் முயற்சியால் ஏற்படுத்தப்படும் இந்தக் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கவோ, அவர்களது செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்தவோ அரசுக்கு அதிகாரம் உண்டா என்பது பரவலாக எழுப்பப்படும் கேள்வி. அது தனியார் நிறுவனமானாலும் சரி, பொதுத்துறை நிறுவனமானாலும் சரி, அதைக் கண்காணிக்கவும், அதன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் நிச்சயமாக ஓர் அரசுக்கு உரிமை மட்டுமல்ல, கடமையும் உண்டு. அப்படி இல்லாதபட்சத்தில், அந்த அரசுக்கான அவசியமே இல்லாமல் போய்விடும்.
அரசால் போதிய கல்வி நிறுவனங்களை அமைக்க முடியாத நிலையில் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் செயல்பாடுகளும் அவர்கள் வசூலிக்கும் கட்டணத் தொகையும் நிச்சயமாக அரசின் கண்காணிப்புக்கும் ஒப்புதலுக்கும் உட்பட்டதாக அமைந்தே தீரவேண்டும். அப்படி இல்லாமல்போனால், வசதி படைத்தவர்கள் மட்டும்தான் உயர்கல்வி பெற முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டுவிடும்.
அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை இந்த சுயநிதிக் கல்லூரிகளில் பின்பற்றப்படும்போது, அரசின் கட்டணக் கொள்கை மட்டும் ஏன் பின்பற்றப்படக் கூடாது? அரசு சில வரன்முறைகளை விதித்து, அனைத்துக் கல்லூரிகளின் கட்டணமும் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும்படி உத்தரவிடுவதுதான் முறை. அந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்க முடியாத கல்லூரி நிர்வாகத்தினரிடமிருந்து, அரசே அந்த சுயநிதிக் கல்லூரிகளை ஏற்று நடத்த முற்படுவதுதான் நியாயம்.
தனியார் நிறுவனங்களுக்கு வங்கிகளில் கிடைக்கும் நிதியுதவியும் கடனும் நிச்சயமாக அரசுக்குக் கிடைக்காதா என்ன? தகுந்த நஷ்டஈடு வழங்கி அதுபோன்ற கல்வி நிறுவனங்களை அரசு ஏற்பதை யார் தடுக்க முடியும்? இப்படியொரு சிந்தனையே அரசுக்கு ஏன் எழவில்லை என்பதுதான் புரியவில்லை.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கல்விக் கட்டணமும் இதர கட்டணங்களும் சேர்த்தே ரூ. 9 ஆயிரம்தான். தனியார் கல்லூரிகளிலோ அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கே ரூ. 3 லட்சம் வரை.
பயிற்சிக் கட்டண நிர்ணயம் என்பது இன்றியமையாதது. அதேபோல, நன்கொடை வசூலிப்பதற்கும் ஒரு காலவரம்பு விதிக்கப்பட வேண்டும். இவையெல்லாம் ஏன் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவதில்லை என்பதுதான் புதிர். தெரிந்தும் தெரியாததுபோல் இருத்தல், மன்னிக்கவே முடியாத குற்றம்.
இன, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் கல்வி என்கிற நிலைமை ஏற்படுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமான விஷயம் ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் கல்வியின் பயன் போய்ச் சேர வேண்டும் என்பது. பணமில்லாததால் படிக்க முடியவில்லை என்கிற நிலைமை ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பவர்களின் ஆட்சியில் நிலவுதல் கூடாது!
Article:
http://bsubra.wordpress.com/2007/08/02/education-as-basic-right/

'ஜீன்ஸ்' ஆடைகள் உலகில் ஒரு நீல நஞ்சு
பொ.ஐங்கரநேசன்
நன்றி : கருஞ்சட்டை தமிழர்
நவீனத்தின் அடையாளம். கம்பீரத்தின் சின்னம். எந்தப் பின்னணிக்கும் பொருந்தக் கூடிய எடுப்பான நீலநிறம். கோடையில் குளிர்மை. குளில் சூடு. பசபசவென்றிருக்கும் வியர்வையில் இருந்து விடுதலை. பட்டி தொட்டியெல்லாம் போட்டு அடிக்கக் கூடிய கடின உழைப்பு. நீடித்த உழைப்பில் நிறம் தேய்ந்து போனாலும் அதுவும் தனி நாகரிகம். சலவை பற்றிய கவலையேயில்லை. இத்தனைக்கும் மேலாக ஒப்பீட்டளவில் மலிவான விலை... இவை தான் இன்றைய தலைமுறை ஜீன்ஸைத் (Jeans) தலைமையில் வைத்துக் கொண்டாடுவதற்கான காரணங்கள்.

டெனிம், லெவி (Levi), லீ (Lee), கெஸ் (Guess) என்ற லேபல்களுடன் விற்பனையில் தூள்பறத்திக் கொண்டிருக்கும் ஜீன்ஸ் ஏதோ தங்களுக்காகவேதான் உருவாக்கப்பட்டது என இன்றைய இளசுகளை நினைக்க வைத்திருக்கிறது. ஆனால் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே 18 ஆம் நூற்றாண்டில் அடிமைத் தொழிலாளிகள், சுரங்கம் தோண்டுபவர்களின் கடுமையான பாவிப்புக்கென இந்த 'Tough and rough' ஜீன்ஸ் துணிகள் மேற்குலகின் சந்தைக்குள் நுழைந்து விட்டன.

1980இல் ஹாலிவுட் திரையுலகின் கவ்பாய் (cow boy)களின் கண்ணில் பட... கடைசியில் இந்த நீலத்துணிகளுக்கு வெள்ளித்திரை பச்சைக் கொடி காட்டி விட்டது. ஜேம்ஸ் டீனும் மர்லின் மன்றோவும் நிழலில் அணிந்து காட்டியதை அவர்களுடைய ரசிகர்கள் நிஜத்தில் அணிந்து அழகு பார்த்துப் பூத்தார்கள். ஹாலிவுட் என்னும் கனவுத் தொழிற்சாலையே இன்று ஜீன்ஸýக்கு உலகம் பூராவும் விந்த ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

துணி உற்பத்தியில் இன்று உலகின் முன்னோடியாகத் திகழுவது சான்பிரான்ஸிஸ்கோவில் இயங்கும் Levistrauss நிறுவனம். இதன் வருடாந்த விற்பனை ஏழு மில்லியன் அமெக்க டாலர்களைத் தாண்டியிருக்கிறது. இதில் 71 வீதம் ஜீன்ஸ் விற்பனையால் மட்டுமே கிடைக்கிறது. அந்த அளவுக்கு ஜீன்ஸ் வியாபாரம் சூடு பிடித்திருக்கிறது.

அமெரிக்காவில் ஒவ்வொருவரும் சராசரியாக ஏழு ஜீன்ஸ் வைத்திருக்கிறார்கள். அமெரிக்காவுக்கு வெளியே டெனிம் துணியை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. எனக்கு ஏன் சார்ம்ஸ் (charms) சிகரெட் பிடிச்சிருக்கு தெரியுமா? அதன் அட்டைப் பெட்டியில் அச்சாகியிருக்கும் எனது மனசுக்குப் பிடிச்சமான ஜீன்ஸ் துணிதான் காரணம் என்று ஒரு இந்திய இளைஞனைச் சொல்ல வைக்கும் அளவுக்குத் துணி உலகின் கொக்கோ கோலாவாக இன்றைய தலைமுறையை ஜீன்ஸ் உற்சாகம் ததும்ப வைத்திருக்கிறது. ஆனால் ஜீன்ஸ் உலகின் மறுபக்கத்தைப் பார்க்க நேர்ந்தால் இந்த உற்சாகம் கோலாப் பானத்தின் பொங்கியெழும் நுரைபோலக் கண நேரத்திலேயே அடங்கிவிடும் என்பதுதான் உண்மை.

மூன்றாம் உலக நாடொன்றின் பருத்தித் தோட்டம் ஒன்றிலிருந்து மேற்குலகின் குளிரூட்டப்பட்ட கண்ணாடிக் காட்சியறை வரைக்குமான ஜீன்ஸின் பயணப்பாதை துணியைப் போலவே கரடு முரடாக கரடு முரடாக (tough and rough) இருக்கிறது. இலகுவில் கீறிக் கிழிந்து போகாத ஜீன்ஸின் வரலாறு மனதைக் கீறிக் காயப்படுத்துகிறது.

ஜீன்ஸ் துணியைத் தமது நாடுகளில் தயாரிப்பது பல விதங்களிலும் தங்களுக்குப் பாதகமானது என்பதைத் தெரிந்து கொண்ட மேற்கத்தைய நாடுகள் அதைச் சாமர்த்தியமாக வறிய நாடுகளின் தலை மீது சுமத்தி விட்டிருக்கின்றன. ஏற்கனவே ஒரு வேளை உணவைக்கூடச் சரியாகப் பெறமுடியாமல் பசியுடன் இருக்கும் ஏழை நாடுகளின் விவசாய நிலங்கள் படிப்படியாகப் பன்னாட்டு நிறுவனங்களிடம் பறி போய்க் கொண்டிருக்கின்றன. நெல்லுக்கும் சோளத்துக்கும் பதிலாக ஜீன்ஸ் தயாரிப்புக்குத் தேவையான பருத்தியே இவர்களது விளைநிலங்களில் இன்று பெருமளவில் பயிடப்படுகிறது. சமீபத்தில் இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 60,000 சிறு விவசாயிகள் கவர்ச்சிகரமான கடனுதவி போன்றவிளம்பரங்களால் பருத்திப் பயிர்ச் செய்கைக்குத் தாவியிருக்கிறார்கள். உலகெங்கிலுமுள்ள விவசாய நிலத்தின் ஐந்து வீத இடத்தை இன்று பருத்தியே அடைத்துக் கொண்டிருக்கிறது.

உணவுப் பயிர்களுக்குத் தேவையான நீர், பசளைகள், களைக்கொல்லிகளைப் பருத்திக்குப் பயன்படுத்துவதுடன் இதன் பாதுகாப்புக்கென மிகப் பெரிய அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் விசிற வேண்டியிருக்கிறது. புதிது புதிதாக உருவாக்கப்படும் கலப்பினப் பருத்திச் செடிகள் நோய்களுக்கும் பீடைகளுக்கும் காட்டும் எதிர்ப்புத்தன்மை குறைவாகவே இருக்கிறது. உலகில் உபயோகிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் நான்கில் ஒரு பாகம் (ஏழு பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானம்) இந்தப் பருத்திச் செடிகளின் மீதே தெளிக்கப்படுகின்றன. இதனால் நிலம் நஞ்சாவதுடன் உலகம் பூராவும் மில்லியன் கணக்கான மக்கள் வருடந்தோறும் பாதிக்கப்படுகிறார்கள்.

இதில் சோகம் என்னவென்றால் பூச்சிகொல்லி நஞ்சுகளின் போத்தல்களில் இருக்கும் தற்காப்பு முறைகளைத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு இந்த ஏழை விவசாயிகள் கல்வியறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான். நாலு சதவீதமான பூச்சிக்கொல்லி மருந்துகளை இறக்குமதி செய்யும் ஆப்பிரிக்காவிலேயே வேறு எங்கும் இல்லாத இந்த மருந்துகளால் நிகழும் மரணங்களும் அதிகமாக இருக்கின்றன.

இயற்கையான உரங்களையும் பூச்சித்தடுப்பு முறைகளையும் பயன்படுத்தும் மாற்று நடவடிக்கைகள் பற்றிப் பேசப்பட்ட போதும் இன்றுவரை அது சாத்தியமாகவில்லை. இந்தப் பசுமை முறைக்கு ஒரு டாலர் செலவழிக்கப்பட்டால் அதனை விடப் பல ஆயிரம் மடங்குகளில் (4000 டாலர்கள்) புதிது புதிதான இரசாயனங்களை உற்பத்தி செய்வதில் செலவழிக்கப்படுகிறது.

இவ்வளவு இழப்புகளையும் பயிர்செய் நிலங்களில் கொடுத்துவிட்டு வெளியே வரும் பருத்திப் பஞ்சு இங்கே மட்டும் வெள்ளை மனதுடன் இருந்து விடுகிறதா என்ன?

நூல்களாக மாற்றப்படும்போதும் நீலநிறச்சாயம் ஊட்டப்படும்போதும் மிகப் பெருமளவில் இரசாயனக் கழிவுகளைத் தன் பங்குக்கும் சூழலில் சேர்ப்பித்து வருகிறது. பருத்தி நூலை நீலமாக மாற்றப் பயன்படும் இன்டிகோ (Indigo) சாயத்தைத் தயாரிக்கும்போது வருடந்தோறும் பல ஆயிரக்கணக்கான டன்கள் அளவில் நச்சுப் பொருள்கள் தண்ணீருடனும் மண்ணுடனும் கலந்து சுற்றுச் சூழலை சீரழித்து விடுகின்றன. போதாக்குறைக்கு பியூமைஸ் கல்லை (Pumice) (நிறைய துளைகளைக் கொண்ட கண்ணாடி மாதியான கல். Stone Wash ஜீன்ஸ் தயாப்பில் உரோஞ்சுவதற்கு பயன்படும்) தோண்டி எடுப்பதால் நியூ மெக்ஸிக்கோவின் ஒரு நிலப்பகுதி அப்படியே நாசமாக்கப்பட்டிருக்கிறது.

பணக்கார நாடுகளில் ஜீன்ஸ் விற்பனை அமோகமாக இருந்தாலும் இந்த நாடுகள் ஆடை தயாரிப்பு நிறுவனங்களைத் தமது மண்ணில் அமைக்க விரும்பாததற்கு சுற்றுச்சூழலின் சீர்கேடு மட்டும் காரணம் அல்ல. மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் வறுமை இவர்களுக்கு அங்கே இரத்தினக்கம்பள வரவேற்பைக் கொடுத்திருக்கிறது. பங்களாதேஷ், கவுதமாலா, பிலிப்பைன்ஸ் போன்ற இடங்களில் குறைந்த ஊதியத்துடன் நிறைந்த வேலையை இவர்களால் வாங்க முடிகிறது. கனடாவில் இந்திய மதிப்பில் 1000 ரூபாய்களுக்கு விற்பனையாகும் ஜீன்ஸ் மேலாடை ஒன்றுக்கு அதைத் தைத்துக் கொடுத்த கூலியாக எல்ச வடோல் உள்ள ஒரு ஏழைப் பெண்ணுக்கு வழங்கப்படும் தொகை வெறுமனே 27 சதங்கள் (cents) தான்.

வறிய நாடுகளில் உள்ள ஆடை தயாரிப்பு நிலையங்களில் மனித உரிமை மீறல்கள் நிகழ்கின்றன என்ற பலமான குற்றச்சாட்டு வேறு இருக்கிறது. நெசவாளர்கள் பெண்களாக இருப்பதால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதும், குழந்தைத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுவதும் இங்கு சகஜமான ஒன்று. தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகப் போராடுவதற்கு இந்தத் தொழிலாளிகள் வலுவற்றவர்களாகவே இருக்கிறார்கள். எல்சல்வடோல் இயங்கும் தாய்லாந்துக்குச் சொந்தமான மன்டான் சர்வதேச ஆடைத் தயாரிப்பு நிறுவனத்தில் தொழிலாளர்கள் தங்களுக்கான ஒரு சங்கம் அமைக்க முயற்சித்தபோது நிர்வாகத்தால் 300க்கும் அதிகமானோர் சுட்டுத் தீர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

மேற்கு நாடுகள் மட்டும் அல்லாமல், பண வருவாய்க்குரிய ஒரு தொழிலாக இருப்பதால் மூன்றாம் உலக நாடுகளும் ஜீன்ஸ் தயாரிப்பு நிறுவனங்களை அமைக்கத் தொடங்கி விட்டன. இந்தியாவின் அரவிந்த் நிறுவனம் இப்போது 66 நாடுகளுக்கு 155 வகையான டெனிம் ஆடைகளை ஏற்றுமதி செய்து ஜீன்ஸ் தயாரிப்பில் உலகில் மூன்றாவது இடத்தைப் பெற்றிருக்கிறது. ஜீன்ஸ் துணியிலான ஒவ்வொரு ஆடையையும் பார்க்கும்போது நமது பாரம்பரிய பருத்தி ஆடைகளுக்குக் குட்பை சொல்லி விடுவோம் போலவே தெரிகிறது. நாளை இந்த ஜீன்ஸ் மோகம் மாறவும் கூடும். ஆனால் அது அழித்துவிட்டுப் போயிருக்கும் நிலத்தை, இந்த ஏழைத் தொழிலாளிகளின் வாழ்க்கையை யார் மீட்டுத் தருவார்கள்?

Article:
http://tamilblogs.com/a/redirect.php?pathivu=http://arunabharathi.blogspot.com/2007/08/blog-post.html

நிலவியல் குறியீடூகளுக்கான சட்டம் (GEOGRAPHICAL INDICATION ACT) 1999

திருநெல்வேலி அல்வா, காஞ்சிபுரம் பட்டு, டார்ஜிலிங் தேயிலை, சேலம் மாம்பழம் போன்ற பொருட்கள் அவை தயாராகும் இடத்தின் காரணமாகவே புகழ்பெற்றவை. இவற்றிற்கான குறியீட்டு உரிமையை பதிவு செய்வதற்காக இந்த சட்டம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம் நமது பாரம்பரிய செல்வங்களான வேப்பமரம், மஞ்சள், பாசுமதி அரிசி போன்றவற்றை பாதுகாத்திட முடியும் என்றும், நம் விவசாயிகளின் உரிமைகளை இச்சட்டம் பாதுகாக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் உன்மையில் ஏராளமான இயற்கை வளம் மிகுந்த நாட்டில் அத்தனை பொருட்களையும் இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்வது நடைமுறையில் சாத்தியமில்லை. இந்த சட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட பகுதியில் விளையும் அல்லது தயாரிக்கப்படும் பொருளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு, அப்பகுதி சார்ந்த மக்களுக்கான சிறப்புரிமையாக வழங்கப்படவில்லை. ஒரு புகழ்பெற்ற பொருளை அப்பகுதியில் தயாரிக்கும் யாரும் அதற்கான உரிமையை பதிவு செய் முடியும்.

உதாரணமாக, அமெரிக்க நிறுவனம் ஒன்று காஞ்சிபுரத்தில் தறி அமைத்து காஞ்சிப்பட்டுக்கோ, ஈரோட்டில் உற்பத்தி நிலையம் அமைத்து பவானி ஜமக்காளத்திற்கோ, திருநெல்வேலியில் உணவகம் அமைத்து திருநெல்வேலி அல்வாவிற்கோ இந்த சட்டத்தின் கீழ் பதிவு பெறமுடியும். இந்தியாவின் பாசுமதி அரிசியை பல வெளிநாட்டு நிறுவனங்கள் “டாசுமதி, காசுமதி” போன்ற பெயர்களில் காப்புரிமை பெற்றுள்ளனர். இத்தகைய மோசடிகளுக்கு எதிராக இந்த சட்டத்தில் எந்த பாதுகாப்பும் இல்லை.





உயிரினவகை வேறுபாட்டு சட்டம் (BIOLOGICAL DIVERSITY ACT) 2001

நம் நாட்டின் இயற்கை வளங்களையும் மூதாதையர்களின் அறிவுச்செல்வங்களை (TRADITIONAL KNOWLEDGE) பாதுகாத்திடவும், பல்உயிரின ஒப்பந்தத்தின் (CONVENTION FOR BIO-DIVERSITY) அடிப்படையில் அமைந்ததே உயிரினவகை வேறுபாட்டு சட்டம்.
காப்புரிமை போன்ற சட்டங்களினால் நம்நாட்டு வளங்கள் பறிபோவதை தடுப்பதற்கு இச்சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் தேசிய அளவிலும் மாநில அளவிலும் சில கமிட்டிகளை நியமித்துள்ளது. இந்த கமிட்டிகளுக்கு நம் நாட்டினுடைய இயற்கை வளங்களையும் இன்னும் பல வளங்களையும் பாதுகாக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் நம்நாட்டு இயற்கைவளங்களுக்கு அறிவுசார் சொத்துரிமை வழங்குவதை முழுவதுமாக தடைசெய்கிறது.

அதே நேரத்தில் (உள்நாட்டு/வெளிநாட்டு) ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சிக்காக இந்த கமிட்டியின் கீழ் பாதுக்காக்கப்படும் இடங்களுக்குச்சென்று அவர்களுடைய அனுமதியோடு ஆராய்ச்சி செய்யும் உரிமையையும் இச்சட்டம் வழங்குகிறது. இந்த சலுகை, ஆராய்ச்சி என்ற பெயரில் நம்முடைய இயற்கை வளங்கள் கொள்ளை போவதற்கு உதவக்கூடும். இந்த சட்டம் நம்முடைய இயற்கைவளங்களின் மாதிரிகளை ஆராய்ச்சிக்காக வெளிநாடுகளுக்கு எடுத்துச்செல்வதை தடை செய்யவில்லை. நம் விவசாயிகளின் பழமை வாய்ந்த பயிர்வகைகளையும் வேறுசில தாவர வகைகளையும் ஆராய்ச்சி செய்யவும் இச்சட்டம் அனுமதி அளிக்கின்றது. மறைமுகமாக நம்முடைய இயற்கை வளங்கள் கொள்ளை போவதற்தகு இச்சட்டம் உதவுவதோடல்லாமல் இதுபோன்ற ஆராய்ச்சியின் பயனாக விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டங்ளையும் மிகச்சிறிய இழப்பீட்டுத்தொகை மூலம் நிவர்த்தி செய்துவிடலாம் எனவும் இச்சட்டம் கூறுகிறது.




நிறைவுரை

பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் நலன் காக்கும் சட்டங்களை அமல்படுத்த பலவகையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. உலக வங்கி மூலம் கொடுக்கும் நிர்பந்தம் ஒரு முறை; அமெரிக்கா போன்ற “அமைதியின் காவலர்கள்” மூலம் கொடுக்கும் நெருக்கடி மற்றொரு முறை; ஏழை நாடுகளின் அரசியல் தலைவர்களுக்கு லஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பது மற்றொரு முறை.

இந்தோனேஷியா போன்ற நாடுகளில் சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகளுக்கு பலவித பெயர்களில் கட்டணம் செலுத்தியதாக மான்சான்டோ நிறுவனம் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தியாவில் இத்தகைய செயல்கள் நடைபெறாது என்று யாரும் உறுதிகூற முடியாது. ஆனால் சர்வதேச அரங்கில் இந்தியாவின் மாண்பு குறைந்துவிடாமல் பாதுகாப்பதற்காக பலவிதமான மனித உரிமை மீறல்கள் மறைக்கப்படுவதைப்போல இந்த லஞ்ச-ஊழல் குற்றங்களும் மூடிமறைக்கப்படலாம்.

இத்தகைய சமூக அநீதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீர்மானிப்பதில் சமூக பொறுப்புள்ள குடிமக்கள் யாரும் விலகி நிற்க முடியாது.





-மு. வெற்றிச்செல்வன்
(vetri@lawyer.com)
Article:
http://tamilblogs.com/a/redirect.php?pathivu=http://makkal-sattam.blogspot.com/2007/08/blog-post_04.html

உலகம் முழுவதும் உள்ள புத்தக ஆர்வலர்களுக்கு ஓர் நற்செய்தி. மின் தொகுப்பினால் ஆன புத்தகங்களின் கண்காட்சி http://worldebookfair.com/ என்ற இணைய தளத்தில் உள்ளது. கட்டற்ற (No Copyrights) சுமார் 3,30,000 புத்தகங்கள் இங்கு தொகுக்கப்பட்டிருப்பதாக இந்த இணைய தளம் கூறுகிறது. 100க்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ள புத்தகங்கள் இங்கு தொகுக்கப்பட்டிருக்கின்றன.

கணினி சம்பந்தமான புத்தகங்கள் இங்கே உள்ளன. http://worldebookfair.com/Technical_eBook_Colleciton.htm

தமிழ் மின் தொகுப்புப் புத்தகங்களும் இந்த இணைய தளத்தில் உள்ளன. அந்த தளத்தில் தேடினால் கிடைக்கின்றன. இவை அனைத்தும் மதுரை திட்டத்தில் தொகுக்கப்பட்டவையே.

மேலும் தமிழ் மின் தொகுப்பிலான புத்தகங்களை 'மதுரைத் திட்ட'த்தின் இணைய தளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த தளத்தின் சுட்டி கீழே.

http://www.tamil.net/projectmadurai/akaram_uni.html
Article:
http://ponvandu.blogspot.com/2007/08/blog-post_01.html

கனிமங்களின் சாதம், தாதுக்களும் பிரமாதம்
நெல்லை சு.முத்து

பூமி சூடேறி வருவதால் பனிப்படலங்கள் வட துருவப் பிரதேசத்தில் இருந்து உருகி அட்லாண்டிக் கடலில் கலக்கின்றன. இது பழைய செய்தி. ஆனால் ஒவ்வொரு 40 மணி நேரமும் கிரீன்லாந்து பனிப்படலங்கள் ஒரு கன கிலோமீட்டர் அளவுக்குக் கரைந்து வருகிறதாம். பாசதேனாவில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் எரிக் ரிக்னாட் தரும் தகவல் இது.
இந்த நீர், சென்னை போன்ற பெரு நகரங்கள் ஆண்டுதோறும் பயன்படுத்தும் தண்ணீர் அளவுக்குச் சமம். தமிழ்நாடு முழுவதும் 8 மில்லிமீட்டர் தண்ணீர் நிறைந்த மாதிரி. சென்னையில் மட்டும் இந்த வடதுருவப் பனி உருகிய நீரைக் கொண்டு வந்து ஊற்றினால் இரண்டு மாடி வீடுகள் நீருக்குள் மூழ்கிவிடும்.
சுற்றுச்சூழல் என்றதுமே நம்மவர் நினைவுக்கு வருவது
ஓசோன்,
கரியமில வாயு,
வாகனப்புகை - உள்ளிட்ட பசுமைக் குடில் வாயுச் சமாச்சாரங்கள் மட்டும்தாம். எல்லாரும் இன்று வாகனப்புகை பற்றி மட்டுமே அக்கறை கொள்கிறோம். “”மீட்டர் போட்ட ஆட்டோ வேண்டும். புகைவிடாத லாரி வேண்டும்” என்று புதுக்கவிதை பாடுகிறோம். ஆனால் அதைக் காட்டிலும் இன்னோர் அபாயம் காத்திருக்கிறது.
தர்மம் தலைகாக்கும் என்ற நம்பிக்கை இங்கு பலருக்கு இல்லை. தலைக்கவசம் அணிந்துதான் பயணம் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 67 லட்சத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் உள்ளன. இவற்றால் சாலைகளில் பெரும் போக்குவரத்து நெருக்கடி.
இங்கிலாந்தில் கார்டிஃப் பல்கலைக் கழகத்தின் புவிவளப் பேராசிரியை ஹேசல் ப்ரிச்சார்டு என்ற பெண்மணிக்கு ஒரே ஆச்சரியம். “”இங்கு தெருவெல்லாம் இவ்வளவு சுத்தமாக இருக்குதே” என்று அசந்து போனார். சாலையில் ஒரு வண்டி கூட இல்லையே என்ற அர்த்தத்தில் அல்ல. வியப்புக்குக் காரணம்- வீதி உண்மையிலேயே துடைத்துப் போட்ட மாதிரி இருந்ததாம். தெருவின் புழுதி எல்லாம் பாதசாரிகளின் காலணிக்குள் அல்லவா தஞ்சம் புகுந்து இருந்தது.
காலுறைகளில் வெறும் வியர்வை நாற்றம்தான்; ஆனால் காலணியின் புறப்பகுதியில் சகதி, சாணி போன்றவை ஒட்டி இருக்கும். அவர் காலணியிலோ கொஞ்சம் பிளாட்டினம் படிந்து இருந்ததாம். காலில் வெள்ளிக் கொலுசு அணியலாம். தங்கக் காப்பு கூட தரிக்கிறார்கள். ஆனால் பிளாட்டினம் அணிந்த உலகின் முதல் பெண்மணி ஹேசல் ப்ரிச்சார்டு. பிளாட்டினம் உண்மையில் மிகவும் அரிய வகை உலோகம். பூமியில் பிளாட்டினமோ, ரேடியமோ, சுமார் 79,840 டன்கள் செறிந்து உள்ளது. 89,700 டன்கள் தங்கம்; ஆனால் பிளாட்டினத்திற்குத் தங்கத்தைக் காட்டிலும் விலை அதிகம்.
அது சரி, இந்தப் பிளாட்டினம் காலில் ஒட்டியது எப்படி? வேறு என்ன, வாகனப் புகைதான். பெட்ரோல், டீசல் எரிவாயுக்களால் ஏற்படும் மாசு மட்டுமே நம்மை மூச்சு முட்டப் பண்ணுகிறது. அந்த வாயுக்களை வாகன எஞ்ஜினில் எரியச் செய்யும் மின்பொறியில் பிளாட்டினம் தகடு இருப்பது நமக்குத் தெரியாது. அதனைக் காற்றில் புகையுடன் கலக்கப்போவது யாரு? நீங்கள்தாம். ஒவ்வொரு முறையும் ஸ்கூட்டர், கார், லாரி, ஆட்டோக்களை இயக்கும்போது பிளாட்டினம் தேய்ந்து காற்றில் கலக்கிறதாம்.
இந்தத் தகவல் அதிர்ச்சி அளிக்கிறதா? ஆனால் சமையல் மணக்கச் செய்யும் வனஸ்பதி தயாரிப்புத் தொழில்துறையில் கிரியா ஊக்கியே இந்தப் பிளாட்டினம்தான். பூமியில் இந்த உலோகப் புதையல் வறண்டு வருகிறது. ஏறத்தாழ 50 கோடி வாகனங்களை இத்தகைய எரிமின் கலன்களில் இயக்கினால் அவ்வளவுதான். அடுத்த 15 ஆண்டுகளில் பிளாட்டினம் இல்லாத பாலைவனம் ஆகிவிடும் நம் பூமி. பூமியில் கையிருப்பே 79,840 டன்கள்தான்.
பிளாட்டினம் மட்டுமா, வேறு பல அரிய உலோகங்களையும் நாம் சுரண்டி வருகிறோம். மணல் முதல் சணல் வரை அனைத்து வணிக ஒப்பந்தங்களும் கட்சிக்காரர்களுக்கே வாய்க்கும். உலோகச் சுரங்கம் தோண்டலில் மட்டும் கட்சி பேதம் இல்லை.
உலகில் வறண்டு வரும் மற்றோர் அரிய உலோகம் இண்டியம். இது ஏறத்தாழ 6000 டன்கள் செறிந்து உள்ளது. ஆனால் இன்று இந்த உலோகத்தைத் தகவல் தொழில்நுட்பக் கருவிகளுக்கான எல்.சி.டி தயாரிக்கும் துறை விழுங்கி வருகிறது. நவீனத் தொலைக்காட்சி, கணினித் திரைகள் வடிவமைப்பில் இடம்பெறும் திரவப் படிக ஒளிர் முனையங்கள் இவை. அடுத்த பத்தாண்டுகளில் இண்டியம் வளமும் மறையும் நிலை என்கிறார் ஜெர்மனியின் ஆக்ஸ்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானி.
2003 ஜனவரியில் கிலோ 60 டாலருக்கு விற்ற இண்டியம் இன்று 1000 டாலர். நான்கே ஆண்டுகளில் பதினாறு மடங்கு விலையேற்றம். இதைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படும் நிலை இல்லை.
பூமி கஜனாவில் காலியாகிவரும் இன்னோர் அரிய உலோகம் காலியம். சூரிய மின்கலன்கள் தொழில்நுட்பத்தின் இதயம் போன்றது இது. இண்டியம் - காலியம் ஆர்சனைடுப் பொருளால் ஆனவையே. மின்னணுவியலில் பெரிதும் பயன்படுவது. இனி வரும் காலங்களில் சூரிய மின்கலன்களின் ஒரு சதவீதத் தேவைக்கு மட்டுமே இந்த காலியம், இண்டியம் உலோகங்கள் கைகொடுக்கும். நெதர்லாந்து நாட்டில் லெய்டன் பல்கலைக்கழக நிபுணர் ரேனே க்ளெய்ஜின் கணிப்பு இது.
கணிப்பொறித் திரைதான் பூமியை விழுங்கி ஏப்பம் விடுகிறது என்றால் நம் காதோரம் நெருங்கி உறவாடும் செல்ஃபோன் கூட பூமியின் வளத்தைப் பறித்து வருகிறதாம். என்ன செல்பேசித் தொழில்துறையினர் டான்டலம் என்கிற மற்றோர் அரிய உலோகத்தை இதற்காக அபகரித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் உலோகத் தாதுக்களில் பாதி டான்டலம் தானாம். அடுத்தபடி யுரேனியம். நாலில் ஒரு பங்கு. ரஷியாவிலோ அங்குள்ள உலோகங்களில் ஆறில் ஒரு பங்கு யுரேனியம். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் உலோகச் செல்வத்தில் பத்தில் ஒரு பங்கு யுரேனியம். உலகின் யுரேனிய வளம் 33 லட்சம் டன்கள். அணுமின் சக்தித் துறையினால் இந்த யுரேனியத்தின் பற்றாக்குறை வேறு தலைவிரித்து ஆடப்போகிறது.
உலகில் மிக அதிகமாகக் காணப்படும் உலோகத் தாதுக்களில்
முதலிடம் பெறுவது அலுமினியம் -அதாவது 3235 கோடி டன்கள்.
அடுத்தபடி தாமிரம் (94 கோடி டன்கள்),
குரோமியம் (78 கோடி டன்கள்),
துத்தநாகம் (46 கோடி டன்கள்),
நிக்கல் (14 கோடி டன்கள்) போன்ற புழக்கத்தில் உள்ள உலோகங்களுக்கும் அடுத்த தலைமுறைக்குள் தட்டுப்பாடு வரும். ஆன்டிமனிக்கும் இதே முடிவுதானாம். அடுத்த பத்தாண்டுகளில் இதன் வளமும் வறண்டுவிடும்.
இன்று - “கனிமங்களின் சாதம், தாதுக்களும் பிரமாதம்’ என்று தலைவாழையில் உலோகங்களை உண்ணும் பகாசுரர்கள் யார்?
அமெரிக்காவில் 30 கோடி மக்கள். ஒவ்வொருவரும் ஆண்டுதோறும்
107 கிலோ பாஸ்வரம்,
20.3 கிலோ அலுமினியம்,
8.1 கிலோ தாமிரம்,
4.5 கிலோ துத்தநாகம்,
5.3 கிலோ காரீயம் உண்டு வருகிறார்கள்.
நாமோ “பிளாட்டினம் இட்லி, வெள்ளித் தோசை, தங்கச் சோறு, பாஸ்வரச் சாம்பார், குரோமியக் குழம்பு, காரீயச் சட்னி, துத்தநாகத் துவையல்’ எல்லாம் சாப்பிடப் போவது மாதிரி நடந்து கொள்கிறோம். துறைதோறும் பணத்தைச் சுரண்டுவதற்கே வாதங்கள் புரிகிறோம். சுற்றுச்சூழல் என்ற உச்சரிப்பிலேயே “ஊழல்’ ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் எப்படி கனிமவள வறட்சியைத் தடுக்கப்போகிறோம் என்பதே இப்போதைய கேள்வி.
Article:
http://bsubra.wordpress.com/2007/08/02/depletion-of-world-mineral-reserves-consumption-of-antimony-gallium-tantalum-indium/

நாட்டில் தொழிலாளர்கள், விவசாயிகள் என எல்லோரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள், வாழவழியற்று தற்கொலை பண்ணிக்கிறாங்க என்ற இன்றைய நிலையினை அறிய பெரிய விஷய ஞானமோ, அறிவோ தேவையா என்றால் இல்லை,தினசரி நாளிதழ்களை பார்த்தா கூட தெரிஞ்சுக்க முடியும்.
..
செய்தி என்கிற அடிப்படையில் எல்லாவற்றையும் எழுதுகிறார்கள். ஆனால் இதுக்கு என்ன காரணம் என்று ஒருத்தரும் எழுதுறது இல்லை. போலி எதிர்ப்பாளர்களான NGOக்கள் முதல் லேட்டஸ்ட் ஒட்டுக்கட்சிகள் வரை ஒருத்தரும் சொல்றதுல்ல.
..
இதில் பத்திரிக்கை, இணைய தளம், ப்ளாக்குகள் உள்பட்ட தளங்களை பற்றி தான் இந்த பதிவு.
..
பொதுவாக இவர்கள்
விவசாயிகள் தற்கொலையில இருந்து இன்றைக்கு 2ரூ அரிசி வாங்க கூட வழியற்று மக்கள் அவதிப்படுவது வரை எதுக்குமே யாருடைய பொருளாதார கொள்கை, அதனை இந்த ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்த நிர்ப்பந்திப்பது எது என எந்த அடிப்படை காரணத்தையும் எழுதுவது இல்லை.
இதுல பத்திரிக்கையினை முழுக்க லாபம் ஈட்டும் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.நாம என்ன தெரிஞ்சுக்கனும், படிக்கனும் என அனைத்தையும் இன்றைக்கு ஏகாதிபத்தியங்கள் மற்றும் அவர்களோட கைக்கூலிகள் தான் முடிவு செய்கிறார்கள்.
சரி அப்படி கூட செய்தியாக எல்லாவற்றையும் கொடுக்கிறார்களா என்றால் இல்லை. அதுலயும் அவர்களுக்கு பிரச்சினை என சிலவற்றை மறைத்து விடுகிறார்கள்......
இந்த அடிப்படையில் செய்திகளை கொடுத்துவிட்டு....கூடவே " நாடு வளர்ச்சி பாதையில் ஜெட் வேகத்துல போகுது" என்ற குடியரசு (மொம்மை) தலைவர் முதல் ஆட்சியாளர்கள் என அனைவரின் பேச்சுக்களையும் எழுதிகின்றனர்.
ஒருபுறம் 1 லட்சத்துகும் மேற்ப்பட்ட ஆசிரியர்கள் வேலையில்லாமல் இருக்கிறாங்க, இன்னொருபுறம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக கிடக்கிறது
பெப்சிக்கும் கொக்க கோலாவுக்கு பைசா கணக்கில் தன்ணீரை கொடுத்த மன்மோகன் சிங இன்னொருபுறம் நம்ம விவசயிகளுக்கு தண்ணீரோட அருமை தெரியலை, பணம் கொடுத்து வாங்கினால்தான் தெரியும் என பேசிகிறார்.
டாஸ்மாக் கடையில் ஆண்டுக்கு 7000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால் சுனாமிக்கு 3 ஆண்டுகளுகு பின்னும் உலகவங்கியிடம் 1000 கோடி கடனாக கேட்கிறது தமிழக அரசாங்கம்.
ஒருபுறம் பெப்சி குடிக்காதே, புகை குடிக்காதே, மது அருந்தாதே,டாடாவுக்கு எதிர்ப்பு , வாரிசு அர்சியல் கூடாது என தனித்தனி அறிக்கை....மறுபுறம் அனைத்தையும் தடை செய்யும் அதிகாரம் உள்ள் மக்களையே சந்திக்காத மத்திய அமைச்சர் பதவியில் மகன், மத்திய, மாநில அரசுக்கு முழு ஆதரவு இதுதான் ராமதாஸ்
இப்படி முரண்பாடுகளை தனித்தனியாக இருப்பதை ஒன்றுபடுத்தி பார்க்கும் போதுதான் தெரியும், இன்று மக்கள் மீது இந்த அரசாங்கம் மறைமுகமாக ஒரு போரையே தொடுத்து வருகிறது என்று.
இதற்கிடையில் இந்த முரண்பாடுகளை எல்லாம் பொருத்தி
இன்றைக்கு நாட்டை படுவேகமாக அந்நியனுக்கு விற்றுக்கொண்டு இருக்கிறார்கள் இந்த மக்கள் நல (?) ஆட்சியாளர்கள் என்பதையும்
விவசாயிடம் இருந்து விவசாயம் பறிக்கப்பட்ட காலம் மாறி விவசாயத்திடம் இருந்தே விளைநிலம் பறிக்க பட்டு தொழிற்புரட்சி, வேலை வாய்ப்பு என்ற பேரில் அந்நியனுக்கு தாரை வார்க்கப் படுகிறது என்பது உள்பட
மக்களோட சகல கஷ்டங்கள் அனைத்துக்கும் என்ன காரண்ம், யார் காரணம் என்பதை தெரியப்படுத்த கூடிய பத்திரிக்கைகளும் இணையதளங்களும் உள்ளன. ப்ளாக்கர் உள்பட அனைத்து தளங்களிலும் போர்க்குரலாக ஒலிக்கிறது.
ஆனால் அடிமைத்தனத்திலேயே ஊறி திளைக்கின்ற சில அடிமைகள் ஆட்சியாளர்களோட முகமுடியாக செயல்பட முயற்சிக்கின்றன.
"நாட்டோட வளர்ச்சியை தடுக்குறாங்க, மேற்கு வங்காளத்தில் கூட பிற்போக்கு சக்திகள் ஒரு தொழிற்சாலை கூட வரவிடாமல் தடுத்து ரத்த ஆற்றை ஓட விட்டார்கள்; சும்மா 100 பேரை துண்டிவிட்டு 100 பேருக்காக 10 ஆயிரம் பேருடைய வாய்ப்பு வசதிகளை குலைக்கின்றனர்" என்று இன்று ( 29 .7.07) டாடாவுக்கு 10 ஆயிரம் ஏக்கர் கொடுக்கிறதுக்கு எப்பவும் போல இது வளர்ச்சிக்குதான் என்ற அடிமுட்டாள்தனமான ஆட்சியாள்ர்களுடைய வாதத்தையே வைத்து கலைஞர் பேசியுள்ளார்.
நந்திகராம், சிங்கூர் போன்ற மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் போலி கம்யூனிஸ்ட்களின் குரலை இந்த முற்போக்கு பெரியார் சீடர் வெளிப்படுத்தி உள்ளார்.
இன்றைக்கு தனியார்மய, தாராளமய, உலகமயமாக்கல் என்ற கொள்ளையினை ஏற்றுக்கொள்வதா , வேண்டாமா என்பதல்ல இந்த மன்மோன் சிங்,அத்வானி,போலி கம்யூனிஸ்டுகள், கருணாநிதி,ஜெயலலிதா, ராமதாஸ், விஜயகாந்த் போன்றவர்களுடைய பிரச்சனை. இதை எப்படி நடைமுறைபடுத்துவது எனபது தான் இவர்களுக்கிடையே உள்ள வேறுபாடு.
இந்த சூழ்சிலையில் இவர்களோட முகமூடியாக சிலர் செயல்பட முயற்சிக்கின்றன.
உதரணமாக தமிழகத்தில் இன்று டாடாவுக்கு 10 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தி தருவதற்கு அரசாங்கத்துக்கு ஒத்து ஊத கிளம்புகின்றனர்..
இதனை படிக்கும் அத்தகைய நபர்கள் மக்களநலனுக்கு எதிராக அவதூறாக எழுதுவதை கைவிட்டு எழுதுவது ஆரோக்கியமான ப்ளாகின் வளர்ச்சிக்கு உகந்தாகும்.
நமக்கு தேவை சமச்சீரான வளர்ச்சி என்கிறதை புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க...
இல்லைன்னா
..
"வளர்ச்சி....முன்னேறுது.....அரசியல் படுத்துறாங்க.....என்று தனித்தனியாக எழுதி மக்களை முட்டாளாக்காம உங்களுடைய வாதத்தை உடைத்து எழுதும் பதிவுகளுக்கு மறுத்து விளக்கமாக உங்க பதிவை போட (?) முயற்சி பண்ணுங்க.... "
..
அதுவிட்டுட்டு சும்மா மக்கள் நலனோட விளையாடாதீங்க.
***********************************************************************
***********************************************************************

Article:
http://tamilblogs.com/a/redirect.php?pathivu=http://blackboards.blogspot.com/2007/07/blog-post_30.html